Categories
Ramayana One Slokam ERC

குரு என்கிற மாலுமி, பகவத் அனுக்ரஹம் என்கிற அனுகூல காற்று

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தர காண்டலத்திலேர்ந்து முப்பத்தொன்பதாவது ஸர்கத்துல கடைசி ஸ்லோகம். ஹனுமார் சீதாதேவி கிட்ட, கடைசியாக விடைபெற்று கிளம்பும் போது சொல்ற ஸ்லோகம்,

नास्मिंश्चिरं वत्स्यसि देवि देशे रक्षोगणैरध्युषितेऽतिरौद्रे ।

न ते चिरादामगमनं प्रियस्य क्षमस्व मत्सङ्गमकालमात्रम् ।।

நாஸ்மின் சிரம் வத்ஸ்யதி தேவி தேஷே, ரக்ஷோகணை: அத்யுஷிதேதிரௌத்ரே |

ந தே சிராத் ஆகமனம் ப்ரியஸ்ய க்ஷமஸ்வ மத் ஸங்கமகால மாத்ரம் ||

அப்படினு ஒரு ஸ்லோகம். அதுக்கு என்னஅர்த்தம்னா, “தேவி”, சீதாதேவிய கூப்பிட்டு சொல்றார், “நாஸ்மின் சிரம் வத்ஸ்யதி தேஷே”  அஸ்மின் தேஷே, இந்த தேசத்தில், சிரம், ரொம்ப காலம் நீ வசிக்க வேண்டி இருக்காது. “ரக்ஷோகணை: அத்யுஷிதேதிரௌத்ரே” இந்த ராக்ஷர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டு, நீ வெகு காலம் இங்கே தங்க வேண்டி வராது, “ந தே சிராத் ஆகமனம் ப்ரியஸ்ய” உன்னுடைய பிரியமான ராமர் வெகு விரைவில் வந்துவிடுவார், “க்ஷமஸ்வ மத் ஸங்கமகால மாத்ரம்” நான் அவரை போய் பார்க்கும் அந்த ஒரு கொஞ் நேரம் பொறுத்துக்கோ” அப்படிங்கிறார்.

“நான் இங்கிருந்து திரும்பி போய் ராமரைப் பார்த்து, சீதை எங்கேயிருக்கா என்கிற செய்தியை சொல்லும் அந்த கொஞ்சம் நேரம் தான் நீ பொறுக்கணும், அவர் ஓடி வந்துடுவார், உன்னை மீட்டுன்னு போறதுக்கு”, அப்படினு சொல்றார், ரொம்ப ஒரு அழகான ஸ்லோகம்.

நாம வசிக்கிற வீட்டுல, ஏதோ தொல்லைகள்,  neighbors சரியில்லை, அந்த மாதிரி தொல்லைகள், அல்லது, officeல அந்த மாதிரி ரொம்ப  ச்ரமங்கள் இருந்தா கூட, இந்த ஸ்லோகத்தை சொன்னா, “இந்த இடத்துல நீ ரொம்ப நாள் இருக்க மாட்டாய், இந்த கஷ்டத்துல இருந்து நீ சீக்கிரம் மீண்டு விடுவாய்”, அப்படிங்கிற, வார்த்தைகள் இருக்கறதுனால, சுந்தர காண்டத்துல எல்லாமே மந்த்ரம்னு சொல்லுவா, அப்படி இந்த ஸ்லோகத்தை சொல்லிண்டு இருந்தா, நல்ல இடத்துக்கு மாற்றம் ஏற்படும், அப்படின்னு ஒரு பலஸ்ருதி சொல்லுவா.

அதுக்கு மேலான ஒரு பலன் இருக்கு, பக்தி மார்கத்துல, அதை நான் உங்களுக்கு கடைசியில் சொல்றேன்.

இந்த ஸ்லோகம் context என்னன்னா, ஹனுமார் சீதாதேவி கிட்ட “நான் இப்பவே உங்களை கொண்டு போய் ராமர் கிட்ட சேர்த்துடட்டுமா, என்னுடைய தோள்ல ஏத்திண்டு போய், ராமர் கிட்ட கொண்டு போய் விடட்டுமா?ன்னு கேட்கறார், அப்ப, சீதாதேவி, “இல்லப்பா நான் எப்படி உன் முதுகில் ஏறி வருவேன்?” அப்படின்னு சொன்ன பின்ன, “நீ போய் ராமரை சீக்கிரமா அழைச்சிண்டுவா,

स मे हरिश्रेष्ठ सलक्ष्मणं पतिं सयूथपं क्षिप्रमिहोपपादय ।

चिराय रामं प्रति शोककर्शितां कुरुष्व मां वानरमुख्य हर्षिताम् ।।

ஸ மே ஹரிஸ்ரேஷ்ட ஸ  லக்ஷ்மணம் பதிம்

ஸயூதபம் க்ஷிப்ரம் இஹோபபாதய |

சிராய ராமம் பிரதி சோக கர்ஷிதாம்

குருஷ்வ மாம் வானர முக்ய ஹர்ஷிதாம் ||

அப்படின்னு சொல்லி, “நீ சீக்கிரமா ராமர அழைச்சிண்டு வா”ன்னு சொல்றா. அதுக்கப்றம், “ஹனுமார் வாஸ்தவம், நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணுங்கிறஆசையில அப்படி சொன்னேன்,  நீங்க என்னுடைய முதுகுல ஏறிண்டு வர்றதுங்கிறது, நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்று புரிந்து கொண்டேன்”, அப்படின்னு சொல்றார்.

அப்பறம், “நான் வந்து உங்களை பார்த்துட்டு  போனதுக்கு ஞாபகார்த்தமாக, அடையாளமாக, ஏதாவது ஒரு செய்தி சொல்லுங்கள், நான் அதை ராமர் கிட்ட சொல்றேன்”, அப்படின்ன உடனே, சீதாதேவி ஒரு வ்ருத்தாந்தம் சொல்றா, “சித்ரகூடத்துல இருக்கும் போது, ஒருநாள் நான் ராமர் மடில படுத்துண்டு தூங்கினேன். அப்பறம், நான் எழுந்த பின்ன, என் மடியில படுத்துண்டு ராமர் தூங்கினார். அப்போ ஒரு காக்கா வந்து என்னை மார்புல கொத்தித்து. நான் ராமரை எழுப்பினேன், அவர் எழுந்து ஒரு  காக்கா தான் பார்த்த உடனே, என்ன பார்த்து சிரிச்சிட்டு, திரும்பவும் தூங்கிட்டார்.  ஆனா அந்த காக்கா திரும்பவும்  வந்து என்னை கொத்தித்து. அப்போ நான் ராமரை எழுப்பினேன். அவர் ரத்தம் சொட்டறதை பார்த்த உடனே, கோபமாக “யாரு இந்த மாதிரி பண்ணிணா?” ன்னு கேட்டார். “இந்த காக்கா தான்”னு காண்பிச்சேன். அது இந்திரனோட பிள்ளை அப்படி வந்தது. அப்போ ராமர் கடும்கோபம் வந்து, ஒரு புல்லை எடுத்து, ப்ரஹ்மாஸ்திரத்தை சொல்லி, அந்த காக்கா மேல ஏவினார்.  அந்த புல்லே ப்ரஹ்மாஸ்திரமாகி அந்த காக்கைய துரத்தித்து. அவன் போய், தன்னோட அப்பாம்மா, இந்திரன்  கால்ல விழுந்தான். அவா எங்களால ஒண்ணும் பண்ண முடியாது, நீ ராமர் கிட்ட அபசாரம் பண்ணிட்டேன்னு சொன்னா,  அப்பறம் எல்லா தெய்வங்கள் கால்லயும் விழுந்தான், அப்பறம் ரிஷிகள் காலில் எல்லாம் போய்  விழுந்தான். அவா எல்லாரும் “நீ ராமர் கால்ல போய் விழுந்து மன்னிப்பு கேளு, வேற வழியே உனக்கு இல்லைன்னு சொன்னா, அதானல, அந்த, காகரூபமாயிருந்த அவன் வந்து ராமருடைய  காலில் விழுந்தான், மன்னிச்சிடுங்கோ, உயிர்ப் பிச்சை கொடுங்கோனு கெஞ்சினான். “சரி போ, என்னுடைய இடது கண்ணை இந்த அஸ்த்ரம் எடுத்துக்கட்டும்”னு சொல்லிடு, அப்படின்னு ராமர் சொன்னோடனே, அந்த மாதிரி அந்த அஸ்த்ரம், அவனோட இடது கண்ணை வாங்கிடுத்து. அவன் நமஸ்காரம் பண்ணி ஓடி போயிட்டான். இப்படி என்னிடம்  அபச்சாரம் பண்ணின  ஒருத்தனை, நீங்கள் இவ்வளோ கோச்சிண்டேளே, இப்ப என்னை இந்த ராவணன் தூக்கிண்டு வந்துட்டான், அவன் கிட்ட இருந்து நீங்க என்னை மீட்க வேண்டாமா? நான் என்ன தப்பு பண்ணினேன், அப்படினு சீதை புலம்புறா.

அப்பறம், அடையாளமா ஏதாவது சொல்லுங்கோன்னு சொன்னதுனால, தான் துணியில கட்டி வெச்சிருந்த, சூடாமணிங்கற தலைல போட்டுக்ற ஒரு ஆபரணம், சீதாதேவியோட கல்யாண காலத்துல அது போட்டுண்டு இருந்தா  அப்படின்னு அவளே சொல்றா, “இந்த சூடாமணியை ராமர் கிட்ட காட்டு, இதை பாத்தா அவருக்கு , என்னுடைய ஞாபகம், என்னுடைய  அப்பா, அம்மா தன்னுடைய அப்பா எல்லாரோட ஞாபகம் வரும், அதனால இந்த சூடாமணியை ராமர் கிட்ட காண்பி”, அப்படின்னு அதை எடுத்து கொடுக்கறா.

அப்பறம் இன்னொரு சமாச்சாரம் சொல்றா, ஒரு நாளைக்கு நாங்க போயிண்டு இருந்த போது , என் நெத்தில பொட்டு, திலகம் அழிஞ்சிருந்தது, அப்போ அவர் சிகப்பான மனச்சிலா என்ற ஒரு கல்லை உறைச்சு, அந்த பொட்டை எடுத்து என் நெத்தில இட்டு, கன்னத்திலேயும் பூசி விட்டார், இதை ஞாபகப்படுத்து, அப்படின்னு சொல்றா,  இது இவாளுக்குள்ள உள்ள இருக்கற ஒரு  ரஹஸ்யமான, ஒரு intimate ஆனா ஒரு விஷயம்.

அதுக்கப்பறம் ரொம்ப பரிதாபமா சீதாதேவி

हनुमन्यत्नमास्थाय दुःखक्षयकरो भव।।

ஹனுமன், யத்னமாஸ்தாய  துக்கக்ஷயகரோ பவ

“எப்படியாவது முயற்சி பண்ணி இந்த கஷ்டத்துலேர்ந்து என்னை காப்பாத்துப்பா, என்னுடைய துக்கத்தை போக்கு” அப்படின்னு சொல்றா, அந்தமாதிரி நம்முடைய பாபத்னால நமக்கு துக்கம் வருது, அந்த துக்கம் போகணும்னா, நம்ம இந்தமாதிரி நான் பெரியவன் என்று நினைக்காமல், என்னுடைய வினைகள் போகணும்னு, பணிவா பகவான் கிட்ட வேண்டிண்டா, அவருடைய கருணை ஏற்பட்டா தான், நம்மளுடைய கஷ்டங்கள் தீருமே தவிர, நாம ஏதோ சுவாமிக்கு பண்றோம், ஒரு பூஜை பண்றேன், அல்லது ஒரு ஸ்தோத்ரம் சொல்றேன், இல்ல ஒரு கோவிலில் போய் ஏதோ செலவு பண்ணி மண்டகப்படி பண்றேன்னா, அதுனால மட்டும் நம்மளோட கஷ்டம் தீராது. ஸ்வாமியோட கணக்கு வழக்கு கெடையாது. அவருடைய க்ருபை ஏற்படும்படியா நாம நடந்துக்கணும், அப்படி “ஹனுமன், யத்னமாஸ்தாய  துக்கக்ஷயகரோ பவ” முயற்சி பண்ணி என்னுடைய துக்கத்தை போக்கு அப்படின்னு சொல்றா.

ஒரு பத்து ஸ்லோகம் லக்ஷ்மணனோட குணங்களை  கொண்டாடி, அந்த ராமருக்கு லக்ஷ்மணன் கிட்ட ரொம்ப பிரியம், என்னைக் காட்டிலும் லக்ஷ்மணன் கிட்ட  தான் பிரியம், அப்பேற்பட்ட அந்த லக்ஷ்மணனுக்கு க்ஷேமத்தை சொல்லுன்னு சொல்றா. அவனையும் தயவு பண்ண சொல்லுனு சொல்றா, லக்ஷ்மணன் கிட்ட அபசாரமா ஒண்ணு பண்ணிணதுனால, அந்த கோபத்துனால நம்மை வந்து இன்னும் மீட்கவில்லையோ அப்படின்னு நெனைச்சிண்டு, அந்த மாதிரி என் தப்புகளெல்லாம் மன்னிச்சு என்னை வந்து மீட்டுண்டு போக சொல்லு அப்படின்னு சொல்றா.

அப்பறம்  சீதை ஒண்ணு கேட்கறா “ஹே ஹனுமான், நீ வாயுகுமாரன், நீ கருடனை போல, வாயுவை போல எங்கும் போகற. அதனால நீ கிளம்பி வந்துட்ட, கடல் தாண்டி வந்து என்ன பார்த்த. மத்த வானராள் எல்லாம் எப்படி வருவா, மேலும் ராமலக்ஷ்மணா எப்படி வருவா? இந்த கடல்தாண்டி எப்படி வருவா” அப்படின்னு கேட்ட போது, ஹனுமார் சொல்றார் “அம்மா சுக்ரீவனோட சந்நிதியில், எனக்கு ஸமமான வீரர்களோ, எனக்கு மேலான  வீரர்களோ தான் உண்டே தவிர, எனக்கு கீழ ஒருத்தருமே கிடையாது” அப்படிங்கறார் ஹனுமார். அவர் அவ்வளோ humble, அவர் அப்படி  நிஜமாவே தன்னைப் பத்தி அவ்வளோ humbleஆ நினைக்கிறார், சுக்ரீவனோட சந்நிதியில ஏவல் கூவல் பணி பண்றவன் நான் என்கிறார். ஒரு headmaster ஒரு letterஐ post பண்ணனும்னா, ஒரு சின்ன பையனை கூப்பிட்டு “இந்தாடா இதை போய் போஸ்ட் பண்ணு”னு சொல்வார், அதுக்குப் போய் HODஐ கூப்பிடுவாரா,  அந்த மாதிரி, சுக்ரீவனோட சந்நிதியில் ரொம்ப எளிமையானவன் நான், அதனால தானே என்ன தூதனா அனுப்பிஇயிருக்கா, இதுலேர்ந்தே தெரியலையா” அப்டிங்கறார் ஹனுமார், “நானே வந்துட்டேன்னா அவாள்ளாம் பூமியே ப்ரதக்ஷிணம் பண்ணுவா, அதனால வனரா எல்லாம் ஒரு எம்புல இங்க லங்கைல வந்து குதிச்சுருவா, ராமலக்ஷ்மணாளை நான்  என் தோள்ள தூக்கிண்டு வந்துடுவேன், நீங்க கவலை படாதீங்கோ, அப்படின்னு சொல்லிட்டு, இந்த ஸ்லோகத்தை சொல்றார், “அஸ்மின் தேஷே” இந்த தேஷத்தில், நீங்கள் ரொம்ப நாள் வசிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்காது, இந்த ராக்ஷஸர்களின் துன்பத்தில் இருந்து உங்களுடைய பிரியமான ராமர் வந்து, உங்களை மீட்டுண்டு போவார்” அப்படின்னு  சொல்றார்

“மா ருதோ தேவி ஷோகேன மாபூத் தே மனஸோsப்ரியம்”, அழதம்மா உன்னுடைய மனஸுக்கு அப்ரியமான விஷயங்கள்  எதுவுமே  நீ இனிமே எதையும் நினைக்க வேண்டாம்,  “ஷசீவ பத்யா  ஷக்ரேன பத்யா நாதவதி ஹ்யஸி, எப்படி சசி தேவிக்கு இந்திரன் இருக்கானோ, அந்த மாதிரி உனக்கு உன் கணவர் ராமர் இருக்கார், நீ அநாதை கிடையாது” அப்படின்னு  சொல்றார் ‘ராமாத் விஷிஷ்டஹ கோன்யோஸ்தி, கஸ்சித் சௌமித்ரினா சம:’ ராமருக்கு சமமா யாரிருக்கா, லக்ஷ்மணனுக்கு சமமா யாரிருக்கா?  “அக்னி மாருத கல்பௌ தௌ ப்ராதரௌ தவ ஸம்ஷ்ரயௌ” அக்னியையும், வாயுவையும் போன்ற அவ்வளவு பராக்ரமம் படைத்த அவர்கள், உனக்கு துணையா இருக்கா, அதனால் நீ ஏன் கவலைப்படற, இனி கவலைப்பட வேண்டியதே இல்லை நீ” அப்படின்னு அவ்வளோ powerfulஅ வார்த்தைகள் சொல்றார் “தமரிக்னம் க்ருதாத்மானம் க்ஷிப்ரம் த்ரக்ஷ்யஸி ராகவம், லக்ஷ்மணம் ச தனுஷ்பாணிம் லங்காத்தவாரம் உபஸ்திதம்” இந்த லங்கையோட வாசலில்  ராமரும் லக்ஷ்மணரும் தனுஷ்பாணியாக வில்லோடு வந்து நிக்கறதை வெகு விரைவில் நீ பார்ப்பாய்” அப்படீன்னு இந்த பத்து சர்க்கதுல ஒரு இருபது தடவை சொல்றார். “சீக்கிரம் வந்துடுவா, இதோ வந்துடுவா” அப்படீன்னு திரும்ப திரும்ப  ஆறுதலான வார்த்தைகளை சொல்றார்.

சீதாதேவி, “ஹனுமான், என்னால இனிமே ராவணன் பேச்சைக் கேட்டுண்டு உயிரோட இருக்க முடியாது, இன்னும் ஒரு மாசம் பொறுத்துண்டு இருப்பேன், அதுக்குள்ள நீ எப்படியாவது அவாளை அழைச்சுண்டு வா”, அப்படீங்கறா. ஹனுமார் சரீன்னு சொல்றார். சீதை இன்னொன்னு சொல்றா. “நீ இங்க எங்கயாவது மறைவா இருந்துட்டு, நாளைக்கு போயேன், இன்னொரு நாள் உன் முகத்தை நான் பார்த்துண்டு இருக்கேன், எனக்கு உயிர் மேல, நம்பிக்கை வரும்”, அப்படீன்னு சொல்றா. அப்போ ஹனுமார், சொல்றார், “இல்லம்மா, நான் எவ்வளவு சீக்கிரம் போறேனோ அவ்வளவு சீக்கிரம் அவாளை அழைச்சுண்டு வந்துடுவேன், அதனால நான் கிளம்பறேன்”, அப்படின்னு சொல்லிட்டு, சீதா தேவிகிட்ட உத்தரவு வாங்கிண்டு, அந்த சூடாமணியை மடியில கட்டிண்டு, நமஸ்காரம் பண்ணிட்டு ஹனுமார் கிளம்பறார்.

அப்புறம் அசோக வனத்தை அழிச்சு, ராவணனை  பார்த்து, அவனுக்கு நல்ல புத்தி சொல்லிட்டு, அவன், அவர் வால்ல தீ வைக்கறான், அதை கொண்டு, இலங்கையையே எரிச்சுட்டு, இலங்கையை எரிச்சதுனால சீதைக்கு ஏதாவது ஆபத்து ஆயிடுத்தோன்னுட்டு,  பயந்துண்டு, திரும்ப சீதா தேவியை வந்து பார்க்கறார். “சீதாதேவி தான் நெருப்பை எரிப்பாளே தவிர, நெருப்பு சீதா தேவியை ஒண்ணும் பண்ணாது” அப்டீன்னு, தானும் நினைக்கறார், ஆகாசத்துல சாரணர்களும், அதே வார்த்தைகளை சொல்றா. அப்புறம் நேர்ல வந்து சீதா தேவியை பார்த்து, நமஸ்காரம் பண்ணிட்டு, திரும்ப போறார். கண்டேன் சீதையை, அப்படீன்னு நண்பர்களுக்கு சொல்றார்.

நாஸ்மின் சிரம் வத்ஸ்யதி தேவி தேஷே , ரக்ஷோகணை: அத்யுஷிதேதிரௌத்ரே |

ந தே சிராத்த ஆகமனம் ப்ரியஸ்ய க்ஷமஸ்வ மத் ஸங்கமகால மாத்ரம் ||

அப்படீன்னு இந்த ஸ்லோகம், நான் முதல்லயே சொன்ன மாதிரி, நாம் ஏதாவது தப்பான ஒரு இடத்துல இருக்கோம், அப்படீன்னு தோணித்துனா, இதை ஜபிச்சா அங்கேயிருந்து வெளியில வந்துடலாம், இடமாற்றம் ஏற்படும் அப்படீன்னு ஒண்ணு சொல்வா. இது சாதாரணமான ஒரு பலஸ்ருதி. மஹான்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவா, என்ன சொல்றான்னா, “நீங்கள் எல்லாம், குடம் குடமா, மனைவி, குழந்தைகள்,பணத்துக்காக, கண்ஜலம் விடறேள். பகவானுக்காக, இந்த மாதிரி கண் ஜலம் விட்டா, பகவான் கிடைப்பார்” அப்படீன்னு சொல்றார். அப்படி “காளிக்காக நீ என்னிக்கு அழுதே?” அப்படீன்னு கேட்கறார். அப்படி, இந்த மகான்கள், உலக விஷயங்கள்ல வெறுப்பு ஏற்பட்டு, உண்மையான பக்தி பண்ணும் போது, ஹனுமார், சீதா தேவிக்கு வந்து ஆறுதல் சொன்ன மாதிரி ஒரு குரு வந்து ஆறுதல் சொல்வார். அப்போ இந்த ஸ்லோகத்துக்கு என்ன அர்த்தம்னா, “இந்த material worldல, நீ ரொம்ப நாள் இருக்க வேண்டாம்”, அவாளுக்கு இங்க இருக்கறதே ரொம்ப வெறுப்பா இருக்கும், “நீ சீக்கரமே பகவான் கிட்ட போயி சேர்ந்துடுவ, பகவான் உன்னை வந்து மீட்டு கொள்வார்”. அப்படீங்கிற மாதிரி இதுக்கு ஒரு அர்த்தம் புரியும். மஹான்கள் வாக்கு, திருவாசகம் எடுத்தாலும் சரி, எல்லா மஹான்களும். அந்த மாதிரி, அச்சப்பத்துன்னு, ஒரு பத்து பாட்டு சொல்றார். இந்த சிவ பக்தி இல்லாதவாளை எல்லாம் எனக்கு பாக்கறதுக்கே பயமா இருக்கு, அப்டீங்கறார். இந்த, வாழ்க்கையே எனக்கு பாரமா இருக்கு, அப்டீங்கறார். உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!
அப்டீன்னு, உற்றாரை யான் வேண்டேன், எனக்கு உறவுக்காரா யாரும் வேண்டாம், ஊர் வேண்டேன் பேர் வேண்டேன், எனக்கு, இந்த ஊர்காரன் னு பெருமை, இந்த ஊர்ல உனக்கு ரொம்ப நல்ல பேரு, இதெல்லாம் எனக்கு வேண்டாம். கற்றாரை நான் வேண்டேன், எனக்கு படிச்சவா வேண்டாம், கற்பனவும் இனி அமையும், நானும் இனி எதையும் புதுசு புதுசா, படிக்கவே போறது இல்லை, குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா, குற்றாலத்துல இருக்கற கூத்தாடும் சிவ பெருமானே, உன் குரை கழற்கே, கற்றாவின் மனம் போல  உன் பாதங்களுக்கு,  ஒரு தாய் பசு கன்றை நினைத்து எப்படி ஏங்குமோ, அந்த மாதிரி, கசிந்துருக, வேண்டுவனே, எனக்கு அந்த உருக்கத்தை கொடு, அந்த பக்தி, நான் பண்ணிணேன் என்றால் என்னை நீ தானா வந்து என்னை மீட்டுண்டு போயிடுவ, அப்படீன்னு மஹான்கள் சொல்ற மாதிரி, இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.

அதே மாதிரி, நீ இன்னும் கொஞ்ச நேரம் இரு ஹனுமான்! உன்னை பார்த்துண்டே இருக்கறது எனக்கு ஒரு ஆறுதலா இருக்குன்னு, சொல்ற மாதிரி, நாம குருவை தரிசனம் பண்ணி, அவர், கொஞ்சம், அந்த பகவானோட லவலேசத்தை, அந்த அனுபவத்தை காண்பிச்ச பின்ன, குரு மேல ரொம்ப ஒரு பிடிப்பு ஏற்படறது. ஆனா குருங்கிறவர் வழி காண்பிச்சுட்டு அவர் போயிடறார். பகவானை அடையணும்கிற இலட்சியத்தை நமக்குள்ள, ஏற்படுத்திட்டு, குருங்கிறவர், மறைஞ்சு போயிடறார். அந்த மாதிரி ஹனுமார், திரும்பியும் ராமர் கிட்ட போறார். ராமரை அழைச்சுண்டு வரார். அந்த மாதிரி, நாம் குரு காண்பிச்ச ஒரு பஜனத்தை பண்ணனும், அவர் உயிரோட இல்லையே, அப்டீங்கிறதை நினைச்சு, நினைச்சு ரொம்ப தாப பட வேண்டியது இல்லை. குரு என்கிற மாலுமி நம்முடைய படகை ஓட்டினாலும், பகவானுடைய அனுக்ரஹம் என்ற அனுகூல காற்று வீசினா தான், நாம கரை சேர முடியும். அதனால,  குரு பண்றது எல்லாமே சரி. அவர் நமக்கு முன்னாடியே இருந்துண்டு இருக்கணும், அப்ப தான் அனுக்ரஹம், அப்படீன்னு நாம நினைக்க கூடாது, அவர் சொல்லி கொடுத்தத கேட்டு, அதன் மூலமாகவே நாம பகவானை நெருங்கிண்டு இருக்கோம், அப்படீன்னு நம்பிக்கை வெக்கணும், இப்படி ரொம்ப ஒரு அழகான ஸ்லோகம்.

நாஸ்மின் சிரம் வத்ஸ்யதி தேவி தேஷே (15 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

One reply on “குரு என்கிற மாலுமி, பகவத் அனுக்ரஹம் என்கிற அனுகூல காற்று”

🙏🌸🌸 _ப்ரதியொரு அக்ஷரமும், அதன் அழகான வ்யாக்யானமும் மனித ஸமுஹத்துக்கே வரப்ரஸாதம்_ 🙏🙏🌸🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.