Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பத்தொன்பதாவது ஸ்லோகம் – முருக நாம ஜபத்தால் மனமும் இந்த்ரியங்களும் அடங்கும்

ஸுப்ரமண்ய புஜங்கம் பத்தொன்பதாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script above)

நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல பதினெட்டாவது ஸ்லோகம்,

इहायाहि वत्सेति हस्तान्प्रसार्या-

ह्वयत्यादराच्छङ्करे मातुरङ्कात् ।

समुत्पत्य तातं श्रयन्तं कुमारं

हराश्लिष्टगात्रं भजे  बालमूर्तिम् ॥ १८॥

இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா

ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத் |

ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்

ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் ||

ன்னு பார்வதி தேவியின் மடியிலிருந்து முருகக் குழந்தையை பரமேஸ்வரன் என்கிட்ட வான்னு கூப்பிட்ட உடனே துள்ளி ஓடி அப்பா கிட்ட போன உடனே அப்பா அந்த குழந்தையை அள்ளியெடுத்து அணைக்கிறார். இந்த ரூபத் த்யானம் சோமாஸ்கந்த மூர்த்தி-ம்பா சோமாஸ்கந்த மூர்த்தி-ங்கற வார்த்தை உமையோடும், ஸ்கந்தனோடும் கூடிய பரமேஸ்வரனுடைய திரு உருவம்னு அர்த்தம். எல்லா கோவிங்கள்லேயும் சோமாஸ்கந்த மூர்த்தியின் அழகழகான சிற்பங்கள், மூர்த்தங்களும் இருக்கும், அந்த  சோமாஸ்கந்த மூர்த்தி த்யானம்-ன்னு இந்த ஸ்லோகத்துல சொல்றா. சாஸ்திரிகள் சொல்றார். இன்னொன்னு விசேஷமா சொல்லியிருக்கார். முருகப் பெருமானுடைய ஷடக்ஷரி மந்த்ரத்துல  சரவணபவ-ங்கிறதுல. இந்த முதல் இரண்டு அக்ஷரங்கள்  சர-ங்கறது சக்தி கண்டம்னும் வண-ங்கறது குமார கண்டம்னும், பவ-ங்கறது சிவ கண்டம்னும். இந்த சிவ சக்தியோடு கூடிய குமார ஸ்வாமியை த்யானம் பண்றது தான் இந்த  ஷடக்ஷரி. அப்படி அந்த ஷடக்ஷரியை ஜபம்  பண்றவாளுக்கு எல்லா சௌபாக்கியங்களும் சித்திக்கும்-ன்னு சொல்லியிருக்கார். இன்னிக்கு முருகனுடைய பதினோரு நாமாவளிகளை கொண்ட ஒரு ஸ்லோகம்.

कुमारेशसूनो गुह स्कन्द सेना-

पते शक्तिपाणे मयूराधिरूढ ।

पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन्

प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥  १९ ॥

குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா

பதே சக்தி பாணே மயூராதிரூட |

புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்

ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் ||

ன்னு ஒரு ஸ்லோகம். இதுல ‘குமார: ங்கறது பன்னிரண்டு வயது பிள்ளையை குமாரன்னு சொல்லுவா. அப்படி முருகப் பெருமான் பிறந்து ஒரே நாள்ல குமாரனாக வளர்ந்து, தேவர்களுக்கு சேனாதிபதியா அவருக்கு பட்டாபிஷேகம் பண்ணி வச்சா. பார்வதி தேவி கொடுத்த சக்தி ஆயுதம், வேலை எடுத்துண்டு போய், அசுரர்களோடு யுத்தம் பண்ணி சூரபத்மனை வதம் பண்ணறார். அந்த குமரா-ங்கறது அந்த நாமா. ‘ஈஷஸூனோ’ ‘ஈஷ:’ ன்னா உலகத்துக்கே தலைவன் பரமேஸ்வரன் ன்னு அர்த்தம். ‘ஸூனு:’ அவருடைய குழந்தை ன்னு அர்த்தம். ‘ஸூனு:’ முதல் விபக்தி. ஹே குமார, ஹே ஈஷ ஸூனோன்னா விளி வேற்றுமை ன்னு சொல்லக்கூடிய எட்டாவது விபக்தி. ‘குஹ’ ன்னா ஹ்ருதய குஹையில் வசிக்கும் ஆத்ம ஸ்வரூபமான பகவான் ன்னு அர்த்தம். ‘ஸ்கந்த’ ன்னா பக்தர்களுடைய பாபங்களை போக்குபவர், முக்தி என்ற பரம புருஷார்த்தத்தை அளிப்பவர்ன்னு அர்த்தம். ‘ஸ்கந்திர் கதி: சோஷனையோ யஹ:’ அப்படீன்னு ஒரு தாதுவை எடுத்துண்டு விசேஷ அர்த்தம் சொல்லி இருக்கார் சாஸ்த்ரிகள். பொதுவாக ஸ்கந்தங்கற பதத்துக்கு  கங்கா தேவி அந்த கர்பத்தை தாங்க முடியாம, அவளிடமிருந்து நழுவி  இந்த சரவணப் பொய்கையில  விழுந்து ஆறு குழந்தைகளா ஆனது அப்படீங்கறதுனால ஸ்கந்த-ங்கற வார்த்தைக்கு  நழுவறது-ன்னு அர்த்தம். அப்படி ஒரு பொருள் சொல்லுவா.

‘ஸேனாபதே’ தேவர்களுடைய சேனைக்கு அதிபதியா இருந்தவர் ன்னு ஒரு அர்த்தம். தேவஸேனாங்கற இந்திரனுடைய பெண், ஐராவதம் வளர்த்த அந்த தேவசேனையினுடைய பதி கணவர்ங்கற அர்த்தத்திலேயும்  ‘ஸேனாபதே’. ‘சக்திபாணே’ அம்பாள் கொடுத்த சக்தி ஆயுதம் வேலாயுதத்தை கையிலே வச்சிண்டிருக்கார். ‘மயூரதிரூட’  வேதமாகிய மயிலின் மேல் அமர்ந்திருப்பவரே! ‘புளிந்தாத்மஜாகாந்த’ புளிந்தன் என்ற வேடனுடைய பெண் புளிந்தாத்மஜா-வள்ளி. காந்தன்னா வள்ளியினுடைய கணவன். ‘பக்தார்த்தி ஹாரின்’ ஆர்த்தி-ன்னா கஷ்டம், பக்தர்களுடைய கஷ்டங்களை போக்குபவர். ஹே தாரகாரே: தாரகனுக்கு சத்ருவே, ஹே ப்ரபோ: ப்ரபோ-ன்னா ஸ்வாமி உடையவர். அவர்தான் நமக்கெல்லாம் தலைவர். ‘மாம்  ஸதா த்வம் ரக்ஷ’ நீ என்னை எப்பொழுதும் காப்பாற்ற வேண்டும்.

कुमारेशसूनो गुह स्कन्द सेनापते शक्तिपाणे मयूराधिरूढ ।

पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन् प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥  १९ ॥

இந்த நாமாவளிகளுக்கு தேதியூர் சாஸ்திரிகள் ரொம்ப விசேஷமான ஆச்சர்யமான ஒரு அர்த்தம் சொல்லியிருக்கார். அந்த மாதிரி மஹான்கள் தான் சொல்ல முடியும். நமக்கு உடம்புல மெய், வாய், விழி, நாசியொடும், செவி-ன்னு சொல்லபடுகிற ஞான இந்திரியங்கள் ஐந்து இருக்கு. ஞான இந்திரியமன்னா inputs-ன்னு புரிஞ்சுக்கலாம். கர்ம இந்திரியங்கள்-ங்கறது outputs வேலை செய்யற கை, கால், வாக்கு, பாயு, உபஸ்தம் என்ற ஐந்து கர்ம  இந்திரியங்கள்.  இதுக்கெல்லாம் ஒரு control மாதிரி நியாந்தா-ன்னு சொல்ற மனசு. அந்தக்கரணம்னு ஒண்ணு இருக்கு. இந்த பதினொன்னும் சேர்ந்துதான் நம்ம சரீரம். இதை அடக்கறது ரொம்ப  கஷ்டம். அதுக்கு குமார ரஹஸ்யம்-ங்கற மஹாமந்த்ரமாக ஸ்கந்த புராணத்துல, சங்கர சம்ஹிதையில் உபதேச காண்டத்தில் ஸனத்குமார ஸ்வாமியினால் நாரத மஹரிஷிக்கு உபதேசம் பண்ணப்பட்ட இந்த பதினோரு மந்த்ரங்களை, ஆச்சார்யாள் ரொம்ப சுலபமா இந்த்ரய நிக்ரஹம்  பண்றதுக்கு ஒரு ஸ்லோகமா நமக்கு சொல்லி கொடுத்துட்டார். அப்படி  ஆசார்யாளோட மஹா கருணை. அதனால இந்த நாம மந்த்ரத்தை ஒரு ஸ்லோக ரூபமா எல்லாரும் சொல்றதுக்காக பண்ணி கொடுத்திருக்கார் ன்னு சொல்றார்.

कुमारेशसूनो गुह स्कन्द सेनापते शक्तिपाणे मयूराधिरूढ ।

पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन् प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥

कुमारेशसूनो गुह स्कन्द सेनापते शक्तिपाणे मयूराधिरूढ ।

पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन् प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥

மந்த்ரம்ங்கறதுனால நிறைய தடவை சொல்லலாம்னு ஆசையா இருக்கு. அப்படி இந்த இந்திரியங்களோட  தொல்லையிலிருந்து என்னை மீட்டு என்னை காப்பாத்தணும்-னு அர்த்தம் சொல்றார்.

அருணகிரி நாதர் எத்தனையோ பாடல்கள்ல முருகப் பெருமானுடைய நாம மஹிமையை பத்தி சொல்லி இருக்கார்.

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு

மிடியாற் படியில் விதனப் படார் வெற்றிவேற் பெருமாள்

அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்

பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே.  (கந்தர் அலங்காரம்)

முருகனுடைய திருநாமத்தைச் சொல்பவர்கள் ,’முடியாப் பிறவிக் கடலில் புகார்’. திரும்ப வந்து இங்க பிறக்க மாட்டார்கள். அவர்கள் முக்தி அடைவார்கள்னு சொல்றார். ‘முழுதும் கெடுக்கும் மிடியால் படியில் விதனப் படார்’. நம்மை முழுதும் கெடுக்கக் கூடிய வறுமையோட வாசல்ல நிற்க வேண்டிய நிலை நமக்கு வராதுன்னு ஒரு அர்த்தம். ‘மிடியால் படியில் விதனப் படார்’ன்னா , வறுமை வந்தாலும் அதனால அவா துவண்டு போக மாட்டான்னு ஒரு அர்த்தமும் சொல்லலாம். ஞானிகளுக்கு அந்த மாதிரி அர்த்தம். ‘வெற்றிவேல் பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே’ அப்படின்னு சொல்றார்.

விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை முருகாவெனு நாமங்கள் முன்புசெய்த

பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்த தனி

வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே (கந்தர் அலங்காரம்)

அப்படின்னு முருகனோட நாமத்துல அருணகிரி நாதருக்குத் தனி அன்பு.

ஸ்வாமிகள் சொல்வார். ரமண பகவான் கிட்ட பணக்கார வக்கீல் ஒருத்தர் வந்தாராம். அவர் ‘எனக்கு அநுக்கிரகம் பண்ணனும்’னு சொன்ன போது , ரமணர் மணல்ல தன் கையால ‘முருகா’ன்னு எழுதினாராம். அந்த பக்தர் அந்த மணலை எடுத்துண்டு போய் பூஜை பண்ணி , முருக நாமத்தைக் கோடிக்கணக்கா ஜபம் பண்ணி , ரமணர் மாதிரியே அவரும் எல்லாத்தையும் துறந்து கௌபீனம் கட்டிண்டு சந்நியாசியா போய்ட்டாருன்னு ஸ்வாமிகள் சொல்வார்.

“முருகன், குமரன், குகன், என்று மொழிந்து

உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்”

அப்படின்னு கந்தர் அநுபூதியில அருணகிரி நாதர் சொல்றார்.

‘முருகா எனவோர் தரம் ஓது அடியார்

முடிமேல் இணைதாள் அருள்வோனே!’ ன்னு சொல்றார்.

(‘எருவாய் கருவாய்’ எனத் தொடங்கும் -திருவீழிமிழலைத் திருப்புகழ்) .

‘முருகா’ன்னு ஒரு தரம் சொன்னா அவாளோட தலை மேல உன்னுடைய ரெண்டு பாதங்களையும் நீ வைப்பாயே ன்னு சொல்றார்.

“முருக சரவண மகளிர் அறுவர்முலை நுகரும்

அறுமுக குமர சரணமென அருள் பாடி ஆடிமிக

மொழி குழற அழுதுதொழுது உருகுமவர் விழியருவி முழுகுவதும் …

…. மணநாறு சீறடியே ” (சீர்பாத வகுப்பு)

முருகான்னு சொல்லி அழுது தொழுது உருகறவாளோட கண் ஜலத்தில உன் திருவடிகள் நனையும்-ன்னு சொல்றார். ஸ்வாமிகள் சொல்வார் ,’பக்திக்கு இது தான் அடையாளம். இது தான் முடிவு. ஏதோ ப்ரவசனம் பண்றோம். திருப்புகழைப் பாடறோம். யாரெல்லாம் நன்னா இருக்குன்னு சொன்னா அப்படின்னு பார்த்துண்டு போயிடாதே. முருக சரவண மகளிர் அறுவர்முலை நுகரும் அறுமுகா குமரா சரணமென மொழிகுழற அழுதுதொழுது உருகுமவர்  விழியருவி முழுகுவதும் ..மணநாறு சீறடியேன்னு அருணகிரி பாடறார் இல்லையா. அதனால நீ தனியா உட்கார்ந்து முருகனைப் பாடி கண்ணுல ஜலம் வரணும். அதுதான் பக்தி ‘ன்னு ஸ்வாமிகள் சொல்வார். அப்படி எல்லா மகான்களும் நாமத்தோட மகிமையைச் சொல்லியிருக்கா.

இன்னிக்கி நாம முருகப் பெருமானுடைய 11 நாமங்களுடையப் பெருமையைப் பார்த்தோம். முருகப் பெருமானுடைய ரூப வர்ணனையைப் பண்ணி அந்த முருகனை எப்படி வழிபடணும்ன்னு இந்த ஸ்லோகத்துல ‘நாம’ மந்திரத்தைக் கொடுக்கிறார். இப்படி வழிபட்டா முருகன் நம்மகிட்ட சந்தோஷம் ஆயிடுவான்.

அடுத்த ஒரு அஞ்சாறு ஸ்லோகங்கள்ல சில ப்ரார்த்தனைகள் பண்றார்.

என் வீட்டில இருக்கிற எல்லாரும், என் வீட்டில இருக்கிற மிருகங்கள் கூட உன் மேல பக்தியோட இருக்கணும்ன்னு வேண்டுதல். கடைசிக் காலத்துல என்னை நீ மயில் மேல வந்து காப்பாத்தணும்ன்னு ஒரு வேண்டுதல். என்னோட துக்க பாரத்தை நீ தாங்கிக்கணும். என்னோட துக்க பாரத்தை இறக்கி வைக்கணும். என்னோட பக்திக்கு எந்த இடைஞ்சலும் இல்லாம, என் மனக்கவலை எல்லாம் போக்கணும்ன்னு ஒரு வேண்டுதல். என் கண்கள், காதுகள் , என்னோட உடம்பு முழுக்க என் இந்திரியங்கள் எல்லாமே உன்னுடைய காரியத்திலேயே இருக்கணும்ன்னு ஒரு வேண்டுதல். வியாதிகள் போகணும்ன்னு ஒரு வேண்டுதல்.

அடுத்து அந்த ஸ்லோகங்கள் எல்லாம் பார்ப்போம்.

कुमारेशसूनो गुह स्कन्द सेना_

पते शक्तिपाणे मयूराधिरूढ ।

पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन्

प्रभो तारकारे सदा रक्ष मां त्वम्

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினெட்டாவது ஸ்லோகம் – மகதேவர் மனமகிழவேயணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமாரஸுப்ரமண்ய புஜங்கம் – இருபதாவது ஸ்லோகம் – கணத்தில் என் பயமற மயில் முதுகினில் வருவாயே >>

One reply on “ஸுப்ரமண்ய புஜங்கம் – பத்தொன்பதாவது ஸ்லோகம் – முருக நாம ஜபத்தால் மனமும் இந்த்ரியங்களும் அடங்கும்”

தினமும் உனது துதி பரவிடும் அடியவர்
மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ
திமிர மலமொழிய தினகரன் என வரு பெருமாளே
என்று பாடுகிறார் அருணகிரி நாதர்
மற்று மொரு சமயம் அறி சமய சாத்திறப் பொருளோனே அறிவுளரி வார்க்கு குணககடலோனே என்றும் முருகனைப் புகழ்ந்து அவன் அருளை நினைந்து உருகுகிறார் அருணகிரியார் !

தளத்தின் சாமி பிழை பொறுக்கும் சாமி குடி நிலை தரிக்கும்சாமி எமை பணிவிதிக்குன்சாமி சரவனதாகப்பன் சாமி என வாரு பெருமாளே !
அருணகிரியார் ஒவ்வொரு பாடலிலும் முருகப் பெருமானின் கருணையைப் பிழிந்து சாராக்கி அமுதமாய் நமக்கு அருளியுள்ளார் !!
சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்ரம் ஆசார்யாள் நமக்கு அளித்த பொக்கிஷம் ! தீராத வினை தீர்க்கும் ஔஷதம் !
அழகான சொற்பொழிவு தக்க மேற்கோள்கள் சகிதம் !
சரவணபவ எனும் திரு மந்திரம் தனை ஸதா ஜபி என் நாவே என்று பாடத் தோன்றுகறதா அன்பர்களே ?
ஓம் சரவணபவ….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.