
84. சுமந்திரர் குஹனுக்கு விடை கொடுத்து அயோத்தி திரும்புகிறார். ராமர் இல்லாத தேரைக் கண்டு ஜனங்கள் வருந்துகிறார்கள். சுமந்திரர் தசரதரைப் பார்த்து ராமரை கங்கைக் கரையில் விட்டு வந்ததை சொன்னவுடன், தசரதர் ‘ராமன் என்ன சாப்பிட்டான்? எங்கு தூங்கினான்? என்ன சொன்னான்? எல்லாவற்றையும் சொல். அது தான் எனக்கு மருந்து’ என்று கேட்கிறார். ராமர் கௌசல்யா தேவிக்கும் பரதனுக்கும் சொன்ன செய்திகளையும் லக்ஷ்மணர் சொன்ன விஷயங்களையும் சுமந்திரர் எடுத்துச் சொல்கிறார்.
[சுமந்த்ரர் அயோத்தி திரும்பினார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/84%20sumanthirar%20seythi.mp3]
ராமர் சித்ரகூடம் அடைந்தார்

83. ராமர் சித்ரகூடத்தின் இயற்கை அழகை வியந்து ‘இங்கு நாம் ரிஷிகளுடன் சுகமாக வசிப்போம்’ என்று சொல்கிறார். பிறகு அவர்கள் வால்மீகி முனிவரை தரிசித்து வணங்குகிறார்கள். பின்னர் மந்தாகினி நதி தீரத்தில் ராமர் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, லக்ஷ்மணர் அங்கு ஒரு பர்ணசாலை கட்டுகிறார். ராமர் உரிய மந்திரங்களை ஜபித்து, எல்லா தேவதைகளுக்கும் பலி கொடுத்து வாஸ்து சாந்தி செய்து, அந்த பர்ணசாலையில் அவர்களோடு இந்திரனைப் போல சுகமாக வசிக்க ஆரம்பிக்கிறார்.
[ராமர் சித்ரகூடம் அடைந்தார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/83%20chithrakoota%20vaasam.mp3]
பரத்வாஜர் தர்சனம்

82. கங்கையும் யமுனையும் சேரும் பிரயாகை என்ற இடத்தில் தவஸ்ரேஷ்டரான பரத்வாஜ முனிவரை ராமர் தரிசிக்கிறார். பரத்வாஜர் அவர்களை வரவேற்று உபசரித்து, அன்றிரவு புண்ய கதைகளை பேசியபடி கழிக்கிறார்கள். மறுநாள் காலை, முனிவர், ‘உங்கள் வனவாசத்தை ரம்யமான சித்ரகூட மலை அடிவாரத்தில் மந்தாகினி நதி தீரத்தில் கழிக்கலாம்’ என்று சொல்லி அங்கு செல்லும் வழியைக் கூறுகிறார். ராமரும் லக்ஷ்மணரும் சீதையும் அவர் சொன்ன வழியில் சென்று யமுனை நதியைக் கடந்து ஒரு பெரிய ஆலமரத்தை வணங்கி பின் மந்தாகினி தீரத்தை அடைந்தார்கள்.
[பரத்வாஜர் தர்சனம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/82%20bharadwajar%20darshanam.mp3]

81. கங்கையை கடக்கும் போது சீதை ‘கங்கா மாதா! நாங்கள் நல்ல படியாக வனவாசத்தை கழித்து திரும்பி வந்தால், உன் கரையில் உள்ள கோயிலில் தெய்வங்களுக்கு சிறப்பான பூஜைகள் செய்கிறோம். உன் கரையில் வசிப்பவர்களுக்கு அன்னதானம் செய்கிறோம்’ என்று வேண்டிக் கொள்கிறாள். ராமர் அன்றிரவு தன் அம்மாவைப் பற்றி கவலைப்பட்டு லக்ஷ்மணரை அயோத்திக்கு திரும்ப போகச் சொல்கிறார். லக்ஷ்மணர் ‘ராமா! நானோ சீதையோ உன்னைப் பிரிந்து ஒரு நிமிடம் கூட உயிர் வாழ மாட்டோம். பரதன் அவர்களைப் பார்த்துக்கொள்வான். கவலைப் படாதே’ என்று சொல்லி சமாதானம் செய்கிறார்.
[சீதாதேவி கங்கை நதியிடம் பிரார்த்தனை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/81%20seethai%20gangai.mp3]
சுமந்திரரின் ராம பக்தி

80. ராமர் படகின் அருகில் போகும் போது சுமந்திரரிடம், தசரதருக்கும் பரதனுக்கும் கூற வேண்டிய செய்திகளைச் சொல்லி, அவருக்கு விடை கொடுக்கிறார். சுமந்திரர் ராமரின் பிரிவை நினைத்து பலவாறு வருந்துகிறார். தன்னையும் வனவாசத்திற்கு கூட அழைத்துச் செல்லும்படி வேண்டுகிறார். ராமர் அவரிடம் ‘நீங்கள் திரும்பிச் சென்று ராமரை காட்டில் விட்டு விட்டேன் என்று சொன்னால் தான், கைகேயி என் தந்தையை சந்தேகப் படாமல் இருப்பாள். அதனால் போய் வாருங்கள்’ என்று கூறி விடைபெறுகிறார். ஆலம் பாலினால் சிகையை ரிஷிகளைப் போல் ஜடையாக தரித்துக் கொண்டு, படகில் ஏறுகிறார்.
[சுமந்திரர் ராமனிடம் பிரார்த்தனை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/80%20sumanthrar%20ramar.mp3]
குஹனும் லக்ஷ்மணரும்

79. ராமரும் சீதையும் தூங்கியபின் குஹன் லக்ஷ்மணரிடம் ‘ராமனைக் காட்டிலும் ப்ரியமான ஒருவர் எனக்கில்லை. நான் முழித்து காவல் காக்கிறேன். நீங்களும் ஓய்வெடுங்கள்’ என்று வேண்டுகிறான். ஆனால் லக்ஷ்மணர் ‘இப்படி ராமரும் சீதையும் புல் தரையில் படுக்கும் நிலைமையில் எனக்கு எப்படித் தூக்கம் வரும்?’ என்று இப்படி இருவரும் ராமனின் குணங்களைப் பேசிக் கொண்டே அன்றிரவுப் பொழுதைக் கழிக்கிறார்கள். மறுநாள் அவர்கள் கங்கையை கடக்க குஹன் ஒரு படகை ஏற்பாடு செய்கிறான்.
[குஹனும் லக்ஷ்மணனும் சம்பாஷணை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/79%20guhanum%20lakshmananum.mp3]
ராமர் கங்கைக் கரையை அடைந்தார்

78. ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் பல நதிகளையும் கிராமங்களையும் கடந்து புனித கங்கைக் கரையை அடைந்தார்கள். அங்கு படகோட்டிகளின் ராஜாவும் ராமரின் உயிர் தோழனுமான குகன் வந்து ராமரை சந்திக்கிறான். குகன் அளித்த உணவை மறுத்து, ராமர் அன்றும் நீரையே உணவாகப் பருகி, சீதையோடு புல் தரையில் படுத்து உறங்குகிறார்.
[ராமர் குஹனை சந்தித்தார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/78%20ramanum%20guhanum.mp3]

77. ராமர் நள்ளிரவில் எழுந்து ‘நம்மால் இந்த ஜனங்களுக்கு கஷ்டம் வரக்கூடாது. இப்போதே கிளம்பி போய் விடுவோம்’ என்று சொல்லி தேரில் ஏறி தமஸா நதியைக் கடந்து போய் விடுகிறார்கள். ஜனங்கள் எழுந்து, ராமர் இல்லாததைக் கண்டு மிக வருந்தி உயிரை விடவும் துணிகிறார்கள். ராமருடைய தேர் தடத்தை தொடர்ந்து அயோத்தி வந்து சேர்கிறார்கள். அங்கு பெண்கள் அவர்களிடம் ‘ராமரை விட்டு ஏன் வந்தீர்கள்? ராமன் எங்கு உள்ளானோ அங்கு பயமோ அவமனமோ கிடையாது. அவனிடமே போய் விடுவோம்’ என்று சொல்கிறார்கள்.
[ராமர் நள்ளிரவில் தமஸா நதியை கடந்து செல்கிறார்]
ராமரிடம் பிராம்மணர்கள் பிரார்த்தனை

76. அயோத்தி மக்கள் ராமருடைய தேரின் பின்னே செல்கிறார்கள். வயதான பிராம்மணர்கள் ‘ராமா, நாங்களும் உன்னோடு வருகிறோம். எங்கள் ஹ்ருதயத்தில் உள்ள வேதம் எங்களைக் காப்பாற்றும். எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்ட உன்னிடம் பறவைகள் கூட வேண்டுகின்றன. எங்களை விட்டுப் போகாதே’ என்று கெஞ்சுகிறார்கள். தமஸா நதிக்கரை வந்தவுடன் ராமர் அன்றிரவு அங்கே தங்க முடிவு செய்கிறார். ஜனங்களும் அவரோடு தூங்குகிறார்கள்.
[ராமரிடம் பிராம்மணர்கள் பிரார்த்தனை]
சுமித்ரை சமாதானம் செய்தல்
75. பிள்ளையை பிரிந்து வருந்தும் கௌசல்யா தேவியை சுமித்ரா தேவி ‘சத்தியத்தையும் தர்மத்தையும் விரதமாகவும் செல்வமாகவும் கொண்ட ராமன் எதை இழந்தான்? லக்ஷ்மி தேவியே ஆன சீதையும் லக்ஷ்மணனும் அவனோடு போகும் போது அவனுக்கு என்ன குறை? அவன் தெய்வங்களுக்கு மேலான தெய்வம்’ என்று கூறி சமாதானம் செய்கிறாள்.
[சுமித்ரை சமாதானம் செய்தல்]