Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி கடாக்ஷம் ஸ்ரீராமரைப் போல இருக்கே!

கடாக்ஷ சதகம் 18வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் ஸ்ரீராமரைப் போல இருக்கே!

कुण्ठीकरोतु विपदं मम कुञ्चितभ्रू-
चापाञ्चितः श्रितविदेहभवानुरागः ।
रक्षोपकारमनिशं जनयञ्जगत्यां
कामाक्षि राम इव ते करुणाकटाक्षः ॥

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு –

Click to access jeevasya-tatvajignaasaa.pdf

6 replies on “காமாக்ஷி கடாக்ஷம் ஸ்ரீராமரைப் போல இருக்கே!”

உண்மை பகவத் த்யானம், அதை உள் வாங்கி கடைப் பிடிக்க மனத்தூய்மை, பக்தி இவற்றை அடைய அம்பாளும் குருவான நம் பெரியவா நமக்கு உபகாரம் செய்ய வேண்டும்
ராமர் கருணா மூர்த்தி நம்மை அண்டினவாளை ஆச்ரயிக்கிறவர் என்று அம்பாளின் புருவத்தை ராமர் வில்லோட ஒப்பிட்டிருப்பது அருமை
ரொம்ப அருமை இந்த சமயத்துக்கு
ஏற்ற ஆபத்துகளை விலக்க அழகான பதிவு.

மிக அழகான ஸ்லோகம்.. அற்புதமான விளக்கம்.. ஸ்வாமிகளின் உபதேசம் எளிமையான முறையில் எல்லோராலும் பின்பற்றக்கூடியதாக இருக்கிறது.. அதை பகிர்ந்ததற்கு நன்றி🙏

மூககவி அம்பாளுடைய புருவங்களை வில்லுக்கு ஒப்பிட்டு, அவளுடைய கடாக்ஷம் மன்மதனிடத்தில் பிரியமுள்ளதாயும், ராமரைப் போல ரக்ஷணமென்கிற உபகாரம் செய்வதாகவும் கூறுகிறார்.

ஸொந்தர்யலஹரி 47வது ஸ்லோகத்தில்,  ஆசார்யாள் அம்பாளைப் பார்க்கிறார். அவள் புருவம் நெரிந்து காண்கிறது.  “இந்த குழந்தைகளுக்கு ஒரு கஷ்டமும், பயமும் வரக்கூடாதே! கஷ்டப்படுகிறதுகளே, பயப்படுகிறதுகளே என்று பரம கருணையினால் வ்யஸனப்பட்டுக் கொண்டு புருவத்தை நெரித்து யோஜித்துக்கொண்டிருக்கிறாள்.

அம்பாளின் புருவங்கள் மன்மதனின் தநுஸ் என்று நினைக்கிறேன். அம்பாளுடைய இரண்டு கரு வண்டுக் கண்ணிலிருந்து புறப்படும் தீக்ஷ்ணமான பார்வை எல்லாப் பக்கமும், ஸமஸ்த ஜீவராசிகளையும் கடாக்ஷிப்பதற்காக, கிறுகிறு என்று ஸஞ்சரித்துக் கொண்டிருக்கிற வேகத்தில் அந்த இரண்டு வண்டுகளே ஏராளமான வண்டுகளின் வரிசை மாதிரித் தெரிகிறது! அது வண்டுகளால் ஆன ஒரு நாண்கயிறு போலவே தோன்றுகிறது. இடது கை முஷ்டியால் மன்மதன் வில்லைப் பிடித்துக் கொண்டிருப்பதால் புருவங்களின்  நடுபாகத்தையும் நாணின் மத்தியையும் நன்றாக மறைக்கிறது.” என்று நூதன கல்பனையோடு சொல்கிறார்.

மன்மதன் இந்த வில்லை வளைத்து யாரை ஜயிக்கப் போகிறான்? “வேறே யார்? பரமேச்வரனைத்தான். அவர் எந்த நிமிஷமும் தக்ஷிணாமூர்த்தியாகப் போய் ஏகாந்தத்தில் உட்கார்ந்துவிடாமல் இந்த ஜனனியோடு ஜனகனாக அநுக்ரஹம் பண்ணிக்கொண்டேயிருப்பதற்காகத்தான் மன்மதன் எப்போதும் ஸித்தமாக வில்லை நாண் பூட்டி வைத்துக் கொண்டிருக்கிறான். அம்பாள் கொடுத்த சக்தி, அவள் போட்ட பிச்சையில்தான் இவனுக்கு இந்த அதிகாரம் இருக்கிறது. அவளுடைய கருவி மாத்திரம்தான் இவன். அதனால், அதைக் காட்டவே, அம்பாளுடைய புருவம், விழிகள் இவற்றையே தன் கருவிகளாக காட்டுகிறான்!”

ஸாரம் என்னவென்றால் அம்பாள் மஹிமையே ஈச்வரன் எரித்துச் சாம்பலாக்கின மன்மதனை உயிர்ப்பித்ததுதான். ஸ்ருஷ்டி லீலைக்காக இப்படிப் பண்ணினாள். அப்புறம், ‘ஸ்ருஷ்டியில் ஜனங்கள் கெட்டுப் போகிறார்களே! அவர்களைப் காப்பாற்ற நம் ஒருத்தியாலேயே முடியும் என்றாலும், ஜனக-ஜனனியாக, தாயும் தந்தையுமாகப் போனால்தானே அவர்களுக்கு ரொம்பவும் பிடித்த மாதிரி இருக்கும்? அப்படி அநுக்ரஹிக்க வராமல் இவர் ஏகாந்தமாகவே போய் உட்கார்ந்துவிடப் போகிறாரே!’ என்று புருவத்தை நெரித்துக்கொண்டு கவலைப்பட்டாள். அப்போது, இவளால் உயிர்ப்பிச்சை பெற்றவன் அம்பாளுடைய புருவத்தையே தநுஸாக்கிக்கொண்டு, “நான் உன் உதவிக்கு வரேன் அம்மா! இந்த வில்லை நான் ஆயத்தமாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டே இருந்தேனானால் அவர் கொஞ்சம் வைராக்கியமாகிறபோதே பாணத்தைப் போட்டு அவரைத் திருப்பிவிடலாம். முன்னே ஏதோ கரும்பு வில்லை வைத்துக்கொண்டு ‘நான்’ பண்ண முடியும் என்று மார்தட்டிக் கொண்டு போனதால் பஸ்மமானேன். இப்போது ஸாக்ஷாத் உன் முகத்தில் நான் குடி புகுந்து, உன்னுடைய புருவ-நேத்ரங்களையே தநுஸு-நாணாக்கிக் கொண்டிருப்பதால் அப்படி ஆகாது; வெற்றியைப் பற்றி ஸந்தேஹமே இல்லை’ என்று சொல்கிறான்.

குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி🙏🙏🙏🙏

குருமூர்த்தயே த்வாம் நமாமி காமாக்ஷி ! உயர்ந்த தத்வத்தைஎளிய முறையில் அனுஷ்டிக்க நமக்கு பெரியவாளே காமாக்ஷி ரூபமா அவதரித்து அச்ரயிக்கும் பாக்யமும் அருளினார் என்பது எத்தகைய உண்மை!!
ஏளிய வாழ்க்கை வாழ்ந்து நமக்கெல்லாமனுக்ரஹ சக்தியா நேராகவே காட்சி கொடுத்து, தாம் சிவ சக்தி ஐக்ய ரூபமென்பதை அறவே மறைத்து வாழ்ன்தார் எனினும் சிற்சில சமயங்களில் அவர்ரறியாமலேயே அவர் அவதார புருஷர் என்பதை வெளிக்கொணர்ந்த சந்தர்ப்பங்களும் உண்டு!
குழந்தைகள் உம்மாச்சி தாத்தா என்று அழைப்பதற்கான விளக்கம் ஒருமுறை சொன்னார், எப்படி? ரொம்ப எளிய முரையில் தன்னைக் காண்பித்துக்கொள்வது போல் அல்லாமல்!
“உம்மாச்சி தாத்தா என்றால் என்னடா/ கேள்வி கேட்டு விடையும் சொல்றார்! உமா மஹேஸ்வரி என்பதுதான் குழந்தைகளுக்காகத் திரிந்து உம்மாச்சி ந்னு ஆயிடுத்து ”
இந்த கேள்வி பதிலில் அனைத்துத் தத்வங்களும் உள்ளன! ஆதி சங்கர பகவத் பாதாள் சிவ சக்தி ரூபமாய் அவதாரம் செய்தார் நம்மை உய்விக்க! அவருடைய மறு அவதாரமே நம்ம பெரியவா !! சிவ சக்த்யா யுக்தோ என்று அவருடைய ஸ்லோகம் ஆரம்பிக்குமாபோல் நமக்கு காமாக்ஷியே குருவடிவாகி குவலயந்தன்னில்
வந்து அவதாரம் செய்த பெரியவாளுக்கு நாமிந்த ஸ்தோத்ரத்தை சமர்ப்பித்து நான்கு நமஸ்காரங்களையும் செய்ய வேண்டும்!
ஸ்ரீ குருப்யோ நம:

A very very beautiful explanation, and the jIvasya tattvajij~nAsA is the most clear/direct upadesha one can get .. Ram Ram and Mahaperiyava Sharanam 🙏🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.