ஸ்துதி சதகம் 19வது ஸ்லோகம் – மங்களங்களை மட்டுமே அருளும் காமாக்ஷி கடாக்ஷம்
कालिन्दीजलकान्तयः स्मितरुचिस्वर्वाहिनीपाथसि
प्रौढध्वान्तरुचः स्फुटाधरमहोलौहित्यसन्ध्योदये ।
माणिक्योपलकुण्डलांशुशिखिनि व्यामिश्रधूमश्रियः
कल्याणैकभुवः कटाक्षसुषमाः कामाक्षि राजन्ति ते ॥
One reply on “மங்களங்களை மட்டுமே அருளும் காமாக்ஷி கடாக்ஷம்”
அற்புதமான ஸ்லோகம். எத்தனை அழகான உவமைகள். மிகவும் அருமையான விளக்கம். அழகான மேற்கோள்கள்.👌🙏🌸
மந்தஸ்மித ஒளி கடாக்ஷத்தின் ஒளியுடன் சேர்வதை கங்கா நதியும் யமுனா நதியும் சங்கமிப்பது போலே உவமிக்கிறார். அவளுடைய அதரங்களை சந்தியா காலத்துக்கு ஒப்பிட்டு கடாக்ஷத்தின் காந்தியை இருட்டோடு ஒப்பிடுவது மிக அருமை. அப்படிப்பட்ட காமாக்ஷியின் கடாக்ஷம் மங்களங்களை மட்டுமே அளிக்கிறது என்கிறார் மூககவி.
ஆசார்யாள் சௌந்தர்யலஹரி ஸ்தோத்திரத்தில், “தநோது க்ஷேமம் ந:” – “ந: க்ஷேமம் தநோது” – ‘நம் எல்லோருக்கும் க்ஷேமம் உண்டாக்கட்டும்’ என்று மங்களகரமாக ஆரம்பிக்கிறார். எது க்ஷேமத்தை உண்டாக்கட்டும்? ‘ஸீமந்த ஸரணி:’ அம்பாளுடைய வகிடு. ஸீமந்தமானது ஸிந்தூரத்தைத் தரிக்கிறது.
ஆசார்யாளுக்கு அம்பாளுடைய ஸிந்தூர ஸீமந்த ரேகையைக் கேச பாரத்தின் மத்தியில் பார்க்கும்போது, இருள் என்ற விரோதிக் கூட்டத்தால் கைதியாக்கப்பட்டது போல பால ஸூர்ய ரச்மி தோன்றுகிறது.
‘தவ வதந ஸௌந்தர்ய லஹரீ’ – ‘உன் திருமுகத்திலிருந்து பெருகுகிற அழகு வெள்ளம்’. அம்பாளின் ஸௌந்தர்யம் அவளுடைய வதனத்தில் முதலில் லஹரியாகப் பொங்கி அப்புறம் பரீவாஹமாகப் பரவுகிறது. நெற்றி உச்சியைத் தொடுகிறபோது அது ஸ்ரோதஸ்ஸாக ஆறுபோல் ஆகிறது. அப்புறம் இரண்டு பக்கமும் இருட்டு நெருக்கியதில் குறுகிக் குறுகி straight line-ஆக ஒரு வாய்க்கால் ரூபத்தை எடுத்துக் கொள்கிறது. அந்த வாய்க்கால் (ஸரணி)தான் அம்பாளுடைய வகிட்டுக்கோடு (ஸீமந்த ஸரணி). காருண்யமே உருவான லாவண்யத்தின் ஸாக்ஷாத் ரேகா வடிவந்தான் அம்பாளுடைய ஸீமந்தம்.
மஹாபெரியவா, “கிருஷ்ண பரமாத்மாவுக்காக யமுனை வெள்ளத்தைக் கிழித்துக்கொண்டு நேராக ஒரு வழி ஏற்பட்டது. அம்பாளுடைய முக லாவண்ய வெள்ளமே யமுனை மாதிரிக் கறுப்பு வெள்ளமாக இருக்கிற அவளுடைய கேசபாரத்தில் ஒரு வழியைக் கிழித்துக் கொண்டிருக்கிறது!” என்று இந்த ஸ்லோகத்திற்கு அர்த்தம் சொல்லும் போது உவமிக்கிறார்.
மேலும், “அம்பாளுடைய அழகு காமாதி அறுபகைக் கூட்டத்தில் நாம் சிறை வைக்கப்படாமல் ஆத்மக்ஷேமத்தை அடைந்து லோக க்ஷேமத்தை விருத்தி பண்ணுவதற்கான சக்தியை நமக்கு அநுக்ரஹம் பண்ணும்.” என்கிறார். 🙏🌸