
34. ஜனகர், விஸ்வாமித்ரர் அனுமதி பெற்று, தசரதரை அழைத்து வர தூதர்களை அனுப்புகிறார். தசரதர் கல்யாண சேதி கேட்டு சந்தோஷத்துடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு மிதிலை வந்து சேர்கிறார். ஜனகர் அவர்களை வரவேற்று உபசரித்து கல்யாணத்திற்கு நாள் குறிக்கிறார்.[தசரதர் மிதிலை வந்து சேர்ந்தார்]
சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்

33. விஸ்வாமித்ரரின் உத்தரவின் பேரில் ஜனக மஹாராஜா தன்னிடமிருந்த சிவ தனுசை ராம லக்ஷ்மணர்களுக்கு காண்பிக்கிறார். இந்த வில்லை ராமன் எடுத்து நாண் ஏற்றினால் என் மகள் ஸீதையை அவனுக்கு மணமுடித்து தருவேன் என்று கூறுகிறார். ராமர், முனிவரிடம் உத்தரவு பெற்று அந்த வில்லை எடுத்து நாண் பூட்டும் போது அந்த வில் அவருடைய அபார பலத்தினால் இரண்டாக முறிந்து விழுகிறது. ஜனக மஹாராஜா தன் மகளுக்கேற்ற மணாளன் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார். [சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்]
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி

32. ரம்பை தன் தவத்தை கலைக்க வந்தவுடன், விச்வாமித்ரர் கோபத்தால் அவளை சபிக்கிறார். பின்னர் மனம் வருந்தி தன் மூச்சையும் பேச்சையும் அடக்கி, ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்டு தவம் செய்கிறார். பிரம்மா தேவர்களுடன் வந்து அவருக்கு பிரம்மரிஷி என்ற நிலையை அருளுகிறார். விஸ்வாமித்ரர், வசிஷ்ட பகவான் தன்னை பிரம்மரிஷி என்று ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்ட, வசிஷ்டரும் அங்கு வந்து அவ்வாறே அனுக்ரஹம் செய்கிறார். [வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி]
சுனஸ்சேபன் உயிர் பிழைத்தான்

31. சுனச்சேபன் என்ற ரிஷிகுமாரனை அவன் பெற்றோர்கள் ஒரு யாகத்தில் பலியிட விற்று விடுகிறார்கள். அவன் விஸ்வாமித்ரரை வந்து சரணடைந்த போது, அவர் அவனுக்கு இரண்டு ஸ்துதிகளை சொல்லிக் கொடுத்து அதன் மூலம் அவன் உயிரைக் காப்பாற்றுகிறார். தவத்தால் ரிஷி என்ற நிலையை அடைகிறார். சிறிது காலம் மேனகையிடம் மயங்குகிறார். பிறகு தெளிந்து தவம் செய்து மகரிஷி என்ற நிலையை அடைகிறார். [சுனஸ்சேபன் உயிர் பிழைத்தான்]

30. விஸ்வாமித்ரர் தெற்கு திக்கில் சென்று தவம் செய்து ராஜரிஷி ஆகிறார். தன்னை வந்து சரணடைந்த திரிசங்கு மகாராஜாவை பூத உடலோடு சொர்க்கம் அனுப்ப ஒரு யாகம் செய்கிறார். தேவர்கள் அந்த யாகத்தை ஏற்காததால், விஸ்வாமித்ரர் தன் தபோ பலத்தால் திரிசங்குவிற்காக ஒரு புதிய சொர்கத்தையே ஸ்ருஷ்டி செய்கிறார். [விஸ்வாமித்ரர் திரிசங்குவை சொர்க்கம் அனுப்புதல்]

29. விஸ்வாமித்ரர் காமதேனுவை பலவந்தமாக இழுத்துச் செல்ல முயன்றபோது, அப்பசு வசிஷ்டரின் அனுமதியோடு ஒரு படையை ஸ்ருஷ்டி செய்து விஸ்வமித்ரரின் பெரும் படையை அழித்து விடுகிறது. விஸ்வாமித்ரர் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து அஸ்திர வித்தைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு மீண்டும் வந்து வசிஷ்டரை எதிர்க்கிறார். வசிஷ்டர் தன் பிரம்ம தண்டத்தால் எல்லா அஸ்திரங்களையும் அடக்கி விட, விஸ்வாமித்ரர் கர்வம் ஒழிந்து, ‘க்ஷத்ரியனின் அஸ்திர பலம் கீழானது. முனிவரின் தபோ பலமே உயர்ந்தது. நானும் தவம் செய்து பிரம்மரிஷி ஆவேன்’ என்று தீர்மானிக்கிறார். [பிரம்ம தேஜசின் பலமே எல்லாவற்றிலும் மேலானது]
விஸ்வாமித்ரர் வசிஷ்டரை தரிசித்தார்

28. விஸ்வாமித்ரர் அரசராக இருந்தபோது, தன் பெரிய படையுடன் உலகைச் சுற்றி வருகிறார். அப்போது அவர் வசிஷ்ட முனிவரின் ஆச்ரமத்தைப் பார்க்கிறார். முனிவரை தரிசித்து வணங்குகிறார். வசிஷ்டர், அரசரை வரவேற்று தன்னிடமிருந்த சபலா என்ற காமதேனு பசுவின் உதவியினால், அரசருக்கும் அவர் படையில் இருந்த அனைவருக்கும் ஒரு அற்புதமான விருந்தளிக்கிறார். விருந்து உண்ட பின் விஸ்வாமித்ரர் வசிஷ்டரிடம் அந்த பசுவை தனக்கு தந்து விடுமாறு கூற வசிஷ்டர் தரமுடியாது என்று மறுக்கிறார். [விஸ்வாமித்ரர் வசிஷ்டரை தரிசித்தார்]]
ஜனகர் விச்வாமித்ரரை தரிசித்தல்

27. ராம லக்ஷ்மணர்களுடன் விஸ்வாமித்ரர் மிதிலையை அடைகிறார். ஜனக மகாராஜா தன் குலகுருவான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்கிறார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின், சதாநந்தர் ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர் கடும் தவம்செய்து பிரம்மரிஷி ஆன கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
[ஜனகர் விச்வாமித்ரரை தரிசித்தல்]
அஹல்யா சாப விமோசனம்

26.விஷால தேசத்தில் சுமதி மகாராஜாவின் உபசரிப்பை ஏற்ற பின், மிதிலைக்கு செல்லும் வழியில் கௌதம மகரிஷியின் ஆஸ்ரமத்தை பார்க்கிறார்கள். விஸ்வாமித்ரர் ராமரிடம், லோப மோஹத்தால் இந்த்ரனும் அகலிகையும் தவறிழைத்து, கௌதமரின் சாபத்துக்கு ஆளானதைக் கூறி, ராமரை அந்த ஆஸ்ரமத்திற்கு அழைத்துக் செல்கிறார். ராம த்யானத்தால் தூய்மை அடைந்த அகலிகை, ராம தர்சனத்தால் சுயரூபம் பெற்று தன் கணவரான கௌதமரை அடைகிறாள்.
[அஹல்யா சாப விமோசனம்]
மருத்துகள் பிறப்பு

25. ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர், பாற்கடலைக் கடைந்து தேவர்கள் அமிர்தம் பெற்ற கதையையும், மருத்துகள் பிறந்த கதையையும் கூறுகிறார்.
[மருத்துகள் பிறப்பு]