Categories
mooka pancha shathi one slokam

பற்றுக்களை விலக்கி பக்தி பண்ணுவது என்றால் என்ன?

கடாக்ஷ சதகம் 17வது ஸ்லோகம் பொருளுரை – பற்றுக்களை விலக்கி பக்தி பண்ணுவது என்றால் என்ன?

कामद्रुहो हृदययन्त्रणजागरूका
कामाक्षि चञ्चलदृगञ्चलमेखला ते ।
आश्चर्यमम्ब भजतां झटिति स्वकीय-
सम्पर्क एव विधुनोति समस्तबन्धान् ॥

One reply on “பற்றுக்களை விலக்கி பக்தி பண்ணுவது என்றால் என்ன?”

பற்றுக்களை நீக்கினால்தான் ஞானம் உதயமாகும் அல்லவா ?
இறைவன் எதைக் கொடுக்கிறாரோ அதுவே பிரசாதம் என்ற உயரிய பண்பை வளர்த்துக் கொண்டவர் ஸ்வாமிகள்!
திருப்புகழில் அருணகிரிநாதர் நாகை ஸ்தலத்தில் விழுதாதெனவே கருதாது உடலை வினை சேர்வதுவே புரிதாக என்று தொடங்கும் அதிலே ‘இறைவா எது தா அது தா எனவே ‘ என்று வரும், அதனையே பிரசாதமாக எடுத்து வாழ்ந்தவர் ஸ்வாமிகள்!
பகவத் பாதர், மஹா பெரியவா இவர்கள் தான் என்ன சாதித்தாலும் அதை இறைவனுக்கே அர்ப்பணம் பண்ணி தனக்கு ஒன்றும் தெரியாத மாதிரி சொல்லிக் கொள்ளும் எளிய ஸ்வபாவம் ! ஒன்றுமே இல்லாத பூஜ்யங்கள் தன்னால்தான் எல்லாம் நடக்கிறது என்று காண்பிக்கும்போது இறைவனுக்கு அர்ப்பணிக்கும் எளிமையாக எத்தகையது!
சிவானந்தலகரியில் அவ்வளவு பக்தி மார்கம் பற்றிச் சொல்லி, பின் பலஸ்துதியில் என்ன சொல்றார்?
ஸ்தோத்திர ஏனா லமஹம் என்று ஆரம்பம் ஆகும், பொருள் என்னவென்றால் எல்லா தேவர்களும் தாங்களே ஸ்தோத்ரம் செய்து வழிபட சிறந்த தேவம் என்று சொல்லி துதிக்கிரார்கள். அப்படிப்பட்ட தங்களுக்கு என் இந்த ஸ்துதியினால் என்ன ஆகப் போகிறது?ஸ்ருதி, ஸ்மிருதி, இதிஹாசங்களால் தாங்களே சிறந்தவர் என்று ஒப்புக்கொண்ட பின் என் இந்த ஸ்தோத்ர மாலையால் என்ன கிடைக்கும் என்று சொல்லி எளிமையின் இலக்கணம.ஆகத் திகழ்கிறார்,!
சௌந்தர்ய லஹரி யிலும் இப்படியே…சூரியனுக்கு கற்பூற ஹாரத்தி செய்வது போலவும், அமுத கிரணங்களையுடைய சந்திரனுக்கு சந்திரா காந்தக் கள்ளில் வடியும் நீரால் அர்க்யம் விடுவது போலவும் சொல்லி உந்தன் அருளால் கிடைத்த ஸ்தோத்திரத்தை உனக்கே அர்ப்பணம் செய்கிறேன் என்பதாக கருத்துள்ள பலஸ்துதி!
சாதாரண விஷயங்கள் செய்தாலே பெருமை கொள்ளும் மணிதரிடையில் பூத்த அவதார புருஷர்கள் பகவத் பாதாலும், பெரியவாளும் !
பெரியவா தான் செய்த எந்த விஷயத்தையும் தான் செய்ததாக
சொல்ல மாட்டார்கள்!
நின்றும் இருந்தும் கிடந்தும் நினைப்பது உன்னை என்ற அடிப்படையில்.வாழ்ந்தார்கள்!
எவ்வளவு ஆராய்ச்சி செய்து எழுதினார் போல் கணபதி அவ்வளவு அழகாக துல்யமாக எழுதி ஆசார்யாள் பெரியவா பற்றி மனதில் பதிய வைக்கிறார் ! பரிபூர்ண குரு கடாக்ஷம் !!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.