மந்தஸ்மித சதகம் 79வது ஸ்லோகம் பொருளுரை – மஹாபெரியவாளுக்கும் ஸ்வாமிகளுக்கும் இருந்த அன்யோன்ய பிரேமை
कामाक्ष्या मृदुलस्मितांशुनिकरा दाक्षान्तके वीक्षणे
मन्दाक्षग्रहिला हिमद्युतिमयूखाक्षेपदीक्षाङ्कुराः ।
दाक्ष्यं पक्ष्मलयन्तु माक्षिकगुडद्राक्षाभवं वाक्षु मे
सूक्ष्मं मोक्षपथं निरीक्षितुमपि प्रक्षालयेयुर्मनः ॥
காமாக்ஷ்யா: ம்ருʼது³லஸ்மிதாம்ʼஶுநிகரா த³க்ஷாந்தகே வீக்ஷணே
மந்தா³க்ஷக்³ரஹிலா ஹிமத்³யுதிமயூகா²க்ஷேபதீ³க்ஷாங்குரா꞉ .
தா³க்ஷ்யம்ʼ பக்ஷ்மலயந்து மாக்ஷிககு³ட³த்³ராக்ஷாப⁴வம்ʼ வாக்ஷு மே
ஸூக்ஷ்மம்ʼ மோக்ஷபத²ம்ʼ நிரீக்ஷிதுமபி ப்ரக்ஷாலயேயுர்மன꞉
இது மந்தஸ்மித்த ஶதகத்தில் 79வது ஸ்லோகம்.
நாளைக்கு ஸ்வாமிகளுடைய ஆராதனை. ஸ்வாமிகளை பத்தி நினைக்கும் போது மஹாபெரியவாளோட சேர்த்து தான் நினைக்கணும். அவா ரெண்டு பேரும் அவ்வளவு பரஸ்பரம் ப்ரேமையில் இருந்தா. இந்த ஸ்லோகம் அந்த அவாளுக்குள்ள இருந்த ப்ரேமையை காமிக்கறா மாதிரி இருக்கு.
இதுல 3வது வரி, “மாக்ஷிககு³ட³த்³ராக்ஷாப⁴வம்ʼ வாக்ஷு மே”
வாக்ஷு மே’- என்னுடைய வாக்கில்
மாக்ஷிககு³ட³த்³ராக்ஷா’
மாக்ஷிகம் – தேன்..
கு³ட³ம் – வெல்லம்…
த்³ராக்ஷா – த்ராக்ஷ பழம்..
இதிலிருந்து லாம் என்ன இனிமை இருந்ததோ. அதோட பெருமை என்னவோ.. அதாவது அந்த மாதுர்யம்..அது என்னுடைய வாக்கில்,
பக்ஷ்மலயந்து: – பரிமளிக்கட்டும்
அப்படினு ஒரு பிரார்த்தனை.. அந்த மாதிரி இனிமையான வாக்கு ஸ்வாமிகளுக்கு இருந்தது. அந்த வாக்கை கொண்டு ஸ்வாமிகள், கிருஷ்ணனுடைய கதையும், ராமனுடைய கதையும் சொன்னார். பெரியவா உட்கார்ந்து அதை கேட்டா அதுக்கு பிரதியா பெரியவா, ஸ்வாமிகளுக்கு, அடுத்த வரியில்..”ஸூக்ஷ்மம்ʼ மோக்ஷபத²ம்ʼ நிரீக்ஷிதுமபி ப்ரக்ஷாலயேயுர்மன꞉” அப்படினு க்ஷ்மமான மோக்ஷ மார்கத்தை பார்ப்பதற்கு, “நிரீக்ஷிதும்.’ மன: ப்ரக்ஷாலயேயு:” என்னுடைய மனசை சுத்தம் பண்ண வேண்டும்..அப்படினு, ஸ்வாமிகள் இந்த மூக பஞ்ச சதியை சொல்லிண்டேயிருப்பார். பெரியவாளை நினைத்து கொண்டு சொல்லிண்டு இருப்பார். அதனால் பெரியவா தேன் போன்ற வாக்கையும் கொடுத்து, அந்த வாக்கை கொண்டு, ஒரு க்ஷணம் விடாம பகவானுடைய கதையை பேசும் படியா பண்ணி, அந்த கதையை தானே கேட்டு, அதுக்கு பலனா ஸ்வாமிகளுக்கு, இப்படி நடந்துண்டா. மோக்ஷ பாதையில் முன்னேறலாம் அப்படினு காமிச்சா..இது கடைசி இரண்டு வரி..முதல் இரண்டு வரியில். “தா³க்ஷாந்தகே வீக்ஷணே மந்தா³க்ஷக்³ரஹிலா:” தக்ஷனுடைய எதிரியான பரமேஸ்வரனை பார்க்கும் போது, வெட்கத்தை அடைய கூடியவைகள்ளான
“காமாக்ஷ்யா: ம்ருʼது³லஸ்மிதாம்ʼஶுநிகரா” காமாக்ஷினுடைய மந்தஸ்மித்தின் ஒளி..
பரமேஸ்வரன் பார்க்கும் அந்த மந்தஸ்மிதம் வெட்கத்துடன் கூடி ஒளிர்கிறது..அப்படினு அர்த்தம்.. ஸ்வாமிகளை பத்தி மஹாபெரியவா தன்னை மீறிண்டு நிறையா பேர் கிட்ட சொல்லிற்கா..அவ்ளோ ப்ரியம் ..
Dunlop க்ருஷ்ணன்னு, தேவாரம் ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் போய் படிப்பார். அவர் கிட்ட ஸ்வாமிகளை பத்தி பேசியிருக்கார். அவர் வந்து நமஸ்காரம் பண்ணியிருக்கார்..
நாதன் cafe விஸ்வநாதன் இருந்தார்..அவர் கிட்ட பெரியவா, எனக்காக குருவாயூரில் ஸ்வாமிகள் சப்தாஹம் பண்ணின்டு இருக்கார்.. அவருக்கு ஜ்வரம்..நீ இங்க பக்கத்தில், வாசலில் இருக்கிற பிள்ளையாருக்கு 108 கொழுக்கட்டை பண்ணி, நெய்வேத்தியம் பண்ணி வேண்டிண்டு போ.. அப்படினு சொல்லியிருக்கா..அந்த விஸ்வநாதனுக்கு ஓரே ஆச்சர்யம்.. அப்புறம்அவர் தேடிண்டு வந்து, ஸ்வாமிகள் பத்தி யாருக்குமே தெரியாது. அதனால் ரொம்ப நாள் 6மாதம் 1 வருஷம் விசாரிச்சு, விசாரிச்சு தெரிஞ்சுண்டு திருவல்லிக்கேணி ஸ்வாமிகள் பார்த்து நமஸ்காரம் பண்ணி, “நாங்கள் எல்லோரும் பெரியவாளை நினைத்து கொண்டு இருக்கிறோம். பெரியவா உங்களையே நினைத்து கொண்டு இருக்கா”, அப்படினு சொல்லிட்டு போனார்.
திருவல்லிக்கேணி நாராயண ஐயர் கிட்ட, ஜானகிராம் மாமா கிட்ட 1மணி நேரம் மஹாகானில் காலையில் 5மணிக்கு கூப்பிட்டு, ஸ்வாமிகளை பத்தி சொல்லி, சுபாஷ்ரயம், புளியகொம்பா பிடிச்சுயிருக்க, அப்படினு சொல்லி, அந்த ஜானகி ராம் மாமா நாளைக்கு ஆராதணையில், 86வயசு ஆகிறது, எல்லாத்தையும் அவர்தான் நிர்வாகம் பண்றார். அப்படி ஒரு அனுக்கிரஹம். பெரியவா சொன்ன அந்த வாக்கு, ஸ்வாமிகளுக்கு பண்ண கைங்கர்யம். ஸ்வாமிகளுடைய மாமியார் கிட்ட மஹாபெரியவா, உன் மாப்பிளையை வேலையை விட்டுவிட்டு பாகவதம் படிக்க சொல்லி விட்டேன் என்று கவலை படறியா. அவரை மாதிரி கிடைக்காது. அப்படினு ஸ்வாமிகளுடைய பெருமையை, அந்த மாமிக்கு ரொம்ப நேரம் சொல்லி இருக்கார்.
சதாராவில் மாராட்டி பாஷயில், அங்க இருக்கிற ஜனங்களுக்கு ஸ்வாமிகளை பத்தி பேசியிருக்கார் பெரியவா.bombay ல இருந்து போன ஸ்வாமிகளுடைய பக்தர் அதை கேட்டு விட்டு, ரொம்ப ஆச்சர்யப்பட்டு, சந்தோஷப்பட்டு, ஸ்வாமிகள் கிட்ட வந்து சொன்னார். சிவன் சார் என்கிட்ட ஸ்வாமிகள்பத்தி சொல்லிண்டே இருந்தார். ரெண்டு கையையும் தலை மேலே தூக்கி வச்சு ஸ்வாமிகளை, நமஸ்காரம் பண்ணுவார்..அப்படி அம்மாக்கள் குழந்தைனுடைய பெருமையை, பிள்ளை புராணம் பாடறா பாரு அப்படினு சொல்றாமாதிரி, ஸ்வாமிகளை பத்தி பெரியவா நிறைய பேர் கிட்ட பேசி இருக்கா..
இதை ஸ்வாமிகள் கிட்டசொன்னால், வெட்கப்படுவார்.. கணவன், மனைவிக்குள்ள இருக்கிறா மாதிரி, ஒரு தான் தனக்கு உள்ள, பெரியவா பக்தி பண்ணி, பெரியவா சொன்னதை கேட்டுண்டு, ஆத்மார்த்தமா அந்த சந்தோஷப்பட்டுண்டு இருக்கணும்.. இதை ஏன் பெரியவா வெளியில் சொல்றா ? அப்படினு ஸ்வாமிகள் வெட்க படுவார்.
‘த³க்ஷாந்தகே வீக்ஷணேமந்தா³க்ஷக்³ரஹிலா’ மாதிரி.
‘ஹிமத்³யுதிமயூகா²க்ஷேபதீ³க்ஷாங்குரா꞉
ஹிமத்³யுதி- ஹிமாம்ஷு – ‘சந்திரன்’ சந்திரனுடைய ஒளியை ‘ஆக்ஷேபம்’ பண்ணுவது, என்று ‘தீக்ஷ’ எடுத்துண்டு இருக்கு.
அப்படிங்கிற காமாக்ஷினுடைய மந்தஸ்மித்தம், சந்திரனுடைய ஒளியை காட்டிலும் ஒளியோடு விளங்குகிறது என்று அர்த்தம். அதை கவி எப்படி சொல்றார்னா,
“மயூகா²க்ஷேபதீ³க்ஷாங்குரா꞉” சந்திரன் ஒளியை பழிக்கறது அப்படினு சொல்றார். ஸ்வாமிகள் ரொம்ப ஆத்மார்த்தமா பாகவதத்தை உபாசனம் பண்ணின்டு இருந்தார்.அந்த கால கட்டத்தில், பாகவதம் சொல்ரவாள், பேசறவாள், ராமாயணம் சொல்றவா இருந்தா. பணம், புகழ், ககியாதியோட இருந்தா..ஆனால், ஸ்வாமிகள் அவாளெல்லாம் object பண்ண மாட்டார். தான் எந்த வழி சரியான வழியோ, எதுல போனா மோக்ஷத்தை அடையலாமோ, அந்த மாதிரி தூய்மையான வழியில், பாகவதத்தை உபாசனம் பண்ணி, பாகவத தர்மத்தை தன் வாழ்க்கையாக நடந்து காமித்தார். அதனால் தான் பெரியவா கூப்பிட்டு கொண்டாடினா. உட்கார வச்சு பாகவதம் சொல்லி கேட்டா.
பரமேஸ்வரன் சந்திரனை தலையில் வைத்து கொண்டு இருக்கிறார். பெரியவா எல்லா நல்ல கார்யம் பண்றவாளை கொண்டாடுவா. பரமேஸ்வரன் அம்பாளுடைய மந்தஸ்மிதத்தை ரசிப்பாரா? சந்திரனை ரசிப்பாரா?
மந்தஸ்மித்துக்கு நிகர் ஆகுமா சந்திரன்..அந்த மாதிரி ஸ்வாமிகள் அவ்ளோ intimate தன்னுடைய மனசுல வச்சுண்டு, ஸ்வாமிகள் பாகவதத்தில் எப்படி பகவத் பஜனம் பண்ணனும், எப்படி உத்தம பக்தி பண்ணனும், எப்படி உலக விஷயங்களில் மனசை வைக்க கூடாது. சந்நியாசம் ஸ்வாமிகள் பாகவதம் படிச்சுண்டு, ப்ரவசனம் பண்ணின்டு இருந்தார்.அதை பெரியவா கொண்டாடறது மூலமா, ஸ்வாமிகள் வேற எதையும் பழிக்காம, தன்னுடைய ஒளிய, எப்படி காமாக்ஷி மந்தஸ்மித்தம் பண்ணுவாளோ, அந்த மாதிரி தன்னுடைய பாகவத தர்மத்தை நடத்திண்டே போனதுனால, இது மூலமாகவே அந்த புகழ் பணத்துக்காக ராமாயணம் பாகவதம் பண்ணின்டு இருந்தவா எல்லாரையும் பழிக்கறா மாதிரி, ஆனா பழிக்கவில்லை. இந்த ஸ்லோகத்தில் சொல்றா மாதிரி,
‘ஹிமத்³யுதிமயூகா²க்ஷேபதீ³க்ஷாங்குரா꞉’ அப்படினு தான் எந்த வழியில் இருக்கணுமோ அந்த வழியில் இருந்தார். யாரையும் பழிக்கவில்லை. ஆனால் ஸ்வாமிகள் வாழ்ந்த வாழ்க்கையே அவ்வளவு ஒளியோடு இருந்ததுனால, மற்றது எல்லாம் dull அடிக்கறது.. அதானால்தான் இப்ப நம்ப ஸ்வாமிகளை கோவில் கட்டி, ஆராதனை பண்ணி, கொண்டாடுகிறோம்.
இந்த ஸ்லோகத்தில் நல்ல வாக்கு வேணும், மோக்ஷத்துக்கு வழி வேணும் அப்படினு சொல்றா மாதிரி, அவர் அளவுக்கு நம்ம ஒண்ணு பெரியவா கிட்ட போய் நம்ம ப்ரவசனம் பண்ண போறது இல்லை.
நமக்கு, மாக்ஷிககு³ட³த்³ராக்ஷாப⁴வம்ʼ அப்படினா, மஹான்களோட வாக்கு தான்.. இந்த மூக பஞ்ச சதி, நாராயணீயம் மாதிரி வாக்கு, நம்ப பேசினா அசட்டு பேச்சாகத் தான் இருக்கும். இந்த மஹான்கள் வாக்கை எடுத்து நம்ப உபாசனை பண்ணிணோம்னா, அது இனிமையா இருக்கிறதுனால நம்ப வாக்கு இனிமை ஆயிடும். எதுவும் ரொம்ப escotericஆ, ஸ்ரீ வித்யை மந்த்ரம் ஜபங்கள் எல்லாம் போகவே வேண்டாம். இந்த ஸ்தோத்திரங்களிலும், நாமத்திலும், அனுக்கிரஹம் இருக்கு.. பகவானோட அனுக்கிரஹம் இருக்கு. அப்படிங்கறது ஸ்வாமிகள் மோக்ஷத்துக்கு காண்பித்த வழி. மதங்க முனிவர் சபரிக்கு வேதமா சொல்லி தந்து இருப்பார் ? ..ராமரோட கதையும், ராமருடைய நாமத்தையும் சொன்னார். அந்த மாதிரி humbleஆக, யோகம், யாகம்லாம் பண்றவா எல்லாரும் பண்ணட்டும், நம்ப இந்த humbleஆ நாமத்தை குரங்கு பிடியாக பிடிச்சுப்போம்னு பெரியவா சொல்றா மாதிரி, ஸ்வாமிகள் ஸ்தோத்திர பாராயணங்களை முக்கியமா சொன்னார்.. அதை நாம பண்ணி, அவருடைய ஆசிர்வாதத்தை அடைவோம். இந்த ஸ்லோகமும், ஸ்வாமிகள் மஹாபெரியவளுடைய அந்நியோன்ய ப்ரேமையும் ஏன் ஞாபகம் வந்ததுனா? இந்த ஸ்லோகத்தை படித்தவுடனே,
அபிராமி அந்தாதி ஸ்லோகம்
புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங் குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து, தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
அப்படிங்கறது ஞபாகம் வந்தது. ஸ்வாமிகளுக்கு ஏன் இவ்ளோ பெருமை? மஹாபெரியவா கொடுத்த பெருமை. இல்லைனா கூட அவர், humbleஆக இன்னும் கூட உலகத்துக்கே தெரியாம இருந்துட்டு போயிடுவார். பெரியவாளுக்கு ஆசை, அதனால ஸ்வாமிகளுக்கு இந்த மாதிரி கோவிலும் கும்பாபிஷேகமும், ஒரு ஆராதனையும் நடக்கறது. அங்க ஸ்வாமிகளுடைய பக்தர்கள் எல்லாரும் வந்து அதை கொண்டாடுவா. அதுக்கு நடுவில், இருக்க பண்ணி, நமது வாழ்க்கையும் ஒரு அர்த்தம் உள்ளதாக ஆகிறதே! அப்படினு எனக்கு ஒரு சந்தோஷம் வந்தது.
அப்ப அந்த அபிராமி அந்தாதி ஸ்லோகமும், மூக பஞ்ச சதி ஸ்லோகமும் ஞாபகம் வந்தது..
காமாக்ஷ்யா: ம்ருʼது³லஸ்மிதாம்ʼஶுநிகரா த³க்ஷாந்தகே வீக்ஷணே
மந்தா³க்ஷக்³ரஹிலா ஹிமத்³யுதிமயூகா²க்ஷேபதீ³க்ஷாங்குரா꞉ .
தா³க்ஷ்யம்ʼ பக்ஷ்மலயந்து மாக்ஷிககு³ட³த்³ராக்ஷாப⁴வம்ʼ வாக்ஷு மே
ஸூக்ஷ்மம்ʼ மோக்ஷபத²ம்ʼ நிரீக்ஷிதுமபி ப்ரக்ஷாலயேயுர்மன꞉
நம:பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ..
3 replies on “மஹாபெரியவாளுக்கும் ஸ்வாமிகளுக்கும் இருந்த அன்யோன்ய பிரேமை”
ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஷரணம். 🙏🙇
ஸ்ரீ சிவன் சார் சரணம் ஷரணம். 🙏🙇
ஸ்ரீ ஸ்வாமிகள் சரணம் ஷரணம் 🙏 🙇
ஸ்ரீ ஸ்வாமிகளின் எளிமையான வாழ்க்கை முறை வெளி உலகுக்கு தெரியாமல் இருந்தது. ஸ்ரீ மஹா பெரியவா, ஸ்ரீ சிவன் சார் ஆகிய மஹான்கள் வாக்கினாலே ஸ்ரீ ஸ்வாமிகள் ஒரு மகான் என்று தெரிகிறது. 2013 ல் பிரம்மஸ்ரீ சுந்தர் குமார் மாமா, அடியேன் முதன் முதலில் அவருடைய ஸ்ரீ மத் பாகவத உபன்யாசம் கேட்கும்போது ஸ்ரீ ஸ்வாமிகள் பெயர் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த மாதிரி உயர்ந்த ஒரு மஹானை ஸ்மரித்த மாத்திரத்தில் நம் மனநிலையில் நல்ல மாற்றத்தை உணர முடிகிறது.
இன்று இந்த பதிவினால் அவருடைய ஆராதனை முன்னிட்டு விசேஷமாக அவரின் அருள் ஆசி கிடைக்க பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறேன். 🌹🌼🙏🙏
ஆங்கரை பெரியவா மற்றும் அதற்கு முன்பு டிரிப்ளிகேன் பெரியவா என்று மிகவும்மரியாதையோடு வணங்கப்பட்வரரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 1976-94 ஆண்டுகளில் மஹா பெரியவா என்ற சூரியன் ஜொலித்துக் கொண்டிருந்த போது நான் அங்கேயே என் தீவிர பக்தியை வைத்து விட்டதால் இவரை அறிந்து கொள்ள இயலவில்லை. வருத்தம்தான். க்ருஷ்ண தரிசனம் கிடைத்ததால் அக்ரூரை பார்க்கவில்லை போலும். எனக்கு தெரிந்து இவை: அவர்
ஒரு ஸ்தித ப்ரக்ஞர். அசாத்திய பக்தி விவேகம் சூக்ஷ்மமான ஞானம் மற்றும் தளராத நம்பிக்கை கொண்டவர். சின்னசின்ன சத் விஷயங்களை முத்துக்களைப் போல கோர்த்து மருந்தை தேனில் குழைத்து தந்தவர். லோக க்ஷேமத்தில் ஆர்வம் காட்டி சுயநலத்தை தூர எறிந்த கர்மயோகி.
காமாக்ஷியின் மந்தஸ்மிதம் எப்படிப் பட்டது ? அவள் புன்னகை, எனும் கதிர்க் கூட்டங்கள் தேன், வெள்ளம் த்ராக்ஷை கலந்த முக் கூட்டுக் கலவை ! அவள் புன்னகைப் சந்திரன் கிரணங்களை பழிப்பதேன்ற உறுதியுடன் செயல் பட்டதாகும் !
தக்ஷன் விரோதியாக பரமசிவன் தன்னைப் பார்க்கையில் வெட்கத்தால் தலை குனிந்தாள் போல் நடிப்பவல், அவர் பார்க்காதபோது பிரேமையுடன் அவரை நோக்குபவள் !
நம்மை மேலும் மேம்படுத்த அனுகிரகம் செய்ய வேண்டும் என்ற பொருள் கொண்ட ஸ்லோகம் ! மிக அழகானது !
இதில் ஸ்வாமிகள் பேச்சு, செயல்.மிக மதுரம் ! என்ற கருத்துப்.பொதிந்துள்ளது ! பெரியவா பற்ரி நாம்.பார்த்தும்.பலர் மூலமாகக் க்கேட்டும் அறிவோம் , ஸ்வாமிகள் பற்றி பெரியவா எத்தகைய உயர்ந்த அபிப்ராயம் வைத்திருந்தார் என்பதை புத்தகங்கள் மூலமாகவும் தங்கள் பதிவுகள் மூலமும். அறிய முடிகிறது என் பாக்யம் !
பெரியவா சுவாமிகள் பற்றி சொன்னதைக் கேட்ட ஸ்வாமிகள் நாணத்துடன் புன்னகை செய்தது பற்றி குறிப்பிட்டது மிகப் பொருத்தம் !! அதை வர்நிட்த்திருப்பது கணவன் மனைவிக்குள் உள்ள அன்யோன்யம் வெளியே பேசினால் மனைவிக்கு ஏற்படும். நாணத்தை உதாரணமாகக் சொன்னது மிக அருமை !!
எளிமையின் அவதாரமான ஸ்வாமிகள் பற்றிக் கேட்டதுதான் அன்றி தர்சன பாக்யம் கிட்டவில்லை !!
உங்கள் பிரவசனத்தீன் மூலம் அது கிடைத்தது வருகிறது! நன்றி .