மந்தஸ்மித சதகம் 9வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி மந்தஸ்மிதம் பவபயத்தை போக்கும்
जेतुं हारलतामिव स्तनतटीं सञ्जग्मुषी सन्ततं
गन्तुं निर्मलतामिव द्विगुणितां मग्ना कृपास्रोतसि ।
लब्धुं विस्मयनीयतामिव हरं रागाकुलं कुर्वती
मञ्जुस्ते स्मितमञ्जरी भवभयं मथ्नातु कामाक्षि मे ॥
2 replies on “காமாக்ஷி மந்தஸ்மிதம் பவபயத்தை போக்கும்”
அற்புதமான ஸ்லோகம்.. மிகவும் அருமையான விளக்கம் 👌🙏🌸
ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டியதை இந்த ஸ்லோக வரிகள் மூலமாக சொன்னது மிக அருமை 👌🙏🌸 “த்யாகத்தால் மட்டும்தான் அம்ருத நிலை”, “பக்தயினால் மட்டும்தான் நாம் பகவானை அடைய முடியும்”👌👌
“தோஷ புத்தியோட உலக விஷயங்களை அனுபவித்துக்கொண்டு பக்தி பண்ணிண்டே இருப்போம்”- நாராயணீயம் மேற்கோள் மூலம் ஸ்வாமிகளின் அறிவுரை அருமை 🙏🙏🙏🙏
சதாசிவ பிரம்மேந்திராள், ‘பிபரே ராம ரஸம்’ என்ற பாட்டில், “ஏ நாக்கே! ராம ரஸத்திலேயே மூழ்கி இரு.. அது பாவங்களிலிருந்தும், ஜனன மரண பயத்தில் இருந்தும், சோகத்தில் இருந்தும் உன்னை விலக்கிவிடும்” என்கிறார். நாமும் அம்பாளுடைய கிருபையோடு கூடிய மந்தஸ்மிதத்தில் மூழ்கி இருப்போம் 🙏🌸
காமாக்ஷி ! உன் ஸ்தன பிரதேசத்தில் விளையாடும் (விளங்கும்) வெண்மையானமுத்து மாலையைப் கருணா பிரவாஹத்தில் மூழ்கடிப்பதாகவும், உலகை ஆச்சர்யமான நிலையில் அழிக்கும் சிவனை உவகையடையச் பெய்யும் உன் அழகிய புன்சிரிப்பு ஜனன மரண பயத்தை அழிக்கட்டும் !
எத்தனை பொருள் பொதிந்த ஸ்லோகம் இது !
உலகியல் வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்ற பல உணர்ச்சிகள் இடையே வாழ்ந்து, பணம் ஈட்டுவதையே பிராதான்யமாக நினைத்து உழலும் மக்களுக்கு இடையே சுவாமிகள் போன்று எந்த வித எதி பார்ப்புகளும் அற்று அம்பாள் , குருவாயூரப்பன் சரண ஸ்மரணையில் வாழ்ந்த மகன்களுக்கு இடையே நாம் வாழ்ந்தும் எதையும் கற்காமல் ஜென்மத்தை வீன் செய்கிறோமோ என அடிக்கடி தோன்றுவதுண்டு !
சரண கமலாலயத்தை அரை நிமிட நேர மட்டில் தவ முறை தியானம் வைக்க அறியாத மட்டிகள் தாம் இவ்வுலகில் பலரும் !
அம்பாள் பாத தியானம் செய்து மேல் நிலை எய்த அவள் அனுகிரகம் வேண்டி நிற்கின்றேன்!
அழகான விளக்கம், பிரவசனம்
நன்றி !!
ஜய ஜய ஜகதம்ப சிவே…