Categories
mookapancha shathi

மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் (audio and transcript)

மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழில் (11 min audio Mahaperiyava srimukham to mooka pancha shathi in tamil)

இன்னிக்கு வ்யாஸ பௌர்ணமி. பௌர்ணமி ன்னா அம்பிகையை நினைக்காம இருக்க முடியாது. வியாஸ பௌர்ணமின்னா மஹா பெரியவா ஞாபகம் வந்துடறது. மஹா பெரியவா 1944 ல மூக பஞ்ச சதி ஸ்தோத்திரத்துக்கு ஒரு ஸ்ரீமுகம் கொடுத்துருக்கா. இன்னிக்கு அதை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு ஆசைப்படறேன். பெரியவாளுக்கு மூக பஞ்ச சதி மேல எவ்வளவு ப்ரியம், அதை எப்படி அனுபவிச்சிருக்காங்கிறதை பார்ப்போம். இரண்டு விஷயம் stress பண்ணி சொல்றா பெரியவா. இந்த கவியினுடைய 500 பாடல்களைக் கொண்டதான இந்த நூலில் சதகங்களின் தொடர்ச்சியிலே இந்த சிறப்பு ஒன்று காணப்படுகிறது, அப்படீன்னு அந்த 5 சதகங்கள் ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்தஸ்மித சதகம் னு அந்த தொடர்ச்சியில இருக்கிற சிறப்பை பத்தி தான் முக்யமா பேசியிருக்கா. அது தவிர, எந்த பரதேவதை லாவண்யத்தின் பேரெல்லையாக இருக்கிறாளோ அதே பரதேவதை தான் ஆத்ம போதமாகிய அமுத அலைகளையுடைய கடலாகவும், குரு வடிவமாகவும் விளங்குகிறாள். பிரம்மானந்த அனுபவத்தையும் அம்பாள் கொடுக்கறா, என்கிற விஷயத்தையும் விஸ்தாரமா சொல்லியிருக்கா. பெரியவா பொதுவாக புஸ்தகங்களுக்கு ஸ்ரீமுகம் கொடுக்கும் போது புஸ்தகத்தை பற்றி ஒரு 5, 6 வரிகள் அந்த ஸ்வஸ்தி வாசனம் முடிஞ்ச பின்ன, maximum ஒரு 10 வரி இருக்கும். அப்பறம் ஒரு நாலு வரி அந்த புஸ்தகத்தை வெளியிடறவாளை ஆஸிர்வாதம் பண்ணி, இதை படிக்கறவாளுக்கு எல்லா க்ஷேமமும் உண்டாகட்டும்னு சொல்வா.

இந்த மூக பஞ்ச சதிக்கு பக்கம்பக்கமா சொல்லியிருக்கா. அந்த ஸ்வஸ்தி வாசனத்துக்கு அப்பறம் வர்றதை நான் இப்ப படிக்கறேன்.

மஹாகவிகளுக்குச் சிரோமணியாகிய அதிக ப்ரஸித்தி பெற்று விளங்கிய மூகர் என்னும் பெரியார், ஸ்ரீ காமாக்ஷி தேவியின் கருணை ததும்புகின்ற கடாக்ஷதரங்கங்களையுடைய புண்ணியமான கவிதையமுதத்தால் நிறைந்தவராய், மூக பஞ்ச சதீ என்று, இயற்றியவர் பெயரால் ப்ரஸித்தமானதும், உலகிலேயே மிகச் சிறந்ததுமான இந்த நூலை இயற்றி, பூமண்டலத்திலே இதனினும் மேலானதொன்று மில்லை என்னும்படியான புண்ணிய கீர்த்தியையும், சாசுவதமான பரமானந்த அனுபவத்தையும் அடைந்தார் என்பது நன்கு தெரிந்த விஷயமே.

இந்த ஸ்தோத்ர ரத்னத்திலே காஞ்சீபுரியின் மத்தியிலேயுள்ள காமகோடி பீடத்திலே வீற்றிருப்பவளும், இந்து மௌலியான பரமசிவனுடைய செல்வமே வடிவு கொண்டதாக விளங்குபவளுமான பரதேவதை காமாக்ஷியை, நன்றாக வேரூன்றி வளர்ந்த யௌவனத்தையுடையவளாயும், இளமையின் செல்வமெல்லாம் ஒருங்கே அமைந்ததாக விளங்குபவளாயும், எப்பொழுதும் அமைந்த இளமை உடையவளாயும், லாவண்யமாகிய அமுதத்தாலான அலைகளின் மாலையாக விளங்குபளாயும், அழகைத் திரட்டி வடித்தெடுத்த ஸாரமாயும், சிருங்காரமாகிய அத்வைத சாஸ்திரத்தின் முடிந்த பொருளாயும், மீனக்கொடியோனுடைய சாஸ்திரத்தின் சிறந்த உட்பொருளாயும், காமனைப் பிறப்பிக்கும் கடைக்கண்களை உடையவளாயும், மனதிலே பிறந்தவனான மன்மதனுடைய ஸாம்ரஜ்யத்தின் செருக்கிற்கு விதையாகின்றவளாயும், பூக்களை ஆயுதங்களாகவுடைய மன்மதனுடைய வீரத்தின் இனிய பெருக்கமாகவும், காமசாஸ்திரக் கொள்கையிலே தீக்ஷை கொண்ட கடாக்ஷங்களை உடையவளாயும், பூக்களை அம்பாகக் கொண்ட மன்மதனுடைய செருக்காகிய செல்வத்திற்குப் பொக்கிஷமாய் விளங்குபவளாயும், சிருங்காரப் பிரஹ்ம தத்துவபோதம் பாயும் நாடியாயும், ஐங்கணையோனான காமனுடைய சாஸ்திரத்தைக் கற்பிப்பதிலே சிறந்த ஆசார்யனான கண்ணோக்கத்தை உடையவளாயும் விளங்குகின்றாள் என்று இவை முதலான வடிவங்களை உடையவளாக வர்ணித்து, மீண்டும் லாவண்யமயமான அமுதப் பெருக்கின் பேரெல்லையாக விளங்கும் அந்தப் பரதேவதையையே, காரணங்கள் அனைத்திற்கும் அதீதமான சித்ரூபிணியாயும், கைவல்யமாகிய மோக்ஷ ஆனந்தத்திற்கு மூலமானவளாயும், வேதங்களில் உள்ளுறை மறைபொருளாயும், உபநிடதங்களாகிய தாமரை மலர்களின் உட்புறத்தினின்று பெருகுந் தேனாயும், வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவளாயும், ஆனந்தமாகிய தனிப்பொருளாகிய (கந்தழி) முளையாயும், மோக்ஷத்திற்குக் காரணமாகிய விதையாயும், ஆகமங்களின் மனோஹரமான மஹா வாக்கியங்களின் லக்ஷ்யார்த்த வடிவமாயும், ஆத்மபோதமாகிய அமுத அலைகளையுடைய கடலாயும், அழிவற்ற நிர்விகார ஸ்வரூபிணியாயும், ப்ரஹ்மத்தோடு அபேதமாக விளங்கும் ப்ரக்ருதியாயும், வேத வசனங்களின் முடிந்த பொருளாகவும், குருவடிவமாயும் விளங்குவதாக ஸாக்ஷாத்கரித்து, இளமை சிருங்காரம் முதலிய விஷயங்களிலேயுள்ள இன்பங்களையெல்லாம் ஞானம் வைராக்கியம் முதலிய பிரும்மானந்த அனுபவங்களால் நிரம்பியதாகச் செய்து கொண்டு,

शिव शिव पश्यन्ति समं श्रीकामाक्षीकटाक्षिताः पुरुषाः ।
विपिनं भवनममित्रं मित्रं लोष्टं च युवतिबिम्बोष्ठम् ॥

சிவ சிவ பஸ்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: |

விபினம் பவனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதி பிம்போஷ்டம் || [ஆர்யா.48]

என்று பரதேவதையின் அனுக்ரஹத்தின் பயனாக விளைந்த வைராக்கியத்தின் மேலான எல்லையிலே தாம் நிலையுற்றிருப்பதை விளக்குகிறார்.

ஐந்நூறு பாடல்களை கொண்டதான இந்த நூலிலே சதகங்களின் தொடர்ச்சியிலே இந்தச் சிறப்பு ஒன்று காணப்படுகின்றது; அதாவது, ஒரு பச்சை குழந்தை கண் முதலிய இந்திரியங்களுக்கு பலமேற்படுவதற்கு முன்பு, மனோ விருத்தியினாலே மட்டும் தன் விருப்பத்தை வெளியிடுக்கின்றது; இவ்வாறே, கவிச்சிரேஷ்டரும் பக்தனாகிய சிசுவின் மனப் பிரவிருத்தியை அம்பிகையின் ஸ்வரூபத்தை இடையறாது நினைப்பதிலே திறமையாகச் செலுத்துகின்றார்; இக் கருத்து “अन्तरपि बहिरपि त्वम् – அந்தரபி  பஹிரபி  த்வம்” என்னும் ஸ்லோகத்தாலே குறிப்பிடப்பட்டது.

இரண்டாவது சதகத்திலே, (ஐம்பொறிகளால்) கிரஹிக்கும் திறமை சிறிது விருத்தியடைந்த பாலகன், தன்னருகிலே காணப்படும் பொருளை காண்பது தொடுவது முதலியவற்றில் களிப்படைகின்றதை போல பக்தனாகிய பாலகனும் மிகவும் தாழ்ந்த இடத்திலே, தன் அருகிலே இருப்பதாலே காணப்படுகின்றதும், இடையறாத தியானத்தின் பயனாக பெற்றதுமான ஜகன் மாதாவின் பாதாரவிந்தங்களைக் காண்பதாகிய அமிர்தத்தை பெறுகின்றான் என்னும் இந்தக் கருத்து ‘मरालीनाम् — மராளீனாம்’ [பாதா. 3] என்னும் ஸ்லோகத்தில் குறிப்பிடப்பெற்றது.

எவ்வாறு மனதும் ஞானேந்திரியங்களும் புஷ்டியடைந்த பிறகே வாக்கு வெளிக்கிளம்புகின்றதோ, அது போலவே, ஆர்யசதகமும், பாதரவிந்த சதகமும், ஆன பிறகு, தன்னுடைய பிரேமைக்கு உரியதான பொருளைத் தடங்கலின்றிப் புகழந்து பேசத் தொடங்குகிறார். “पाण्डित्यं परमेश्वरि பாண்டித்யம் பரமேச்வரி” என்று தொடங்கும் ஸ்துதி சதகத்தாலே.

லௌகிக ஞானம் முதலியவற்றிலே தேர்ச்சியடைந்த இளைஞன் எவ்வாறு லௌகிகச் செல்வங்களைப் பெறுவதற்கு உரியவனாகின்றானோ, அது போலவே முன்னாலே செய்த ஸ்துதியின் பயனாக, பக்தன் அம்பிகையின் சிறந்த கடாக்ஷத்தைப் பெற்று மிகச் சிறந்த சம்வித்ஞானானுபவத்திற்கு ஏற்றவையான தேஜஸின் புஷ்டி முதலியவற்றிற்குப் பாத்திரனாகின்றான் என்னும் இக் கருத்து ” अस्तं क्ष्णान्न्यन्तु मे परितापसूर्यं – அஸ்தம் க்ஷணாத் நயது மே பரிதாப ஸூர்யம் ” [கடாக்ஷ. 6] என்பது முதனால வருணனைகளாலே கடாக்ஷ சாதகத்திலே குறிப்பிடப் பெற்றது.

எவ்வாறு லௌகிக ஸம்பத்தால் நிறைந்த முழு யௌவனத்தையும் உடையவனானவன் லௌகிக சிருங்காரமாகிய இன்பத்தை அனுபவிப்பதற்கு உரியவனாகின்றானோ, அதே போல் தேவியின் பரம அனுக்கிரஹத்திற்குப் பாத்திரனானவன் அவளுடைய புன்முறுவலாகிய நிலாவோடு விளங்கும் ஆனந்தமாகிய சந்திரனைப் போல அலௌகிகமானதும் (பாரமார்த்திகமானதும் ) அளவு கடந்ததுமான ஆனந்தத்தை அனுபவிப்பவனாய் விளங்குகிறான் என்னும் இந்த கருத்தின் ரீதியையே மஹாகவியானவர் தாமே பஞ்சசதியைப் பூர்த்தி செய்யும் பாடலிலே விளங்க வைக்கிறார். “आर्यामेव विभवयन् – ஆர்யாவிமேவ விபாவயன்’ என்று

உலகத்திலே மிகச் சிறந்ததாக விளங்கும் இந்த ஸ்துதி நூலை படிப்பதால் மட்டுமே, அந்த க்ஷணத்திலேயே இந்த மஹாகவியோடும், இறுதியிலே பரதேவதையோடுமே ஒன்றாகும் நிலையை ஸாதகன் அடைகின்றான் ன்னு ஆசீர்வாதம் பண்ணி இருக்கா. இந்த குரு பௌர்ணமியில் மஹாபெரியவா அனுக்ரஹத்துக்கு பாத்திரம் ஆக வேண்டி இந்த மூக பஞ்ச சதி ஸ்தோத்ரத்தை படிக்கறது என்று சங்கல்பம் செய்து கொள்வோம்.

ஜானகீ காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

ஸ்வஸ்தி வாசனத்தின் தமிழாக்கம் –

ஸ்வஸ்திஸ்ரீ அகில பூமண்டலங்களுக்கு அலங்காரமாய், முப்பத்து முக்கோடி தேவதைகளாலும் ஸேவிக்கப் பெற்று, ஸ்ரீ காமாக்ஷிதேவியோடு விளங்கும் ஸ்ரீமத் ஏகாம்பர நாதருடையவும், ஸ்ரீ மஹாதேவியோடு விளங்கும் ஸ்ரீ ஹஸ்திகிரி நாதருடையவும் ஸான்னித்தியத்தோடு கூடிய க்ஷேத்ரமான ஸத்யவ்ரதம் என்ற பெயர் கொண்ட காஞ்சீ திவ்ய க்ஷேத்திரத்திலே சாரதாமடத்தில் வீற்றிருப்பவர்களாயும், ஒப்புமையில்லாத அமிர்தரஸ மாதுர்யத்தையுடையதாய் கமலாஸனருடைய தேவியின், திருமுடியில் அலர்ந்த மல்லிகை மாலையினின்று பெருகும் மகரந்த அருவி போன்ற சொல்மாலைகளாலே விளங்குகின்ற ஆனந்தத்தால் நிறைந்த புத்திமான்களாலே சூழப் பெற்றவர்களாகவும், அனவரதம் அத்வைத வித்யையிலேயே பொழுது போக்கி இன்புறுவோர்களாகவும், இடைவிடாது அலங்கரித்துக் கொண்டிருக்கும் சமதமங்களாலே பெரியோர்களாய் விளங்குவோர்களாகவும், எல்லா புவன சக்ரங்களுக்கும் ப்ரதிஷ்டையளிப்பதான ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டாபனத்தாலே ப்ரஸித்தமான புகழால் அலங்கரிக்கப் பெற்றவர்களாகவும், பாஷண்ட ஸமூஹங்களாகிய ஸகல கண்டங்களையும் எடுத்தெறிவதாலே செம்மையாக்கப் பெற்றவையான வேதவேதாந்த மார்க்கங்களாகிய ஷண்மதங்களையும் ப்ரதிஷ்டித்த ஆசார்யர்களாகவும் விளங்கும் ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யர்களான ஸ்ரீஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத் பாதாசார்யர்களின் அதிஷ்டானத்திலே ஸிம்ஹாஸனத்தில் அபிஷிதர்களான ஸ்ரீமத்மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ ஸம்யமீந்த்ரர்களுடைய அந்தேவாஸிவர்யர்களான ஸ்ரீமத்சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீ பாதர்களால் நாராயண ஸ்மரணம் செய்யப் படுகின்றது.

மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் சம்ஸ்க்ருதத்தில் (8 min audio Mahaperiyava srimukham to mooka pancha shathi stothram in sanskrit)

மூக பஞ்ச சதி ஸ்தோத்ரத்துக்கு மஹாபெரியவா சம்ஸ்க்ருதத்துலேயும் தமிழிலேயும் ஸ்ரீமுகம் குடுத்து இருக்கா. அந்த சம்ஸ்க்ருத ஸ்ரீமுகத்தை இப்போ வாசிக்கறேன். முதல்ல ஸ்வஸ்திவாசனம் இருக்கு. श्रीमच्चन्द्रशेखरेन्द्रसरस्वती श्रीपादै: क्रियते नारायणस्मृति: ன்னு சொல்லிட்டு

तत्रभवान् मूक इति सुप्रसिद्ध: महाकविशिरोमणि: श्रीकामाक्षीदेवीकरुणाकटाक्षतरङ्गितपुण्यकवितारसपूर: ‘मूकपञ्चशती’ इति कर्तुर्नाम्ना प्रसिद्धमिमं लोकोत्तरं ग्रन्थं प्रणीय भूमण्डलेऽनुत्तमं पुण्ययशोविशेषं शाश्वतीं परानन्दनुभूतिं च लब्धवानिति सुविदितमेव | स्तोत्ररत्नेचास्मिन् काञ्चीमध्यगतकामकोटिपीठाधिष्ठात्रीमेन्दुमौलेरैश्वर्यरूपां श्रीकामाक्षीं परदेवताम्, आरूढयौवनाटोपा, तरुणिमसर्वस्वं, नित्यतरुणी, लावण्यामृततरङ्गमाला, विभ्रमसमवायसारसन्नाहा, स्रुङ्गाश्रृङगाराद्वैततन्त्रसिद्धान्तं, मीनध्वजतन्त्रपरमतात्पर्यं, कन्दर्पसूतिकापाङ्गीं, मनसिजसाम्राज्यगर्वबीजं, पुष्पायुधवीर्यसरसपरिपाटी, मदनागमसमयदीक्षितकटाक्षा, कुसुमशरगर्वसंपत्कोशगृहम्, आनङ्गब्रह्मतत्वबोधसिरा, पञ्चशरशास्त्रबोधनपरमाचार्यदृष्टिपाता इत्यादिरूपेण वर्णयन् पुन: लावण्यमृतपरकाष्ठाभूतां तमेव परदेवतां, कारणपरचिद्रूपा, कैवल्यानन्दकन्द:, आम्नायरहस्यम्, उपनिषदरविन्दकुहरमधुधारा, वाङमनोऽतीता, आनन्दाद्वैतकन्दली, मुक्तिबीजम्, आगमसल्लापसारयाथार्थ्यं, बोधामृतवीची, अभिदाकृति:, ऐकात्म्यप्रकृतिः, निगमवाचस्सिद्धान्त:, गुरुमूर्ति:, इत्येवंरूपेण साक्षात्कुर्षन् यौवनश्रृङगारादिविषयरसानुभवसामग्रीं ज्ञानवैराग्यादिब्रह्मानन्दानुभवसामग्रीत्वेन संपादयन् –

“शिव शिव पश्यन्ति समं श्रीकामाक्षीकटाक्षिता: पुरुषा: |

विपिनं भवनममित्रं मित्रं लोष्टं च युवतिबिम्बोष्टम् ||”

इति परदेवतानुग्रहफलीभूतां परवैराग्यकाष्ठां प्रकाटयति |                                            [आर्या ४८.]

पद्यपञ्चशतकात्मकेऽत्र ग्रन्थे शतकानां या अनुपूर्वी तस्यामयं विशेषो दृश्यते | यथा कश्चन शिशु: चक्षुरादीन्द्रयप्रागल्भ्याविर्भावात्पूर्वम् मनोवृत्तिमात्रेण कलयति स्वेप्सितम्; एवमार्याशतके भक्तशिशो: मन:प्रवृत्तिम् अम्बिकाया: स्वरूपानुसंधानपटीयसीं संपादयति कविपुङ्गव: ; अयमाशय:

“अन्तरपि बहिरपि त्वं जन्तुततेरन्तकान्तकृदहन्ते |

चिन्तितसंतानवतां संततमपि तन्तनीषि महिमानम् ||”

इति श्लोकेन सूचित: ||                                                                           [आर्या. ९८.]

द्वितीयशतके तावत् यथा किञ्चित्प्रवृद्धग्रहणशत्ति: बालक स्वान्तिके विद्यमानस्य वस्तुन: दर्शनस्पर्शनादिभि: आह्लादमधिगच्छति तद्वत् भक्तबालक: अत्यन्तमधोभागे विद्यमानस्य स्वस्यान्तिकत्वेनैव जगन्मातु: निरन्तरध्यानफलीभूतपादारविन्ददर्शनानन्दमनुभवतीत्ययमाशय: –

मरालीनां यानाभ्यसनकलनामूलगुरवे

दरिद्राणां त्राणव्यतिकरसुरोद्यानतरवे ।

तमस्काण्डप्रौढिप्रकटनतिरस्कारपटवे

जनो‌sयं कामाक्ष्याश्चरणनलिनाय स्पृहयते ॥   इति श्लोकेन सूचित: ||            [पादारविन्द. ३.]

यथा मनस: ज्ञानेन्द्रियाणां च स्पूर्त्यनन्तरमेव वाक्प्रसरति, तथैव आर्यापादारविन्दशतकयोरनन्तरं स्वप्रेमास्पदं वस्तु निरर्गलं स्तोतुमारभते –

पाण्डित्यं परमेश्वरि स्तुतिविधौ नैवाश्रयन्ते गिरां

वैरिञ्चान्यपि गुम्फनानि विगलद्गर्वाणि शर्वाणि ते ।

स्तोतुं त्वां परिफुल्लनीलनलिनश्यामाक्षि कामाक्षि मां

वाचालीकुरुते तथापि नितरां त्वत्पादसेवादरः ॥ [स्तुति. १.] इत्यादिना स्तुतिशतकेन |

लौकिकविद्यादिषु कुशलः कश्चन यथा लौकिकसंपदः प्राप्तुमर्हो भवति तद्वत् पूर्वकृतस्तुतिफलत्वेन भक्तः अम्बिकायाः कटाक्षविशेषमधिगम्य परसंविदनुभूत्युचिततेजःपुष्ट्यादिपात्रं भवतीत्यमाशयः –

अंस्त क्षणान्नयतु मे परितापसूर्य-

मानन्दचन्द्रमसमानयतां प्रकाशम् ।

कालान्दकारसुषमां  कलयन् दिगन्ते

कामाक्षि कोमलकटाक्षनिशागमस्ते।।                            [कटाक्ष. ६]

इत्यादिभिर्वर्णनैः कटाक्षशतके सूचितः ।।

यथा लौकिकसंपत्संपूर्णः कश्चन समग्रयौवनः लौकिकश्रृङ्गारसुखलाभाय पात्रं भवति, तद्वत् देव्याः परमानुग्रहपात्रीभूतः तदीयमन्दस्मितचन्द्रिकासनाथः आनन्दचन्द्र इव अलौकिकनिरतिशयानन्दानुभवात्मकः प्रकाशत इति अमूमेव भावप्रणाळिकां महाकविः स्वयमेव पञ्चशतीपूर्तिपद्येन आविष्करोति । यथा –

आर्यामेव विभावयन्मनसि यः पादारविन्दं पुरः

पश्यन्नारभते स्तुतिं स नियतं लब्ध्वा कटाक्षच्छविम् ।

कामाक्ष्या मृदुलस्मितांशुलहरीज्योत्स्नावयस्यान्वितां

आरोहत्यपवर्गसौधवलभीमानन्दवीचीमयीम् ॥ इति ।।       [मन्दस्मित. १०१]

अस्या लोकोत्तरायाः स्तुतेः पठनमात्रेण तत्क्षणे महाकविनामुना अन्ततः परदेवतयैव वा ऐकात्म्यमनुभवतीव साधकः।

அப்படின்னு மஹா பெரியவா ஆசீர்வாதம் பண்ணி இருக்கா. இந்த அஞ்சு சதகங்கள், ஐநூறு ஸ்லோகங்களை இந்த வரிசையில் படிக்கறதுக்கு ஒரு முக்கிய அர்த்தம் சொல்லி இப்படி தான் படிக்கணும்னு பெரியவா காண்பிச்சு குடுத்து இருக்கா. ஐநூறையும் படிக்கணும். ஒரு ஊமையாக இருக்கறவன் காமாக்ஷியினுடைய அனுக்ரஹம் பெற்று ஐநூறு ஸ்லோகங்கள் ரசனை பண்ணினான் அப்படீங்கற போது ‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ ன்னு பெரியவாளை காமாக்ஷியாக நினைச்சு நமஸ்காரம் பண்ணினா இந்த ஐநூறு ஸ்லோகத்தையும் படிக்க முடியும். இதிலிருந்து குறிப்பிட்ட ஸ்லோகங்கள் படிக்கணும் ன்னு நினைக்கவே வேண்டியதில்லை. இந்த ஐநூறையும் படிச்சா காமாக்ஷியாகவே ஆகிவிடலாம்ன்னு பெரியவா சொல்லி இருக்கா. பெரியவாளை நமஸ்காரம் பண்ணிட்டு இந்த ஐநூறு ஸ்லோகங்களையும் இந்த வரிசையிலேயே படிப்போம். சில பேர் கிட்ட பெரியவா முதல் நூறையாவது படின்னு சொல்லியிருக்கா. அந்த ருசி ஏற்படறத்துக்காக. அந்த முதல் நூறு, ஆர்யா சதகத்தை படிச்சு அதுனால நல்ல வாக்கு வந்துடும். அதைக் கொண்டு மூக பஞ்ச சதி என்ற இந்த ஐநூறையும் படிக்கறதுக்கு பெரியவா இந்த குரு பூர்ணிமையில் நமக்கு அனுக்ரஹம் பண்ணட்டும்.

ஜானகீ காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

இந்த ஸ்ரீமுகத்தின் ஆரம்பத்தில் குடுக்கப் பட்டுள்ள ஸ்வஸ்தி வாசனம் சம்ஸ்க்ருதத்தில் கீழே குடுக்கப் படுகிறது.

स्वस्ति श्रीमदखिलभूमण्डलालंकार त्रयस्त्रिंशत्कोटिदेवतसेवित श्रीकामाक्षीदेविसनाथ श्रीमदेकाम्रनाथ श्रीमहादेविसनाथ श्रीहस्तिनिरिनाथ साक्षात्कारपरमाधिष्ठानसत्यव्रतनामाङकित काञ्चीदिव्यक्षेत्रे शारदामठसुस्थितानाम्, अतुलितसुधारसमाधुर्यकमलासनकामिनीधम्मिल्ल संपुल्लमल्लिकामालिकानिष्यन्दमकरन्दझरीसौवस्तिकवाङ्निगुम्भविजृंभणानन्दतुन्दिलितमनीषिमण्डलानाम्, अनवरताद्वैतविद्याविनोदरसिकानाम, निरन्तरालंकृतीकृतशान्तिदान्तिभूम्नाम्, सकलभुवनचक्रप्रतिष्ठापक, श्रीचक्रप्रतिष्ठाविख्यातयाशोऽलंकृतानाम्, निखिल पाषण्ड षण्ड खण्डकोद्धात्तनेन विशदीकृतवेदवेदान्तमार्ग षन्मततिष्ठापकाचार्याणाम्, श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यवर्य श्रीजगद्गुरु श्रीमच्छंकरभगवत्पादाचार्याणम् अधिष्ठाने सिंहासनाभिशिक्त श्रीमन्महादेवेन्द्रसरस्वतीसंयमीन्द्राणाम् अन्तेवासिर्वय श्रीमच्चन्द्रशेखरेन्द्रसरस्वती श्रीपादै: क्रियते नारायणस्मृति: |

More about mooka pancha shathi here – https://valmikiramayanam.in/?page_id=1466

6 replies on “மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் (audio and transcript)”

காமாட்சியின் அருளால் ஆரம்பமே நன்றாக உள்ளது. மிகவும் சந்தோஷம்.

Periyava charanam🙏 this post turned out to be surprisingly coincident with my reading today. Was browsing the sage of kanchi and came across this post. Tomoro being pournami, I think, I am blessed once again to thank and remember his highness. Beautifully rendered with explanation Anna.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.