ஸுப்ரமண்ய புஜங்கம் முப்பத்து ஒன்றாவது ஸ்லோகம் (1௦ min audio file)
ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்தி முப்பதாவது ஸ்லோகத்துல
जनित्री पिता च स्वपुत्रापराधं
सहेते न किं देवसेनाधिनाथ ।
अहं चातिबालो भवान् लोकतातः
क्षमस्वापराधं समस्तं महेश ॥ ३०॥
ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம்
ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத |
அஹம் சாதிபாலோ பவான் லோக தாத
க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச ||
ன்னு நான் ‘அஹம் சாதிபால’ சின்ன குழந்தை, நீ எல்லாருக்கும் அப்பா. உலகத்துக்கே அப்பா. நான் பண்ண தப்பெல்லாம் மன்னிச்சு என்னை ஏத்துக்கோ அப்படீன்னு சொல்றார். நமக்கு ஒரு அம்பது வயசு ஆகும் போது, வேண்டியது எல்லாம் இருக்கு. மனைவி, குழந்தைகள், பணம் , வேலை, car, வீடு ஆனா மனசு ஒரு குறையை உணர்றது. எதோ அல்லல் படறது. குழந்தையாக இருந்த போது ரொம்ப சந்தோஷமா இருந்தோம் அப்படீன்னு தோன்றது, இல்லையா? அம்மா அப்பா பாத்துண்டா. ஏதவாது வேணும்ன்னு கேட்டா உடனே வாங்கி கொடுப்பா, அதோட முடிஞ்சுது. இப்ப நம்ப இது வேணும் அது வேணும்னு பாடுபட்டு, நல்ல college-ல seat கிடைக்கணும், நல்ல வேலை கிடைக்கணும், கல்யாணம் ஆகணும், குழந்தைள் வேணும், வீடு வேணும் , car வேணும், பதவி வேணும் எல்லாம் கேட்டு கேட்டு எல்லாம் கிடைச்சிடுத்து, ஆனா ஒரு மனசுல வந்து ஏதேதோ பாமரத்தனமான கவலைகள். என் மனைவி மதிக்க மாட்டேங்கறா. குழந்தைள் அவ்ளோ அன்பா இல்லை. அவா யாரோடயோ போயிண்டு இருக்கா, இப்படி எல்லாம் கவலை பட்டுண்டு உட்கார்ந்து இருக்கோம். நம்ம ஏன் திரும்பவும் குழந்தை மாதிரி ஆகக்கூடாது? ஆகலாம் அப்படீங்கறார் ஆதிசங்கரர், ‘அஹம் ச அதி பால:’ நான் சின்ன குழந்தை. நீ அப்பா, அந்த மனப்பக்குவம், நம்ம ஒரு அளவு சரணாகதி பண்றதுக்கு வேண்டிய பக்குவம் என்னன்னா,
‘அபராத சஹஸ்ரபாஜனம் பதித பீம பாவர்னவோதரே |
அகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு ||
ன்னு ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம். ”அபராத சஹஸ்ரபாஜனம்’ ஆயிர கணக்கான தப்புகளை பண்ணி, நான் இந்த பவக்கடலின் மத்தியில் விழுந்துட்டேன். எனக்கு யாருமே கதி இருக்கா மாதிரி தெரியலை, ஏதோ அல்லல் படறேன், எனக்கு நீ தான் துணை, உன் க்ருபை ஒன்றை மட்டும், காரணமா வெச்சுண்டு என்னோட ஒரு யோக்கியதையும் பாக்காத, ‘க்ருபயா கேவல ஆத்மஸாத் குரு’ என்னை உன்னை சேர்ந்தவனா நினைச்சுக்கோ அப்படீன்னு சொல்றார். இதுலே ஹரே-னு வர்றது, குஹ ன்னு சொல்லலாம் முருக பாக்தாளா இருந்தா, குரு பக்தின்னா, குரோ ன்னு சொல்லலாம்.
அபராத சஹஸ்ரபாஜனம் பதித பீம பாவர்னவோதரே |
அகதிம் சரணாகதம் குரோ க்ருபயா கேவல ஆத்மசாத் குரு ||
அப்படீன்னு இந்த எண்ணத்தை நாம அடைஞ்சாதான், நாம பாமரனா இருக்கோம், இந்த மனக் கவலைகள் எல்லாம் போகணும்னா, பகவானைத் தான் பிடிச்சுக்கணும் அப்படீங்கிற எண்ணம். அவரைச் சேந்தவனா நாம ஆனா தான், நம்மோட தூய்மைனாலதான் சந்துஷ்டி வர போகிறது என்ற இந்த அறிவுதான் first-step. அந்த first-step-க்கு ஆச்சார்யாள் ஆழகான ஒரு ஸ்லோகம் சொல்றார். அவருக்கு இருக்குற பரிபக்குவத்துனால, என் பாபங்களை எல்லாம் மன்னிச்சு என்னை உன்னை சேர்ந்தவனா ஆக்கிக்கொள், அப்படீன்னு இந்த ‘பவான் லோக தாத க்ஷமஸ்வாபராதம் சொன்ன உடனே முருகப்பெருமான் அவரை அணைச்சுண்டு விட்டார் அப்போ அவருக்கு அந்த சந்தோஷம் உடனே,
नमः केकिने शक्तये चापि तुभ्यं
नमश्छाग तुभ्यं नमः कुक्कुटाय ।
नमः सिन्धवे सिन्धुदेशाय तुभ्यं
पुनः स्कन्दमूर्ते नमस्ते नमोऽस्तु ॥ ३१॥
நம கேகினே சக்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம குக்குடாய |
நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து ||
ன்னு நமக்கு ஒருத்தரை ரொம்ப பிடிச்சு சந்தோஷம் ஆயிடுதுன்னா அவாளை நமஸ்காரம் பண்றோம். பெரியவா படத்தை வெச்சுண்டு நமஸ்காரம் பண்றோம்னா பாத்து பாத்து சந்தோஷம், அந்த தண்டத்துக்கு ஒரு பொட்டு, அந்த கமண்டலத்துக்கு ஒரு பொட்டு, உட்கார்ந்து இருக்குற பலகாய்க்கு ஒரு பொட்டு, தோள்களுக்கு, பாதங்களுக்கு இப்படி பண்ணி, சந்தோஷம் படறோம் இல்லையா. ஹனுமாரோட வால்ல போட்டு வைப்பா, ஹனுமார் பக்தி இருக்கறவா.முருகப்பெருமான் வேல்ல வைப்பா, ராமரோட வில்லு மேல. அந்த மாதிரி இவர் வந்து
‘நம: கேகினே’ – உன்னுடைய மயிலுக்கு நமஸ்காரம், ‘சக்தயே சாபி’ – உன்னுடைய வேலுக்கு நமஸ்காரம், துப்யம் நம: உனக்கு நமஸ்காரம், ‘நமச்சாக துப்யம்’ – உன்னுடைய ஆட்டுக்கு நமஸ்காரம், அவருக்கு யுத்தத்தின் போது ஆடு ஒரு வாஹனம், ‘நம குக்குடாய’ – உன்னுடைய சேவலுக்கு நமஸ்காரம், உன்னுடைய கொடிக்கு நமஸ்காரம், ‘நம ஸிந்தவே’ – இந்த கடலுக்கு நமஸ்காரம், இந்த கடற்கரையில நீ இருக்கியே, ‘ஸிந்து தேசாய துப்யம்’ – இந்த கடற்கரை வாசியா நீ இருக்கறதுனால இந்த க்ஷேத்ரத்துக்கு ஒரு நமஸ்காரம் அப்படீங்கறார். ‘தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ அப்படீன்னு, திருத்தொண்ட தொகையில சுந்தரமூர்த்தி நாயனார் பாடின மாதிரி, ‘செந்தில்வாழ் வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ – அப்படீன்னு ஒரு பாட்டு இருக்கு சேய்தோண்ட தொகைன்னு ஒரு மஹான் பாடியிருக்கார், அப்படி அந்த க்ஷேத்ரத்துக்கு ஒரு நமஸ்காரம், அங்கு இருக்கிறவாளுக்கு எல்லாம் நமஸ்காரம் அப்படீன்னு, தன்னை பகவான் ஆட்கொண்டுவிட்டார், அப்படீங்கிற சந்தோஷத்துல நமஸ்காரம் பண்றார்.
இந்த நமஸ்காரம் பண்றது தான் சரணாகதில next-step, நாம லாயக்கு இல்லை, பகவான் தான் க்ருபை பண்ணணும், ஏதேதோ பாபங்கள் பண்ணி இந்த நிலமைல இருக்கோம், இதுலேர்ந்து விடுபடறதுக்கு, பக்தி தான் வழி, அப்படீன்னு அந்த நெறியை புரிஞ்ச உடனே, அடுத்தது பகவான் கிட்ட சரணாகதி பண்றோம், அதுக்கு நமஸ்காரம். நமஸ்காரம்ங்கறது ஆரம்பம் தான், நம்ம பண்றது physical நமஸ்காரம். அந்த பாவனையோட எனக்கு இனிமே எந்த பொறுப்பும் கிடையாது, நீ அந்த பொறுப்பை எடுத்துக்கோ அப்படீன்னு பண்றது தான் ultimate நமஸ்காரம். அந்த மாதிரி ஆதிசங்கரர் பண்ணி, அடுத்த ஸ்லோகத்தில ‘ஜயாநந்த பூமன்-ன்னு இன்னும், முருகப்பெருமானோட பெருமையை புகழ்ந்து ஆடி பாடறார் சந்தோஷத்துல, அது பெரிய பக்தி. நம்ம தினம் நமஸ்காரம் பண்ணணும், அந்த மாதிரி பக்தி ஏற்படறவரைக்கும் நாம நமஸ்காரம் பண்ணிண்டே இருக்கணும்.
யோசிச்சு பார்த்தா, ஸ்ரீமத் பாகவதத்துல
கிருஷ்ணாய வாசுதேவாய ஹரயே பரமாத்மனே |
ப்ரணதக்லேஷ நாசாய கோவிந்தாய நமோ நமஹ ||
ன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு.
நமஸ்காரம் பண்ணுவர்களுடைய க்லேஷத்தை போக்கும் கோவிந்தனுக்கு நமஸ்காரம், அப்படீன்னு அர்த்தம். இந்த ஸ்லோகம் பாகவத காயத்ரிம்பா, அப்படீ அவ்வளோ ஏத்தம், இந்த முப்பத்திரெண்டு எழுத்து இருக்கிற ஸ்லோகத்தை சொன்னாலே பாகவதத்தை சொன்ன புண்ணியம்,
கிருஷ்ணாய வாசுதேவாய ஹரயே பரமாத்மனே |
ப்ரணதக்லேஷ நாசாய கோவிந்தாய நமோ நமஹ ||
ன்னு நமஸ்காரத்துக்கு அவ்வளோ பெருமை.
ராமாயணத்தை எடுத்துண்டா விபீஷணன் வந்து நமஸ்காரம் பண்ண உடனே, ராமர் கொடுத்த வாக்கு.
ஸக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி எதத் வ்ரதம் மம ||
என்னை வந்து நமஸ்காரம் பண்ணா, நான் அவனுக்கு அபயம் கொடுக்கறேன் என்று பகவான் ராமர் கொடுத்த வாக்கு. இது அந்த ராமாயணத்தோட சாரமாக சரணாகதியை சொல்றா.
அருணகிரி நாதர் பண்ண எல்லாத்துலேயும், திருவகுப்பு ரொம்ப ஒசத்தி, அதுல சீர்பாத வகுப்பு ரொம்ப ஒசத்தி, அந்த சீர்பாத வகுப்புல நடுநாயகமா,
முருக சரவண மகளிர் அறுவர் முலை நுகரும்
அறுமுக குமர சரணம் என அருள் பாடி ஆடி மிக
மொழி குழுற அழுது தொழுது உருகுமவர் விழி அருவி
முழுகுவதும் வருக என அறை கூவி ஆளுவதும்
அந்த குமர சரணம், அப்படீன்னு சரணாகதி பண்றவாளை, ‘வருகவென அறைகூவி ஆளுவதும்’, அவளை வான்னு கூப்பிட்டு, ஆட்கொள்வார் முருகப் பெருமான், அப்படீன்னு சொல்றார். அப்படி அருணகிரி நாதரோட எல்லா புஸ்தகங்களின் சாரம்-ன்னு பார்த்தா. இந்த முருகப் பெருமானோட பாதங்கள்ல சரணாகதி பண்றதுதான் அப்படீன்னு தோண்றது.
நம்ம பெரியவா பக்தியா இருந்தா
‘அபரா கருணாஸிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் |
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம் ||
ன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு. அதைச் சொல்லி நமஸ்காரம் பண்ணலாம். அப்படி பகவானை நமஸ்காரம் பண்ணி அவனை சேர்ந்தவனா ஆகறதுக்கு, ஒவ்வொரு நாளும் முயற்சி பண்ணணும், என்னிக்காவது ஒரு நாள், இந்த உடம்பை வெச்சிண்டு பண்ற நமஸ்காரம், அது கூட வாக்கும் சேர்ந்துக்கும், கூட மனசும் சேர்ந்துக்கும். அப்போ, அந்த பாகவனோட அந்த கருணையும் அதுல சேர்ந்து, அந்த சரணாகதியை அவர் ஏற்று நமக்கு அருள் பண்ணுவார், அதுக்கப்பறம்
जयानन्दभूमञ्जयापारधाम-
ञ्जयामोघकीर्ते जयानन्दमूर्ते ।
जयानन्दसिन्धो जयाशेषबन्धो
जय त्वं सदा मुक्तिदानेशसूनो ॥ ३२॥
ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே |
ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ ||
ன்னு இது கடைசி பாட்டு, அப்பறம் பலஸ்ருதி, அப்படி நாம பகவானை ஆனந்தமா பாடிண்டு, இருக்கிற ப்ராரப்த காலத்தை கழிச்சிட்டு போயிடலாம். அப்படி இந்த நமஸ்காரத்தோட பெருமை.
வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா