கடாக்ஷ சதகம் 91வது ஸ்லோகம் பொருளுறை – கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே
जगर्ति देवि करुणाशुकसुन्दरी ते
ताटङ्करत्नरुचिदाडिमखण्डशोणे ।
कामाक्षि निर्भरकटाक्षमरीचिपुञ्ज-
माहेन्द्रनीलमणिपञ्जरमध्यभागे ॥
கடாக்ஷ சதகம் 91வது ஸ்லோகம் பொருளுறை – கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே
जगर्ति देवि करुणाशुकसुन्दरी ते
ताटङ्करत्नरुचिदाडिमखण्डशोणे ।
कामाक्षि निर्भरकटाक्षमरीचिपुञ्ज-
माहेन्द्रनीलमणिपञ्जरमध्यभागे ॥
8 replies on “கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே”
Sir, the audio file is not there.
It is there now. Broken link fixed.
Sir,
you mentioned a link in the discourse on Sri Mahaperiyava. Kindly provide the link. I have read it. I want to read it in the context that you mentioned. Regards, krishnaswamy. ,
“அப்பாவியின் பாட்டுக்கு, அபயம் கிடைத்தiது” (விநாயகுனி – ராகம் மத்4யமாவதி)
(ஓரு ஸ்வாரஸ்ய சம்பவம்)
ஸ்ரீ பெரியவா, காட்டுப்பள்ளியில் 1965 ம் வருஷத்துக்கு முன், சந்தவேளூர் என்ற ஊரை,சிவலோகமாக்கினார்.அவ்வருஷ சிவராத்ரியை அங்கே நடத்தினார்.
பிற்பகல் நாலு மணி இருக்கலாம்.
பொக்கையும் போரயுமான படிக்கட்டுகளும், பாசியும் பசலையுமான தண்ணீரும் கொண்ட குளக்கரையில் இந்த நூற்றாண்டு கண்ட அந்த உண்மையான வேதகால சந்நியாசி அமர்ந்திருந்தார். விந்தையாக கழுத்தில் மலர் மாலை அணிந்திருந்தார்.சன்யாசிகள் மாலை அணியலாமா அன்று ஒரு வாதமே எழுந்ததுண்டு. அனால் பெரியவா மாலை அணியும் முறையை புரிந்து கொண்டு பார்த்தால்அதை தனக்கு அலங்காரமாக அவர் தரிக்கவேயில்லை என்று தெரியும். மாலையை அவர் கழுத்தில் போட்டுக்கொள்ளாமல்சிரசிலேயே வைத்து கொள்வது வழக்கம். சிரசில் குருமூர்த்தியான அம்பிகையின் பாதம் இருப்பதாக சாஸ்திரம். பெரியவாளுக்கோ அந்தசாஸ்திரம் அனுபவமே! அதனால் குரு அஞ்சலியாக அம்பாள் சரணத்திற்கு அலங்காரமாகத்தான் அவர் “அலங்கல் அணிந்தருள்வது” அப்புறம் அது நழுவி கழுத்தில்விழும்போது அவளது பிரசாதமேயன்றி சுய அலங்காரமல்ல. அப்படி கழுத்தில் சரிந்ததை உடனே களைந்து விடுவதேஅவரது பொது வழக்கம்.
இன்று வழக்கத்திற்கு மாறாக மாலையும் கழுத்துமாகவே மனோஹர தரிசனம் அளித்தார். இளைஞரொருவர் அவரது திருமுன்பாடிக்கொண்டிருந்தார். நான் செய்த பாக்கியம் பெரியவாளை தரிசித்தது மட்டுமல்ல; நான் போகும்போது பாடகர் பாட்டின் முடிவு பகுதிக்குவந்திருந்ததுதான்! அவர் சரணத்தின் பின்னிரு வரிகளுக்கு வந்து ஓரிரு நிமிஷத்திலேயே அதை முடித்தது என் பாக்கியமே! அப்பேர்ப்பட்ட”தேவகானம்” !
“கராஜுனி ஹ்ருதய சரோஜவாசினி முராரி சோதரி பராசக்தி ந்னு” என்று அவர் திருப்பியபோது, நல்ல வேளை, என் கோபம் சிரிப்பாக மாறியது!
முந்தைய பாத இறுதியில் வரும் “த்யா” என்பதோடு இணைத்து “த்யாகராஜுனி ஹ்ருதய சரோஜ” என்று பாட வேண்டியதைத்தான் அந்தபுண்ணியவான் “கராஜுனி” என்று அமர்க்களமாக தாளம் தட்டி சிதைத்து பாடினார்.
பெரியவாளின் பெருமைகள் அனந்தம் என்றால் உபசார வாக்கல்ல. சத்தியமாகவே அனந்தம்தான்! அந்த பெருமைக்கு இரு கண்மணிகள்அல்லது இரு சுவாச கோசங்கள் போல பொறுமையும், எளிமையும். மற்ற விஷயங்களை பொறுத்து கொண்டாலும் பொறுத்து கொள்ளலாம்; ஒரு தேர்ந்த ரசிகனால், ரசக்குறைவானதை பொறுத்து கொள்வது மாத்திரம் ரொம்ப ரொம்ப ஸ்ரமமானது! அந்த ஸ்ரமசாத்தியத்தைதான் நம்பெரியவா அனாயாசமாக
சாதித்திருக்கிறார்! ஏனென்றால், இன்று ‘பாட்டு பாடுதல்” என்ற அந்த பாடு படுதலுக்கு ராகம் மட்டுமின்றி,சாஹித்யமும் ஆளாயிற்று. இசை கொலை பிளஸ் மொழி கொலை!
“வினாயகுநிவெல்லன்னு ப்ரோவவேனினு வினா வேல்புலேவரம்மா” என்ற பல்லவியை எடுத்து, அதில் எத்தனை அக்ஷர பிழை, ஸ்வர பிழைசெய்யலாமோஅவ்வளவும்செய்து,
ஒருவழியாகதலைகட்டினார்.
பொறுமையின் அவதாரமான பெரியவா இனித்த முகமாகவே பாட்டை கேட்டு கொண்டிருந்தார். பாடி முடித்தவர் , “பாட்டு சரியா இருந்துதா?” என்று கேட்டார்.
“என்ன தைரியம்?” என்று ஆச்சரியப்பட்டேன். பெரியவா என்ன சொல்ல போகிறார் என்று ஆர்வமாக கேட்டேன். அவர் சொன்ன பதில் மேலும்ஆச்சரியமாக இருந்தது.
“எனக்கு சரியா இருந்தது. ஒனக்கு வேண்டியது அதானே?” என்றார்.
“ஆமாம் பெரிவா, எனக்கு வேற ஒண்ணும் வேணாம்” என்று பாட்டுக்காரர் தண்டமாக விழுந்து கும்பிட்டார்.
அவரிடம் வேடிக்கையாக பேச ஆரம்பித்தார் பெரியவா.
“இது என்ன ராகம்?”
“மத்யமாவதி”
“மத்யமாவதியா? அபூர்வ ராகம்னே சிலதை சொல்றதுண்டோன்னோ, அப்படி அபூர்வம பாடினே”
“பெரிவா அனுக்ரகம்”
பாட்டுக்காரரிடம் என் கோபமும் சிரிப்பும் போய் பரிவு உண்டாயிற்று.
நன்குபரிச்சயமான ராகத்தையே உருமாற்றி ஏதோ அபூர்வ ராகம் போல
அவர் பாடினார், என்பதையே அந்த பொல்லாத கிழவனார் குறும்பில் குத்தவதை புரிந்துகொள்ளாத அப்பாவியாக இருக்கிறாரே என்ற பரிவு.
இம்மாதிரி அப்பாவிகளிடம் பெரியவாளின் கருணை இரு மடங்காக பெருகும். பின் ஏன் குறும்பிலே குத்தினார் என்றால், அவர்கள் பெரும்கருணையில் பாதியளவே பெறுகின்ற “புத்திசாலி” களான நம்முடைய புத்திக்கும் வேடிக்கை வினோதம் காட்டத்தான்! குத்தல் நமக்குத்தான் தெரியுமே தவிர, குத்தப்படுபவர்களுக்கு தெரியாது. அதுதான் அவர்கள் அப்பாவிகளாச்சே! குழந்தையிடம் நாம்,அம்மா குத்து, திம்மா குத்து “விளையாடும்போது, பிறருக்குத்தான் மிகவும் பலமாக குத்துவது போல தெரியுமேயொழிய குழந்தையின் கையில் குத்து மெத்தாகத்தானே விழும்! பரிஹசிப்பதாக நமக்கு காட்டும்போதே, “இவரை விட அழகாக உரையாட நவகண்டத்தில் ஒருவர் உண்டா” எனத்தக்க நாயகர்.
“மத்யமாவதின்னா என்ன?” அப்பாவியை விடவும் அப்பாவி போல் கேட்டார்.
“ராகத்தின் பேரு” பாட்டுகாரரிடமிருந்து அப்பாவி பதில் வந்தது.
“அதுதான், நான் என்ன ராகம்னு கேட்டப்பவே மத்யமாவதின்னுட்டியே! அதையேதான மறுபடியும் சொல்றே? மத்யமாவதின்ன என்னஅர்த்தம்?”
“மத்யமம்னா “நடு” இல்லியா? நடு பாகம் அவதியா இருந்த மத்யமாவதியா?” “பெரிவா எப்படி சொல்றேளோ அப்படி”
“புத்திசாலி”களான நாம், அந்த அப்பாவி போல அப்படி பெரியவா சொல்வதை வேதவாக்காக கொள்வோமா?
“எழுத்தாளன்”ன்னு என்னை கூப்பிட்டு ,”மத்யமாவதிக்கு நான் குடுத்த
defenition கேட்டியோ?”
“பாட தெரியாதவா பாடினா……..
மத்யமாவதி மத்யமத்துலே மட்டுமில்லாம ஆரம்பம் – மத்யமம் அந்தம் எல்லாமே அவதியாத்தான்இருக்கும்” என்றேன்.
சட்டென ஏதோ நினைத்துகொண்டார்ப்போல், .பாட்டுக்காரரை பார்த்து, “நீ இந்த பாட்டு பாடினதுக்கு என்ன காரணம்?”
“அனாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி -ன்னு வரதுதான்”
“அதனால…” அடேயப்பா! அப்பாவியினும் அப்பாவியாக என்ன நடிப்பு!!
“பெரிவாளுக்கு காமக்ஷிதான் எல்லாம்; பெரிவாளே காமக்ஷிதான்-கிறதால” ஆஹா!! அப்பாவி என்ன போடு போட்டு விட்டார்? “புத்திசாலி”களால் இயலாத எத்தகைய சகஜ பாவத்துடன் சத்தியத்தை சொல்லி விட்டார்!
சற்றேனும் இது போல அந்த புத்திசாலிகள் சொன்னாலும், உடனே பேச்சை ‘அபௌட்டர்ன்” திருப்பி விடும் பெரியவா, அன்று அதை தாமும் சகஜமாக ஏற்று கொண்டு “காமக்ஷிதான் எனக்கு எல்லாம், நானே காமக்ஷிதான் [ இப்படி அவர் இயல்பாக கூற கேட்டபோது உள்ளங்கால் முதல்உச்சந்தலை வரை ஜிவ்வென்று சிலிர்த்தது!] ..ங்கரையே…நீ என்ன கண்டு பிடிச்சியோ? எதை வெச்சு கண்டுபிடிச்சே?
”
“பெரிவா” அப்பாவி தேம்ப ஆரம்பித்தார் ,”கண்டு பிடிக்கல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது, பெரிவா! ரொம்ப பேர் அப்படித்தான் சொல்லியிருக்கா. எனக்கும் பெரிவாளை பாத்தா அப்பிடித்தான் தோணித்து” என்று தேம்பலுக்கிடையே குழறி முடித்தார். அப்பாவி! உன்பாக்யமே பாக்கியம்!! பூலோகம் காணாத புஷ்ப்பமா பெரியவா உட்க்கார்ந்திருந்தார். தேம்பல் தேய்ந்தது. குறும்பு குத்தலில் மீண்டும் இறங்கினார் குருநாதர்.
“சரி……அனுபல்லவிலே “காமாக்ஷி”ன்னுனா இருக்கு? ஒரு வேளை பாட்டு பிள்ளையார் பேர்ல இருக்குமோ என்னமோ! நீ பாட்டுக்கு காமாக்ஷிபாட்டுன்னு பாடிட்டியே?”
“என்ன தப்பா இருந்தாலும் பெரிவா மன்னிச்சுக்கணும்” என்று அழ இருந்த பாட்டுக்காரரை, “அழாதேப்பா! அழாதேப்பா! என்று சந்தனமாகஆற்றி கொடுத்தார். “தப்பு ஒண்ணும் சொல்லலேப்பா! “விநாயக”ன்னு ஆரம்பிச்சுட்டு “காமாக்ஷி”ன்னு போறதேன்னு கேட்டேன்.அவ்வளவுதான். போகட்டும், பாட்டு என்ன பாஷை?” குறும்பு குத்தல்தான்! “தெலுங்கு” என்றார் பாட்டுக்காரர். “அப்படியா!” என்ற பெரியவா ஒரு “திம்திமா” குத்தே விட்டார்! அபூர்வ ராகம்பாடினாப்ல, அபூர்வ பாஷையும் பாடரயோன்னுனா ஆச்சர்ரியப்பட்டேன்!”
“பெரிவா அனுக்ரகம்!” திம்திமாவையும் மெத்திலும் மெத்தாக ஏற்ற பதில் .பாட்டுக்காரர் குறித்து முதலில் கோபமுற்றவன், அப்புறம் சிரித்தவன்,
பின்னர் பரிவு கொண்டவன், இப்போது அழுதுவிடுவேன் போலாயிற்று! “பாக்யசாலி !” உன் அப்பாவித்தனம் எனக்கு வாய்க்குமா?”
“புரிஞ்சாலும் சரி, புரியாவிட்டாலும் போகட்டும் [குறும்பு குத்தல்] பெரியவா பேசறா, கேட்டுண்டயிருப்போம்னு ஒக்காந்திருக்கியே…… பஸ்போய்ட போறதுப்பா! என்ன டைம்?” என்று பறந்தார். பாட்டுக்காரரை பற்றி சொன்னார். வலக்கை, இடக்கை தெரியாத ஆயப்பசங்களிடம் கீதையை தனக்குள் அடக்கி கொண்டிருந்த ஞானச்சாரியனுக்கு இருந்த அதே பரிவு.
பாட்டுக்காரருக்கு வேலூர் தாண்டி ஏதோ கிராமமாம். “ஸ்வல்ல்ப்ப பூஸ்திதி. அதுதான் ஜீவனோபாயம். படிப்பு பண்ற க்ருத்ரிமம் தெரியாம இருந்துண்டிருக்கான் [படிப்பு ஏறாததை இத்தனை அழகாக ஏற்றம் கொடுத்து சொல்ல அந்த எளிமை தெய்வத்தால்தான் முடியும். இங்கே நம் அத்தனை பேருக்கும் குறும்பு குத்தல்]
விதந்து தாயாரும் ஒரே பிள்ளையான இவனுமா இருந்துண்டிருக்கா.
கல்யாணத்தை பத்தி யோஜனை போகலையாம். அவா பாட்டுக்கு ஒரு கஞ்சியை, கூழை குடிச்சுண்டு ஒருத்தருக்கு ஒரு ஹானி செய்யாம நிம்மதியா இருந்திண்டுருக்கா.
பாட்டுன்னா இவனுக்கு கொழந்தை நாள்லேர்ந்து ஒரு ஆசையாம். சிக்ஷை சொல்லிக்க வசதி கெடயாது. யார் ஆத்திலயாவது,ஹோட்டல்லயாவது ரேடியோ, ரெகார்ட் வெச்சா ஓடி ஓடி போய் கேக்கறதாம். தனக்கு இருக்கற க்ராஹ்ய சக்தியிலே எவ்வளவு பிடிச்சுக்கமுடியறதோ பிடிச்சுக்கறதாம். லட்சியமும், மனோபாவமும்தான் முக்யமே தவிர, கார்யத்ல என்ன சாதிக்க முடியுங்கறதா முக்கியம்! அப்படி,அங்க இங்க ஓடி தன்னால முடிஞ்ச மட்டும் பாட்டு கத்துண்டு இருக்கான். என்ன பத்தி கேள்விபட்டதிலேந்து…
[பாட்டுக்காரரை பார்த்து]எப்போப்பா கேள்விப்பட்டே?”
“கனகாபிஷேகம் நடந்துதே அப்போ”
“அதாவது, ஏழெட்டு வருஷமா, அம்பாள், கிம்பாள்” ன்னு என்னை பத்தி யாரோ சொல்லி கேட்டதுலேர்ந்து என்கிட்டே ஒரே பக்தி வந்துடுத்தாம்.எனக்கு பாடி காட்டணும் காட்டணும்..ன்னு ஆசையாம். “அதெல்லாம் நம்மை அல்லௌ பண்ணுவாளன்னும் பயமாம். அதோட, காஞ்சிவரம் வந்துட்டு போறதுன்ன ரெண்டு, மூணு ஆகுமே, அதுக்குகூட வசதி இல்லாத ஸ்ரமமாம்”….
பாட்டுக்காரரின் தேம்பல் பெரியவாளை இழுத்தது. அருள்மயமாக அவர் பக்கம் திரும்பி, “அழாதேப்பா! பணம் காசு வரும் போகும். நீஅதுக்காக பறக்காம இருக்கியே, இந்த மனசு யாருக்கும் வல்லே; வரது துர்லபம். ஐநூறு ஆயிரம் சம்பாதிக்கற இளம் பசங்ககூட [சொன்னது 40வருஷங்கள் முன்னால்] அமெரிக்காவுக்கு ஓடலாமான்னு பாக்கற நாள்ல, பசங்களை சொல்வானேன்? ஆயிரம், ரெண்டாயிரம் சம்பாதிச்சு ரிடையர்ஆனவாகூட extension க்காக இல்லாத தில்லு முல்லு பண்ற இந்த நாள்ல, போறும்கிற எண்ணம் வரதே இல்லே…ஏதோ வர மாதிரிக்ஷணம் வந்தாலும் ஓடி போய்டறது. ஒனக்கு அது தன்னால வந்திருக்கு. அது போகவும் படாது. என்னை பாக்கறதுக்காக கூட பணம் காசுவந்தா தேவலையேன்னு நெனைக்காதே. நா… ஒன் கூடவேதான் இருக்கேன்னு வெச்சுக்கோ…….”
யாருக்கு கிடைக்கும் அந்த சர்வகால சஹவாச வாக்குறுதி! பாக்கிய அப்பாவி நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தார்.
“என்னைபத்திகேட்டதுலேர்ந்துபாக்கணும்,பாடணும்னுதவிக்கஆரம்பிச்சுட்டான்……..ஏழெட்டு வருஷமா எனக்காக தவிச்சிருக்கான். தபஸ் இருக்காப்ப்லேயே……..இப்பத்தான் வாழ்நாள்ல மொதல் தரமாsavings ன்னு ஒரு பத்து பதினஞ்சு கையிலே சேந்துதாம்…..அது அப்படியே பெரியவாளுக்குன்னு [பெரியவா அடக்கிகொண்ட போதிலும் அவரதுஉள்ளுருக்கம்அந்த வார்த்தைகளில் ஜாடை காட்டியது]
பஸ் சார்ஜ் போக, மீதிக்கு எனக்கு புஷ்பம், பழம், இதோ மாலைபோட்டுண்டிருக்கேனே, இது எல்லாம் வாங்கிண்டு ஓடி வந்துட்டான் [ஓஹோ! மாமுனிவர் கழற்றாமல் அணிந்திருந்த மாலையின் ரகசியம் இதுதான?] திரும்பி போறதுக்கு சரியா என்ன பஸ் சார்ஜோ அவ்வளவுதான் கையிலே வேச்சுண்டிருக்கான்”
அடாடா! அப்பாவி! உன் பக்தி மட்டுமில்லை, அபரிக்ரஹமும், த்யாகமும்கூட எங்களுக்கு கனவிலும் வராது!
அந்த பாகியசாலிக்கு ஏதேனும் பணிபுரிய வேண்டுமென எனக்கு உந்துதல் ஏற்ப்பட்டதால், “ராத்திரி பூஜை பாத்துட்டு போறமாதிரிதான்வந்திருக்கேன். அதனால, அவரை எங்க வண்டியிலே கிராமத்துக்கு கொண்டு விட்டுட்டு வர சொல்லவா?”
உடனே பெரியவா பளிச்சென்று சொன்னார் “அந்த சவுகர்யத்துக்கேல்லாம் அவனை காட்டி கொடுக்காதே![காட்டிகொடுக்காதே….என்ன அர்த்தபுஷ்ட்டியான பதப்ரயோகம்!]
“பாத்தியா…….பெரிய எழுத்தாளர் ஒன்கிட்ட எவ்வளவு பிரியமா இருக்கார்? அதுக்காக அவர் எழுதறது, எதையாவது படிச்சுட்டு திண்டாடாதே! அவர் பணம், காசு கொடுத்தா தொடாதே! கார் சவாரி பண்ணி வெக்கறேன்னாலும் ஒத்துக்காதே !”
பையன் சொன்னார் “நான் படிக்க மாட்டேன் பெரிவா! எனக்கு அதெல்லாம் புரியாது; காசும் யார்கிட்டேயும் வாங்கறதில்லே, பெரிவா; கார் சவாரிக்கேல்லாம் ஆசைப்படலை பெரிவா! பெரிவா ஆசிர்வாதந்தான் வேணும்”
“வேண்டியமட்டும் தரேன் ” என்று வாரிவிட்ட வள்ளல் பாகியசாலியிடம் “ஒனக்கு நாழியாச்சு…..சட்னு போய் சந்திர மௌலீஸ்வரருக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வா, பிரசாதம் தரேன்”
“சந்திர மௌலீஸ்வரர்னா எந்த சுவாமி? எங்கே கோவில் இருக்கு?” என்று பெரியவாளையே கேட்டார், தன அறியாமையாலேயே கண்களை மல்க செய்த பாக்கியசாலி.
“சந்திர மௌலீஸ்வரர்தான் இந்த மடத்துக்கு சுவாமி. அதோ அங்கேதான் நாங்க அவரை வெச்சுண்டு தங்கி இருக்கோம். போய் நமஸ்காரம்பண்ணிட்டு ஓடி வா”
“மடத்து சுவாமி காமாக்ஷி அம்மன் இல்லியா?”
“அவளுந்தான். அவ மடத்துக்கு மட்டும் இல்லாம ஊர் உலகத்துக்கெல்லாம் பொதுவா காஞ்சிபுரத்ல பொது கோவில்லஇருக்கா……..அவளேதான் இந்த மடத்தை பாத்துக்கறதுக்காக, இந்த மடத்து சாமியார்கள் மட்டும் பூஜை பண்ணறதுக்காக – ஆனா மடத்துக்காக மட்டும் இல்லாம, லோகம் பூராவுக்குமாக பூஜை பண்றதுக்காக – சந்திர மௌலீஸ்வரர்ன்னு அவளோட ஆத்துக்காரர் [ எளியவர்க்கேற்ற எளியபத பிரயோகம்] அவரை
ஸ்படிக லிங்க ரூபத்திலே இங்கே அனுப்பிச்சு வெச்சு, அவர் பக்கத்திலே தானும் வேறே ஒரு மாதிரி ரூபத்திலே [ ஸ்ரீசக்ரம், மேரு என்றெல்லாம் சொல்லி அவரை திண்டாட வைக்காத அருமை பாருங்கள்] இருக்கா. கவசமும் அலங்காரமும், புஷ்ப்பமுமாபோட்டிருக்கரதாலே ஒனக்கு லிங்கம், அம்பாள்ன்னு எல்லாம் ஒண்ணும் ஸ்பஷ்ட்டமா தெரியாது. அதுக்காக தேடிண்டு இருக்காதே! “இங்கேசுவாமி இருக்கார் ன்னு ”
நெனச்சுண்டு ஒரு நமஸ்காரத்தை பண்ணிட்டு ஓடி வா”
அவர் போனதும் என்னிடம் “நீ அவனை கார்ல அனுப்பி வெச்சு கார், மோர் ன்னு போய் கிராமத்தல எறங்கரான்னு வெச்சுக்கோ, அப்பா ஒருமெதப்பு எண்ணம் வந்தாலும் வந்துடலாம். அவனுக்கு எதுக்கு அதெல்லாம்? அவனுக்கு வசதி வேண்டாம், சவுகர்யம் வேண்டாம்,
status,தோரணை ஒண்ணும் வேண்டாம். அறிவு, வித்வத்கூட வேண்டாம். ஆமாம், வேண்டாந்தான்! சொல்றேன் கேளு”
“சமீப காலமா வேலூர்லேர்ந்து ஒரு பாட்டு வாத்யார் என்கிட்டே வந்துண்டு இருக்கார். ஓரளவு விஷயம் தெரிஞ்சவர்; அதைவிட [குறும்பானசிரிப்புடன்] பொறுமைசாலின்னும் தெரியறது………நான் சொன்னேன்னா…..இவனுக்கு ப்ரீயாவே கத்துக்கொடுப்பார். அப்படி பண்ண அவருக்குஅபிப்ராயமில்லேன்னு தெரிஞ்சாலும், நான் யார் தலையிலாவது கை வெச்சு அவனுக்காக சம்பளம் கட்டறதுக்கு ஈஸியா ஏற்பாடுபண்ணிடலாம்…….ஆனா அந்த மாதிரி எதுக்கும் அவனை நான் காட்டி கொடுக்க நெனைக்கலே …..சரியா பாடறதுங்கர சாமர்த்தியம் கூடஅவனுக்கு வேண்டாம். அவன் பாட்டுக்கு இருக்கறபடி இருக்கட்டும். இப்ப பாடறபடியே பாடிண்டு போகட்டும். தற்கால புத்திசாலி உலகத்திலேயும் தப்பி தவறி, இந்த மாதிரி அசடா இருக்கறவா, நித்திய அசடாவே இருக்கட்டும். அவாளை கெடுக்க வேண்டாம்னே எனக்கு இருக்கு”
சந்திர மௌலீஸ்வரர் யாரென்று தெரியாமலே, நடமாடும் சந்திர மௌலீஸ்வரியால் இன்றைய புத்திசாலி உலகுக்கு மாற்று மருந்தாக போற்றப்பட்ட பாகியசாலி, அவர் சொன்னபடியே நமஸ்கரித்து விட்டு வந்தார்.
“நமஸ்காரம் பண்ணிக்கோ நாழியாச்சு!”பிரிய மனமின்றி, கண்ணீரும் கம்பலையுமாக பாக்கியசாலி நமஸ்கரித்தார்………..நீ பாடினியே, அந்த விநாயகனை ரக்ஷிக்கராப்ல ஒன்ன அம்பாள் எப்பவும் ரக்ஷிசுண்டு இருக்கட்டும்” என்று ஆசிர்வதிக்கவே ஏற்ப்பட்டதிருக்கரத்தை தூக்கினார்.
“ எழுத்தாளன்” என்று மீண்டும் என்னைக் கூப்பிட்டார் ஸ்ரீசரணர். “
பாட்டு அர்த்தம் உனக்குத் தெரியுமா?”
“ஒரு மாதிரி தெரியும்”
“தெலுங்கு தெரியும்?”
“தெரியாதுதான். ஆனா ஐயர்வாள், சாமா சாஸ்த்ரிகள் மாதிரியானவா பாட்டுக் கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சு வெச்சுக்கிறது முடிஞ்ச மட்டும் பதவுரையாவே.”
……………………………………………………………………………………………………………………………………..
“பதவுரையாவே தெரிஞ்சிண்டிருக்கிறவன் ஏன் ‘ ஒரு மாதிரி’ தெரியும்னே?”
…………………………………………………………………………………………….
நான் ஒன்றும் சொல்லவில்லை.
‘ நன்னாத் தெரிஞ்சாலும், அப்படி சொல்லிக்கப்படாதுன்னு ‘ஒரு மாதிரி’ ன்னேயாக்கும்? ஸரி! பிள்ளையார், அம்பாள் ரெண்டு பேர் சமாசாரமும் வரதே, அது என்ன? அர்த்தம் சொல்லு!” என்று சொல்லிவிட்டு,
ஆஹாஹா! அவர்களே கொஞ்சம் பாட்டாகவும், கொஞ்சம் வசனமாகவும் அந்த வசனமே ஒரு கானமாகவும் பல்லவி, அனுபல்லவிகளைப் பாடி, பேசினார்.
பல்லவி
வினாயகுநி வலெநு ப்ரோவவே நிநு
விநா வேல்புலெவரம்ம?
அனுபல்லவி
அநாதரக்ஷகி! ஸ்ரீ காமாக்ஷி! ஸூ-
ஜநாக மோசநி! சங்கரி! ஜனனி!
“ ‘அநாதரக்ஷகி, ஸ்ரீ கமாக்ஷி’—ன்னு கொண்டு போயிருக்கிற விதம் அப்படியே மனஸைக் கவ்வறது” என்று சுவைத்துச் சொன்ன அனாதரக்ஷகர் ,” நான் மூலம் சொல்லியாச்சு. நீ உரை சொல்லு” என்றார்.
நான் ஒரே தயக்கமாக—எத்தனை வழிந்தேனோ?
“ பிள்ளையாரைப் போலவே என்னையும் நெனச்சு ரக்ஷி, உன்னை விட்டா வேறே தெய்வம் யாரம்மா? அநாதைகளை ரக்ஷிக்கிறவளே! சங்கரி! தாயே!
”
“‘பிள்ளையாரைப்போல் என்னையும்’—னு நீ அவர் பேரையே வெச்சிண்டிருக்கிறவன் சொல்றச்சே வேடிக்கையாக இருக்கு” என்று கூறினார்.
எனக்கு ஒரு புறம் லஜ்ஜையாகவும் இன்னொருபுறம் பூரிப்பாகவும் இருந்தது.
லஜ்ஜை, பூரிப்பு ,இரண்டையும் அனந்தம் மடங்கு உயர்த்துவதாகத் தொடர்ந்தது, “ ஒனக்குப் பண்றாப்பல எனக்கும் அவ அனுக்ரஹம் பண்ணனும்னு கூடக் கேக்கலாமோன்னு தோண்றது” என்றார், ஒரு புறம் நகைச்சுவை மன்னராக, இன்னொரு புறம் எளிமையின் ஏந்தலாக!.
பெரியவா பேச்சை மாற்றினார். “ ஆமாம், ‘ஸுஜநாக மோசனி’—ன்னா ( நல்லவர்களுடைய பாபத்தைப் போக்குபவள்) நல்லவா என்கிறவாளையே பாபிகள்னும் சொல்றாப்பலன்னா இருக்கு!” என்று கேட்டார்.
“நானே பெரியவாளைக் கேக்கணும்னு நெனச்சேன்” என்றேன்.
‘கிராக்கி’ செய்து கொள்ளாமல் உடனே அற்புத விளக்கம் அளித்தார். “ லோகத்துலே நல்லவாளா இருக்கற பலபேரைப் பார்த்து நாம,’ இவ்வளவு நல்லவா இப்படியொரூ கஷ்டப்படறாளே’ ன்னு சொல்லும்படியாகவும் நெறய்ய நடக்கறதோல்லியோ? காரணம் அவாளோட பூர்வ (ஜன்ம) பாபந்தானே? அதிலேருந்து அம்பாள் அவாளை விடுவிச்சுடறாங்கிறதைத்தான் ‘ஸுஜனாக மோசனி’ ன்னு சொல்லியிருப்பார்.” என்றார்.
திடீரென்று ஒரு உத்ய்ஸாகம், குழந்தை மாதிரி! “ காமாக்ஷி ன்னா ஆச்சார்யாளை நெனைக்காம இருக்க முடியுமா? அதுதான் ‘சங்கரி’ ன்னு போட்டிருக்கார்” என்றார் நவகால சங்கரர்.
தொடர்ந்து, “ ஐயர்வாள் பரம பக்தரானாலும் அத்வைதத்திலேயும் ரொம்பப் பிடிமானம் உள்ளவர் தெரியுமோ?” என்றார்.
“ (டாக்டர் வே) ரகவன் அதைப்பத்தி எழுதியிருக்கார். ஐயர்வாள் உபனநிஷத் ப்ரஹ்மேந்திரரோட இன்ஃப்ளூயென்ஸிலே வந்ததாலே, அவர் மாதிரியே ராமபக்தியானாலும் அத்வைதத்திலேயே அந்த பக்தி கொண்டு சேக்கிறதை அங்கங்கே பாடியிருக்கார்னு நெறைய கொடேஷன் கொடுத்து எழுதியிருக்கார்.”
“ஸி ராமானுஜாச்சாரி பொஸ்தகத்துலதானே?”
“ஆமாம்”
அத்வைதத்திலே, நிர்குண ப்ரஹ்மம்னு சொல்றதுக்கும் ஸகுண ப்ரஹ்மம்னு சொல்றதுக்கும் நடுப்பற (நடுவில்) நாதப்ரஹ்மத்தை ஐயர்வாள் உபாஸிச்சிண்டிருந்தார். அப்ப முக்யமா அந்த நாத வித்தைக்கு மூலமா சிவனைத்தான் வெச்சிண்டிருந்தார். ஸங்கீத சாஸ்திரத்திலேயே அப்படித்தானே? அந்த மாதிரி சிவனை வெச்சுக்கறப்பவும் அவர் முக்யமா ‘சங்கர’ நாமத்திலேயே பாவிச்சிருக்கார். ‘நாததனுமநிசம் சங்கரம்; நாதோபாசனசே சங்கர—ன்னுட்டு அப்பறந்தான் ‘நாரயண’ன்னும் சேர்த்திருக்கார்!
“இந்த சமாசாரமெல்லாம் இருக்கட்டும். காஞ்சீபுரத்துல காமாக்ஷியைப் பார்த்துப் பாடறச்சே எதுக்காக ‘ விநாயகரை ரக்ஷிக்கிற மாதிரி என்னையும்’ னு சொல்லி ஆரம்பிக்கணும்? தியாகையர்வாள் லைஃபிலே இதைப்பத்தி ஏதாவது கதை, கிதை கேட்டிருக்கையா?” என்றார்.
‘பெரியவாளிடம் ஏதோ அபூர்வமான கதை இருக்கிறது, அப்புறம் சொல்லப்போகிறார். அதற்கே இந்த பூர்வாங்க நாடகம் ‘ என்று உள்ளூக்குள் சப்புக் கொட்டிக்கொண்டு, “ ஒண்ணும் கேட்டதில்லை. உபநிஷத் ப்ரஹ்மேந்திராள் ஸ்ரீமுகம் அனுப்பியதன் பேரிலே ஐயர்வாள் காஞ்சீபுரம் வந்தார்; அப்ப வரதராஜா, காமாக்ஷி அம்பாள் ரெண்டு பேர் மேலேயும் பாடினார்—ங்கறத்துகு மேலே ஒண்ணும் தெரிஞ்சுக்கலை.”
அந்த ஸ்வாமிகள் ஐயர்வாளுக்கு அனுப்பின ஸ்ரீமுகம் மதுரை சௌராஷ்ட்ரா ஸபாவிலே இருக்குன்னு தெரியுமோ?”
“பெரியவா சொன்னவிட்டு நெனைவு வரது.”
“ஐயர்வாள் வந்தப்போ கருடோத்ஸவம். அதை அவர் வரதராஜ க்ருதியிலேயே சொல்லியிருக்கார் தெரியுமோ?
“இப்பத்தான் தெரிஞ்சுக்கறேன்.
”
“ எனக்கும் இப்பதான் திருப்தி. நான் கேக்கிறதெல்லாம் ஒனக்கும் தெரியும், தெரியும்னா எனக்கு ஸ்வாரஸ்யப் படலை”—-பந்தயத்தில் கெலித்த குழந்தை போல, ஒரு தேன் வெள்ளச் சிரிப்பு! இந்தப் ப்ருதிவியில் அப்படியொரு மனப்பாங்கு கண்டதுண்டோ?.
ஏதோ தைர்யம் கொடுத்ததில் , “ பெரியவாளுக்குத் தெரியறதுல அணுமாத்ரங்கூட யாருக்கும் தெரிய முடியாது. ஏன் பிள்ளாய்யாரை சம்பந்தப்படுத்தி ஐயர்வாள் காமாக்ஷியைப் பாடினார்—ங்கிறத்துக்கும், பெரியவாளுக்கு மட்டுமே தெரிஞ்சதா ஏதோ கதை இருக்கணும். பெரியவா சொல்லணும்.” என்று கைகுவித்து வேண்டினேன்.
“ பெரியவா சொல்றது, சொல்லாதது இருக்கட்டும். நீதான் எழுத்தாளன் ஆச்சே! ‘ கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு’ ன்னு எழுதறேளே, அப்படி ஏதாவது பண்ணீ ஒரு கதை ஜோடிச்சுப்பாரேன்!” என்றார்.
கற்பனைக் குதிரையைத் தட்டி விடுகிறதாமே! கர்னாடகத் துறவிக் கிழவர் எப்படி நவகாலப் பத்திரிகை வாசகங்களெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்!
ஸந்நியாஸ பட்டத்திலேயே ‘ஸரஸ்வதி’யைக் கொண்ட அந்த ஸர்வக்ஞரின் திவ்ய ஸன்னிதானத்தில் அவரே ஆணையிட்டதன் மேல் சிறிது சிந்தித்ததில் உண்மைக் கதை என்று சொல்லும் சாத்யக்கூறு உள்ள ஒரு ஸ்ருஷ்டி உருவாயிற்று.
என் ஸ்வபாவத்தை மீறி அன்று பல பேர் எதிரில் நான் அதைக்கூறியது அவர் செய்த ஆச்சரியம்தான். அந்தப் பல பேர் என் கண்ணுக்குத் தெரியாமல் அவரொருவரே தெரிந்ததால்தான் தைரியமாகச்சொன்னேன் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
“ஐயர்வாள் ஸ்ரீரங்கத்துக்குப் போய் ‘ஸ்ரீரங்கப் பஞ்சரத்னம்’ னே சொல்ற அஞ்சு க்ருதி பண்ணீயிருக்கார். திருச்சி கிட்டவே லால்குடிக்கும் போய் அங்கேயிருக்கிற அம்பாள் மேலேயும் ‘லால்குடி பஞ்சரத்னம்’னு அஞ்சு….”
ஸ்ரீசரணர் இடைமறித்து,” அந்த அம்பாள் மட்டுமில்லே; அங்கே இருக்கிற ஸ்வாமி, ஸப்தரிஷீஸ்வரர்னு பேரு. ஸப்தரிஷிகளும் தபஸ் பண்ணீன இடமானதினாலே லால்குடிக்குப் பேரே தபஸ்தீர்த்தபுரம்தான்—அந்த ஸ்வாமி பேர்லே ரெண்டும், அம்பாள் பேர்ல மூன்றுமா பஞ்சரத்னம் பண்ணீயிருக்கார். ஸரி, மேலே சொல்லு! ‘ஐயர்வாள் ஸ்ரீரங்கத்துக்கும் போயிருக்கார், லால்குடிக்கும் போயிருக்கார்’னு காஞ்சிபுரம் ஸமாசாரத்துக்கு எங்கேயோ தள்ளீ கதையை ஆரம்பிச்சிருக்கையே, மேலே சொல்லு” என்று வெகு ஆர்வமுள்ளவர் போல் ஊக்கினார்.
நானும் ‘குதிரை’யை, ஓட்டினேன். ஸ்ரீரங்கத்துக்கும் அவ்வளவு பிரசித்தி இல்லாத லால்குடிக்கும் போனவர் ஜம்புகேஸ்வரத்துக்கு( திருவானைக்காவுக்கு)ப் போகாமலிருந்திருக்க மாட்டார். அங்கே ஆச்சார்யாள் அம்பாளுக்குத் தாடங்கப் பிரதிஷ்டை பண்ணீ, அப்படியும் அவ முழுக்க சமனம் ஆயிருப்பாளோ மாட்டாளோன்னு நெனச்சு ( ஆசார்யாள் விஷயமானதால் ஏதும் அபசாரமாகப் பெரியவாள் நினைத்து விடக்கூடாதே என்று பயந்து பயந்து, தயங்கித் தயங்கி நான் சொல்ல, அவரோ ப்ரஸன்ன முகமாகவே கேட்டுக்கொண்டதால் தொடர்ந்தேன்). அவளோட த்ருஷ்டி செல்லப்பிள்ளையான பிள்ளையார் மேலே பட்டுட்டா தன்னால குளிர்ந்துடும்னு அவளுக்கு நேர் எதிரே பிள்ளையாரைப் பிரதிஷ்டை பண்ணின விஷயம் கேட்டிருப்பார். ஆனாலும் அவ்வளவா லோகத்துக்குத் தெரியாத லால்குடி அம்பாள் மேலே பாடினவர், அகிலாண்டெஸ்வரி மேலே பாடினதாத்தெரியல்லை. இருந்தாலும் அந்த விஷயம் மட்டும் அவர் மனஸுல நன்னாப் பதிஞ்சிருக்கலாம். அப்புறம் அவர் காஞ்சிபுரம் வந்து இங்கேயும் ஆசார்யாள் அம்பாளை சமனப்படுத்த அவளுக்கு நேரே ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டை பண்ணீனார்னு கேட்டவொடனே ஜம்புகேஸ்வரர் ஞாபகம் வந்து ‘வினயகுனி’–ன்னு ஆரம்பிச்சிருக்கலாம்.”
எல்.கே.ஜி குழந்தை ஒப்பிக்கும் பாட்டில் மகிழும் தாயாக அந்த ஸர்வஞ பிரபு ஸந்தோஷப்பட்டார்.” ஒன் குதிரை ஒரே தாவா ஜம்புகேஸ்வரத்துக்கும் காஞ்சிபுரத்துக்கும் தாவி கதை ஜோடனை பண்ணிடுத்து. கதை, ஜோடனைன்னு ஏன் சொல்லணும்? அப்படியே நடந்திருக்கலாம்.” என்றார்.
இன்ப வாரிதி பாய்ந்தது.
இதைப் பத்தி பெரியவா புதுசா ஏதோ சொல்றத்துக்கு இருக்கு. சொல்லணும்” என்று மீண்டும் விஞ்ஞாபித்தேன்.
“நீ ப்ரமாதமா சொல்லியிருக்கே, அந்த மாதிரியெல்லாம் எனக்கு வருமா? எனக்குத் தெரிஞ்சமட்டும் சொல்றேன். எனக்கு என்ன தோணித்துன்னா…..”
grateful.
இதை எப்போ படிச்சாலும் அழாமல் என்னால் படிக்க முடிவதில்லை அண்ணா.
விநாயகுநி
பெரியவா சொன்ன கதை
இம்மாதிரி விஷயங்களில் ஸ்ரீசரணாளுக்கு ஒன்று ‘தோன்றினால்’ அது நமக்கெல்லாம் தோன்றுகிறது போன்ற வெறும் மனப் புனைவு அல்ல, பரமஸத்யம்தான் அவருக்குத் தோன்றும். ஆகையால், தொடர்ந்து வரும் கதையில் அவர், ‘ஐயர்வாள் இப்படிச் செய்திருப்பார், செய்திருக்கலாம், செய்திருக்கக்கூடும்’ என்று ஏதோ லேசான அனுமானம் போலச் சொல்வதெல்லாம் வாஸ்தவத்தில் கனமான ப்ரமாணமேயாகும். அவை ஐயர்வாள் செய்ததே என்பதுதான் உறுதி.
அவர் காமாக்ஷி ஆலய தரிசனத்தை இவர் உடனிருந்து பார்த்தது போலல்லவா திரைப்படச் சுருளாக அவிழ்த்து விட்டார்!
“ஐயர்வாள் அம்பாள் கோபுரத்வாரத்திலே நுழையறபோதே வேறே எந்தக் கோவில்லயும் இல்லாத மாதிரி வலது பக்கத்திலே ஒரு ஸ்தம்பத்திலே ஒரு நர்த்தன விநாயகரைப் பார்த்திருப்பார்; அதோட உள்ளே நேரே ஸிந்தூர விநாயகரைப் பார்த்திருப்பார் ( அதாவது பார்த்தார். இனி வருவதையும் இதே போலத் திருத்திப் படிக்கவும்). உள் ப்ரகார ஆரம்பத்திலே வலது பக்கம் ‘ஆதிசேஷன்’-னு ஒரு ஸன்னிதி. நாகரூபத்திலே இருக்கற ஸுப்ரம்மண்ய ஸ்வாமியைத்தான் அப்படி ஆதிசேஷன் என்று சொல்வது. அங்கேயும் சின்னதா ஒரு விநாயக பிம்பம் பார்த்திருப்பார். அப்படியே உள்ளே போனா, ஜயஸ்தம்பம் தாண்டினவொடனேயே சுவர்லே சின்ன பிள்ளையார் ரிலீஃப் (புடைப்புச் சிற்பம்) பக்கத்திலேயே நன்னா முழுசாவே இருக்கற இன்னொரு பிள்ளையார். அப்பறம் பிரதக்ஷிணம் வரச்சே பள்ளீயறைக்கு நேரே நல்ல ஆக்ருதியாக இஷ்ட ஸித்தி விநாயகர்னு ஒத்தர் ஒக்காந்திருக்கிறதைப் பார்த்திருப்பார். உத்ஸவ காமாக்ஷி ஸன்னிதி வாசல்லே ரெண்டு பக்கமும் பிள்ளையார், ஸுப்ரமண்யர்; அங்கேந்தே மேற்காலே பார்த்தாத் தெரியற மூல காமாக்ஷி ஸன்னிதி வெளிச்சுவர்லயும் பிள்ளையார்—ஸுப்ரமண்யர் பார்த்திருப்பார். ஐயர்வாள் மாதிரி ஒரு பெரியவர் எங்கேயோ திருவையாத்துலேந்து வந்திருக்கார்னா அர்ச்சகாள் மரியாதை பண்ணி , கூட இருந்து தானே சுத்திக்காட்டி தர்சனம் பண்ணி வெச்சிருப்பா. அப்படி, கூட வந்தவா உத்ஸவ காமாக்ஷி ஸன்னிதி தாண்டறச்சே, ‘இங்கே மௌனமாப் போகணும். ஏன்னா துண்டீர மஹாராஜா தபஸ்ல இருக்கார்’னு சொல்லி அவரோட பிம்பத்தையும் காடியிருப்பா.
“அங்கே தாண்டின விட்டு ஐயர்வாள் ,’அது யார் துண்டீர மஹாராஜா’?ன்னு கேட்டிருப்பார். ( கண்ணெதிரே கண்டு கூறுவதைப் போல இருக்கிறதா இல்லையா?). அர்ச்சகாள், ‘அவர்தான் இந்தப் பிரதேசத்தோட மொதல் ராஜாவாயிருந்த ஆகாச பூபதியோட பிள்ளை. பிள்ளை வரம் வேண்டி, ஆகாச பூபதி அம்பாளுக்குத் தபஸ் கெடந்து அடைஞ்ச புத்ரர். அம்பாள் சாக்ஷாத் தன் கொழந்தை கணபதியைத்தான் அப்படிப் பொறப்பிச்சா; அதனால்தான் அவருக்குத் ‘துண்டீரர்’னு பேர் வெச்சது. துண்டம்னா தும்பிக்கையோன்னோ? ‘ வக்ரதுண்டர்னு பிள்ளாய்யாரைச் சொல்றோமே! அந்தத் துண்டீரர் பேர்லே தான் இந்தப் பிரதேசத்துக்குத் துண்டீர மண்டலம்னே பேர் வந்து, தமிழிலே ‘தொண்டைமண்டலம்—கிறா’ன்னு கதை சொல்லியிருப்பா. அதாவது, கோயில் மட்டும் இல்லாம அந்த சீமையே பிள்ளையார் விசேஷம் பெத்ததுன்னு ஐயர்வாள் கண்டிண்டிருப்பார்.
“ ஆகாசபூபதி கணேசாவதாரமான துண்டீரருக்கு ராஜாவாப் பட்டாபிஷேகம் பண்னினான்—கிறது மாத்திரமில்லை. ஸாக்ஷாத் அம்பாளே மூல கணேசருக்கே ராஜ்யாபிஷேகம் பண்ணினதாகவும் ஐதிஹ்யம். என்ன கதைன்னா……ஒனக்குத் தெரியுமோ?”
“தெரியலை”
ஈஸ்வர சாபத்துனால அம்பாள் அவரை விட்டுப் பிரிஞ்சு அப்புறம் மறுபடி அடையறத்துக்காகக் காஞ்சிபுரத்தில பிருத்வீ லிங்கம் பிடிச்சு வெச்சுப் பூஜை பண்ணீனது முதலான சமாசாரங்கள் கேட்டிருக்கையோனோ?’
“கேட்டிருக்கேன். அம்பாளை சோதிக்கிறத்துக்காக ஸ்வாமி அங்கே வெள்ளத்தைப் பெருக்க விட்டார். அப்பவும் அம்பாள் நகராம லிங்கத்தை இறுகக் கட்டிண்டு அப்படியே இருந்துட்டா. ஸ்வாமியும் ஆவிர்பாவமானார்.”
“அப்போ, அம்பாள் தபஸிருந்ததோட தர்மங்களூம் பண்ணீனா. ‘எண்ணான்கு அறம்’னு தமிழ்ப் பொஸ்தகங்கள்ளே இருக்கும். அதாவது, முப்பத்திரண்டு தர்மங்கள், மனுஷர்களுக்குச் செய்யற அன்னதானத்திலேருந்து வாயில்லாத ஒரு ஜீவன், ஒரு மாடு, அதுக்கு அரிச்சுப்பிடுங்கினா கூட அது சொறிஞ்சுக்கிறத்துக்கு ஸஹாயமா ‘ஆதீண்டுகுற்றி’ ன்னு கல் நட்டு வெக்கற வரைக்கும் முப்பத்திரண்டு தர்மங்கள். தபஸோட கூட அம்பாள் இந்த தர்மங்களைப் பண்ணீனதா இருக்கு அப்புறம் ஸ்வாமியைத் திரும்பச் சேர்ந்த விட்டும் இந்த தர்மங்களை அங்கே தொடர்ந்து பரிபாலிக்கணும்னு நெனச்சா. ஆனா, தானே அப்படிப் பண்ணாம பிள்ளையருக்குத்தான் ராஜாவாப் பட்டம் கட்டி, ‘தர்ம பாலனம் பண்ணிண்டிரு’ன்னு வெச்சான்னு ஸ்தல புராணத்துல இருக்கு. “ராஜகணபதின்னு சேலம் மாதிரி சில ஊர்ல பிள்ளையார் இருந்தாலும், இங்கேதான் அவர் ஸ்வயரூபத்திலே அம்பாளே பட்டம் கட்டியும், அப்புறம் அவதார ரூபத்திலே மனுஷ்ய ராஜா அதே மாதிரி பண்ணியும் ராஜாவா இருந்திருக்கார்.”
“இந்த விருத்தாந்தமும் ஐயர்வாள் கேட்டிருப்பார். அவரும் ஒரு ராஜாதான்—தியாகராஜா.”
“தொடர்ந்து மேற்கால திரும்பி பிரதிக்ஷணம் போறப்போ, ஐயர்வாள் காலத்துக்கு முன்னாடியே தஞ்சாவூருக்குப் போய் சாமா சஸ்திரிகள் கிட்டேந்து நெறைய பாட்டு பெத்துண்ட பங்காரு காமாக்ஷியோட காலி ஸன்னிதியைப் பார்த்திருப்பார். அங்கே வாசல்லே ரெண்டு பக்கமும் பிள்ளையார்—ஸுப்ரமண்யர் இருக்கிறதைக் கவனிச்சிருப்பார்.”
“கர்ப்பக்ருஹ வாசல்லேயும் அதே மாதிரி அந்த ரெண்டு பேர் வரவேத்திருப்பா.”
“அவர் மூலஸ்தானத்திலே அம்பாளைத் தரிசனம் பண்ணி அப்படியே மனஸ் நெறஞ்சு போயிருப்பார். ராமர்தான் அவருக்கு இஷ்ட தெய்வமானாலும், அடுத்தாப்பல அம்பாள் கிட்டேயும் அவருக்கு நல்ல பக்தி. திருவையாத்திலேயே தர்மஸம்வர்த்தினி, திருவொத்தியூர் த்ரிபுரஸுந்தரி பேர்லேல்லாம் அவர் கொட்டியிருக்கிற க்ருதிகளைப் பாத்தாத்தெரியும். அவர் தொண்ணூத்தாறு கோடி ராம நாமா ஜபிச்சதே கூட தர்மஸம்வர்த்தினி ஸன்னிதியிலே பின் பக்கத்துலேதான்னு சொல்லக் கேட்டிருக்கேன். அதனால் நம்ப அம்பாளை (காமாக்ஷியை நம்ப அம்பாளாகப் பெரியவாள் கூறும் உரிமையருமை அலாதிதான்). தர்சிக்கறப்பவும் உருகித்தான் போயிருப்பார். மனஸ் அப்படியே ரொம்பிப்போனதுலே வாய் திறந்து பாடக்கூட முடியாமப் போயிருக்கும்.”
“இவர் பாடாட்டா என்ன? அர்ச்சகாள் அங்கே நன்னா ராகம் போட்டுண்டு அர்ச்சனை பண்ணுவா. பாட்டுன்னா அம்பாளுக்கு ஒரே பேராசைங்கறதால்தான் ‘கானலோலுபா”ன்னு ஒரு பேர் (ஸஹஸ்ரநாமத்தில்) சொல்லியிருக்கு.. காமாக்ஷி அர்ச்சக பரம்பரையிலேயே இங்கேருந்து தஞ்சாவூருக்குப்போய் பங்காரு காமாக்ஷியைப் பூஜிச்சிண்டிருந்தவா ஆத்திலேதானே சாமா சஸ்திரி பொறந்திருந்தார்? அழகா ராக பாவமாப் பாடி ஐயர்வாளுக்காக அர்ச்ச்னை பண்ணீயிருப்பா.( என்னென்ன ‘டீடைல்ஸ் கொடுக்கிறார் பாருங்கள்?).
“என்ன ச்லோகம்னா….. பஞ்சகமா ( ஐந்து ஸ்லோகங்கள் அடங்கியதாக) ஒரு அம்பாள் ஸ்தோத்ரம் உண்டு. ஒவ்வொரு ஸ்லோகமும்
மாம் அம்பாபுரவாஸினீ பகவதி ஹேரம்ப மாதா (அ) வது
ன்னு முடியும். கவனிச்சியோன்னோ? ‘ஹேரம்பமாதா (அ)வது’ ( விநாயகனின் தாய் ரக்ஷிப்பாளாக)!—அந்த நாள்ல,—அந்த நாள்னா தியாகையர்வாள் நாள் இல்லே, நான் பால்யமாயிருந்த அறுபது , அறுபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி ( இதைக் கூறுகையில் ஸ்ரீசரணர் எழுபத்தோரு பிராயத்தினர்) காமாக்ஷி கிட்ட நம்ம மடத்துக்கிட்ட பக்தியா இருக்கிறவா அந்த அம்பாள் பஞ்சகத்திலே ஒரு ஸ்லோகம் குழந்தைகளுக்குக்கூட சொல்லிக்கொடுப்பா.”
(ராக ஸஞ்சாரமாக நீட்டாமலும் இழைக்காமலுமே கல்யாணி ராகச் சாயலை அழகுறக் காட்டிச் சொல்கிறார்கள்)
“கல்யாணி கமநீய ஸுந்தரவபு: காத்யாயநீ காளிகா
கால ச்யாமள மேசக த்யுதிமதீ காதி—த்ரீபஞ்சாக்ஷரீ !
காமாக்ஷி கருணாநிதி கலிமலாரண்யாதி தாவாநலா
மாமம்பாபுரவாசிநீ பகவதீ ஹேரம்பமாதாவது !
—ங்கிற ஸ்லோகம். அதையும் அன்னிக்கு அர்ச்சகர் பெரிய ஸாஹித்யகர்த்தா வந்திருக்கச்சே நம்ம கோவிலோட ஸங்கீதச் செறப்பையும் காட்டி ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னு நன்னா ‘கல்யாணீ’ன்னு ஸ்லோகத்திலேயே வரதாலே கல்யாணி ராகத்துலே பாடிக்கட்டியிருப்பா.”
“இதுவரை கண்ணாலே அனேக கணேச மூர்த்திகளைப் பார்த்தவர் இப்போ காதாலேயும் அந்தப் பிள்ளையோட அம்மாவா அம்பாள் ரக்ஷணையைப் பிரார்த்திக்கிற ஸ்லோகத்தைக் கேட்டதும் அது அவர் மனஸுலே நன்னா எறங்கியிருக்கும்.”
“தர்சனம் ஆனதும் குங்கும ப்ரஸாதம் குடுத்து, அதை அரூப லக்ஷ்மிக்கு அர்ப்பணம் பண்ணிட்டுத்தான் இட்டுக்கணும்னு அவருக்கு அர்ச்சகாள் சொல்லி அந்தப் பக்கவாட்டுக்கு அழைச்சிண்டு போயிருப்பா. அரூபலக்ஷ்மி தெரியுமோன்னோ?”
“தெரியும்”
என்ன தெரியும்? பிம்பம் இருக்கிறது மட்டுமா? கதையும் தெரியுமா?”
“ரெண்டும் தெரியும்”
“நாலதாச்சு. அந்தக் கதை சொல்ற காரியம் எனக்கு மிச்சமாச்சு. ஐயர்வாளை அரூபலக்ஷ்மி கிட்டேஅழைச்சிண்டு போனவா அங்கேயும் கிழக்கு முகமா ஸௌபாக்ய கணபதின்னு ஒத்தர் ஒக்காந்திண்டிருக்கிறதைக் காட்டியிருப்பா. அந்த உள் அங்கணத்துலேயே தெற்கு முகமாக ஸந்தான கணபதின்னு வேறே ஒத்தர் இருக்கிறதையும் அவர் பார்த்து, ‘மொத்தத்திலே அப்பிடியொண்ணும் பெரிய கோவிலா இல்லாட்டாலும் திரும்பற எடத்துலே எல்லாம் ஒத்தரா எத்தனை கணபதிகள்?’ னு நெனச்சுண்டு சன்னிதியிலேந்து வந்திருப்பார்.”
ஆசார்யாள் ஸன்னிதியிலே அவரை மரியாதை பண்ணீ , ரொம்பப்பெரியவாளுக்கு எப்படிப் பண்ணுவாளோ அப்படி எல்லாம் பண்ணி, வழியனுப்பறத்துக்காக அழைச்சிண்டு வரச்சே, ஜயஸ்தம்பத்துக்கு வந்தா, ஆரம்பத்திலேயே வர பிள்ளையாரே இங்கே முடிவாயும் ஸ்தம்பத்துக்கு மேலண்டைப் பக்கம் ஒக்காந்துண்டிருக்கிறதைப் பார்த்திருப்பார். ‘இவரைப் பார்த்து வேண்டிண்டாதான் அம்பாள் தர்சன பலன் ஸித்திக்கும். வரஸித்தி விநாயகர்னே பேருன்னு அர்ச்சகாள் சொல்லியிருப்பா.
“அடேயப்பா! இங்கே பிள்ளையாருக்கு இத்தனை மஹிமையா? அம்பாளைப் பாக்கறத்துக்கு முன்னாலேயும் மூணு, நாலு பிள்ளையார், பார்த்துவிட்டும் மூணு, நாலா?–ன்னு ஆச்சரியப்பட்டுண்டு ஐயர்வாள் கோவில்லேருந்து புறப்பட்டிருப்பார்.”
இதெல்லாம் அவர் கோவிலுக்கு வந்த மொதல் தடவைன்னு வெச்சுக்கலாம் அது ஒரு கார்த்தால வேளைன்னும் வெச்சுக்கலாம். ( இத்தனை விவரம் சொல்லும்போது ‘லாம்’ போடலாமா?).
தர்சனம் முடிச்சு அவர் உபநிஷத் ப்ரஹ்மேந்திர மடத்திலே ஆஹாரம் பண்றப்போவும் அப்பறம் விச்ராந்தி பண்ணிண்டிருக்கிறப்போவும் கூட, அம்பாளை தர்சனம் பண்ணினதே அடிமனஸுல சொழண்டுண்டு இருந்திருக்கும். அதோட, அவளோட க்ருபைக்கு விசெஷமா பாத்ரமாயி, கோவில் பூரா பல ரூபத்தில இருந்த பிள்ளையாரோட பாக்யத்தையும் நெனச்சு நெனச்சுப் பார்த்திருப்பார்.”
“ஸாஹித்ய கர்த்தாவா ஸாஹித்யத்தை மட்டும் பண்ணாம, அதுக்கு ஸ்வர—தாளங்களூம் அமைச்சவாளா ‘வாக்கேயகாரா’’ன்னே இருக்கிறவாள்ல முதல் ஸ்தானத்துல இருக்கிறவரில்லையா? அன்னிக்கு மத்யானம் அவர் மனஸுல காமாக்ஷியைப் பத்தி ஸாஹித்யம் பொங்கிண்டு வந்திருக்கும். அப்ப அந்த விக்னேஸ்வரரோட பாக்யமும் முண்டிண்டு அவர் வாக்குல மொதல்ல வந்து,” அந்தப் பிள்ளை மாதிரி என்னையும் நெனச்சு க்ருபை பண்ணும்மான்னு அபிப்ராயம் குடுக்கும்படியா ‘விநாயகுனி’ன்னு கீர்த்தனமாயிருக்கும். ஸாயரக்ஷை மறுபடி கோவிலுக்குப் போய் ஸன்னிதியிலேயே பரவசமாப் பாடியிருப்பார். அம்பாளும் பரிபூர்ணமா அனுக்ரஹம் பண்ணீயிருப்பா.”
“ என் ’குதிரை’ தேவலயா? ஒன் குதிரைக்கு அரைத் திட்டம், கால் திட்டமாவது வருமா?” அதென்ன மோஹனச் சிரிப்பு? மோஹத்தையெல்லாம் விரட்டும் மோஹனச் சிரிப்பு?
“பெரியவா குதிரை நிஜக்குதிரை; ஒசந்த ‘அராபியன்’ ‘ஹார்ஸ்’. என்னுது பொய்க்கால் கழுதை.” என்றேன், ஏதோ ஒரு வேகத்தில் “நிர்மல மௌனமாகச் சிரித்தார். ‘அராபியன் ஹார்ஸ் என்ன, “ரெண்டுமே ரெட்டை உச்சைஸ்ரவஸ்னுதான் வெச்சுக்கலாமே” என்றார்
கோபுர வாசலாக மனஸை ஹோ என்று திறந்து போட்டுப் பேசும் எளிமையும் தெளிவும் அவருக்கே உரித்தானவை அல்லவா? அப்படிச் சொன்னார்: “ நீ ஜெனரலா, நடுநிலையா யோஜிச்சதிலே அகிலாண்டேஸ்வரிக்கு விக்னேஸ்வரர் கிட்ட இருக்கிற விசெஷ வாத்ஸல்யம் ஆசார்யாளாலே வெளிப்பட்டதையும், அதே ஆசார்யாள் காமாக்ஷியையும் அங்கே மாதிரியே சாந்தமாக்கிச் சக்ரப்ரதிஷ்டை பண்ணினதையும் அழகா முடிச்சுப்போட்டுக் கதையோ, ஊஹமோ, நெஜமேயோ ரசனை ( இலக்கிய உருவமைத்தல்) பண்ணீயிருக்கே. எனக்கு எல்லா ஸ்வாமிக்குள்ளேயும் அம்பாள்னா தனி முக்யம்; அந்த அம்பாளே அனேக ரூபங்களிலே இருக்கிறதுலே காமாக்ஷின்னா தனி முக்யம்னு ஒரு பக்ஷபாதம்.( அனைத்தும் தழுவும், அனைத்தும் அடங்கும் ஆத்ம ஞானியின் பக்தக்கோலத்தில் விளைந்த ‘பக்ஷபாதம் அழகாயில்லை?)
அதனால் அகிலாண்டேஸ்வரியை, அவளை, இவளைக் கொண்டு வந்து காமாக்ஷி சம்பந்தமா ஒண்ணைக் காட்டுவானேன்னு என் வெளி மனஸுக்கே தெரியாம, அப்படித் தோணி… இந்தக் காமகோஷ்ட விஷயமாகவே பிள்ளையாருக்கு இருக்கிற விசேஷத்தையெல்லாம் முடிச்சுப் போட்டு ரசனை பண்ணியிருக்கேன் போலேயிருக்கு”
ஸ்துதி ஶதகத்தில் 74 ஆவது ஸ்லோகத்திற்கு நீங்கள் சொன்ன துண்டீரம் என்பதற்கான கதையைக் கேட்டேன் , ஆனால் அதே கதையை பெரியவா பேசர மாதிரி படிச்ச உடனே மெய்சிலிர்த்துப் போனேன். நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று நினைத்து ஆனந்தப்பட்டேன். நன்றி