47. தசரதர் கைகேயியின் அரண்மனைக்கு நல்ல செய்தியைச் சொல்ல வருகிறார். கைகேயி கோபத்தோடு இருப்பதை பார்த்து அவளை சமாதானம் செய்ய, ‘ராமன் பேரில் ஆணையாக நீ எது கேட்டாலும் தருகிறேன்’ என்று வாக்களிக்கிறார். கைகேயி, தேவாசுர யுத்தத்தில் அவர் உயிரைக் காப்பாற்றிய போது, தனக்கு அவர் அளித்த இரண்டு வரங்களை நினைவூட்டி, ஒரு வரத்திற்கு ‘ராமனுக்கு பதிலாக பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும். இரண்டாவது வரத்திற்கு ராமன் பதினான்கு வருடங்கள் காட்டிற்கு போக வேண்டும்’ என்று கேட்கிறாள்.
[கைகேயி கேட்ட இரண்டு வரங்கள்]
கூனி சொன்ன யோசனை
46. கூனி ‘ராமன் ராஜாவானால் நீ கௌசல்யைக்கு வேலைக்காரியாக தான் இருக்க வேண்டும். பரதனை ராமன் மேலுலகம் அனுப்பிவிடுவான்’ என்று பலது கூறி கைகேயியின் மனத்தில் பொறாமையை வளர்கிறாள். கைகேயி மனம் மாறி, பரதனை அரசனாக்க உபாயம் கேட்கிறாள். முன்பு தசரதர் உயிரைக் காப்பாற்றிய போது அவர் தந்த இரண்டு வரங்களைக் கொண்டு பரதனை அரசனாக்கி ராமனை காட்டுக்கு அனுப்பும்படி கூனி யோசனை கூறுகிறாள்.
[கூனி சொன்ன யோசனை]
கூனி வருகை
45. மந்தரை என்ற கைகேயியின் பணிப்பெண் ஒருத்தி, ராமருக்கு பட்டாபிஷேகம் என்று கேட்டவுடன் பொறாமை அடைகிறாள். கைகேயியிடம் வந்து செய்தியை தெரிவித்து ‘இதனால் உனக்கும் பரதனுக்கும் ஆபத்து’ என்கிறாள். கைகேயி அதை காதில் வாங்காமல் ‘ஆஹா! என் ராமனுக்கு பட்டபிஷேகமா’ என்று மிக மகிழ்ந்து கூனிக்கு முத்து மாலை ஒன்றை பரிசளிக்கிறாள்.
[கூனி வருகை]
ராமர் விரதம் இருந்தார்
44. வசிஷ்டர் ராமருடைய அரண்மனைக்கு வந்து, ராமருக்கும் சீதைக்கும் விரதம் எடுத்து வைக்கிறார். ராமர் சீதையோடு விஷ்ணுவை பூஜித்து, பின் தரையில் தர்பையில் படுத்துறங்கி மறுநாள் காலை வெகு விரைவில் எழுந்து சந்த்யாவந்தனம் செய்கிறார். அயோத்யா ஜனங்கள் தசரதரையும் ராமரையும் புகழ்ந்து கொண்டே ஊரை அலங்கரிக்கிறார்கள்.
தசரதரின் சஞ்சலம்
43. தசரதர் தன் அரண்மனைக்கு ராமனை வரவழைத்து ‘என் மனத்தில் சில சஞ்சலங்கள் இருப்பதால் உனக்கு நாளையே பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன். இன்றிரவு நீயும் சீதையும் விரதமாக இருங்கள்.’ என்று கூறுகிறார். ராமர் கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு வந்து அம்மாவிடம் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறார். கௌசல்யை ராமனை ஆசிர்வதிக்கிறாள்.
ராமருக்கு தசரதர் செய்த உபதேசம்
42. தசரதர் வசிஷ்டரிடம், ராம பட்டாபிஷேகத்தை முன்னின்று நடத்தி தருமாறு வேண்டுகிறார். வசிஷ்டர், மந்த்ரிகளிடமும் புரோஹிதர்களிடமும், தேவையான பொருட்களை சேகரிக்க உத்தரவிடுகிறார். தசரதர் ராமனை சபைக்கு வரவழைத்து ‘உனக்கு பதவி அளிக்க போகிறேன். நீ மேலும் வினயத்தோடும் புலனடக்கதோடும் மக்களின் நன்மையை பேண வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்.
41. தசரதர், ராஜசபையை கூட்டி, பெரியோர்களிடம், தன் மகன் ராமனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்து வைத்து, தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கூறி உத்தரவு கேட்கிறார். அனைவரும் பெருமகிழ்ச்சியோடு அதை வரவேற்கிறார்கள். தசரதர் ‘இவ்வளவு சந்தோஷப் படுகிறீர்களே, என் ஆட்சியில் ஏதும் குறை இருக்கிறதா?’ என்று வேடிக்கையாக கேட்கிறார். ஜனங்கள் ராமருடைய பெருமைகளை விரிவாக எடுத்துக் கூறி ‘இப்பேர்பட்ட ராமனை நாங்கள் ராஜாவாக அடையும்படி நீங்கள் வரம் தர வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள்.
[ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்கு பெரியோர்கள் அனுமதி]
ஸ்ரீராமரின் கல்யாண குணங்கள்

40. பரதன், சத்ருக்னனோடு கேகய ராஜ்யத்திற்கு செல்கிறான். தசரதர், ராமரின் உயர்ந்த குணங்களையும், மக்கள் அவனிடம் கொண்டிருந்த அன்பையும் நினைத்து, தனக்கு முதுமை வந்ததுவிட்டது என்பதையும் எண்ணி, ராமனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தார்.
[ஸ்ரீராமரின் கல்யாண குணங்கள்]
அயோத்தியில் சீதையோடு ராமர்
39. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள் தம்தம் மனைவிகளோடு அயோத்தி வந்தவுடன், அயோத்தி மக்களும் தசரதர் மனைவிகளும் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். சீதையோடு கூடிய ராமர், லட்சுமி தேவியுடன் கூடிய விஷ்ணு பகவானைப் போல் ஆனந்தமாய் விளங்கினார்.
[அயோத்தியில் சீதையோடு ராமர்][audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/39%20ramar%20sitai%20anyonyam.mp3]
பரசுராமர் கர்வ பங்கம்

38. ஸ்ரீராமர் பரசுராமரிடமிருந்து அந்த விஷ்ணு தனுசை வாங்கி நாணேற்றி அம்பு தொடுத்தவுடன் பரசுராமர் ராமரை விஷ்ணு பகவானே என்று அறிந்து கொள்கிறார். தன் நாராயண தேஜஸை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு, ராமரின் அம்பிற்கு இலக்காக தான் தவத்தால் வென்ற உலகங்களையும் அளித்து விடை பெறுகிறார்.
[பரசுராமர் கர்வ பங்கம்]