105. பரதன் வந்து ராமரின் பாதங்களில் விழுந்து வணங்குகிறான். ராமர் அவனை எடுத்து அணைத்து அன்பு பாராட்டுகிறார். பின்னர் தசரதரைப் பற்றியும் தாய்மார்களைப் பற்றியும் விசாரிக்கிறார். அதன் பின் பல்வேறு ராஜ தர்மங்களை எடுத்துக் கூறுகிறார்.
[ராமர் பரதனுக்கு உபதேசித்தல்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/105%20kachchit%20sargam.mp3]
Tag: ராமாயணம் ராமர்
பரதன் ராமரை தரிசித்தான்
104. பரதன் சத்ருக்னனிடம் ‘சந்திரன் போன்ற முகம் படைத்த ராமரையும், லக்ஷ்மணரையும் சீதா தேவியையும் தரிசித்து, ராமருடைய ராஜ லக்ஷணங்கள் பொருந்திய பாதங்களை என் தலையில் தாங்கி, அவரை அழைத்துச் சென்று அயோத்தியில் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் வரை எனக்கு நிம்மதி ஏற்படாது. இந்த மலையும் நதியும் குகைகளும் சீதையும் லக்ஷ்மணரும் தான் பாக்யசாலிகள்’ என்று பலவாறு புலம்பியபடி ராமரைத் தேடுகிறான். பர்ணசாலை வாயிலில் ஜடை பூண்டு மரவுரி அணிந்து அக்னிக்கு நிகரான தேஜஸோடு தர்பையில் அமர்ந்திருக்கும் ராமரை தரிசிக்கிறான்.
[பரதன் ராமரை தரிசித்தல்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/104%20rama%20darsanam.mp3]
ராமரின் சகோதர பாசம்
103. பரதன் படையுடன் வருவதைக் கண்ட லக்ஷ்மணன் கோபத்தோடு ‘ராஜ்யத்தில் பேராசை கொண்ட பரதன் நம்மைக் கொல்ல படையோடு வருகிறான். இன்று இவனைக் கொன்று ராஜ்யத்தை உனக்கு அளிக்கிறேன்’ என்று கர்ஜிக்கிறான். ராமர் ‘மகாவீரனும், புத்திமானுமான பரதன் தானே என்னிடம் வரும்போது வில்லிற்கும் கத்திக்கும் என்ன வேலை? ராஜ்யத்திற்காக அண்ணன் தம்பிகள் யுத்தம் செய்வதா? பந்துக்களுக்கு தீமை விளைந்து அதனால் எனக்கு ஒரு பொருள் கிடைக்குமானால் அது எனக்கு விஷம் போன்றது. உங்களுக்கு இல்லாமல் எனக்கு மட்டும் ஒரு சுகம் கிடைத்தால் அதை நெருப்பு பொசுக்கட்டும். பரதனை ஏன் சந்தேஹப் படுகிறாய்? ராஜ்யத்தை என்னிடம் தருவதற்காகவே வருகிறான். உனக்கு ராஜ்யத்தில் ஆசை இருந்தால் உன்னிடம் தரச் சொல்கிறேன்.’ என்று சொன்னதும் லக்ஷ்ணமன் வெட்கம் அடைகிறான்.
[லக்ஷ்மணர் கோபம் ராமர் சமாதானம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/103%20sahodara%20paasam.mp3]
சித்ரகூடத்தில் சீதையோடு ராமர்
102. ராமர் சீதையை அழைத்துக் கொண்டு சித்ரகூட மலையில் உள்ள அழகான குகைகள், மரங்கள், மூலிகைச் செடிகள், பூக்கள், பறவைகள், மிருகங்கள், கின்னரர்கள், வித்யாதரர்கள், இவற்றை காண்பிக்கிறார். ‘உன்னோடும் லக்ஷ்மணனோடும் இந்த சித்ரகூடத்தில் நூறு வருடங்கள் இருந்தாலும் எனக்கு எந்த கஷ்டமுமே தெரியாது. நீங்கள் எனக்கு அனுகூலமாக இருப்பதாலும், இந்த மலையும் நதியும் ரிஷிகளும் உள்ள சூழ்நிலை மிக ரம்யமாக இருப்பதாலும் நான் மிக ஆனந்தமாக இருக்கிறேன். இது அயோத்தியில் அரசாட்சியை விட மேலான சந்தோஷத்தை எனக்கு அளிக்கிறது’ என்று கூறுகிறார். பின்னர் அவர்கள் மந்தாகினி நதியில் ஸ்நானம் செய்துவிட்டு ஆஸ்ரமத்தை வந்து அடைகிறார்கள்.
[சித்ரகூடத்தில் சீதையோடு ராமர்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/102%20chitrakootathil%20sitaramar.mp3]
அதோ சித்ரகூடம் இதோ மந்தாகினி
101. பரதன் தன் அண்ணா ராமனிடம் கொண்டுள்ள பக்தியை கண்டு மகிழ்ந்த பரத்வாஜர், அவனுக்கு சித்ரகூடம் செல்லும் வழியை கூறுகிறார். கௌசல்யா தேவி, சுமித்ரா தேவி மற்றும் கைகேயி தேவியும் வந்து வணங்கும் போது பரதன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து தன் அம்மாவை குறைத்து பேசுகிறான். பரதவாஜர் அவனிடம் ‘கைகேயியை இனி திட்டாதே. ராமர் வனவாசத்தால் ஒரு பெரும் நன்மை ஏற்படப் போகிறது’ என்று கூறுகிறார். பரதன் உத்தரவு பெற்று கிளம்புகிறான். சித்ரகூட மலையை பார்த்தவுடன் ‘அதோ சித்ரகூடம் இதோ மந்தாகினி’ என்று பூரிப்பு அடைகிறான்.
[மந்தாகினி தீரத்தில் பரதன்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/101%20chitrakootam%20mandaakini.mp3]
பரத்வாஜர் அளித்த விருந்து
100. பரத்வாஜர் பரதனுடைய சேனைக்கு தெய்வங்களின் உதவியால் ஒரு அற்புதமான விருந்து படைக்கிறார். எல்லோரும் விருந்தில் மயங்கி ‘நாம் அயோத்திக்கும் போக வேண்டாம். சித்ரகூடத்திற்கும் செல்ல வேண்டாம். இங்கேயே இருந்து விடலாம்.’ என்கிறார்கள். பரதன் மனம் இவற்றில் செல்லவில்லை. ஒரு சிம்மாசனத்தை பார்த்ததும் ராமர் அங்கு அமர்ந்து இருப்பதாக பாவித்து அதை வணங்குகிறான். பொழுது விடிந்ததும் முனிவரிடம் ‘எனக்கு என் அண்ணா ராமர் இருக்கும் இடத்தை தெரிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகிறான்.
[பரத்வாஜர் அளித்த விருந்து]
பரதனும் பரத்வாஜரும்
99. பரதன், குகனுடைய படகோட்டிகள் உதவியோடு கங்கையை கடந்து, கங்கையும் யமுனையும் கூடும் பிரயாகையில், பரத்வாஜர் ஆஸ்ரமத்தை அடைந்து அவரை வணங்குகிறான். பரத்வாஜர், வசிஷ்டர் பரதன் முதலான அனைவரையும் வரவேற்று உபசரிக்கிறார். பரதனிடம் முதலில் சந்தேஹம் கொண்டவர் போலப் பேசி, பின் அவனுடைய உறுதியான ராம பக்தியை அறிந்து அவனை ஆசிர்வதிக்கிறார்.
[பரதனும் பரத்வாஜரும்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/99%20bharathanum%20bharadwajarum.mp3]
பரதன் சபதம்
98. வருத்தத்தில் தவிக்கும் பரதனுக்கு குகன், ராம லக்ஷ்மணர்கள் அங்கு வந்திருந்த போது தம்மிடம் பேசிய விவரங்களையும், அவர்கள் ஜடை தரித்து கங்கையை தாண்டி சென்றதையும் கூறுகிறான். ராமரும் சீதையும் கங்கை நீரை மட்டும் அருந்தி, புல் தரையில் படுத்து உறங்கினார்கள் என்று அறிந்த பரதன் ‘ராமரை அயோத்திக்கு அரசராக்கி நான் ஜடை தரித்து காட்டில் தபஸ்வியாக வாழ்வேன்’ என்று சபதம் செய்கிறான்.
[பரதன் சபதம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/98%20bharathan%20shabadam.mp3]
பரதனும் குஹனும்
97. பரதன் சேனையோடு காட்டிற்கு கிளம்பி கங்கைக் கரையை அடைந்து அங்கு தங்குகிறான். படையைக் கண்ட குஹன் தன் வேடர்களிடம் ‘இந்த பரதன் ராமனின் எதிரியாய் இருந்தால், கங்கையை கடக்க நாம் விடக்கூடாது’ என்று சொல்கிறான். பிறகு பரதனை சந்தித்து அவனிடமே ‘ஏன் சேனையோடு வந்திருக்கிறாய்?’ என்று கேட்கிறான். பரதன் ‘ராமனுடைய தோழனான நீயே அவனுக்காக உயிரையும் தரத் துணியும் போது அவன் தம்பியான நான் அவனுக்கு கேடு நினைப்பேனா? என் மீது சந்தேஹம் வேண்டாம். ராமரை திரும்ப அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.’ என்று சொல்கிறான். குஹன் மிக மகிழ்ந்து ‘எளிதில் கிடைத்த அரச பதவியை விரும்பாமல் ராமன் படும் கஷ்டத்தை எண்ணி, அவனை திரும்ப அழைத்துச் செல்ல வந்திருக்கிறாயே! என்னே உன் மஹிமை! இந்த உலகம் உள்ளவரை உன் புகழ் விளங்கும்’ என்று வாழ்த்துகிறான்.
[குஹன் பரதனை புகழ்தல்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/97%20bharathanum%20guhanum.mp3]
பரதனின் உயர்ந்த ராமபக்தி
96. வசிஷ்டர் பரதனை விமரிசையாக சபைக்கு வரவேற்று அவனை முடி சூட்டிக் கொள்ளும்படி வேண்டுகிறார். பரதன் அவரைக் கண்டித்து ‘அயோத்தியும் நானுமே ராமனின் சொத்து. தசரதருக்கு பிறந்த நான் எப்படி ராமனின் சொத்தை அபகரிப்பேன்? என் மனம் மாறாமல் இருக்க இங்கிருந்தே வனத்தில் இருக்கும் தர்ம வடிவான ராமரை வணங்குகிறேன். சுமந்திரரே! படை கிளம்பட்டும். நாமும் புறப்படுவோம். ராமனை காட்டிலிருந்து அழைத்து வருவோம்’ என்று உத்தரவு இடுகிறான்.
[இங்கிருந்தே ராமரை வணங்குகிறேன்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/96%20bharathan%20rama%20bhakthi.mp3]