Categories
mooka pancha shathi one slokam

மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம்

பாதாரவிந்த சதகம் 35வது ஸ்லோகம் – மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம்

वषट्कुर्वन्माञ्जीरजकलकलैः कर्मलहरी-
हवींषि प्रोद्दण्डं ज्वलति परमज्ञानदहने ।
महीयान्कामाक्षि स्फुटमहसि जोहोति सुधियां
मनोवेद्यां मातस्तव चरणयज्वा गिरिसुते ॥

இன்னிக்கு கோகுலாஷ்டமி, எல்லாரும் கோலங்கள்லாம் போட்டு, காலெல்லாம் வரைஞ்சு கிருஷ்ணன ஆத்துக்கு வரவழைச்சு, பாலகிருஷ்ண பூஜை பண்ணி, சந்தோஷப்படற ஒரு நாள்….பக்ஷணங்களாம் பண்ணி, ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணி

கிருஷ்ணனை எப்படி அனுபவிக்கணும்ங்கிறது,  நான் ஸ்வாமிகள் கிட்ட பார்த்திருக்கேன். அதனால எனக்கு இந்த கோகுலாஷ்டமி போது, ஸ்வாமிகள் ஞாபகம் வரது…. அதுலயும் ஸ்வாமிகள் பெரியவாகிட்ட போய் பண்ணிண, ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் ஞான யக்ஞம்… அத பத்தி இன்னிக்கி பேசலாம்னு ஆசைப்படறேன்…

மூகபஞ்சஶதீ பாதரவிந்த ஶதகத்துல 35வது ஸ்லோகம்,

वषट्कुर्वन्माञ्जीरकलकलैः कर्मलहरी-

हवींषि प्रौद्दण्डं ज्वलति परमज्ञानदहने ।

महीयान्कामाक्षि स्फुटमहसि जोहोति सुधियां

मनोवेद्यां मातस्तव चरणयज्वा गिरिसुते ॥ ३५॥

வஷட்குர்வன்மாஞ்ஜீரகலகலை꞉ கர்மலஹரீ-

ஹவீம்ʼஷி ப்ரௌத்³த³ண்ட³ம்ʼ ஜ்வலதி பரமஜ்ஞானத³ஹனே

மஹீயான்காமாக்ஷி ஸ்பு²டமஹஸி ஜோஹோதி ஸுதி⁴யாம்ʼ

மனோவேத்³யாம்ʼ மாதஸ்தவ சரணயஜ்வா கி³ரிஸுதே

ஹே காமாக்ஷி ! “மாத:” – அம்மா,

“தவ சரணயஜ்வா” – உன்னுடைய பாதம் என்ற

“யஜ்வா” – யஜ்வாங்கிறவர் யாகம் பண்றவர்,

“மஹீயான்” – மிக சிறந்த ஒரு யஜ்வா அவர், ச்ரேஷ்டரான அந்த ” யஜ்வா”, அவரொரு யாகம் பண்றார்,  எப்படின்னா?? …

“மாஞ்ஜீரகலகலை” – கால்ல போட்டுண்டு இருக்கற சலங்கைலிருந்து, கலகலனு சத்தம் வருது, இதுதான் “ஓம்காரம்”, “வஷட்காரம்”, “வஷட்”, அப்படிலாம் மந்த்ரங்கள் சொல்லுவா, அந்த வஷட்காரம் கால்ல இருக்கற சலங்கை ஒலிதான்…..இப்படி வஷட்காரத்தை செய்து க்கொண்டு,

“மனோவேதி” – வேதினா ஹோமகுண்டம்…

“மனோவேத்³யாம் ஸ்பு²டமஹஸி” அதுல ஒரு நெருப்பை அம்பாள் மூட்டி, எந்த நெருப்புனா பரம ஞானம் என்கிற நெருப்பு,

அத வந்து “ப்ரௌத்³த³ண்ட³ம்ʼ ஜ்வலதி” – நல்லா கொழுந்துவிட்டு எரியும்படியாக,

“ஸ்பு²டமஹஸி” – அதோட காந்தி நன்றாக விளங்கும் போது, அந்த அக்னியில், அதாவது காமாக்ஷினுடைய பாதம், உத்தம பக்தனோட மனசுல,  ஞானமென்ற நெருப்பை கொழுந்துவிட்டு எரிய செய்து,

அதில், “கர்மலஹரீ-ஹவீம்ʼஷி ஜோஹோதி”  – கர்மங்களின்  வரிசை என்ற ஹவிஸை, “ஹோமம்”  செய்கிறான், காமாக்ஷினுடைய சரணம் என்கிற “யஜ்வா”, பக்தனுடைய கர்மங்களெல்லம் போக்குகின்றார், ஞான அக்னில அத பஸ்பம் ஆக்குகின்றார், அப்படிங்கிறத இவ்ளோ அழகா சொல்றார்…

ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவத சப்தாஹத்த, ஞான யக்ஞம்னு சொல்வார், முதலிருந்தே, சின்னவயசுலிருந்தே, பாகவதம் படிக்கறதே ரொம்ப கஷ்டமான ஒரு புராணம்… சமஸ்க்ருதம், ஞானிகளுடைய வாக்கு, ராமாயணம் போலலாம் குழந்தைகள் படிக்கறதுபோல சுலபமா படிக்கச் முடியாது … அத அவர், ஸ்வாமிகள் அவ அப்பா 3 நாள் பண்ணிட்டு, ஒரு தீட்டு வந்துடுத்து, அவா யாராவது படிப்பாளானா, என் பையனை  கேட்கறேன்னு, இவர் போய் படிச்சுருக்கார்.  அவர் அப்படி இந்த ஜென்மத்துல முதல்  தடவை ராமாயணம், பாகவதம்லாம் படிக்கலை. எத்தனையோ ஜென்மத்துல படிச்சது, குழந்தைல இருந்தே இவரால்  பாகவதம் படிக்க முடிஞ்சது.

அப்புறம் தானா பாராயணம் பண்ணிண்டு இருந்துருக்கார். அப்புறம் 36 வயசுல வைராக்கியம் வந்து, என்னால இந்த என்னுடைய கஷ்டங்கள்ளாம் தீர்க்க முடியாது, பகவான் தான் தீர்க்கணும்னு, பெரியவாள்ட்ட உத்தரவு வாங்கிண்டு, ஸ்ரீமத் பாகவதத்தை 7 நாள் சப்தாஹமா படிக்கறது, ராமாயணத்தை 9 நாள் நவாஹமா படிக்கறது, அத தவிர நாராயணீயத்தை மூச்சா படிச்சுண்டு இருந்தார்….

இதையெல்லாம் பண்ணிண்டே இருந்ததுக்கு பலனாக, பெரியவா பண்ணிண அனுகிரஹம் தான், தன்கிட்ட கூப்பிட்டு, அந்த கோகுலாஷ்டமி அன்னிக்கு பூர்த்தியாகிற மாதிரி சப்தாஹம் பண்ண சொன்னார்….

அந்த சப்தாஹம் எப்படி நடக்கும்னா, ஸ்வாமிகள் காத்தால மூல பாராயணம் பண்ணுவார், பெரியவா உட்கார்ந்து கேட்பார்.

பாலு மாமா கூட ஒரு அனுபவம் சொல்லியிருக்கா…, பெரியவா புண்டரீகம் போட சொல்லிட்டு, “ஏதோ வயசாயிண்டு இருக்கு, இந்த சப்தாஹம் கேட்டு, கிருஷ்ண கதை கேட்டு, நல்ல கதி அடையணும்னு பார்க்கறேன், எல்லாரும் எனக்கு ஒத்துழைக்கணும்,  சத்தம் போட கூடாது”னு, பெரியவா appeal பண்ண சொன்னாளாம் ஜனங்கள்கிட்ட, அவளாம் பேசிண்டு இருந்த போது… அப்படி பெரியவா ஆசைபட்டு கேட்ருக்கா…..ஸ்ரீகண்டன்னு பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றவர், ஸ்வாமிகளுடைய  உறவு, நடுவுல ஸ்வாமிகளுடைய அம்மாவோட  ஸ்ராத்தம் வரும், பெரியவா “உன்னுடைய அத்தையோட ஸ்ராத்ததுக்கு சமைச்சு தரியா” ன்னு, அவர்கிட்ட கேட்டுண்டு, அந்த மாதிரி நடந்தது சப்தாஹம் ஒவ்வொரு வருஷமும். 19 வருஷங்கள், 1974ல இருந்து 1993 வரைக்கும் நடந்தது. ஸ்வாமிகள் கார்த்தாலே எழுந்து தன்னுடைய அனுஷ்டானங்கள்லாம் முடிச்சுட்டு, சப்தாஹத்தோட ஒரு நாள் portion, மூலத்தை படிப்பார்.

சப்தாஹங்கிறது 7நாளைல 18000 ஸ்லோகங்களை படிப்பா…. நடுவுல அந்த ஸ்ராத்தம் வந்த போது, ஸ்ராத்தத்தை முடிச்சுண்டு, ஸ்நானம் பண்ணிட்டு வந்து, அன்னிக்கு portion படிப்பார், தினம்  ஒரு மணி, 2 மணி ஆயிடும் பூர்த்திஆகறதுக்கு, அதுக்கு அப்புறம் ஆஹாரம். ஸ்வாமிகள் தனியா மடத்துல தங்கமாட்டார், பக்கத்துல ஒரு room எடுத்துண்டு, அந்த roomla இருக்கற bedலாம் எடுத்துட்டு, தொடச்சு, புண்யாவாசனம் பண்ண சொல்லி, அங்க தங்கிண்டு படிப்பார். ஒரு மாமி மடிய சமைச்சு கொடுத்துடுவா, அத தான் சாப்பிடுவார், வேற எங்கேயும் மடத்துலயோ, வேற  எங்கேயுமே சாப்பிட மாட்டார். அத  மட்டும் கொஞ்சோண்டு சாப்பிடுவோர், சாயங்காலம் 4ல இருந்து 6pm, அப்புறம் அனுஷ்டானத்துக்கு ஒரு விராமம்,

அப்புறம் 7ல இருந்து 9..10 pm, பெரியவா எவ்ளோ நேரம் கேட்கறாளோ, அவ்ளோ நேரம் கிருஷ்ண கதை, இந்த  மாதிரி 7 நாள், 7வது நாள் கோகுலாஷ்டமி…கோகுலாஷ்டமி அன்னிக்கு கார்த்தால, எவ்ளோ களைப்பு இருக்கும்னு நினைச்சு பார்க்கணும் நீங்க !!!!

1 மணிவரைக்கும் சமஸ்க்ருதத்துல அந்த கடினமான பாகவதத்தை படனம், சாயங்காலம் 4ல  இருந்து 6pm, அப்புறம் 7ல இருந்து 10pm, பெரியவா சந்நிதில பிரவசனம், இப்படி 6 நாள் பண்ணதுனால, 7வது நாள் காத்தால, ஆத்துல பண்ணும் போது 7வது  நாள் 12 மணிக்குள்ள எல்லாமே பூர்த்தி ஆயிடும், அங்க 12 மணிக்குதான், மூல பராயணம் பூர்த்தி ஆகும். அதுக்கு அப்புறம் ஸ்ரீமத் பகவத் கீதை முழுக்க பாராயணம் பண்ணுவார். அப்புறம் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், அதுக்கு அப்புறம் அவப்ருத ஸ்நானம், யக்ஞம் பண்ணா, அது முடிவுல ஒரு ஸ்நானம் பண்ணுவா,  அவப்ருத ஸ்நானம்…………

இது எல்லாத்துக்கும் பெரியவா கூட இருந்து, பகவத் கீதை ஷ்ரவணம் பண்ணுவா, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கூட சொல்லுவா, அவப்ருத ஸ்நானத்துக்கு கூட வருவா, எல்லாம் முடிய 3 மணிஆயிடும் …பெரியவா உபவாசம், ஸ்வாமிகளும் உபவாசம். அப்புறம் 3 மணிக்கு மேல sweet ஏதாச்சும் சாப்பிடுவார் ஸ்வாமிகள், அப்புறம் திருப்பி 4 மணிக்கு போய்ட்டு, 4ல இருந்து 6பின் பிரவசனம், 7மணில இருந்து அன்னிக்கு night  12 மணி வரைக்கும் உபன்யாசம். 12 மணிக்கு உபன்யாசம் முடிச்சவுடனே, ஸ்வாமிகள மஹாபெரியவா கிருஷ்ண பூஜை பண்ண சொல்லுவார், மடத்துலயிருந்தா புதுப்பெரியவா பண்ணுவா, பெரியவா தனியா கர்னூல், மஹாகாம், சதாரா எல்லா இடங்களையும் ஸ்வாமிகள் போய் பாராயணம், பிரவசனம் பண்ணியிருக்கார். அங்கெல்லாம் இருந்தா, ஸ்வாமிகள கிருஷ்ண பூஜை பண்ண சொல்லுவார்.. பெரியவா உட்கார்ந்து பார்த்துண்டு இருப்பார்….

தான் தனியா உட்கார்ந்து ஆத்துல படிக்கும் போதே, பெரியவா கேட்கறாங்கிற பாவனையோட, முப்பத்துமுக்கோடி தேவர்களும், க்ருஷ்ணனும் கேட்கறா அப்படிங்கிற பாவத்துலதான் ஸ்வாமிகள் படிப்பார், அப்படி இருக்கறச்ச…சாக்ஷாத் க்ருஷ்ண ஸ்வரூபம், க்ருஷ்ணரே உட்கார்ந்து கேட்கறா மாதிரி, பெரியவா உட்கார்ந்து கேட்கும் போது, ஸ்வாமிகள் எவ்ளோ பயபக்தியோட படிச்சுருப்பார்…!

மஹாபெரியவாளும் ஸ்வாமிகளை  “சுக”  ஸ்வரூபமா treat பண்ணி, ரொம்ப பயபக்தியோடே ஸ்வாமிகள்ட்ட நடந்துப்பார், ரொம்ப ஆச்சர்யம்…. வந்து இறங்கினவுடனே,

“வந்தியா… வா…, சாப்டாச்சானு…” ஏக வசனத்துல கேட்பார், அந்த 7 நாளும், பாகவதர் வரார்…நகந்துகோங்கோ….சத்தம் போடாம கேளுங்கோ, அப்படினு பஹு வசனத்துல ஸ்வாமிகளை கௌரவபடுத்துவார்.. எவ்ளோ கௌரவப்படுத்திருக்கார். அந்த 1993க்கு அப்புறமும், ஸ்வாமிகள் 2004 வரைக்கும் இருந்தார்… ஒவ்வொரு வருஷமும், பெரியவா சப்தாஹம் அப்படினா, அந்த கோகுலாஷ்டமி ஒட்டி அந்த சப்தாஹத பண்ணி, அதே மாதிரி, பிரியத்தோட  பெரியவா பாதுகையை வச்சுண்டு, பெரியவா கேட்கறா அப்படினு அந்த சப்தாஹம் பூர்த்தி பண்ணுவார்…

அப்படி, உபவாசம், பாகவத பாராயணம், கீதை பாராயணம், ஸஹஸ்ரநாம பாராயணம், கிருஷ்ண அஷ்டோத்ரம், ஸ்தோத்ரத்தை படிக்கறது ரொம்ப பிரியத்தோடு பண்ணுவார். அது 1நிமிஷம் தான் ஆகும், 2 நிமிஷம் தான்  ஆகும், எல்லாத்துக்கும் முடிவுல, இந்த கிருஷ்ண அஷ்டோத்ர ஸ்தோத்ரத்தை படிச்சா, பண்ண புண்யம் எல்லாம் கோடி மடங்கு, அப்படினு ஒரு பல ஸ்துதி இருக்கு, அதனால அது ஒண்ணு பண்ணுவார்.. அப்புறம், சாயங்காலம், 11, 12 வது ஸ்கந்தம், பெரியவாளே  மத்த சன்யாசிகள்ளெல்லாம், இத அவசியமா கேட்கணும் …. வந்து கேளுங்கோ, வந்து கேளுங்கோனு சொல்லுவா ….

அப்படி அந்த 11, 12 ஸ்கந்தங்கள் உபன்யாசம், அப்புறம் கிருஷ்ண பூஜை, அப்படி இந்த கோகுலாஷ்டமிங்கிற்து …மஹாபெரியவாளும், ஸ்வாமிகளுமா.. ஒவ்வொரு வருஷமும், தபஸா அந்த 7 நாள், அந்த கிருஷ்ண கதையில் மூழ்கியிருந்து இந்த கோகுலாஷ்டமிய கொண்டாடிண்டுயிருக்கா.

மடத்துல பக்ஷணங்கள்ளெலாம் பண்ணுவா, ராத்திரி பூஜையான பின்ன, அத கொஞ்சம், பெரியவா க்ரஹிச்சுப்பா, ஸ்வாமிகள் க்ரஹிச்சுப்பார். இந்த மாதிரி ஒரு காட்சியை, இந்த மாதிரி ஒரு மஹனீயர்களின் தியானத்தை நம்ம பண்ணோனா, அந்த புண்யம் நமக்கு கிடைக்கும், கிருஷ்ண பக்தி வரும்.

மஹாபெரியவங்கிற அந்த காமாக்ஷினுடைய பாதம்,  அந்த “யஜ்வா”, தன்னுடைய அத்யந்த பக்தரான, கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய மனசுல,  “ஸ்ரீமத் பாகவதம்” என்கிற ஞான தீயை மூட்டி, அதுல அவர் வினைகளெல்லாம் பொசுக்கி, அவருக்கு உயர்ந்த “வைகுண்ட ப்ராப்தி” ஏற்படணும், அப்படினு, அவர் விடாம, பாகவத சப்தாஹம் பண்ண வச்சு, தானே அதுக்கு ஸ்ரோதாவா இருந்து கேட்டு, நிறைய  அவருக்கு ஆசிர்வாதம் பண்ணி, எத்தனையோ தடைகளாயிருந்தாலும் ….அதெல்லாம் மீறி, ஸ்வாமிகள் அந்த சப்தாஹம், திரும்ப, திரும்ப பண்ணி, அதன் மூலமா ஞானத்தையும், மோக்ஷத்தையும், அடைஞ்சார்.

வஷட்குர்வன்மாஞ்ஜீரகலகலை꞉ கர்மலஹரீ-

ஹவீம்ʼஷி ப்ரௌத்³த³ண்ட³ம்ʼ ஜ்வலதி பரமஜ்ஞானத³ஹனே .

மஹீயான்காமாக்ஷி ஸ்பு²டமஹஸி ஜோஹோதி ஸுதி⁴யாம்ʼ

மனோவேத்³யாம்ʼ மாதஸ்தவ சரணயஜ்வா கி³ரிஸுதே

கோபிகா ஜீவன ஸ்மரணம் ….கோவிந்த …கோவிந்த ……….!!!!!!!!!

5 replies on “மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம்”

பெரியவா சுவாமிகளை பாகவதர் வரார்ந்நு சொல்லி அந்த ஸ்தானத்தைக் கொடுத்து கௌரவித்தது பார்த்து நாமும் சில இது போன்ற விஷயங்களை கற்க முயல வேண்டும் ! தானே பரமேஸ்வரஸ்வ ரூபமானாலும் எளிய சாதாரண மானுட ரூபம் போல் கௌரவம் மரியாதை அளிப்பது பெரியவா ஒருத்தராலேயே முடியும்! அதுவும் சுவாமிகள் போன்ற பரம பாகவத சிரோன்மணிக்கு அவர் அளித்த கௌரவம் அதிசயம் ஒன்றும் இல்லை!
சுவாமிகள் எத்தகைய பக்தி இருந்தால் அத்தனை ஆசார சீலராய் ஒர் தபஸ் போல் ஏழு நாளும் மனம் ஒன்றி பாராயணம் செய்து, உபவாசம் இருந்து பெரியவாளுக்கு இணையாய் செய்ய இயலும்,?
குழந்தை மாதிரி சுவாமிகள் சப்தாகத்தை ஆவலுடன் கேட்பார் என்று கேள்வி கேட்டுபட்டிருக்கிறேன். ஆனால் தரிசன பாக்கியம் கிட்டவில்லை!
மூக பஞ்சாசதியின் இந்த ஸ்லோகத்தில் திருவடிகளை யாக கர்த்தாவாக சித்தரிக்கப்பட்டுள்ளது! ,ஞானிகளின் மனம் என்னும் யாக சாலையில் உக்ரமாகக் கொழுந்து விட்டெரியும் பரம ஞானம் என்ற ஹோமாக்நியில், கர்மாக்களை நெய்யே ஆஹூதியாகவும், அம்பாளின் பாதச் சிலம்பின் கல கல சப்தம் வஷட்காரங்களாக ஹோமமாகச் செய்கிறார்கள்,!!
எப்படிப்பட்ட பொருள் பொருந்தி ஸ்லோகம்!!
விளக்கம், சுவாமிகள் சப்தாகம், வாழ்க்கை முறை , பெரியவா ஈட்டுப்பாடு எல்லாமே ரொம்ப நன்றாக இருந்தது!
ஜய ஜய சங்கரா…
ஜய ஜய ஜகாதம்ப சிவே

Sri Krishna Paramathmane namaha!
It is so refreshing to listen to this audio about Swamigal’s Sapthaha parayanam.
The more we hear about Sri Swamigal and Mahaperiyava, one can undergo a sense of them being around us. This thought itself is a blessing of such Mahans. Pray Sri Krishna, Sri Mahaperiyava and Sri Swamigal to bless us forever to be wrapped up with that kind of Bhakti and the Tapas, to be always in their thought waves.
Periyava Paadham sharanam 🙏🙇 🌹
Sri Swamigal Paadham sharanam 🙏 🙇🌹

இந்த பகுதியில் கூறிய‌ அனைத்தும் உத்க்ருஷ்டமான உன்னதமான விஷயங்கள். க்ருஷ்ணன் வந்தே ஜகத்குரும் என்பது ப்ரசித்தியான‌ ஸ்லோகம். இந்த கலியுகத்தில் நமக்கு க்ருஷ்ணன் என்ற ஜகத்குரு நிச்சயமாக மஹா பெரியவா தான். அன்னாரோடு இணைந்து அவருக்காகவே பாகவத சப்தாஹம் செய்து வந்த ஆங்கரை பெரியவாளை நினைத்து இந்த மஹாபுண்ணிய தினத்தில் வந்தனம் செய்ய
முடிந்தது தங்களால் தான் !.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.