பாதாரவிந்த சதகம் 11வது ஸ்லோகம் பொருளுரை – திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
जटाला मञ्जीरस्फुरदरुणरत्नांशुनिकरैः
निषीदन्ती मध्ये नखरुचिझरीगाङ्गपयसाम् ।
जगत्त्राणं कर्तुं जननि मम कामाक्षि नियतं
तपश्चर्यां धत्ते तव चरणपाथोजयुगली ॥
பாதாரவிந்த சதகம் 11வது ஸ்லோகம் பொருளுரை – திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
जटाला मञ्जीरस्फुरदरुणरत्नांशुनिकरैः
निषीदन्ती मध्ये नखरुचिझरीगाङ्गपयसाम् ।
जगत्त्राणं कर्तुं जननि मम कामाक्षि नियतं
तपश्चर्यां धत्ते तव चरणपाथोजयुगली ॥
3 replies on “திரிபுரை பாதங்கள் சேர்மின்களே”
திரிபுரை பாதங்கள் சேர்மின்களே – பொருத்தமான தலைப்பு 👌🌸
அம்பாளுடைய இரு பாதத் தாமரைகளை தபஸ் பண்ற முனிவர்களுக்கு ஒப்பிட்டு கங்கை நதிப் ப்ரவாகத்துக்கு நடுவுல இருக்கறதா உருவகப்படுத்தறார் – எத்தனை அழகு !🙏🌸
யாரவது ஒரு மகான் பூர்ணத்தவம் அடையறதுக்கு தான் இத்தனை ஸ்ருஷ்டியும்னு சொன்னா நம்மளால சட்டுன்னு ஏத்துக்க முடியல.
அதுக்கு மஹாபெரியவா ரெண்டு உதாரணம் சொல்றார். ஒரு மரத்துல எல்லா பழங்கள்ல உள்ள விதையும் மரமாகறதில்லை. ஒரு விதை மரமானா சந்தோஷப்படறோம். மத்ததெல்லாம் வீணாச்சேன்னு வருத்தப்படறதில்லை. அதேமாதிரி உறியடி உத்சவத்துல ஒருத்தன் ஜெயிக்கறதுக்கு இத்தனை பேரும் பாடுபடறோம்.
அப்படித்தான் லக்ஷக்கணக்கில், கோடிக்கணக்கில் நாம் இத்தனை பேரும், ஆத்ம க்ஷேமம் பெறாமல் போனாலும், நம்மில் யாராவது ஒரு ஆத்மா பூரணத்துவம் பெற்றுவிட்டால் போதும். சிருஷ்டியின் பயன் அதுவே! அந்த ஒரு பூரண ஆத்மா நம் அனைவருக்கும் சக்தி தரும்னு சொல்றார்.🙏🌸
தபஸ் பண்ற மகான்களை ஆஸ்ரயிச்சு நாமும் தபஸ் பண்ணி பூர்ணத்தவம் பெறணும். அதுக்கு அம்பாள் சரணங்களை த்யானிச்சு பகவத் பஜனம் பண்ணிண்டே இருப்போம். அம்பாள் நமக்கு கொடுக்கற சுகதுக்கத்தைப் பொறுத்துக்கறதும் தபஸ் – மிக அருமை.👌👌🌸🌸
MY AMBAL = MAHA PERIVA
தேவியின் தாமரையன்ன பாதங்களில் அணிந்துள்ள ,செம்மணிகளின் ஒளி நகங்களில் பரவுவதால் வென்மை நிறமுள்ள நகங்கள் செம்மை ஒளியுடன் செஞ்சடைகள் போல்தோற்றமளிக்கிறது!! என்ன அழகான வர்ணனை!
தினப்படி நாம் செய்யுமொவ்வொரு செயலும்சிவ சக்தி ஐக்யத்துடன் இருக்குமா போல் நம் முன்னோர்கள் வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்!! உதாரணத்துக்கு ஒன்று,,நாம் வாசலில் இடும் செம்மண் இட்ட மாக்கோலம் எதனைக் குறிக்கிறது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம் சிவ சக்தி ஐக்ய பாவம்!! ஏனெனில் சிவம் என்பது தூய வெண்மை நிறம்! அரிசி மா வெண்மையாக சிவத்தையும், காவி சிவப்பு நிறம் அல்லவா? அது அம்பாளையும் குறிக்கிறது!
இந்த ஸ்லோகத்தில் தேவியின் நகங்களிலிருந்து அருவி போல் பாயும் கருனையானது கங்கையின் ப்ரவாக ம்த்தியில் அமர்ந்து, இந்த உலகத்தையே ரக்ஷிக்கும் கோலம் செஞ்சடைப் பரமன் ,கங்காதரரைப் போல் தோற்றம் கொடுக்கிறது என்ற பொருள் பட, சக்தியும் சிவமும் ஒன்றே, சிவ சக்தி ஐக்ய பாவத்தைச் சுட்டுகிறது அல்லவா?
பாத கமலங்கலுக்கு எல்லா ஞானியரும் யோகிகளும் அத்தனைமுக்யத்வம்கொடுத்திருக்கிறார்கள்!! !!
குரு வடிவாகி குவலயந்தன்னில் திருவடி வைத்து என்று வினாயகர் அகவல் சொல்லுமா போல் குருவடி நினைந்து சரண் அடைந்தால் உய்வு நிச்சயம் கிடைக்கும்! அதற்கு பூர்ண சரணாகதி வேண்டும் !
சும்மா இரு சொலற என்றலுமே என அனுபூதி சொல்லுகிறாற்போல் மனதை அடக்கி ஒருருமுகப் படுத்தி குரு த்யானம் செய்தால் தானே எல்லாம் வயப்படும்.
அதற்கு சிறந்த சாதனை வேண்டும்.
கூடு கொண்டு உழல்வேனை ஞான நெஞ்சினர் பாலிணங்கிடு என்று அருணகிரியார் சொல்கிறார்!
ஆம்பாள்த்யானம்மனதில் நிலைக்க ஞானமுடைய நல்ல அன்பர்களுடன் பழகி சித்தத்தை சுத்தி செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தக்க குரு,ஞானியர் துணை வேண்டும்.
இந்த ஸ்லோகத்தின் பொருள் ஆழ்ந்த் கருத்துடையது ! கணபதி அதனை அழகாக எளிய முறையில் விளக்கியுள்ளார்.
ஜய ஜய ஜகதம்ப சிவே…