பாதாரவிந்த சதகம் 100 ஆவது ஸ்லோகம் பொருளுரை – கவிகளுக்கு உத்வேகத்தை அளிக்கக் கூடிய மூக பஞ்ச சதீ ஸ்லோகம்
मनीषां माहेन्द्रीं ककुभमिव ते कामपि दशां
प्रधत्ते कामाक्ष्याश्चरणतरुणादित्यकिरणः ।
यदीये सम्पर्के धृतरसमरन्दा कवयतां
परीपाकं धत्ते परिमलवती सूक्तिनलिनी ॥
இந்த ஸ்லோகத்தோடு தொடர்புடைய ஒரு அனுபவம் கீழே
One reply on “கவிகளுக்கு உத்வேகத்தை அளிக்கக் கூடிய மூக பஞ்ச சதீ ஸ்லோகம்”
தேவியின் திருவடி கிரணங்கள், இந்திர திசையில் சூரியன் போல் உதித்து, கீழ் வானத்தில் கிரணங்களைப் பரப்புவது, நம் புத்தி ஒப்பற்ற தெளிவடைகிறது!!
இந்த ஸ்லோகத்தில் கவிதைகளே தாமரை, அதை.மலர்த்தும் கிரணங்கள் தேவியின் பாதங்களில் உற்பத்தியாகி விகசிக்க வைக்கிறது . அதனால் கவிதை என்னும் தாமரை மலர்ந்து மண த்தைப் பரப்பி, மகரந்தத்தை வாரி இறைத்து, அந்த இனிமையான திராட்சை, கஹீரம் போல் பரிபக்வம் எனும் மலர்ச்சி அடை கிறது.
என்ன ஒர் கவித்வம்!
இந்த ஸ்லோகம் சொன்னால் புத்தி விசாலம் ஆவதுடன் வேண்டியதை அளித்திடும் அருமையான ஒர் கற்பக வ்ருக்ஷம், காமதேனு போல் என கணபதியின் சொற்பொழிவு மூலம் அறிந்து கொண்டேன்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மேலும் ஒர் வாயில் !!
சொற் சுவையும் பொருள் சுவையும் கலந்த ஸ்லோகம்!
ஜய ஜய ஜகதம்ப சிவே….