123. ராமர் சீதையோடும் லக்ஷ்மணனோடும் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் பல முனிவர்களின் ஆஸ்ரமங்களில் இனிதே கழிக்கிறார். ஓரிடம் போகும் வழியில் ஒரு ஏரியின் உள்ளிருந்து இனிமையான சங்கீதமும் நாட்டிய சப்தமும் கேட்கிறது. ராமர் அருகிலிருந்த தர்மப்ருத் என்ற முனிவரிடம் என்ன இந்த ஆச்சர்யம் என்று கேட்கிறார். தர்மப்ருத் “மாண்டகர்னி என்ற முனிவர் தவத்தை கலைக்க இந்திரன் ஐந்து அப்சரஸ் ஸ்திரீகளை அனுப்பினான். அந்த முனிவர் தன் தவத்தால் இளமையை வரவழைத்துக் கொண்டு இந்த ஏரியின் உள்ளே ஒரு மாளிகை அமைத்து அங்கு அவர்களோடு சுகித்து வருகிறார்’ என்று சொல்கிறார். ராமர் வாசல் வழியே வந்தும் மாண்டகர்னி முனிவர் மதன பரவசத்தால் ராமரை தரிசிக்க முடியவில்லை.
[ரிஷிகளோடு பத்து வருடங்கள்]
Categories
One reply on “ரிஷிகளோடு பத்து வருடங்கள்”
மிகவும் பிரமாதம்
ராம நாம ருசியை மிகவும் ரசித்து அனுபவிக்க உதவியது
வாழ்துக்கள்