Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கருப்பு அமிர்தம்

கடாக்ஷ சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கருப்பு அமிர்தம்

Ramana periya puranam book (36 mb pdf file)

अत्यन्तशीतलमनर्गलकर्मपाक-
काकोलहारि सुलभं सुमनोभिरेतत् ।
पीयूषमेव तव वीक्षणमम्ब किन्तु
कामाक्षि नीलमिदमित्ययमेव भेदः ॥

3 replies on “காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கருப்பு அமிர்தம்”

காமாக்ஷி கடாக்ஷம் கரு நீலமான அமிர்தம், அதை நயம்பட மஹான் ஸ்ரீ ரமணரின் மகத்துவத்துடன் ஒப்பிட்டு அள்ளிக் கொடுத்தது அமிர்தமாக இருக்கு. மணிவாசகரின் மொழி, மற்றும் காமாக்ஷி கடாக்ஷத்தை மஹான்களின் மூலம் வெளிப்படுத்தி கிடைக்க செய்வது எனும் இந்த நோக்கு வியப்பாக இருக்கு. பூமியில் மஹான்கள் நமக்காக இற(ர)ங்கி வந்து வழிகாட்டி நெறிப்படுத்தி பல மனிதர்களை உயர் நிலையில் இருக்க செய்தது, ஸ்ரீரமண அடியார் அண்ணாமலை போன்றோரின் கர்மங்களை விலக்கி அவர்களையும் ஆத்ம விசாரம் செய்ய வைத்தது போன்றவை, ஸ்ரீ ரமணரின் ஜாதி, இன, மத வேறுபாடற்ற தன்மை, “அணிலுக்காக மட்டும் முந்திரி”, என்று நகைச்சுவை ததும்ப கூறியது போன்ற நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களையும், மனிதர்களையும், அவரின் செயல்பாடுகளையும், நாம் அவைகளை நேர்மறையாக அணுக முயற்சி செய்ய ஊக்கம் தரும் விதமாக உள்ளது.

ரொம்ப அழகான விளக்கம்!
காமாக்ஷியின் கடாக்ஷம் கருணையுடன் கூடியது! இரு வினைப் பயன்களையும் எளிதில் முறியடிக்கும் வல்லமை உடையது !தேவர்கள் மற்றும் நல்லவர்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதால் அமிர்தம் போன்றது ! அத்தகைய தேவியின் கண்கள் கரு நீலமுடையது என்று சொல்வது இங்கு தனித் தன்மை !
ஶ்ரீ ரமண பகவானின் எளிய குணங்களைப் பகிர்ந்தது சாலப் பொருத்தம் ! ஏனெனில் பக்தர்களுக்காக த்தன் நிலை இறங்கி வந்து, அவர்களுடன் ஒன்றி யார் மனமும் நோகாமல் நடப்பது தெய்வத் தன்மை உடையவராக இருந்தால்தான் முடியும் !
அதுவும் அணிலுக்கு முந்திரி கொடுத்தது நம் போன்ற மனிதர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது ! கருணை மிகுந்த நடமாடிய தெய்வம் பகவான் அவர்கள் !
Apt post on an apt day !
ஜய ஜய ஜகதம்ப சிவே….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.