Categories
Ramayana One Slokam ERC

வால்மீகி ராமாயணத்தில் ஜோதிஷம்

இன்னிக்கு வால்மீகி ராமாயணத்ல, ராம ஜனனம், பதினெட்டாவது சர்க்கத்துல,  பாலகாண்டத்துல, ராம ஜனனம் ஆகபோறது, அந்த எடத்துல ஒரு ரெண்டு ஸ்லோகத்தை எடுத்துண்டு, ராமாயணத்துல ஜோசியத்தை பத்தி என்ன வரதுன்னு சொல்றேன்,

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதெள ||

நக்ஷத்ரேSதிதிதைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்சஸு |

க்ரகேஷு கர்கடே லக்னே வாக்பதாவிந்துனா ஸஹ |

ப்ரோத்யமானே ஜகன்நாதம் ஸர்வலோகநமஸ்க்ருதம் |

கெளஸல்யா ஜனயத் ராமம் ஸர்வலக்ஷணஸம்யுதம் ||

விஷ்ணோர்அர்தம் மஹாபாகம் புத்ரமைக்ஷ்வாகவர்தனம் |

இன்னும், அடுத்தது, கைகேயி பூச நக்ஷத்ரத்தில் பரதனை பெற்றெடுத்தாள், க்ருஷ்ணருடைய ஜனனம், ராத்திரி பன்னெண்டு மணிக்கு, அதனால, கோகுலாஷ்டமிம் போது ராத்திரில பூஜை பண்ணுவா, ராமருடைய ஜனனம் காத்தால ஆறு மணிக்கு, அதனால, ராமநவமி பூஜை காத்தால பண்ணுவா. அன்னிக்கு காத்தால, ராமர் பொறந்தார், சாயங்காலம் பரதன் பொறந்தான், அடுத்த நாள், லக்ஷ்மணனனும், ஷத்ருக்னனும் சுமித்ரா தேவியிடத்தில் ஆயில்ய நக்ஷத்ரத்தில் உதித்தார்கள், இப்படி இந்த ராம ஜனன கட்டம் அப்படின்னு ஒரு பதினைந்து ஸ்லோகங்கள படிப்பா.

முதலில் “ததஸ்ச த்வாதஸே மாஸே” அந்த   அஸ்வமேதயாக பூர்த்தில, ருஷ்யஸ்ரீங்க முனிவர்  புத்ரகாமேஷ்டி பண்ணி, அதுனால தெய்வங்கள் த்ருப்தி அடைஞ்சு, ஒரு மஹாபுருஷர் அந்த வேதிலயே, அக்னியிலேயே வந்து, ஒரு தங்க பாத்திரத்தில் திவ்யமான பாயசத்தை கொடுத்து, “இதை  உங்களுடைய மனைவிகளுக்கு பகிர்ந்து கொடுங்கோன்னு” சொன்ன உடனே, தசரதர் ரொம்ப சந்தோஷப்பட்டு, கௌஸல்யா தேவிக்கும், கைகேயி தேவிக்கும், சுமித்ரா தேவிக்கும் அதை பகிர்ந்து கொடுக்கிறார். ததஸ்ச த்வாதஸே மாஸே – அதிலிருந்து பன்னிரெண்டாடாவது மாஸத்தில், அதுல, பகவான் ரெண்டு மாஸம், தசரதர் கிட்ட இருந்து, பத்து மாஸம் தேவிகள் கிட்ட இருந்து, அதுக்கப்புறம், அவதாரம் பண்ணிணார்ன்னு ஒண்ணு சொல்லுவா. அந்த பன்னிரெண்டாடாவது மாஸத்தில், சைத்ரே , சித்திரை மாசத்தில், ‘நாவாமிகே திதௌ’ நவமி திதியில், “நக்ஷத்ரே அதிதி தெய்வத்யே”  அதிதியை தெய்வமாக கொண்ட, ஒவ்வொரு நக்ஷத்ரத்துக்கும், ஒரு அதிதேவதை இருக்கு, அந்த மாதிரி, அதிதியை தேவதையாக கொண்ட நக்ஷத்ரம், புனர்வஸு நக்ஷத்தரம், ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்சஸு, அஞ்சு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும்போது, ” க்ரகேஷு கர்கடே லக்னே ” கற்கடக லக்னம், வாக்பதாவிந்துனா ஸஹ – அங்க வாக்பதி: வாக்பதின்னா ‘குரு’ ‘இந்துநா ஸஹ’ இந்துனா சந்திரன், so சந்திரன் கற்கடக லக்கினத்தில் இருக்கார், கூட குரு இருக்கார், குரு அங்க உச்சம், புனர்வஸு நக்ஷத்ரம். அப்படிப் பட்ட சுப முஹுர்த்ததில் ராமர் அவதரித்தார், அடுத்தது, பரதன் எந்த நக்ஷத்திரத்தில் பொறந்தான், ஷத்ருக்னன் லக்ஷ்மணன் எந்த நக்ஷத்ரத்துல பொறந்தா, அப்படிங்கிற விவரங்களும் இருக்கு.

இப்படி வால்மீகி ராமாயணத்துல, இந்த ஜாதகம், ஜனன காலத்தில் கிரஹங்கள் எங்கு இருக்கு, அதை பொறுத்து பலன், அப்படிங்கிற மாதிரி விஷயங்கள், இப்படி ராம ஜனனத்துல ஆரம்பிச்சு, நிறைய இடத்துல வர்றது. தசரத மஹாராஜா “என்னுடைய நக்ஷரத்தை, அங்காரகன், புதன், ராகு மூணுபேரும் சேர்ந்து பீடிக்கிறா, அதனால எனக்கு ஆபத்துன்னு, தெய்வஞர்கள், தெய்வஞஹ, அப்படின்னா   ஜோஸ்யர்கள் அப்படின்னு இன்னிக்கி நாம useபண்ற வார்த்தை, தெய்வம் அப்படிங்கற வார்த்தைக்கே “fate”ன்னு அர்த்தம், destiny, தெய்வஞஹ: ணா fate என்ன அப்படிங்கிறது தெரிஞ்சவர்கள், அதாவது, ஜோஸ்யர்கள், “அவா அப்படி, என்னுடைய நக்ஷரத்தை புத அங்காரா ராகு, மூணுபேரும் சேர்ந்து பீடிக்கிறா, அதனால, ஆபத்துனு சொல்றா, அதனால என் பிள்ளை ராமனை, நாளைக்கே ராஜாவாக நான் பட்டாபிஷேகம் பண்ணிடறேன். நான் முடிவு பண்ணிட்டேன் என்றே, தசரத மஹாராஜா announce பண்ரார்.

சில பேர் நினைப்பா, “இவ்ளோ ஜோசியம், ஜாதகம் பாக்கறா, வசிஷ்டர் ப்ரஹ்மரிஷி இருக்கார், அவர் குறிச்ச நாள்ல ஏன் ராமர் பட்டாபிஷேகம் நடக்காம தடைப்பட்டுது?”, அப்படின்னு கேப்பா, அது இந்த விஷயம் தெரியாதவா தான் கேட்பா, “அந்த முதல் முஹூர்த்தம் ராமர் பட்டாபிஷேகதுக்கு வசிஷ்டர் குறிக்கல, அது தசரதர் தானே குறிச்சது. வசிஷ்டர் கிட்ட கேட்திருந்தா, அவர் பதினஞ்சு வருஷம் பொறுத்து தான் முஹூர்த்தம் குடுத்திருப்பார்”னு ஸ்வாமிகள் சொல்லுவார், அந்த மாதிரி மஹான்களுக்கு முக்காலமும் தெரியும். அந்த தசரதர் குறித்த முஹூர்த்தத்துல, அந்த பட்டாபிஷேகம் நடக்கல. அவருக்கு உயிராபத்து தான் வந்தது. அப்பறமா 14 வருஷம் கழிச்சு பட்டாபிஷேகம் நடந்தது. இப்படி, ஜாதகம், ஸ்வப்னங்கள், அதனால வரக்கூடிய பலன்கள், பரதன் தசரதர் காலம் ஆன போது கெட்ட ஸ்வப்னம் காண்கிறான், த்ரிஜடை சீதைக்கு நன்மையான, ராக்ஷஷர்களுக்கு கெடுதலான ஸ்வப்னம் பார்க்கிறாள். இப்படி ஸ்வப்ன ஸாஸ்திரம் இருக்கு. ராமர் சித்ரகூடத்தில போய் பர்ணசாலை கட்டிண்டு தங்கினார், அடுத்தது கோதாவரி கரையில பஞ்சவடியில் போய் பர்ணசாலை கட்டிண்டு தங்கினார் அப்டிங்கிற எடத்துல வாஸ்து சாந்தி பண்ணிட்டு அங்கே தங்கினார். ஒரு வீடு கட்டினா வாஸ்து சாந்தி பண்ணிட்டு அங்க தங்கணும் அப்படிங்கிற விஷயம் வர்றது.

அடுத்தது, சாமுத்ரிகா லக்ஷணம் அப்படின்னு ஒருத்தருடைய உடற்கூறு, கண் எப்படியிருக்கு, காது எப்படியிருக்கு, உடம்பு பாகங்கள்லாம் எப்படியிருக்கு அப்படிங்கிறத வெச்சுண்டு, ஒரு பலாபலன்கள் சொல்றதுன்னு. சீதாதேவி ராமருக்கு உயிராபத்துன்னு நினைத்து அழும் போது, என்னுடைய சாமுத்திரிகா லக்ஷ்ணத்தின்படி நான் சக்ரவர்த்தினியாக முடி சூடிக்கொண்டு பிள்ளைகள்லாம் பெற்று நீண்டகாலம் இருப்பேன்னு சொன்னாளே, இப்படி ராமருக்கு ஆபத்து வந்துடுத்தே, அப்படின்னு பொலம்பறா. வைதவ்யம் வரலை, அப்படி அவ நெனச்சுக்கிறா, அந்த மாதிரி,  அப்படி அந்த நாகபாஸத்தில அவா கட்டுண்டு இருக்கும் போது, பார்த்த உடனே கவலைப்படறா, அப்போ த்ரிஜடைன்னு கூட வந்தவ சொல்றா “இல்ல, அவருக்கு உயிராபத்து இல்ல, ஏதோ மயக்கமே இருக்கா அவ்வளவுதான்”, கருடபகவான் வந்து அந்த  நாகபாஸத்தில இருந்து அவாள விடுவிச்சுடறார். அந்த மாதிரி, சகுன சாஸ்திரம். இப்படி ராமாயணத்துல, நெறைய இடத்துல ஜோஸ்ய சமாச்சாரங்கள் வரது.

ஜோதிஷம் அப்படிங்கறது வேதாங்கம். வேதம் நான்கு, ரிக் யஜுஸ் ஸாம அதர்வம். அதுக்கு ஆறு அங்கங்கள், அதுல ஒண்ணு ஜோதிஷம். அப்படி ஜோதிஷம்ங்கிறது ஒரு வேத அங்கம், ஒரு சாஸ்த்ரம். அதுனால நம் தேசத்தில்  astronomy அப்படிங்கறது ரொம்பவே develop ஆயிருக்கு, இப்போ நான் சொன்ன இந்த நக்ஷத்ரம், மாஸம், திதி, லக்னம் இதுவே பெரிய calculation. இப்ப சொன்ன இந்த ரெண்டு வரியை வெச்சிண்டு ராமரோட ஜாதகத்தை போட்டுடலாம், அப்படி ஸம்ஸ்க்ருதத்தோட power அது, அப்படி astronomy அப்படிங்கறது ரொம்ப wonderfulஅ  develop ஆயிருக்கு, இன்னிக்கும், formulaவ வெச்சிண்டு, அதுல கொஞ்சம் adjustment பண்றது, formulaவ வெச்சு கணிக்கற பஞ்சாங்கத்துக்கு வாக்ய பஞ்சாங்கம்னு பேரு, அது கூட நேரா வானத்தில் பாத்து கொஞ்சம் adjustment பண்றதுக்கு பேரு த்ருக்கணிதம், பார்த்து caliberations பண்ணி த்ருக் – பார்த்து, கணிதம் – calculations பண்ணி, பண்றதுக்கு, பேரு, த்ருக்கணிதம் னு பேரு. மஹாபெரியவா, நம்ம மடத்துல, த்ருக் கணிதம் தான், உபயோகப் படுத்தறோம், எல்லாரும், அதை உபயோகப் படுத்துங்கோ னு சொல்லி இருக்கா. ஸ்வாமிகள், அதைத் தான் உபயோகப் படுத்தினார். மடத்து பஞ்சாங்கம்னு சொல்வா. இன்னிக்கும், ஜோசியர்கள், த்ருக்கணிதம் தான் உபயோகப் படுத்தறா. ஏன்னா, அவாளுக்கு accuracy வேணும். அப்படி, ஒரு நாழிகை, வினாடி, தவறாம, correctஆ என்னிக்கு எப்போ, கிரகணம், பிடிக்கப் போறது, விடப் போறதுங்கிறது, முதற்கொண்டு, ஒரு விதமான, telescope மாதிரி equipment ம் இல்லாம, calculate பண்ண தெரிஞ்சிருக்கு. ஆதி காலத்துலேயே ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு, முன்னாடியே, நம்மோட முன்னோர்களுக்கு, தெரிஞ்சிருக்கு. அப்படி, astronomy ங்கிறது, ரொம்ப highly developed ஆ இருந்திருக்கு. astrology அப்படிங்கிறது, ஒரு astronomy + psychology = astrology ன்னு சொல்லலாம். அதுவும், உபயோகப் படுத்தியிருக்கா. முஹூர்த்தம், குறிக்கறது, ஒரு காரியம், எந்த க்ரஹங்கள் அனுகூலமா இருக்குமோ, அந்த மாதிரி, ஒரு வேளைல கார்யங்கள், ஆரம்பிச்சா நன்னா நடக்கும், அப்படீங்கிற நம்பிக்கையின் பேர்ல, முஹூர்த்தம் குறிக்கறதுங்கிறது, இன்னிக்கும் நாம, கல்யாணங்களுக்கு முஹுர்த்தம் குறிக்கறோம். இதெல்லாம், சாஸ்திரங்கள், இதெல்லாம், வந்து ராமாயணத்துல இருக்கு.

என்னுடைய அனுபவத்துல, ஸ்வாமிகள் தானே, பஞ்சாங்கம், ஜாதகம் பார்ப்பார். தினமும், கார்த்தால எழுந்தா, ஒரு நாளுக்கு, பஞ்ச அங்கம், அஞ்சு விதமான, sections ஆர் important aspects. ஒரு நாள் னா, திங்கட்கிழமையா அது, வாரம், திதி, வார, நக்ஷத்ர யோக, கரணம், அப்படீன்னு, அஞ்சு aspects. இந்த அஞ்சும், தெரிஞ்சுகறது, ஒரு புண்யம்னு சொல்லி இருக்கா. திதியை தெரிஞ்சுண்டா, வியாதி போகும், அப்படீன்னு, ஒண்ணொண்ணும், ஒவ்வொண்ணு  பலாபலன்  இருக்கு. மஹாபெரியவா, நித்யம், எழுந்த உடனே, கொட்டகைக்கு போயிட்டு வந்த உடனே, “பஞ்சாங்கத்தை எடுத்து, இன்னிக்கு, திதி, வார, யோக, கரண, நக்ஷத்ரம், படி”, அப்படீன்னு ஒருத்தரை, படிக்க சொல்லி, கேட்பா. அப்படி, அந்த ஒரு கார்த்தால, எழுந்து, அதை கேட்ட உடனேயே, ஒரு maths ல experts ஆ இருக்கிறவா, உடனே, அவாளால, detail ஆ calculations போட்டுட முடியும். அப்பறம் அன்னிக்கு ஒருத்தர், வந்து, யாரானும், ஒருத்தர், ஒரு கேள்வி, கேட்டான்னா,அவா கேட்கற அந்த வேளையோட குணத்தை, வெச்சுண்டு, அந்த வேளை, நல்ல வேளையா, சுமாரான வேளையாங்கிறதை வெச்சுண்டு, அவாளால, answer சொல்ல முடியும், அப்படி, mathematics ல, ஒரு, well developed mind ஆ இருக்கு, இதெல்லாம், இருக்கு. ஸ்வாமிகள், இதெல்லாம், தெரிஞ்சுண்டு, அவர் calculate பண்ணி, ஒருத்தரை, ஸ்வாமிகள், தெரிஞ்சுட்டார்னா அவாளோட, ஜாதகத்தை, குறிச்சு, அதுமூலமா, அவா அவாளுக்கு, வர ஆபத்தை,முன்னாடியே, ஒரு, உபாயங்கள், சொல்லி, உனக்கு, இன்ன தசா புக்தி ஆரம்பிக்கறது, தசா புக்தி,இல்ல, இன்னிக்கு, அவனுக்கு, என்ன தசை புக்தி, அந்தரம், வரைக்கும், ஸ்வாமிகளுக்கு தெரியும். அவாளுக்கெல்லாம் , மஹான்களுக்கு, அதனால, இன்னிக்கு, நீ இந்த trainல போகாதே, அடுத்த train ல போன்னு, சொல்வா. அது வந்து, அவாளுக்கு, பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தும்.

அப்படி எல்லாம் இருந்தாலும், ஸ்வாமிகள், “இந்த science நன்னாயிருக்கு. இதோட, practitionersலாம், இந்த காலத்துல, சரியா இல்லை”ன்னு, அப்படீன்னு, சொல்லி, ஸ்வாமிகளும் சரி, சிவன் சாரும் சரி, என்னை இந்த ஜோஸிய விஷயத்துல ஈடுபட அனுமதிக்கலை, அப்படீங்கிறதை,சொல்லி முடிக்கறேன்.

ஏன்னா, இந்த ஜோஸியம்ங்கிறது, ரொம்ப interesting science. ஒரு வாட்டி, தலையை, கொடுத்துட்டா, அதுகுள்ளா, இருந்து, வெளியே வர்றதுக்குள்ள வயசாயிடும். கடவுள் தான், நம்மை மீட்டு விடணும். அவ்வளோ, interesting ஆ இருக்கும். ஆனா இந்த காலத்துல, அது ஒரு பிழைப்பா போயிடுது. மூணு கேள்வி, ஐநூறு ரூபாய். ஒரு மணிநேரம், ஜாதகம் பாக்கறதுக்கு, 2000 ரூபாய் அப்படி, போயிண்டு இருக்கு. அப்படி இருக்கிறவா, பேரு தெய்வக்ஞர்கள், கிடையாது.

தெய்வக்ஞர்கள் னா, முதல்ல, வேதம் படிச்சு, தர்மசாஸ்திர படி வாழ்ந்து, சத்ய நிஷ்டையினால் வாக் பலிதம் அடைந்து, முக்காலமும் உணர்ந்து, கருணையோட, ஜனங்களுக்கு, விதாயம் சொல்றவா. அவா வந்து, இதை வெச்சு சம்பாதிக்க மாட்டா.  நிறைய ஜாதகங்கள் எல்லாம் பார்க்க மாட்டா. ஒரு நாளைக்கு, ஒரு ஜாதகம் தான் பார்ப்பா. இதை வெச்சு, சம்பாதிச்சு, மாடி வீடு கட்டினான்னா, அதுல பல ஆபத்துகள் இருக்கு. க்ரஹங்களுடைய கோபத்துக்கு ஆளாகி விடுவார்கள்.

“நாமளே, நம்மோட ஜாதகத்தை எல்லாம், கொண்டு போய், அடிக்கடி ஜோசியர் கிட்ட காண்பிக்கவே படாது” அப்படீன்னு பெரியவா எல்லாம் சொல்வா. ஒரு கல்யாணம், அது மாதிரி, முக்கிய நிகழ்ச்சிகள் போது தான், ஜோசியா கிட்டயே போகலாம். ஒரு ஜோசியனே என்னை, விரட்டி விட்டான். ரெண்டாவது தடவை போன போது, “இப்பதானே நீ வந்தே, ஆறு மாசத்துக்கு முன்னாடி, இதுதான், நம்ம பிராம்மணா கிட்ட. ஜாதகக்கட்டை எடுத்துண்டு வந்துட வேண்டியது, அவாள்லாம், உள்ள வெச்சான்னா, வருஷக் கணக்கா, தொடமாட்டா. போடா” அப்படீன்னார். அது ஒரு பெரிய அனுக்ரஹம். அதுக்கப்பறம் எனக்கு இந்த ஜாதகம் பாக்கணும்ங்கிற ஆசையே விட்டுப் போச்சு.

மஹான்கள், எப்படி, ஜோசியத்தை, உபயோகப் படுத்திண்டு இருந்தான்னா, மனசை, சமாதானப் படுத்திக்கறதுக்கு, வாழ்க்கைனா, இந்த ஏற்றத்தாழ்வுகள், இருக்கத் தான் செய்யும். நாம இங்க வந்து பொறந்துருக்கோம்னாலே, வாழ்கையில பாபமும், புண்யமும், கலந்து, பண்ணி இருக்கறதுனால, தான், நமக்கு ஜன்மா வந்திருக்கு. அதனால பாபத்தோட effects வரத்தான் போறது. அப்படீங்கிற ஞானத்தோடு, கஷ்ட தசையில் மனசு தளராம இருக்கிறதுக்கு, ஒரு ஆறுதலுக்கு, இந்த ஜோசியத்தை, உபயோகப் படுத்தியிருக்காளே, தவிர, இதை வெச்சுண்டு, எனக்கு, promotion வருமா, நான் foreign போவேனாங்கிறது, எல்லாம் அந்த காலத்துல பண்ணலை.

அதாவது, கர்மா theory ன்னு ஒண்ணு இருக்குதான், அந்த கர்மா theoryல ஸ்வாமிகள் ஒண்ணு சொல்வார், இன்னின்ன கஷ்டத்துக்கு, ஏதோ திடீர்னு ஒரு, உடம்புக்கு வந்தது, ஒரு வியாதி வந்தது, திடீர்னு, ஒரு குடும்பதுல ஏதோ ஒரு கஷ்டம் வந்ததுன்னா, இந்த கஷ்டம் எதுனால, எந்த பாபத்தினால் வந்தது அப்படீன்னு, சொல்ற ஒரு புஸ்தகம் இருக்காம். அந்த புஸ்தகத்தை பார்த்து, அதுல சொன்ன ஒரு பரிகாரத்தை, பண்ணுவா. அந்த புஸ்தகதுல நான் பார்த்தபோது, நூத்துக்கு, தொண்ணூறு இடத்துல, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பரிகாரமா, சொல்லியிருக்கா. ஸ்ரீ ருத்ரஜபம், பரிகாரமா சொல்லி இருக்கா. அதுனால, நித்யம், சஹஸ்ரநாம பாராயணம், பண்ணிண்டு இருக்கிறவாளுக்கு, ஒரு விதமான கிரஹங்களும், ஒண்ணும் affect பண்ணாது, ரெண்டாவது,

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்தவதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

போன்ற பதிகங்கள் இருக்கு. இந்த மாதிரி பதிகங்களைச் சொல்லிண்டு, பகவான் கிட்ட, பக்தி பண்ணிண்டு, இருக்கிறவாளுக்கு, கிரஹங்கள் ஒண்ணும் பண்ணாது. அடுத்தது சந்தியா வந்தனம், பண்ணும் போது, “ஆதித்யம் தர்ப்பயாமி” “ஸோமம் தர்ப்பயாமி” ன்னு நவ க்ரஹங்களுக்கு, தர்ப்பணம், பண்றவாளை, க்ரஹங்கள் ஒண்ணும் பண்ணாது. அப்படி நாம ஒரு தெய்வ வழிபாட்டை, ஒரு கடமையா பண்ணி, அடக்கத்தோட இருந்தா, ஒரு சின்னக் கஷ்டம் வந்தாலும், என்னடா கஷ்டம் வரது, அப்படீன்னு, ஒரு ஜோசியன் கிட்ட போனா, இப்பல்லாம், மாட்டிக்கறோம். எல்லா ஜோசியாளும், பெரியவா அனுக்ருஹம் பெற்றவாதான். பெரியவாதான் அவாகிட்ட பேசறா, அப்படீ சொல்லிக்கறா.

ஒரு வாட்டி, சிவன்சாருக்கு நாடி ஜோசியத்துல, அவருடைய ஓலைச் சுவடி, யாரோ எழுதி கொடுத்திருக்கா. அதை படிச்ச பின்ன, நான் ஒருநாள், எங்கயோ காஞ்சிபுரம் தாண்டி, தேடி போயி, ஒரு நாடி ஜோஸியரைப் பார்த்தேன். அவன் சொன்னது, ஒண்ணும் புரியலை. பொதுவா நன்னாதான் சொன்னான். அதை வந்து, சிவன்சார் கிட்ட, சொன்னேன். நீ ஏன் போனேன்னு கேட்டார். இனிமே போகதே வேண்டாம் இது, அப்படீன்னு, சொல்லிட்டார். அது மாதிரி, இந்த காலத்துல, practioners சரியா இல்ல, கார்யங்கள், பண்றதுக்கு தெய்வ பலம், வேணும். மனித முயற்சியும் வேணும். யத்தனமும் பண்ணனும், அப்படீங்கிறதை வெச்சுண்டு, அந்த தெய்வ தெய்வ பலம் கூடறதுக்கு, ஏதாவது, ஒரு வழிபாட்டை, நித்யம், கடமையா, பண்ணிண்டு இருந்தா ஜோசியாள் கிட்ட போகாம இருக்கலாம். போகாம இருக்கறது, ரொம்ப க்ஷேமம். அவசியம்னா, வாழ்கையில ஒரு தடவை, ரெண்டு தடவை, ஆத்துல, கல்யாணம், வர்றது, அப்படீன்னா, நன்னா படிச்சவாளா, ரொம்ப ஒழுக்கம் இருக்கறவாளா, பேராசை இல்லாதவாளா, நமக்கு தெரிஞ்சவாளா, நம்ம க்ஷேமத்தை நினைக்கறவாளா, யாராவது, ஒருத்தரை, தெரிஞ்சுண்டு, அவா சொல்றதை கேட்டுண்டு, நம்ம கார்யங்கள், பண்ணிண்டு, போகலாம்., அப்படீங்கிறது, எனக்கு, அவா காண்பிச்ச வழி.

வால்மீகி ராமாயணத்தில் ஜோதிஷம் (17 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

One reply on “வால்மீகி ராமாயணத்தில் ஜோதிஷம்”

Yet another informative and wonderful explanation.

பஞ்சாங்கம்கறது ஐந்து (பஞ்ச) அங்கங்களை கொண்டதுங்கற information கூட சேர்த்து, daily அந்த அஞ்சு important aspects என்னென்னங்கறத தெரிஞ்சுக்கறதுனாலே புண்ணியம் கிடைக்கும்ங்கறது additional surprising information.

இந்த வருஷத்து மகர சங்கராந்தி சமயத்துல எல்லாருக்கும் ஒரே confusion எத்தனை மணிக்கு தர்ப்பணம் பண்ணனும், எத்தனை மணிக்கு பொங்கல் பானை வைக்கணும்னு…. Whether to follow the Drik panchank or Vakya panchank. Now I came to know the difference between the two and which one to follow.

கடைசில முத்தாய்ப்பா அடிக்கடி ஜோசியர்ட்ட போகாம இருக்கறது க்ஷேமம்ன்னு சொல்லிருக்கேள், which is 100% true for these days.

மகா பெரியவா சரணே ஷரணம்னு அவர் பாதகமலத்தை பிடிச்சுண்டு இருந்தாலே போதும் வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளை சமமா பாக்கறதுக்கான பக்குவம் வந்துடும்.

Thank you for this enlightening post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.