Categories
Ayodhya Kandam

பரதனை அழைத்து வாருங்கள்

90. வசிஷ்டர் முக்கிய மந்த்ரிகளை கேகேய தேசத்திற்கு அனுப்பி, தசரதர் காலமானதையோ ராமன் காட்டிற்கு போனதையோ சொல்லாமல் பரதனை அழைத்து வரும்படி உத்தரவு செய்கிறார். பரதன் அன்றிரவு கெட்ட கனவுகள் கண்டு வருத்தத்தில் இருக்கிறான். மந்த்ரிகள் அவசரப் படுத்தி அழைத்தவுடன் தாத்தா அஸ்வபதி மஹாராஜாவிடமும் மாமா யுதாஜித் இடமும் உத்தரவு பெற்று, சத்ருக்னனோடு அயோத்தி கிளம்புகிறான். [பரதனை அழைத்து வாருங்கள்] [audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/90%20bharathan%20dusswapnam.mp3]

Categories
Ayodhya Kandam

பரதன் அயோத்தி திரும்பினான்

91. பரதன் வசிஷ்டர் அனுப்பிய தூதர்களோடு அயோத்தி திரும்புகிறான். அயோத்தி நகரம் களை இழந்து காணப் படுவதைக் கொண்டு அரசரின் உயிருக்கு ஆபத்தாய் இருக்கும் என்று அனுமானம் செய்கிறான். தசரதர் அரண்மனையில் அவர் இல்லாததால் கைகேயி அரண்மனைக்கு சென்று அவளைக் காண்கிறான். கைகேயி, தசரதர் காலகதி அடைந்து விட்டதை தெரிவித்ததும் வருந்தி அழுகிறான். [பரதன் அயோத்தி திரும்பினான்] [audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/91%20bharathan%20ayodhi%20thirumbinaan.mp3]

Categories
Ayodhya Kandam

பரதன் கோபம்

92. பரதன், ராமர் எங்கே என்று கேட்கும் போது, கைகேயி, தான் ராமரை காட்டிற்கு அனுப்பியதைக் கூறுகிறாள்.  ‘இப்போது நீயே அரசன். பட்டம் சூட்டிக் கொண்டு ஆட்சி செய்’ என்று கூறுகிறாள். பரதன் கடும் கோபம் அடைந்து கைகேயியை நிந்திகிறான். ‘ஒழுக்கத்தில் சிறந்த இந்த குலத்திற்கு பெரும் கேடு விளைவித்து விட்டாயே! உன் பாபத்திற்கு நீ நரகத்திற்கு தான் போவாய். ராமன் உனக்கு என்ன தவறிழைத்தான்? எனக்கு அழியாத பழியை தேடித் தந்து விட்டாய். நான் உன்னோடு […]

Categories
Ayodhya Kandam

பரதன் தன்னிலை விளக்கம்

93. பரதன் மேலும் கைகேயியிடம் ‘நீ கௌசல்யா தேவி தன் ஒரே மகனைப் பிரிந்து எவ்வளவு துன்பம் அடைவாள் என்பதைக் கூட நினைத்து பார்க்கவில்லையே’ என்று வருந்துகிறான். கௌசல்யா தேவி வந்து பரதனிடம் ‘உனக்கு திருப்தி தானே! என்னையும் காட்டிற்கு அழைத்துச் சென்று என் மகனிடம் விட்டுவிடு’ என்கிறாள். பரதன் பல கடுமையான பாபங்களைக் குறிப்பிட்டு ‘எவன் விருப்பத்தின் பேரில் ராமர் காட்டிற்கு போனாரோ அவன் இந்த பாபங்களை அடையட்டும்’ என்று கூறி ராமர் காட்டிற்கு போனதுக்கும் தனக்கும் எந்த […]

Categories
Ayodhya Kandam

தசரதர் ஈமக்கடன்

94. வசிஷ்டர் பரதனிடம், தசரதரின் ஈமக்கடன்களை செய்யும்படி சொல்கிறார். பரதனும் சத்ருக்ணனும் முறைப்படி தசாதரின் உடலை தகனம் செய்துவிட்டு, பன்னிரெண்டாம் நாள் ஸ்ராத்தம் செய்து, பதிமூன்றாம் நாள் அஸ்தியை எடுக்கும் போது தரையில் விழுந்து புரண்டு அழுகிறார்கள். வசிஷ்டரும் சுமந்திரரும்  ‘பிறக்கும் எவர்க்கும் இறப்பு உண்டு. மனத்தை தேற்றிக் கொள்ளுங்கள்’ என்று கூறி அவர்களை சமாதானம் செய்கிறார்கள். மறுநாள் சத்ருக்ணன் கூனியை பார்த்த போது அவளை கிழே தள்ளி அடிக்க முற்படுகிறான். அப்போது பரதன், ‘நாம் இவளைக் கொன்றால் […]

Categories
Ayodhya Kandam

ராமனே ராஜா

95. பரதனிடம் மந்திரிகள் முடி சூடிக்கொள்ளும்படி சொல்கிறார்கள். பரதன் அதை மறுத்து ‘அனைவரும் சென்று ராமனுக்கு காட்டிலேயே முடி சூட்டி அவனை அழைத்து வருவோம். சில்பிகளைக் கொண்டு அயோத்தியிலிருந்து கங்கை கரைக்கு ஒரு பாதை அமையுங்கள்’ என்று உத்தரவு இடுகிறான். அந்த ஆணைப்படி சில்பிகள் கிணறுகளும், குளங்களும், அணைகளும், நிழல் தரும் மரங்களும், தங்குமிடங்களும், கொண்ட ஒரு பாதையை வடிவமைக்கிறார்கள். [அயோத்தியிலிருந்து கங்கைக்கரைக்கு பாதை] [audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/95%20raman%20thaan%20rajaa.mp3]

Categories
Ayodhya Kandam

பரதனின் உயர்ந்த ராமபக்தி

96. வசிஷ்டர் பரதனை விமரிசையாக சபைக்கு வரவேற்று அவனை முடி சூட்டிக் கொள்ளும்படி வேண்டுகிறார். பரதன் அவரைக் கண்டித்து ‘அயோத்தியும் நானுமே ராமனின் சொத்து. தசரதருக்கு பிறந்த நான் எப்படி ராமனின் சொத்தை அபகரிப்பேன்? என் மனம் மாறாமல் இருக்க இங்கிருந்தே வனத்தில் இருக்கும் தர்ம வடிவான ராமரை வணங்குகிறேன். சுமந்திரரே! படை கிளம்பட்டும். நாமும் புறப்படுவோம்.  ராமனை காட்டிலிருந்து அழைத்து வருவோம்’ என்று உத்தரவு இடுகிறான். [இங்கிருந்தே ராமரை வணங்குகிறேன்] [audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/96%20bharathan%20rama%20bhakthi.mp3]

Categories
Ayodhya Kandam

பரதனும் குஹனும்

97. பரதன் சேனையோடு காட்டிற்கு கிளம்பி கங்கைக் கரையை அடைந்து அங்கு தங்குகிறான். படையைக் கண்ட குஹன் தன் வேடர்களிடம் ‘இந்த பரதன் ராமனின் எதிரியாய் இருந்தால், கங்கையை கடக்க நாம் விடக்கூடாது’ என்று சொல்கிறான். பிறகு பரதனை சந்தித்து அவனிடமே ‘ஏன் சேனையோடு வந்திருக்கிறாய்?’ என்று கேட்கிறான். பரதன் ‘ராமனுடைய தோழனான நீயே அவனுக்காக உயிரையும் தரத் துணியும் போது அவன் தம்பியான நான் அவனுக்கு கேடு நினைப்பேனா? என் மீது சந்தேஹம் வேண்டாம். ராமரை […]

Categories
Ayodhya Kandam

பரதன் சபதம்

98. வருத்தத்தில் தவிக்கும் பரதனுக்கு குகன், ராம லக்ஷ்மணர்கள் அங்கு வந்திருந்த போது தம்மிடம் பேசிய விவரங்களையும், அவர்கள் ஜடை தரித்து கங்கையை தாண்டி சென்றதையும்  கூறுகிறான். ராமரும் சீதையும் கங்கை நீரை மட்டும் அருந்தி, புல் தரையில் படுத்து உறங்கினார்கள் என்று அறிந்த பரதன் ‘ராமரை அயோத்திக்கு அரசராக்கி நான் ஜடை தரித்து காட்டில் தபஸ்வியாக வாழ்வேன்’ என்று சபதம் செய்கிறான். [பரதன் சபதம்] [audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/98%20bharathan%20shabadam.mp3]

Categories
Ayodhya Kandam

பரதனும் பரத்வாஜரும்

99. பரதன், குகனுடைய படகோட்டிகள் உதவியோடு கங்கையை கடந்து, கங்கையும் யமுனையும் கூடும் பிரயாகையில், பரத்வாஜர் ஆஸ்ரமத்தை அடைந்து அவரை வணங்குகிறான். பரத்வாஜர், வசிஷ்டர் பரதன் முதலான அனைவரையும் வரவேற்று உபசரிக்கிறார். பரதனிடம் முதலில் சந்தேஹம் கொண்டவர் போலப் பேசி, பின் அவனுடைய உறுதியான ராம பக்தியை அறிந்து அவனை ஆசிர்வதிக்கிறார். [பரதனும் பரத்வாஜரும்] [audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/99%20bharathanum%20bharadwajarum.mp3]