66. ராமர் வனவாசம் போவதை அறிந்த அயோத்யா நகர ஜனங்கள் ராமருடைய குணங்களை புகழ்ந்து ‘நாம் ராமரோடு காட்டிற்கு சென்று விடலாம். இந்த அயோத்தி பாழடைந்து காடாகட்டும். ராமர் இருக்குமிடமே அயோத்தி ஆகிவிடும்’ என்கிறார்கள். ராமர், சுமந்திரர் மூலம் தன் வருகையை தெரிவித்து தசரதரை தரிசிக்கிறார். தசரதர் மயங்கி விழ ராமரும் லக்ஷ்மணரும் அவரை தூக்கி படுக்கையில் கிடத்துகிறார்கள்.
[அயோத்யா ஜனங்களின் புலம்பல்]
Category: Ayodhya Kandam
ராமர் தன் செல்வத்தை தானமளிக்கிறார்
65. ராமர் தன் செல்வத்தை பிரம்மணர்களுக்கும் ஏழைகளுக்கும் யாத்ரா தானமாக அளிக்கிறார். தன் சொந்த பலத்தை நம்பாமல் தெய்வத்தையே நம்பி இருக்கும் த்ரிஜடர் என்ற ப்ராம்மணரின் தேஜஸை உலகிற்கு வெளிப்படுத்தி, அவருக்கு கணக்கற்ற பசுக்களை தானம் அளிக்கிறார். பிறகு தந்தையிடம் விடைபெற சீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் தசரதர் அரண்மனைக்கு செல்கிறார்.
[ராமர் தன் செல்வத்தை தானமளிக்கிறார்]
லக்ஷ்மணரும் அனுமதி பெற்றார்
64.சீதையோடு ராமர் வனம் போக முடிவு செய்துவிட்டதைப் பார்த்து லக்ஷ்மணர் தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுகிறார். ராமர் அவரிடம் ‘நீ இங்கிருந்து என் அம்மாவையும் உன் அம்மாவையும் பார்த்துக் கொள்’ என்று சொல்கிறார். லக்ஷ்மணர்’பரதன் அவர்களைப் பார்த்துக் கொள்வான். நான் வனவாசத்தில் இரவும் பகலும் உங்களுக்கு உதவி செய்வேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறார். அந்த வார்த்தைகளைக் கேட்டு ராமர் மகிழ்ந்து லக்ஷ்மணர் தன்னுடன் வர அனுமதி அளிக்கிறார். பிறகுலக்ஷ்மணர், ராமர் உத்தரவின்படி ஆச்சார்யரின் வீட்டிலிருந்து ஆயுதங்களை எடுத்து வருகிறார்.
[லக்ஷ்மணரும் அனுமதி பெற்றார்]
அம்மா அப்பா குரு மகிமை
63.ராமர் அனுமதி தரத் தயங்கவே, சீதை ‘உங்களோடு இருப்பதே எனக்கு சொர்க்கம். நீங்கள் இல்லாத இடம் எனக்கு நரகம். நீங்கள் என்னை இங்கே விட்டுச் சென்றால் நான் உயிரை விட்டு விடுவேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறாள். ராமர் ‘அம்மா அப்பா குரு மூவரும் கண்கண்ட தெய்வம். அப்பா குடுத்த வாக்கை காப்பற்ற நான் வனம் செல்கிறேன். அந்த தர்மத்தில் துணையாக நீயும் என்னோடு வா’ என்று அனுமதி அளிக்கிறார்.
[அம்மா அப்பா குரு மகிமை]
சீதாதேவியின் வேண்டுகோள்
62.சீதை ராமரிடம் ‘உங்களை காட்டிற்கு போகச் சொன்னால் அது என்னையும் சொன்னது போல தான். உங்கள் கஷ்ட நஷ்டத்தில் எனக்கும் பங்கு உண்டு. என்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறாள். ராமர் ‘வனம் என்பது ஆபத்தான இடம். வனவாசம் மிகவும் கஷ்டமானது’ என்று கூறும் போது சீதை, ‘உங்களோடு இருந்தால் எனக்கு எதுவும் கஷ்டமில்லை. எனக்கு உங்கள் அன்பு ஒன்றே போதும்’ என்று கூறுகிறாள்.
[சீதாதேவியின் வேண்டுகோள்]
ராமர் சீதைக்கு சொன்ன அறிவுரை
61. ராமர் சீதையின் பிரிவுத் துன்பத்தை நினைத்து வருத்தத்துடன் வரும்போது சீதை, ‘ஏன் உங்கள் முகத்தில் என்றும் இல்லாத வாட்டம்?’ என்று கேட்கிறாள். ராமர் ‘மதிப்பிற்குரிய தந்தையார் என்னை வனவாசம் போகும்படி ஆணை இட்டுள்ளார். நீ என் பெற்றோரை தினமும் வணங்கி, அவர்களுக்கு பணிவிடை செய்து, பரத சத்ருகனர்களிடம் அன்பு பாராட்டி, விரதங்களை கடைபிடித்து எளிமையாக வாழ்ந்து வா’ என்று அறிவுரை கூறுகிறார்.
[ராமர் சீதைக்கு சொன்ன அறிவுரை]
கௌசல்யாதேவி மங்களாசாசனம்
60.கௌசல்யாதேவி ராமனிடம் ‘எந்த தர்மத்தை நீ இவ்வளவு விருப்பத்துடனும் உறுதியுடனும் கடைபிடிக்கிறாயோ எந்த தர்மமே உன்னை எல்லா விதத்திலும் காப்பாற்றட்டும். நான் பூஜிக்கும் சிவபெருமான் முதலான தெய்வங்கள் உனக்கு வனவாசத்தில் துணையாக இருப்பார்கள். நல்லபடியாகப் போய் சீக்கிரம் திரும்பி வா’ என்று கூறி விடை அளிக்கிறாள். ராமர் அங்கிருந்து சீதையை பார்க்க வருகிறார்.
[கௌசல்யாதேவி மங்களாசாசனம்]
கணவனே கண்கண்ட தெய்வம்
59.லக்ஷ்மணன் ராமரிடம்’விதியை என் வீரத்தால் மாற்றிக் காண்பிக்கிறேன். உன்னை அரசனாக்குகிறேன். உத்தரவு கொடு’ என்று கேட்கிறான். ராமர் ‘தந்தை சொல்படி நடப்பேதே நல்வழி. அதுவே என் வழி’ என்று கூறி மறுத்து விடுகிறார். அம்மாவிடம் ‘கணவனை தெய்வமாக வழிபடுவளே நல்லுலகம் அடைவாள் என்று வேதங்கள் கூறுகின்றன. கைகேயி அப்பாவை கைவிட்டு விட்டாள். நீ அவருக்கு இப்போது துணையாக இருக்க வேண்டும்’ என்று எடுத்துக் கூறியதும் உத்தமியான கௌசல்யை அதை ஒப்புக் கொள்கிறாள்.
[கணவனே கண்கண்ட தெய்வம்]
விதியின் வலிமை
58.ராமர் தன்னோடு வனத்திற்கு வர விரும்பும் கௌசல்யா தேவியிடம் ‘தர்மரஜாவான என் தந்தை, உன் கணவர் உயிருடன் இருக்கும்போது நீ அவரை விட்டு என்னோடு எப்படி காட்டிற்கு வரமுடியும்? அவருக்கு துணையாக இருப்பதே உன் கடமை’ என்று சொல்கிறார். லக்ஷ்மணனிடம் ‘நடப்பது விதியின் செயல். கைகேயி கார்யம் இல்லை. நான் வனவாசம் கிளம்ப ஏற்பாடுகளை செய்’ என்று கூறுகிறார்.
[விதியின் வலிமை]
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
57.லக்ஷ்மணன் ‘ஒரு தவறு செய்யாத ராமனைக் காட்டிற்கு அனுப்புவது என்ன நியாயம்? நான் தந்தையை மீறி ராமனுக்கு முடி சூட்டுகிறேன். யார் தடுப்பார் பார்க்கலாம்’ என்று சொல்கிறான். கௌசல்யா ‘நீ கைகேயி விருப்பத்திற்காக காட்டுக்கு போக நான் அனுமதி தர மாட்டேன்’ என்கிறாள். ராமர் ‘தந்தை சொல்லை நான் மீற முடியுமா? நாம் மூவரும் அவர் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். இது தான் தர்மம். அப்பா பேச்சைக் கேட்டு யாரும் குறைவு அடைந்ததில்லை’ என்று கூறி உத்தரவு கேட்கிறார்.
[தந்தை சொல்மிக்க மந்திரமில்லை]