
ஆர்யா சதகம் 78வது ஸ்லோகம் பொருளுரை – கல்வித் தெய்வம் காமாக்ஷி

विद्ये विधातृविषये कात्यायनि कालि कामकोटिकले ।
भारति भैरवि भद्रे शाकिनि शाम्भवि शिवे स्तुवे भवतीम् ॥
வித்³யே விதா⁴த்ருʼவிஷயே காத்யாயனி காலி காமகோடிகலே .
பா⁴ரதி பை⁴ரவி ப⁴த்³ரே ஶாகினி ஶாம்ப⁴வி ஶிவே ஸ்துவே ப⁴வதீம் ..
இது ஆர்யா சதகத்துல 78-வது ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்னு பார்த்தா, வித்யே அப்படின்னா ஸ்ரீ வித்யா ஸ்வரூபிணின்னு சொல்லலாம், சரஸ்வதி வடிவானவள்னு சொல்லலாம். விதாதுருவிஷயே அப்படின்னா, விதாதானா பிரம்மா. சரஸ்வதின்னு சொன்னவுடனே அந்த பிரம்மாவுடைய மனைவியா இருக்கிற சரஸ்வதின்னு சொல்லலாம். விதாதுரு அவிஷயே அப்படின்னு இந்த பிரம்மாவுடைய சிருஷ்டிக்கு அப்பாற்பட்டவள் அப்படின்னு ஒரு அர்த்தம் சொல்லலாம்.
காத்யாயநி, காத்யாயன முனிவருக்குப் பெண்ணாகப் பிறந்து காத்யாயனியா அந்த அவஸரம். காளி அப்படிங்கிறதுக்குக் கருப்பானவள், காலத்துக்கு அதீதமானவள்னு, காளிக்கு எத்தனையோ அர்த்தங்கள். காமகோடி, காமங்களுக்கெல்லாம் முடிவா இருப்பவள். கலே, கலா அப்படிங்கிறதுக்கும் நிறைய அர்த்தங்கள் சொல்லலாம், எல்லா கலை வடிவங்களாக இருப்பவள்னு சொல்லலாம். பாரதி அப்படிங்கிறது சரஸ்வதியுடைய இன்னொரு நாமம். பைரவி, பைரவருடைய மனைவி பைரவி. பத்ரே, பரம மங்களமானவள். ஷாகிநி அப்படிங்கிறதுக்கு ஷாகம்பரி அப்படின்னு, எல்லா கரிகாய்களுடைய வடிவமா ஒருவாட்டி அம்பாள் அவதாரம் பண்ணா, அந்த ஷாகிநினு சொல்லலாம். ஷாம்பவி, ஷம்புவினுடைய மனைவி, மங்களங்களின் இருப்பிடமானவள். ஷிவா அப்படிங்கிறது ஷிவ எங்கிறதுல இருந்து வந்ததுதான், மங்களம்னு அர்த்தம்.
அப்படி இந்த பெயர்களைக் கொண்ட பவதீம், ஹே காமாக்ஷி உன்னை ஸ்துவே, ஸ்தோத்திரம் பண்றேன்; இந்த பெயர்களைக் கொண்டு உன்னை ஸ்தோத்திரம் பண்றேன்னு வச்சுக்கலாம்.
சுவாமிகள்கிட்ட நல்ல மந்திர சாஸ்திரத்துல ரொம்ப அத்தாரிட்டியான ஒருத்தர் வந்து, எங்க ஆத்து குழந்தைக்கு நன்னா படிப்பு வரதுக்கு ஏதாவது ஒரு ஸ்லோகம் சொல்லுங்கோன்னார். சுவாமிகளுக்கு ரொம்ப பிரண்டு, சுவாமிகள் இந்த ஸ்லோகத்தைச் சொன்னார். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார், “ஆஹா ஆஹா” அப்படின்னு. எவ்வளவு அழகழகான நாமங்கள், சரஸ்வதி பரமா இருக்கு, காளிதாசனுக்கு வாக்கு கொடுத்த காளி, இதுல நிறைய மந்திர சாஸ்திர விஷயங்களும் இருக்கு; எல்லாமே நாமாவளி எல்லாமே நாம மந்திரங்கள். ரொம்ப நல்ல ஸ்லோகம், ரொம்ப சந்தோஷம்னு சொல்லிட்டுப் போனார். அப்படி படிப்புக்கு இந்த ஸ்லோகத்தைச் சுவாமிகள் சொல்லுவார்.
அம்பாளுக்கே நாம பாராயண பிரீதானு ஒரு நாமாவளி இருக்கு. அப்படி அம்பாளுடைய வழிபாடுனாலே முக்கியமா அவளுடைய நாமங்கள். அருணகிரிநாதர் அம்பாளைச் சொல்ல வரும்போது நாமங்களா கொட்டுவார். சீர்பாதவகுப்புல:
> “யுவதி பவதி பகவதி மதுரவசநி பைரவி கௌரி உமையாள் திரிசூலதரி வனசை மதுபதி அமலை விஜயை திரிபுரை புனித வநிதை அபிநவை அநகை அபிராம நாயகி தன் மதலை”
>
அப்படின்னு சொல்லுவார்.
கமலமாதுடன்ங்கிற பாட்டுல:
> “குமரி காளி பயங்கரி சங்கரி கௌரி நீலி பரம்பரை அம்பிகை குடிலை யோகிநி சண்டிநி குண்டலி எமதாயி குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகுவிதாகம சுந்தரி தந்தருள் குமர மூஷிகம் உந்திய ஐங்கர கணநாயகன் மம விநாயகன்”
>
அப்படின்னு அம்பாள் நாமாவளி நிறைய சொல்லிண்டே இருப்பார். அப்படி அம்பாளோட நாமங்கள் எல்லாம் மந்திரங்கள். நமக்கு நாமத்தோட மகிமையை நம்மால விளக்க முடியாது. அது நம்பிக்கையோடு சொன்னா அதோட பலன் கண்கூடு.
சுவாமிகள் நாமத்தோட மகிமையைச் சொல்லும்போது ஒண்ணு சொல்லுவார். இந்தப் பூஜை, தர்ப்பணம் அதுலெல்லாம் சங்கல்பம் சொல்லும்போது முதல்ல எடுத்தவுடனே சில ஸ்லோகங்கள் சொல்லுவா:
> “மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி ந சம்ஷயஹ”
>
மனசாலோ, வாக்காலோ, கர்மத்தினாலோ செய்த பாவங்கள் எல்லாம் ராமனை ஸ்மரிப்பதால் போய்விடுகின்றன அப்படின்னு சொல்லும்போது, அதை முடிச்சவுடனே வாத்தியார் என்ன சொல்லுவார், “ஸ்ரீராமா ராம ராமா” அப்படின்னு சொல்லுவார். அவர் வந்து “இப்போ ராமரைத் தியானம் பண்ணுங்கோ, ஸ்மரணம் பண்ணுங்கோ”ன்னு சொல்லிச் சொல்ல மாட்டார்; ஸ்ரீராமா ராம ராமான்னு சொன்னா அதுதான் ராமருடைய தியானம் அப்படின்னு சுவாமிகள் சொல்லுவார்.
அடுத்த ஸ்லோகத்துல:
> “திதிர் விஷ்ணு ததா வார நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச யோகஞ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணுமயம் ஜகத். ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்தா”
>
அப்படின்னு சொல்லுவார். அப்படி அந்த கோவிந்த நாமத்தைச் சொன்னாலே அந்த பகவானுடைய ஸ்மரணம், விஷ்ணு பகவானுடைய ஸ்மரணம் அப்படின்னு ஆதிகாலத்துல இருந்து ரிஷிகள் வச்சிருக்கா. தினம் பண்ற சந்தியாவந்தனத்துலயே விஷ்ணுவுடைய நாமங்கள் திருப்பித் திருப்பி ஆசமனம் பண்ணும்போது சொல்றோம். அப்படி நாமங்களைச் சொன்னால் எல்லா பாவங்களும் போகும், நமக்குக் கேட்ட வரங்கள் கிடைக்கும்.
வித்³யே விதா⁴த்ருʼவிஷயே காத்யாயனி காலி காமகோடிகலே .
பா⁴ரதி பை⁴ரவி ப⁴த்³ரே ஶாகினி ஶாம்ப⁴வி ஶிவே ஸ்துவே ப⁴வதீம் ..
அப்படின்னு அம்பாளை ஸ்தோத்திரம் பண்ணுவோம். நமக்கும் இருக்கிற நாள் வரைக்கும் படிச்சிட்டே இருக்க வேண்டியதுதான். அதனால நமக்கும் புதுசு புதுசா படிக்கிறதுக்குப் புத்தியில சக்தி இருக்கும். நமக்குக் பிரியமானவா, குழந்தைகள் எல்லாரும் நன்னா படிக்கணும்னா இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம். அம்பாளுக்கு பஞ்ச சங்க்யோபசாரிணினு ஒரு நாமாவளி இருக்கு. அஞ்சு பிரதட்சணம், அஞ்சு நமஸ்காரம் அப்படி எல்லாமே அஞ்சு அஞ்சா பண்ணுவா. அதனால இதை அஞ்சு வாட்டி சொல்லி ஒரு குழந்தைக்கு நம்ம ஆசீர்வாதம் பண்ணா அந்த குழந்தை நன்னா படிக்கும். நம்மளும் அந்த குழந்தைக்காக ஜெபிப்போம். அந்த மாதிரி ஒரு அழகான ஒரு நாம மந்திரம்:
வித்³யே விதா⁴த்ருʼவிஷயே காத்யாயனி காலி காமகோடிகலே .
பா⁴ரதி பை⁴ரவி ப⁴த்³ரே ஶாகினி ஶாம்ப⁴வி ஶிவே ஸ்துவே ப⁴வதீம் ..
vidye vidhAtRviShaye kAtyAyani kAli kAmakoTikale |
bhArati bhairavi bhadre shAkini shAmbhavi shive stuve bhavatIm ||
This is the 78th slokam in the Arya Shatakam. If we look at the meaning of this slokam: Vidye means we can say She is the embodiment of Sri Vidya, or we can say She is of the form of Saraswati. Vidhatruvishaye means, Vidhataa is Brahma. If we take vidyE as Saraswati, we can say this refers to Saraswati as well, who is the wife of Brahma. We can also say another meaning as Vidhatru Avishaye, meaning She is beyond the creation of this Brahma.
Katyayani: The occasion/avatar where She was born as the daughter of Sage Katyayana. Kali: Refers to the dark-hued one, or one who is beyond time (Kala); there are so many meanings for Kali. Kamakoti: She is the ultimate end/pinnacle of all desires. Kale: We can say many meanings for Kala as well; we can say She is the form of all arts. Bharati is another name for Saraswati. Bhairavi: The wife of Bhairava is Bhairavi. Bhadre: The supremely auspicious one. Regarding Shakini, it can be taken as Shakambari; once Ambal took an avatar as the form of all vegetables, that can be called Shakini. Shambhavi: The wife of Shambhu, the source of auspiciousness. Shivaa is derived from the word Shiva, meaning auspiciousness.
Worshiping Bhavatim (You), who possesses such names—O Kamakshi, I Stuve (praise/extol) You; we can consider it as “I praise You through these names.”
A person who is a great authority in Mantra Shastra came to Swamigal and asked, “Please tell me a slokam so that children in my house study well.” He was a very close friend to Swamigal; Swamigal told him this slokam. He was very happy and said, “Aha! Aha!” What beautiful names! It is centered on Saraswati, it is the Kali who gave speech to Kalidasa, there are many Mantra Shastra matters in this; everything is a Namavali (string of names), everything is a Nama Mantra. He left saying it is a very good slokam and he was very happy. Thus, Swamigal would suggest this slokam for education.
Ambal herself has a name in her Namavali as Nama-parayana-preeta (one who loves the chanting of names). Thus, the worship of Ambal primarily means chanting Her names. When Arunagirinathar comes to describe Ambal, he pours out names. In Seerpadavaguppu:
“யுவதி பவதி பகவதி மதுரவசநி பைரவி கௌரி உமையாள் திரிசூலதரி வனசை மதுபதி அமலை விஜயை திரிபுரை புனிதை வநிதை அபிநவை அநகை அபிராம நாயகி தன் மதலை”
(Yuvati bhavati bhagavati madhuravasani bhairavi gauri umaiyaal thirisooladhari vanasai madhupathi amalayi vijayayi thiripurai punithai vanidhai abhinavai anagai abirama nayagi than madhalai)
He says so. In the song starting with Kamalamadudan:
“குமரி காளி பயங்கரி சங்கரி கௌரி நீலி பரம்பரை அம்பிகை குடிலை யோகிநி சண்டிநி குண்டலி எமதாயி குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகுவிதாகம சுந்தரி தந்தருள் குமர மூஷிகம் உந்திய ஐங்கர கணநாயகன் மம விநாயகன்”
(Kumari kaali bhayankari sankari gauri neeli parambarai ambigai kudilai yogini chandini kundali emadhaayi kuraivilaal umai mandhari andhari veguvidhaagama sundhari thandharul kumara mooshigam undhiya aingara gananaayagan mama vinaayagan)
In this way, he will keep reciting many of Ambal’s Namavalis. Thus, all the names of Ambal are mantras. We cannot explain the greatness of the Name (Nama). If chanted with faith, its result is tangible.
When Swamigal speaks of the greatness of the Name, he mentions one thing. In this Puja or Tarpanam, when saying the Sankalpam, they say some slokams right at the beginning:
mAnasaM vAchikaM pApaM karmaNA samupArjitam |
shrIrAma smaraNenaiva vyapohathi na saMshayaH ||
When saying that the sins committed by mind, speech, or actions are all removed by the mere remembrance of Rama, as soon as he finishes that, what will the Vadhyar (priest) say? He will say, “Sri Rama Rama Rama.” He won’t say, “Now meditate on Rama, perform dhyanam”; Swamigal says that saying “Sri Rama Rama Rama” is itself the meditation on Rama.
In the next slokam:
thithir viShNu tathA vAra nakShatraM viShNureva cha |
yogajncha karaNajchaiva sarvaM viShNumayaM jagat. shrI govinda govinda govindA ||
He will say so. Thus, the Sages from ancient times have established that merely saying that Govinda Nama is the remembrance of Bhagavan, the remembrance of Vishnu. Even in the daily Sandhyavandanam, we repeat the names of Vishnu so many times during Achamanam. If we say the names like that, all sins will go, and we will receive the boons we asked for.
vidye vidhAtRviShaye kAtyAyani kAli kAmakoTikale |
bhArati bhairavi bhadre shAkini shAmbhavi shive stuve bhavatIm ||
Thus, let us praise Ambal. For us too, we have to keep studying for as long as we live. Therefore, we too will have the power in our intellect to learn new things. If people dear to us or children need to study well, we can say this slokam. Ambal has a name called Pancha-sankyopacharini (one who is worshiped in fives). Five circumambulations, five prostrations—they do everything in fives. Therefore, if we say this five times and bless a child, that child will study well. We too shall pray for that child. It is such a beautiful Nama Mantra:
vidye vidhAtRviShaye kAtyAyani kAli kAmakoTikale |
bhArati bhairavi bhadre shAkini shAmbhavi shive stuve bhavatIm ||