Categories
Ramayana One Slokam ERC

யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத்…

Art by Keshav Venkataraghavan

யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் (16 min audio in tamil. same as the script below)

சுந்தரகாண்டத்தோட முதல் ஸர்கத்துல ஹனுமான்  ஆகாசத்துல பறக்க போறார். அப்போ ஒரு ஸ்லோகம் சொல்றார்.

यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः। गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।।5.1.40।।

யதா ராகவ நிர்முக்தஹ ஷரஹ ச்வஷன விக்ரமஹ |

கச்சேத்  தத்வத்  கமிஷ்யாமி லங்காம் ராவணன் பாலிதாம் || அப்படினு சொல்றார்.
இந்த ஸ்லோகம் ரொமப ஒரு விசேஷமான ஸ்லோகம். கடற்கரையில வானரா எல்லாம் இருக்கா. அந்த ஸ்வயம்பிரபா என்கிற ஒரு தபஸ்வி, யோகினி அவாளை தன் தபோபலத்தால் குஹைக்குள்ளேருந்து வெளியில கொண்டு வந்து விடறா. பார்த்தா வசந்தகாலமே வந்துடுத்து. ‘இனிமே திரும்பிப்போனா, சுக்ரீவன் தண்டிப்பான். ஒரு மாசத்துக்குள்ள திரும்ப வரணும்’னு சொல்லி இருக்கான், அப்படின்னு விசன பட்டுண்டு, அங்கதன் தான், அந்த தெற்கு திக்குல வந்த வானராளுக்கெல்லாம் லீடர். அவன் ‘நான் உயிரை விடப்போறேன். நான் ஒண்ணும் திரும்பி  போக போறதில்லை’ அப்படின்னு சொல்லி, ப்ரயாயோபவேசம் பண்றான். படுத்துண்டு உயிரை விடலாம் அப்படின்னு  முடிவே பண்ணிடறா.
அப்போ அங்க மலைமேலேருந்து சம்பாதிங்கற கழுகு இவாளை பாக்கறது. அது நெனச்சிக்கறது ‘ஆஹா பகவான் எப்படியெல்லாம்  சாப்பாடுக்கு வழி பண்றார் பாரு! நம்மால பறக்க முடியாம இறக்கையில்லாம இருக்கோம். இங்க கொஞ்சம் பேரை கூட்டிண்டு வந்து, அவா ‘நாங்க உயிரைவிடப் போறோம்’ ன்னு சொல்றா. ஒண்ணு மூணு மாசம் தாங்கும். ஒண்ணு ஆறு மாசம்   தாங்கும். நமக்கு சாப்பாட்டுக்கு வழியாச்சு’ அப்படின்னு நினைக்கறது ஸம்பாதி கழுகு.
அப்போ இந்த கழுகு வந்து நிக்கறதை பார்த்த உடனே அங்கதனுக்கு இன்னுமே ரொம்ப ஆயாசமாறது. ‘என்னடா இது. நாம உயிரை விடப்போறோம்னு சொன்ன உடனே,   அதுக்குள்ள சாப்பிடறத்துக்கு கழுகு வரது’ அப்படின்னு சொல்லி அவன் பொலம்பலோட சேர்ந்து பொலம்பறான். “அன்னிக்கு ராமனுக்காக ஜடாயுங்கிற கழுகு உயிரவிட்டுது! இன்னிக்கு நாம வானரா எல்லாம் உயிரை விடப் போறோம். அப்படி ராம கார்யத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம். உயிரையும் விடலாம். ராமர் அவ்வளோ பெரியவர்!” அப்படி எல்லாம் சொல்லிண்டு வரான். இதை கேட்ட உடனே அந்த சம்பாதி “ஆஹா, என்னது ராமருக்காக ஜடாயு உயிரை விட்டானா ! யாரு ராமர்? எப்படி அவன் உயிர் பிரிந்தது? ஜடாயு என் தம்பியாச்சே! விஸ்தாரமா சொல்லுங்கோ” என்று கேட்கிறது.
அங்கதன் பதில் சொல்றான். ஆனால் அவனுக்கு  நம்பிக்கை இல்லை. இந்த கழுகு நம்மை சாப்படறதுக்காக ஏதோ பேச்சு கொடுத்து பாக்கறது ன்னு நினைக்கிறான். இருந்தாலும் சொல்லி வைப்போமே, உயிரை விடப்போறோம். கழுகு நம்மை சாப்ட்டா சாப்பிட்டு போட்டுமே” னு சொல்லி பாதி நம்பிக்கையோட இவனும் சொல்றான். அப்படி இவா ரெண்டுபேர் ஒண்ணும் close friends கிடையாது. அப்படி இருந்தாலுமே ராமகதையை சொன்னா ரெண்டு பேருக்கும் க்ஷேமம் ஏற்படும் அப்படினு ஸ்வாமிகள் சொல்வார். அந்த ராமகதையை சொல்றான்.
“தசரத மஹாராஜாவோட பிள்ளை ராமர் காட்டுக்கு வந்தார். அவருடைய மனைவி சீதாதேவியை ராவணன் ஜடாயுவை வதம் பண்ணிவிட்டு அபஹரித்து கொண்டு போய்ட்டான். நாங்கள்லாம் சீதையை தேடி வந்துருக்கோம்னு” சொன்னனோடனே “ஆஹா! அந்த ஜடாயு என் தம்பி” அப்படினு அது தன்னுடைய வ்ருத்தாந்தத்தை சொல்றது. அப்பறம் சம்பாதி “இங்கிருந்தே நான் உங்களுக்கு பாத்து சொல்றேன். எங்களுக்கு தீர்கமான பார்வையுண்டு” என்று சொல்லி “கடலுக்குள் நூறு யோஜனை தள்ளி இலங்கைனு ஒரு  தீவு இருக்கு. அதுல சீதையிருக்கா” அப்படின்னு சொன்ன உடனே அதுக்கு இறக்கை முளைக்கறது, அப்படி இவாளுக்கும் வழிகிடைக்கிறது. சீதை எங்கேயிருக்காங்கற குறிப்பு கிடைக்கறது. அந்த சம்பாதிக்கும் இறக்கை முளைக்கறது. அப்படி ராம கதைய நம்பிக்கையிருந்தோ, நம்பிக்கையில்லாதவாளுக்கோ, நல்லவாளுக்கோ, கெட்டவாளுக்கோ, ராமகதையை சொன்னா க்ஷேமம்தான் ஏற்படும், என்று ஸ்வாமிகள் சொல்வார்.
நேத்தி சிவன் சாரோட ஆராதனைக்கு போயிருந்தேன். அங்க ஒரு ரெண்டு மணி நேரம் அவருடைய life லேருந்து அவரோட பழகின எல்லாரும் சொன்ன அனுபவங்கள்லாம் வெச்சு ஒரு Drama போட்டா. ரொம்ப நன்னா இருந்தது. அவசியம் பார்க்க வேண்டியது. அவா Youtube ல Share-பண்றாளான்னு பாக்கலாம். லக்ஷ்மிநாராயணன், சுப்புணி, சந்திரமௌலி ,சிவராமன், கௌரி, ரமணன் இவா எல்லாம் தான் characters. அவாளே direct ஆக நடிக்கவில்லை. அவா characterஆ மத்தவா நடிச்சா. சுந்தரகுமார் ஒரு character, நம்ம ஸ்வாமிகள் ஒரு character. ரொம்ப நன்னா பண்ணியிருந்தா. மஹாபெரியவா characterization ரொம்ப தத்தருபமா இருந்தது. சிவன் சார் கிட்ட பக்தி இருக்கறவாளுக்கு ரொம்ப பிடிக்கும்.
அதுல முதல் தடவை சுந்தரகுமார் வந்து  சாரை நமஸ்காரம் பண்ணினபோது, “நீ என்ன பண்ணறே?” னு கேட்ட போது “ராமாயண பாகவத ப்ரவசனம் பண்ணிண்டிருக்கேன். நல்லபடியா நடக்கணும். நிறைய ப்ரவசனம் பண்ணனும். ஆசிர்வாதம் பண்ணுங்கோ”னு கேட்கறார். சார் சொன்னாராம் “ராமாயண பாகவதத்தை யார் சொன்னாலும் நன்னா தான் இருக்கும்” அப்படீன்னாராம். இது எனக்கு ஒரு messageன்னு நான் நெனச்சுண்டேன்.
அப்படி ராமாயணத்தைச் சொல்லி இவா ரெண்டு பேருக்கும் வழி கிடைக்கிறது. அந்த சம்பாதி இறக்கை முளைச்சு பறந்து போயிடறது. இப்போ வானரா எல்லாரும் உட்கார்ந்து “யாரால நூறு யோஜனை கடலைத் தாண்டமுடியும்?” அப்படினு கவலைப்படும்போது, ஒவ்வொருத்தரும் என்னால பத்து யோஜனை முடியும்.  இருவது யோஜனை முடியும்ங்கறா.  ஜாம்பவான் “முன்ன என்னால நூறு யோஜனை தாண்ட முடியும். ஆனா இப்போ வயசாயிடுத்து தொண்ணூறு தான் முடியும்” அப்படின்னு சொன்னபோது, அங்கதன் “என்னால நூறு யோஜனை தாண்ட முடியும். ஆனா திரும்பியும் நூறு யோஜனை தாண்டி இங்க வருவேனா தெரியலை” என்கிறான். அப்போ ஜாம்பவான் சொல்றார் “நீ வாலிபுத்ரன் ஆயிரம் யோஜனைக்கூட தாண்டுவாய். இருந்தாலும் நீதான் இந்த சேனைக்கு தலைமையில் இருக்க. அதனால உன்ன அனுப்பபடாது. ஒரு leaderஐ முன்ன அனுப்பிச்சிட்டு followers எல்லாம் பின்னாடி உட்கார்றதுங்கிறது சரியில்லை” என்கிறார்.
திரும்பவும் “என்ன பண்றது இப்போ” அப்படின்னு அங்கதன் கவலைப்படறான்.
அப்போ ஜாம்பவான் “இந்த காரியத்தை யார் பண்ணுவா எனக்கு தெரியும். அதோ அங்கே அமைதியாக உட்கார்ந்து இருக்காரே அந்த ஹனுமாரை போய் நாமெல்லாம் உத்சாகப் படுத்துவோம். அவருடைய பலம் அவருக்கு தெரியாது. நாம் சொன்னால் அவருக்கு ஞாபகம் வரும்” னு சொல்லி, எல்லாருமா போய் ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்றா. இந்த இடத்துல ‘ஹனுமாரை வானரா எல்லாருமா ஸ்தோத்ரம் பண்றா, அவர் வானளவுக்கு வளர்ந்தார்’ அப்படிங்கிறத சொல்லும்போது ஸ்வாமிகள் ஹநுமத் பஞ்சரத்னத்தை ஒரு தடவை சொல்லுவார்.

ஹனுமத் பஞ்சரத்னம் (Audio link to Hanumath Pancharathnam)

சொல்லிட்டு, “யாராவது ஏதாவது ஹனுமாரை பிராத்தனை பண்ணினோம் என்றால் நிறைய நிறைய ஸ்தோத்ரம் பண்ண பண்ண அவர் பெரிசா வளர்ந்து நிறைய அனுக்ரகம் பண்ணுவார். அதிகஸ்ய அதிகம் பலம். அதனால நூத்தியெட்டு ஆவர்த்தி ஹநுமத் பஞ்சரத்னம் ஜபம்  பண்ணுங்கோ. அப்போ ஹனுமார் பெரிசா வளர்ந்து நிறைய அனுக்கிரஹம் பண்ணுவார்” அப்டின்னு சொல்லுவார் அந்தமாதிரி ஹநுமத் பஞ்சரத்னம் சொல்லி ஹனுமார ஸ்தோத்ரம் பண்ண பண்ண அவர் வளருகிறார்.
அவர் பெருமையை ஜாம்பவான் சொல்றார் “நீ வாயுகுமாரன்! உன்னுடைய கைகள்ல கருடனுடைய பக்ஷங்கள்ல எவ்வளவு பலம் இருக்கோ, இறக்கைகள்ள எவ்வளவு பலம் இருக்கோ அவ்வளவு பலம் உன் கைகளில் இருக்கு. உன்னால வாயு மாதிரி ஆகாசத்தில் போக முடியும். நீ தான் இந்த கார்யத்தை எங்களுக்காக பண்ணனும். எங்க எல்லரோட உயிரும் இப்போ உன் கிட்ட தான் இருக்கு. ஹே ஹனுமான் நீ இதை பண்ணு. நாங்க எல்லாரும் ஒத்தக்கால்ல நிண்ணுண்டு  உனக்காக எல்லா தெய்வங்களையும் பிரார்த்தனை பண்றோம்” அப்படினு ஜாம்பவான் உத்சாக படுத்தறார். ஹனுமாரும் “ஆமாம்! என்னால முடியும். இப்போ எனக்கு தெரியறது!” அப்படினு சொல்றார். “இந்த மஹேந்திர மலைல ஏறி நான் ஆகாசத்தில் பாய்கிறேன். இந்த பூமில நிண்ணுண்டு நான் வானத்துல பாய்ந்தால் பூகம்பமே வந்துவிடும். அதனால நான் மலைமேல ஏறிண்டு தாவுகிறேன்” அப்படினு அந்த மலைமேல ஏறிண்டு ஆகாசத்துல தாவ போகும்போது இந்த “யதா ராகவ நிர்முக்த:” ஸ்லோகத்தை சொல்றார்.
அந்த சுந்தரகாண்டத்தோட முதல் ஸ்லோகம் ततो रावणनीतायाः सीतायाः शत्रुकर्शनः। इयेष पदमन्वेष्टुं चारणाचरिते पथि।।
“ததோ ராவணநீதாயா: ஸீதாயா: ஷத்ருகர்ஷந: | இயேஷ பத்மந்வேஷ்டும் சாரணா சரிதே பதி || அப்படினு தயராகி விடுகிறார் ஹனுமார் அப்படினு அந்த first-ஸ்லோகத்தோட ஆரம்பிக்கறது.
இந்த நாப்பதாவது ஸ்லோகம் “யதா   ராகவ நிர்முக்த: ஷர: – எப்படி ராமர் கையினால் விடப்பட்ட பாணம் நிக்காமல் போகுமோ, பராக்ரமத்தோட, வாயு வேகத்தோடபோகுமோ, எப்படி இலக்கை அடையுமோ, அந்த மாதரி நான் இப்போ ஆகாசத்துல போய் லங்கைல குதிப்பேன். அங்க சீதை எங்கயிருக்கான்னு கண்டுபிடிச்சிண்டு வருவேன். அங்க இல்லேன்னா மூவுலகத்திலயும் தேடி கண்டுபிடிச்சிண்டு வருவேன். ராவணனனை கட்டி இழுத்துண்டு வருவேன். அப்படினு ஒரு ப்ரதிஞை பன்னிட்டு ஆகாசத்துல தாவறார்.

அப்படி அவர் சொன்ன அந்த ஸ்லோகம்

यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः। गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।। அப்படினு சொல்றார்.

இதுல விசேஷம் என்னன்னா, ஹனுமார் தன்னால எதுவும் நடக்கறதுனே நினைக்கல. அதனால தான் அவர் அவளோ அபாரமான காரியங்களையெல்லாம் பண்ணிட்டு வந்தார். ஒரு அம்பு தானா போக முடியுமோ?ஒருத்தர் ஏவி விட்டதானே போகமுடியும்? அந்தமாதிரி ராமரோட அம்பு மாதிரி நான் போவேன் அப்படினா என்ன அர்த்தம் “நிமித்தமாத்ரம் பவ சவ்யசாசின்” னு அப்படினு கிருஷ்ணர் அர்ஜுனன் கிட்ட சொன்ன மாதிரி “நீ வெறும் என் கையில் ஒரு கருவி  தான். நான் தான் எல்லாத்தையும் நடத்துறேன். நீ இவ்வளவு தூரம் கவலையே படவேண்டியதில்லை.  உன் காரியத்தை, கடமையை நீ பண்ணு” அப்படின்னு சொல்லறார். அந்த மாதிரி ஹனுமார் ராமர்ட்ட அன்னிக்கு கிஷ்கிந்தா காண்டதோட ஆரம்பத்துல நமஸ்காரம் பண்ணி ராமரை பாத்தபோதே தன்னை ஒப்படைச்சுண்டார். ராமதூதனாயிருந்து அபாரமான கார்யங்கள்லாம் பண்றார். “ந ராவண சஹஸ்ரம் மே யுத்தே பிரதிபலம்  பவேத்” அப்படிங்கறார். ஆயிரம் ராவணர்கள் வந்தாலும் யுத்தத்தில் என் முன்னாடி நிக்க முடியாது. நான் ராமதாசன்” அப்படினு கர்ஜிக்கறார். அப்பேற்பட்ட பலம் அவருக்கு எங்கேர்ந்து வந்ததுன்னா? “எனக்கொண்ணும் பலம் இல்லை. ராமரோட பலத்தினால இதல்லாம் நான் பண்ணுவேன்” அப்படிங்கற அந்த எண்ணத்துனால வந்தது. “ராமர் கையில ஒரு பாணம் மாதிரி நான்” அப்படின்னு நினைக்கிறார்.
அப்படி சொல்லிட்டு ஆகாசத்துல கிளம்புகிறார். சொன்ன வார்த்தை “நிக்கமால் போவேங்கிறது” சும்மா ஒரு ஸ்டாண்டுக்காக சொல்லலை.  வழில ஒரு தங்க மலை கடலுக்கு உள்ளேர்ந்து வர்றது மைனாகமலைனு. அந்த ஸமுத்ரராஜா மைனாக மலை கிட்ட சொல்றார். “இந்த ஹனுமார் ராம கார்யமா போறார். இவருக்கு நாம உதவி  பண்ணனும்.  நீ வெளியில வா. உன்மேல உட்காந்துண்டு, ஆஹாரம் பண்ணிட்டு பழங்கள்லாம் கொடு. சாப்டுட்டு  அவர் போட்டும்” அப்படின்னு அந்த சமுத்திரராஜா சொல்லறார்.
உடனே மைனாகமலை மேல வந்து அது ஹநுமார்க்கிட்ட சொல்லறது  “ஹே ஹநுமான்!  எனக்கும் நீ ரொம்ப வேண்டியவன். ஏன்னா உங்கப்பா வாயு பகவான், இந்திரன் மலைகளோட இறக்கைகளை வெட்டும்போது, என்னைக் கொண்டுவந்து இந்த கடல்ல தள்ளி என் இறக்கைகளை காப்பாத்தினார். அதனால அப்பாவுக்கு பண்ற நன்றியை பிள்ளைக்கு பண்ணலாம். அதனால என்மேல உட்கார்ந்து விஷ்ராந்தி பண்ணிட்டு போ. உனக்கு சாப்பிடறதுக்கு பழங்களும் கிழங்குகளும் தரேன்” அப்படினு சொல்றது. ஸ்வாமிகள் சொல்லுவார் Water water everywhere not a  drop to drink அப்படினு கடலைப்பத்தி சொல்லுவா அப்பேற்பட்ட கடலுக்கு நடுவுல போயிண்டிருக்கும் போது, ராம கார்யம் பண்றதுனால ஹனுமாருக்கு சாப்பாடு கிடைக்கிறது. அப்படினா சுந்தரகாண்டத்தை படிக்கிறவாளுக்கு சாப்பாடு கவலையே கிடையாது. எப்படியாவது சாப்பாடு கிடைக்கும். எங்கிருந்தாவது சாப்பாடு கிடைக்கும் அப்படினு சொல்லுவார்.
அப்படி அந்த offer பண்ணும்போது அங்க ஹனுமார் சொல்றார் “நான் வழியில் நிற்காமல் லங்கைல போய் குதிச்சு சீதைய தேடுவேன்” னு என் நண்பர்களுக்கு வாக்கு குடுத்துட்டு கிளம்பிருக்கேன். அதனால என்னால இப்போ நிக்கமுடியாது. என்னோட அப்பாவோட நண்பர்னு சொல்ரேள். அதனால உங்கள பாத்ததே என்னக்கு ரொம்ப சந்தோஷம்” னு அவரை கட்டிண்டு அவருக்கு வணக்கத்தை சொல்லிட்டு ஹனுமார் போயிண்டேயிருக்கார். அப்பறம் சுரசை எங்கிற நாகமாதாவை பாக்கறார். அப்பறம் ஸிம்ஹிகை எங்கிற நிழலைபிடிச்சு இழுக்கிறவளை வதம் பண்ணிட்டு, அப்பறம் போய் லங்கைல குதிக்கிறார்.

இந்த மைனாக மலை ராம காரியத்துக்கு யத்கிஞ்சித் பண்ண நினைச்சதுக்கே, அதுக்கு ஒரு பெரிய நன்மை ஏற்பட்டது. இந்திரன் அங்கே வரான். “ராம கார்யமா  ஹனுமார் போயிண்டிருக்கார். அவருக்கு ஸஹாயம் பண்றேன்ன்னு வந்தியோ இல்லியோ, அதுனால என்கிட்டேர்ந்து இனிமே நீ பயப்பட வேண்டாம். நான் உன் இறக்கைய வெட்டமாட்டேன். ஆனா பூமில வந்து எங்கயாவது உட்காராதே ஜனங்களாம் கஷ்டப்படுவா. அதனால இந்தக் கடலுக்குள்ள எங்க வேணும்னாலும் போயிக்கோ. கடலுக்கடியில எப்பப்பாத்தாலும் பயந்து ஒளிஞ்சிண்டு இருக்கணும்னு இல்ல. நிம்மதியா கடல்மேல்  சஞ்சாரம் பண்ணிண்டிரு” அப்படினு ஒரு வரம் கொடுக்கிறார். இதோட விஷேஷம் என்னன்னா ஸ்வாமிகள் சொல்வார் “நாம் சிற்றின்ப கடல்ல மூழ்கியிருந்தாலும் ராம கார்யமா யத்கிஞ்சித் உபகாரம் பண்ணாகூட பெரிய அபயம் கிடைக்கும்” அப்படினு சொல்லுவார்.

எப்படி ராம பாணம், வாயு வேகமா, எங்கும் நிற்காமல் போயி இலக்கை அடையுமோ, அப்படி நான் இங்கிருந்து கிளம்பி, ஆகாச மார்க்கமாய் போயி இலங்கையில் குதிப்பேன். அங்க சீதா தேவியை தேடிப் பார்த்து எங்க இருக்கான்னு தெரிஞ்சுண்டு வருவேன். அப்டீன்னு ஹனுமார். தன்னுடைய தோழர்களுக்கு வாக்கு கொடுத்துட்டு ஆகாசத்துல கிளம்பறார்.

ஸ்வாமிகள், ஏக ஸ்லோக சுந்தர காண்டம், ஒரு ஸ்லோகத்துல சுந்தர காண்டம் அப்படீன்னு, ராகவேந்திர ஸ்வாமிகள், திருவல்லி கேணியில கூட அவரோட பிருந்தாவனம் இருக்கே. அந்த, அந்த ராகவேந்திர ஸ்வாமிகள் பண்ணின ஒரு ஸ்லோகம் இருக்கு. ஏக ஸ்லோக சுந்தர காண்டம் அப்படீன்னு, அதோட தாத்பரியமும்,  இதே மாதிரி, ராமரோட அனுக்ரஹத்துனாலதான், ஹனுமார், இவ்வளவு பெரிய கார்யங்களை எல்லாம் பண்ணி முடிச்சார், அப்டீங்கிறதுதான் அந்த ஸ்லோகத்தோட தாத்பர்யம்.

यस्य श्री हनुमान् अनुग्रह बलात् तीर्णांबुधिर्लीलया लङ्कां प्राप्य निशाम्य रामदयितां भङ्क्त्वा वनं राक्षसान् |

अक्षादीन् विनिहत्य वीक्ष्य दशकम् दघ्द्वा पुरीं तां पुन: तीर्णाब्धि: कपिभिर्युतो यमनमत् तं रामचन्द्रं भजे ||

யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா

லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராம தயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் |

அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்ய தசகம் தக்த்வா புரீம் தாம் புந:

தீர்ணாப்தி: கபிபிர்யுதோ யம் அனமத் தம் ராமச்சந்த்ரம் பஜே ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். எவருடைய அனுக்ரஹ பலத்தினால், ஸ்ரீ ஹனுமார், கடலை விளையாட்டாக கடந்து, இலங்கையை அடைந்து, ராமருடைய பிரிய மனைவியான சீதா தேவியை பார்த்து, அறுதல் சொல்லி, ராவணனுடைய அசோக வனத்தை அழித்து, அக்ஷன் முதலான ராக்ஷதர்களை வதம் செய்து, தசக்ரீவனான ராவணனைப் பார்த்து, அவனுக்கு நல்ல புத்தி சொல்லி, அவன் கேட்காமல், ஹனுமாருடைய வாலில் தீ வெச்ச போது, அந்த தீயினாலையே, இலங்கையை எரித்து விட்டு, மீண்டும் கடலை கடந்து, வானரர்களோடு வந்து, எந்த ராமரை வணங்கினாரோ, எவருடைய அனுக்ரஹ பலத்தினால், இங்கே இருந்து கிளம்பி, இவ்வளவு கார்யங்களையும் பராக்ரமத்தோட பண்ணி முடித்து,  மீண்டும் வந்து வானரர்களோடு கூட ராமரை வணங்கி, சீதா தேவியோட சூடாமணியை கொடுத்து, அவர் மனசை  சந்தோஷப் படுத்தினாரோ, அந்த ராமரை பஜிக்கிறேன். தம் ராமச்சந்திரே  பஜேஹம்னு முடியறது, ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்.

यस्य श्री हनुमान् अनुग्रह बलात् तीर्णांबुधिर्लीलया लङ्कां प्राप्य निशाम्य रामदयितां भङ्क्त्वा वनं राक्षसान् |

अक्षादीन् विनिहत्य वीक्ष्य दशकम् दघ्द्वा पुरीं तां पुन: तीर्णाब्धि: कपिभिर्युतो यमनमत् तं रामचन्द्रं भजे ||

நேத்திக்கு தான் கேள்வி பட்டேன், இந்த ஸ்லோகத்தை ஸ்வாமிகள் ஒருத்தர்கிட்ட, இதை  தினம் இருவத்தொரு ஆவர்த்தி சொல்லி, நாற்பதெட்டு நாட்களில் ஒரு ஆயிரத்தெட்டு ஆவர்த்தி பண்ணு, அப்படீன்னு சொல்லி இருக்கார். அந்த அளவுக்கு இந்த ஸ்லோகத்துக்கு ஸ்வாமிகள் முக்யத்வம் தந்துருக்கார்னு கேட்டதுனால, இதை உங்க கிட்ட இன்னிக்கு பகிர்ந்துண்டேன்.

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

3 replies on “யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத்…”

Captivating as usual. Keep posting for the ordinary soul like me to drink Ramayanam Ennum Thean.

Another request. Is there any audio recording of Pravachan by Sri Govinda Damodara Swamigal? If so, can you please share with me/us.

Thanks once again for the great service you are doing for the humanity.

ராமாயணம் எனும் தேன் என்ற தலைப்புக்கு உகந்தவாறு தேன் எனும் அமுதத்தை அள்ளிப் பருகுமாறு சுவையாக எடுத்துரைத்த கணபதிக்கு நன்றி!
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் த த்ர கருதமஸ்த காஞ்சலிம் பாஷ்பவாதி பரிபூர்ண லோசனம் மாருதிம்நமத
ராக்ஷ ஸா ந்தகம்
என்ற ஸ்லோகத்தில் சாரத்தைப் பிழிந்து சுவையாக அள்ளிப் பருகுமாரு சுவை மிக்க தேனாக அளித்தது எங்கள் பாக்யம் !
தொடரட்டும்.உங்கள் பணி!
ஜெய் ஜெய் ராம ராம….

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்த சுவையோடு கூடிய உபன்யாசம்!!
ஸ்வாமிகள் கடாக்ஷம் பரிபூரணமாக இருக்கு !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.