88. தசரதர் சொன்ன செய்தியைக் கேட்டு அந்த முனிகுமாரனின் கண்ணிழந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளையை மடியில் கிடத்திக்கொண்டு வேதனையில் புலம்புகிறார்கள். பின்னர் அவனுக்கு அந்திம கார்யங்கள் செய்து விட்டு, அந்த முனிவர் தசரதரிடம் ‘நான் என் கடைசிக் காலத்தில் எப்படி என் மகனை பிரிந்து தவிக்கிறேனோ அப்படி நீயும் உன் கடைசி காலத்தில் உன் மகனைப் பிரிந்து தவிப்பாய்’ என்று சாபம் இடுகிறார். தசரதர் இவற்றை எல்லாம் கௌசல்யையிடம் சொல்லி வருந்துகிறார். அன்றிரவு ராமரின் பிரிவு தாங்காமல் அவனையே நினைத்தபடி தசரதர் உயிர் துறக்கிறார்.
[தசரதர் வியோகம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/88%20dasarathar%20viyogam.mp3]
Categories