ஸ்துதி சதகம் 96வது ஸ்லோகம் பொருளுரை – சக்தி தொழிலே அனைத்துமெனில் சார்ந்த நமக்கு சஞ்சலமேன்!
त्वयैव जगदम्बया भुवनमण्डलं सूयते
त्वयैव करुणार्द्रया तदपि रक्षणं नीयते ।
त्वयैव खरकोपया नयनपावके हूयते
त्वयैव किल नित्यया जगति सन्ततं स्थीयते ॥
“த்வயைவ ஜக3த3ம்ப3யா பு4வனமண்ட3லம் ஸூயதே
த்வயைவ கருணார்த்3ரயா தத3பி ரக்ஷணம் நீயதே ।
த்வயைவ க2ரகோபயா நயனபாவகே ஹூயதே
த்வயைவ கில நித்யயா ஜக3தி ஸன்ததம் ஸ்தீ2யதே ॥96॥ ”
இது ஸ்துதி ஷதகத்தில 96 ஆவது ஸ்லோகம். ஜகதம்பா, லோகமாதாவாக இருந்து கொண்டு ஹே காமாக்ஷி! த்வயைவ,- உன்னாலேயே, பு4வன மண்ட3லம் ஸூயதே – இந்த பதினான்கு உலகங்களும் உண்டு பண்ண படுகிறது. நீதான் இந்த பிரம்மாண்டத்தயே சிருஷ்டி பண்ணறே. த்வயைவ கருணார்த்3ரயா – அந்த உலகமானது, உன்னுடைய கருணை ரசத்தினல், ரக்ஷணம் நீயதே – காப்பாற்றப்படுகிறது. த்வயைவ க2ரகோப்பையா – கடுமையான உக்கிரகமான கோபத்தினால், நயன பாவகே- நெற்றிக் கண்ணில் தோன்றும் அக்கினியில், ஹுயதே- இந்த சிருஷ்டியானது இந்த உலகங்கள் எல்லாம், ஹோமம் பண்ணப்படுகிறது. த்வயைவ கில நித்யயா ஜக3தி ஸன்ததம் ஸ்தீ2யதே – இந்த மாதிரி ஜகத்தை ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் பண்ணறது நீதான். சாசுவதமாக, நித்திய வஸ்துவாக இது எல்லாத்துலயும் இருக்கிறது நீ தான், அப்படின்னு சொல்றார், உயர்ந்த ஒரு தத்துவம்.
நம்ப தினமே தூங்கறோம், எழுந்துக்கறோம். தூங்கறது என்கிறது ஒவ்வொரு நாளும் ஒரு இறப்பு மாதிரிதான். எழுந்துக்கும் போது ஒரு பிறப்பு மாதிரி. நம்ம மனசு ஒவ்வொரு நாளும் தூங்கும் போது, இந்த உலகத்தை எல்லாம் அழித்து, கார்த்தால எழுந்துக்கும் போது இந்த உலகத்தை, நம்முடைய உலகத்தை சிருஷ்டி பண்றது இல்லையா? அது அந்த உள்ள இருக்கிற ஆத்மா பண்றது, அதுதான் மனசு மூலமா பண்றது. இதெல்லாத்தையும் பண்றது, காமாக்ஷி தான். உள்ள இருக்கிற அந்த ஆத்மா காமாக்ஷி தான்.
இந்த ஒரு மாசமா எங்கேயும் வெளியில் போக முடியாம இருக்கிறதுனால, நான் தினமும் மாடியில் போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு, படுத்துண்டு நட்சத்திரங்களையும், சந்திரனையும் பார்த்துண்டு இருக்கேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்த பழக்கம் உண்டு star gazing, அப்படின்னு சொல்லுவா. அது ஒரு ரொம்ப நல்ல ஹாபி, மனசு விரிவடையும், இந்தப் பரந்த ஆகாஷத்தைப் பார்த்துண்டிருந்தாலே. அதுல இந்த constellations, zodiac, முதல்ல நான் அதெல்லாம் இங்கிலீஷ்ல தான் தெரிஞ்சுண்டேன், அதுக்கு அப்புறம் ஸ்வாமிகள் பழக்கம் வந்த பிறகு பஞ்சாங்கம். அது மூலமா அதோட சம்ஸ்கிருதம், நம்ம தமிழ் பெயர் எல்லாம் தெரிஞ்சுண்டேன். சந்திர சூரியாள், அவாளுடைய மூவ்மெண்ட், கிரகங்களுடைய மூவ்மெண்ட், கிரஹணம் இதெல்லாம் தெரிஞ்சுண்டா முதல்ல ரொம்ப ஆச்சரியமா இருக்கும், இரண்டாவது அம்பாள் தான் இத்தனையும் சிருஷ்டி பண்றா. ஒரு மையில்(mile) இந்த சூரியன் ஆனது நமக்கு பக்கத்துல இருந்தா உலகம் எரிஞ்சு போயிடும், ஒரு மையில் அந்தப் பக்கம் இருந்தா உலகம் குளிர்ந்து போயிடும். அவ்வளவு கரெக்ட்டா அந்த இடத்தில அந்த சூரியனை வெச்சு நவகோள்கள் வெச்சு, இந்த கோள்கள் எல்லாம் தன்னைத் தானே சுத்தறது, இரவு பகல் வரது, சீசன்ஸ் வரது, பிரதக்ஷணம் பண்றது எத்தனை ஆச்சரியம் ! இதை யாராலயாவது நம்ப நினைத்து பார்க்க முடியுமா?
இதுல எத்தனையோ ஆபத்துகள், எரி நட்சத்திரங்கள் எல்லாம் வரது, போறது. வால் நட்சத்திரங்கள் வரது அதெல்லாம் ஒண்ணு மேல ஒண்ணு இடிச்சுக்காம இருக்கணும் நம்ம மேல விழாம இருக்கணும் எல்லாம் அம்பாளின் விளையாட்டு, சிருஷ்டி. பாரதியாரோட பல கவிதைகளை நான் படிச்சிருக்கேன், இந்த ஒரே ஒண்ணு தான் என் மனசல பாக்கி ஞாபகம் இருக்கு.
“பக்தி உடையார், காரியத்தில் பதறார், மிகுந்த பொறுமையுடன்,
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயன் அடைவார்,
சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்
வித்தைக்கிறைவா கணநாதா ! மேன்மைத் தொழிலில் பணி எனையே”
அப்படின்னு ஒரு பாட்டு, இந்த சக்தி தொழில் எல்லாமே, இதுல நாம சார்ந்து இருக்கோம் அவ்வளவுதான். இதுல நமக்கு சஞ்சலம் என்னத்துக்கு? வித்தைக்கிறைவா கணநாதா ! மேன்மை தொழிலில் பணி எனையே, அப்படின்னு சொல்றார்.
நம்ப இப்போ ஏதாவது ஒரு மாற்றம் வரும்போது தான் பக்திக்கு பரிக்ஷை. இப்போ ஒரு மாற்றம் வந்திருக்கு. இதனால என்ன ஆகுமோ அப்படின்னு கவலைப்படக் கூடாது. அப்போதான் நம்ப உறுதியா, அந்த இறை நம்பிக்கை நமக்கு சக்தி குடுக்கணும், இல்லன்னா இவ்வளவு நாளைக்கி பண்ணினது பிரயோஜனமில்லை இல்லையா? அதனால இந்த மாதிரி மாடியில் போய் உட்கார்ந்துண்டு, ஸ்ருஷ்டியோட அழக பார்த்தாலே இத்தனையும் பண்ற காமாக்ஷி நம்பள காப்பாத்த மாட்டாளா? அப்படின்னு ஒரு நம்பிக்கை வந்துடும். இப்படி ஒரு ஒழுங்கோட இத்தனையும் நடக்கிறது, சிருஷ்டில, அப்படின்னு சொல்லி மனசு பதற்றமடையாமல் ரொம்ப சாந்தம் ஆயிடும். பக்தி உடையார் காரியத்தில் பதறார் அப்படின்னு சொல்ற மாதிரி பதற்றம் போய்விடும், மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார், அப்படின்னு ஒரு வித்து முளைக்க எவ்வளவு நேரம் ஆகுமோ அந்த நேரம் ஆகத்தான் செய்யும், அதுபோல காரியங்கள் தானா நடக்கும், நல்லபடியா முடியும் அப்படிங்கற நம்பிக்கைக்கு தான் பக்தின்னு பேரு. அந்த மாதிரி பக்தியை நாம தினமும் ஸ்தோத்திர பாராயணத்தின் மூலமாக அடையலாம்
‘வர்த்தையது ஸா ஷிவம் மே காமாக்ஷாயா: பத நளின பாடல்ய லஹரீ’ அப்படின்னு பாதாரவிந்த சதகத்தில் வரும். காமாக்ஷ்யா: – காமாக்ஷியினனுடைய, பதன நளின- பாதத் தாமரைகளின், பாடல்யலஹரீ – செம்மை அலைகள் காமாக்ஷியினுடைய பாதம் செக்கச்செவேலென்று இருக்கு, அதிலிருந்து அந்த செம்மை வண்ணமா இருந்தது அலைபோல பெருகறது, அது, வர்த்தயது சா ஷிவம்மே என்னுடைய மங்களங்களை வளர்க்கட்டும், அப்படின்னு ஒரு பிரார்த்தனை. அது மாதிரி நம்ம பிரார்த்தனை பண்ணினா அம்மா நமக்கு கருணை பண்ண மாட்டாளா, ஏதோ ஒரு நன்மைக்காக தான் இதெல்லாம் நடக்கிறது, அப்படி என்கிற நம்பிக்கை எல்லா சிச்சுவேஷன்லேயும் இருக்கணும். அந்த நம்பிக்கை, உறுதி, Hope அது நம்ம தெய்வத்தை பஜனம் பண்ணினால் கிடைக்கும். மகா பெரியவா மாதிரி ஒரு அவதார மஹான் நமக்கு வழி காமிச்சுட்டு போயிருக்கார். நம்ப தெய்வ மதத்தில இருக்கிற, நம்ம தேசம் மேலான நன்மைகளைக் காணப் போகிறது அப்படின்னு நாம நிச்சயமா நம்பலாம் பெரியவாளையும், காமாக்ஷியையும் இந்தமாதிரி ஸ்லோகங்களைச் சொல்லி வேண்டிப்போம், நமஸ்காரம் பண்ணுவோம், தைரியமா இருப்போம்.
“த்வயைவ ஜக3த3ம்ப3யா பு4வனமண்ட3லம் ஸூயதே
த்வயைவ கருணார்த்3ரயா தத3பி ரக்ஷணம் நீயதே ।
த்வயைவ க2ரகோபயா நயனபாவகே ஹூயதே
த்வயைவ கில நித்யயா ஜக3தி ஸன்ததம் ஸ்தீ2யதே ॥96॥.”
நம்: பார்வதி பதயே ! ஹர ஹர மஹாதேவ!!
4 replies on “சக்தி தொழிலே அனைத்துமெனில் சார்ந்த நமக்கு சஞ்சலமேன்!”
தேவியே அனைத்துமக இருக்கிறாள் ! லலிதா சஹஸ்ர நாமம் எப்படி ஆரம்பமாகிறது? ஸ்ரீ மாதா, ஸ்ரீ மஹாரா க்நி ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரி என்றுதானே?
லோகம் பூரா அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயார், அதாவது ஸ்ருஷ்டி கர்த்தா,என்ற பிரம்ஹ ரூபம் ! படைத்த அத்தனை உயிர்களையும் பீடத்தில் அமர்ந்து ராஜ்யத்தை பரி பாலனம் செய்து தான் படைத்த ஜீவராசிகள் அனைத்தையும் காக்கும கோவிந்த ரூபிணி என்று அறியப்படும் விஷ்ணு அம்சம், பின் சிம்ஹசனேஸ்வரி சிம்ஹாசனத்தில் அமர்ந்து அவரவருக்கு உரிய தண்டனை அளித்து, தக்கபடி சிக்ஷிக்கிராள் ஆக முப்பெருந்தொழிலும் அம்பாளை செய்வதாக அமைந்த நாமாவளிகள் !! அம்பாளை பஞ்ச கிருத்ய பராயநா என்ற நாமத்தாலும் அறிவோம் !!
ஆக அனைத்துமாக அம்பாள் விளங்குவது தெளிவாகப் புரியும் !!
காற்று கடல் ஆகாசம்,பூமி நிலவு சந்திரா சூர் யர் எல்லாமே அவள்தான்!!
இந்த லாக் டவுன் period போது இந்த சரியான ஸ்லோகத்தை தேர்வு செய்து அவளன்றி உலகில்லை என்பது எத்துணை உண்மை என்பது புரிய வைத்து அழகாக சொற்பொழிவு அளித்துப் புரிய வைத்தமைக்கு நன்றி.
மிக அருமையான ஸ்லோகம். அற்புதமான விளக்கம். பாரதியார் கவிதை மிகப் பொருத்தம்.
அம்பாள் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் மூன்றும் செய்வதாக சொல்லி தான் சாசுவதமாக காமகோடியில் விளங்குவதாக மூகர் வர்ணிக்கிறார்.
பெரியவா சொல்வார், “அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பார்கள். அம்பாளுடைய சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகியன ஒவ்வொரு ஜீவனிடத்திலும் இருக்கின்றன. ஸ்வப்னம் என்பது படைப்புத் தொழிலைக் காட்டுகிறது. அப்போது நாம் பிரம்மா மாதிரி சிருஷ்டி செய்கிறோம். ஜாக்ரத் என்கிற விழிப்பு நிலையில், நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களும் ரக்ஷித்துக் கொள்வதற்காக காரியங்களைச் செய்கிறோம். இது விஷ்ணுவின் பரிபாலனம் மாதிரி, ஸுஷுப்தி எனப்படும் தூக்கத்தில் நம் இந்திரியங்கள், மனசு எல்லாம் அழிந்து போனதுபோல், எந்த வேலையும் செய்யாமல் ஒய்ந்து போய்விடுகின்றன. இது ருத்திரனின் கிருத்தியமான சம்ஹாரம் போன்ற நிலை.
அம்பாள் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்கிற முத்தொழிலோடு மாயை என்கிற மறைப்பு, மாயையைப் போக்குகிற ஞானம் என்ற அநுக்கிரக காரியமும் பண்ணுகிறாள். லலிதா ஸஹஸ்ரநாமம் அவளை பஞ்சக்ருத்ய பராயணா என்று வர்ணிக்கிறது.
நாம் நெஞ்சுருகி பக்தி செலுத்தினால் அம்பாள் நிச்சயம் அநுக்ரஹம் செய்வாள்.”🙏🙏🙏
அருமையான பதிவு.
பாரதியின் படைப்புகளில் வீரம் மிகுந்து தெரியும். சற்று ஆழ்ந்த படிக்க படிக்க .. அந்த வீரமானது, நிறைந்ததொரு பக்தியின் வெளிப்பாடு என்பது புலப்படுகிறது.
*சக்தியென்று நேரமெல்லாம் தமிழ்க்கவிதை பாடி, பக்தியுடன் போற்றிநின்றால் பயமனைதும் தீரும்*
ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்.
மேலே பகிர்ந்த பதிவு, உங்கள் அழகான பதிவை படித்த பிறகு நினைவில் வந்த எண்ண அலைகள்.
தேவியின் உள்ளம் ஸதா தயா என்னும் ஈரம் கசிந்தததாகவே இருக்கிறது ! அம்மா அல்லவா ? தாய்க்குத் தன் குழந்தைகளிடம் அன்பு தயை இருப்பதுதான் இயல்பு அல்லவா? அதனால் உலகை ரக்ஷிக்கிராள் ! ஊழிக் காலம் வரும்போது அவளே தன் நெற்றிக் கண்களால் வேள்வியாக்குக் கிறாள் ! உலகம் பஸ்மமாகிறது ! உலகம் தோன்றும் முன்பும் பின்பும் அவள் ஒருவளே சாஸ்வதமாக இருக்கிறாள் !
ஸ்ருஷ்டி கர்த்ரி, கோவிந்த ரூபிணி ஸம்ஹாரிணி (ருத்ர ரூபா) இவற்றுக்கு முத்தப்பாய் மாயையாக திரோதானம் செய்பவளும் அவளே !
நல்ல கருத்துள்ள ஸ்லோகம் !
பஞ்ச கிருத்ய பராயணா வாக்கிய அம்பாளுக்கு வந்தனங்கள் !
அழகான star gazing அதன் சிறப்பு பற்றி விளக்கம் அருமை !!