Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை(17 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 49 and 50)

Series Navigation<< சிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை >>

5 replies on “சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை”

மிகவும் அழகான ஸ்லோகம். அற்புதமான விளக்கம். ஆர்யா சதகம் மேற்கோள் அருமை.👌🙏🌸

விஷூக்கனி காணும் வைபவம் பற்றிய விளக்கங்கள் மிக அருமை. மிக்க நன்றி.🙏🌸

‘ஸ்தைர்யோபக்ன முபேத்ய’ என்பதற்கு ‘பகவான் என்ன விதிச்சிருக்காரோ அதுவே அநுக்கிரகம்’ போன்ற விளக்கங்கள் அற்புதம்.

பொதுவாக ‘மனசு அப்படியே நின்று விட வேண்டும்; அப்படி ஆனால்தான் அத்வைதம் அநுபவமாக ஸித்திக்கும்.’ என்று சொல்வார்கள். அத்வைதத்தை நிலைநாட்டிய ஆச்சார்யாளே சிவானந்த லஹரி போன்ற பக்தி ஸ்லோகங்களை உபகரித்து பக்தியின் மேன்மையை அழகாக பல ச்லோகங்களில் விளக்குகிறார்.

‘ஆனந்தாம்ருத பூரிதா’ என்ற ஸ்லோகத்திலும் பக்திக் கொடியை புண்ணிய காரியங்களால் நன்றாக வளர்ப்பதன் மூலம் முக்தி என்கிற கனியை கொடுப்பதாக சொல்லி, பக்தி பண்ணிக் கொண்டிருந்தாலே அது முத்தியை கொடுக்கிறது என்று உறுதியளிக்கிறார். 👌🙏🌸

பகவான் கீதையில், “ஒருத்தன் என்னிடம் பக்தி செலுத்திக் கொண்டேயிருந்தால், நான் யார், எப்படிப்பட்டவன் என்று உள்ள‌படி தெரிந்துகொள்கிறான். அம்மாதிரி என்னை உள்ளபடி தெரிந்து கொண்டபின், எனக்கு வேறாக இல்லாமல் என்னுள்ளேயே புகுந்து விடுகிறான்” என்கிறார்.🙏🌸

போன ஸ்லோகத்தில், “ஆனந்தம் நிரம்பிய ஹரனுடைய பாதத்தாமரைகளில் பக்தி என்கிற கொடி உறுதியான உள்ளம் (பகவான் இருக்கார். நம்மை காப்பாற்றுவார் என்கிற உறுதியான உள்ளம்) என்கிற தூணை ஆதாரமாக பிடித்து உயர்ந்த எண்ணங்களாலான மனப் பந்தலில் படர்ந்து நற்கர்மங்களால் வளர்கிறது” என்று சொன்னார். சிவபெருமானை ‘ஹர’ என்ற நாமத்தால் குறிப்பிட்டார். ஹர நாமம் நம் பாபத்தையெல்லாம் போக்குகிறது. ‘அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே’ என்று திருஞானசம்பந்தரும் ஹர நாமத்தின் சிறப்பை வலியுறுத்துகிறார்.🙏🌸

இந்த ஸ்லோகத்தில் அந்தக் கொடியில் மலர்கின்ற மல்லிகையாக சிவபெருமானை உவமிக்கிறார். பக்தி என்னும் கொடியாக நாம் வளர்ந்தால் அதில் மல்லிகையாக சிவபெருமான் மலர்வார் என்று சொல்வது போல் தோன்றுகிறது.🙏🌸

மஹா பெரியவாளுக்கு மிகப் பிடித்தமான ச்லோகமும் க்ஷேத்திரமும். ‘பரமசிவனுக்கும் மல்லிகை ஸம்பந்தம் அதிகம் உண்டு. அவனே வெள்ளை வெளேரென்று மல்லிகைபோல இருப்பவன்தான். மல்லிகார்ஜுனன் என்றே பெயர் வைத்துக்கொண்டிருக்கிறான். அந்தப் பெயரில் அவன் இருக்கிற க்ஷேத்ரம் ஸ்ரீசைலம்.’ என்கிறார்.🙏🌸

மிக அற்புதமான விளக்கம். ஸ்வாமிகளின் ‘தசரத ஆட்சி காலத்தை விட ராம ராஜ்யத்தில் ஜனங்கள் ராம கதையைப் பேசி கொண்டு ஆனந்தமாக இருந்தார்கள்’ என்ற விளக்கமும் அதேபோல், ‘மஹாபெரியவாளைப் பற்றியும் அவர் சொன்ன கருத்துக்களைப் பற்றி நாம் பேசுவதும் ஆனந்தத்தைக் கொடுக்கும்’ என்று நீங்கள் சொன்னதும் மிக அருமை 👌🙏🌸

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: |
ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் பிரசாஸதி ||

அழகான இன்றைய தினத்திற்கு ஏற்புடையதாக உள்ள பதிவு !
சொற்சுவையும் பொருள் சுவையும் கூடியதான அழகான விவரிப்பு!

இயற்கைஅன்னையின் வர பிரசாதங்களான, பழங்கள், காய்கறிகள், புஷ்பங்கள் ஆகியவற்றை அவருக்கே அளித்து வழிபடுவது என்பது நம் முன்னோர்களின் thoughtfulness என்ற அழகான வந்தனா முறையைக் காண்பிக்கிறது இது கேரள தேசத்திலும், திருநெல்வேலி ஜனங்களுக்கும் உரித்தான இயற்கை வழிபாடாகும். நான் யோசிப்பது வழக்கம் ஏன் தமிழ் நாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் இது பின்பற்றப்படவில்லை என்பதாக!

பக்தியாகிற கொடி அவளற்கரிய அழிவற்ற பலன்களை அளிப்பதற்கு ஈஸ்வரணது பாதாராவிந்த சரணங்களை இறுக்கப் பிடித்துக் கொள்ளவேண்டும்! பக்தியான ஜலம், தைரியமே கொடியின் தாங்கு கோள் போல அசைவற்ற ஸ்திரமான எண்ணங்களே பந்தல், நம் முன் ஜன்ம ஸத் கர்மாக்கள் எரு இப்படியாக ஆசார்யாள் இங்கு ஈஸ்வர பக்தி எப்படி நம்மை உய்விக்கும் என்று அழகுபட, சுவை பட சொல்கிறார்! அழகான ஸ்லோகம்!
சௌந்தர்யலஹரி அம்பாளின் அழகை வர்ணிக்கிறார் போல் சிவானந்தஹரி பக்தியின் சிறப்பு மேமையை அழகுபட வர்ணிக்கும் சிறந்த ஸ்லோகக்கோர்வை!
பூர்வ ஜன்ம சுகிர்தத்தால் நாம் இந்துக்களாகப் பிறந்து, ஸத் குருவை அடைந்து, இது போன்ற நல்ல ஸ்லோகங்கள், உபதேசங்களைக் கேட்க கொடுத்து வைத்திருக்கிறோம்!

ஸத் கர்மா மூலம் பக்தி என்ற கொடி வளர்ந்து ஆனந்தத்தை அடைய ஸ்திரமான மனம் வேண்டும். இந்த பக்தியால் முக்தி அடைய வழி காட்டுகிறார் ஆச்சார்யாள் என்ற அருமையான விளக்கம்.
புத்தாண்டு விஷுக்கனியை பக்தி பாவமாக செயல்பட வழி காட்டிய அன்பான பெற்றவர்கள், இவை அனைத்தும் இறைவனின் அருளே.
இதை உணர்ந்து சத் கதா ஸ்ரவணமும், சத் விஷயங்களில் மனம் ஈடுபடவும் அந்த பரமேஸ்வரனின் அருளை வேண்டுகிறேன்.

🙏🙏

இன்றைக்கு புத்தாண்டு, அதற்கு ஏற்ற பதிவு.வணக்கங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.