Categories
Mukunda Mala

முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 41 and 42)

முகுந்த மாலையில நேத்திக்கு 39, 40வது ஸ்லோகங்களில் பகவானுடைய நாமங்களை அடுக்கி இப்பேற்பட்ட இனிமையான நாமங்களை சொல்ல முடிஞ்சாலும் சொல்ல மாட்டேங்கறாளேன்னு இரண்டு ஸ்லோகங்கள்

ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே ।

ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 39 ॥

அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।

வக்தும் ஸமர்தோ²ऽபி ந வக்தி கஸ்சித் அஹோ ஜனாநாம் வ்யஸனாபி⁴முக்²யம் ॥ 40॥

ன்னு ஜனங்களைப் பத்தி சொல்றார். இந்த மாதிரி வள்ளலார் கூட ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ ன்னு சொன்னார் அல்லவா. அருள் கொடுக்கிறதுக்கு நான் காத்திருக்கேன். யாரும் வரலையேன்னு சொன்னாராம். அந்த மாதிரி இவர் சொல்றார். அடுத்த ஸ்லோகத்துல …ன்னு பகவானுடைய நாமங்களை சொல்ல நாக்கு இருக்கு, நாமம் இருக்கு. சொன்னா போறும். அதை பண்ண மாட்டேங்கறான்னு வருத்தப்படறார். இங்க அந்த பக்தியைப் பண்றவாளுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும்கிறதை அறுதியிட்டு சொல்றார்

ध्यायन्ति ये विष्णुमनन्तमव्ययं हृत्पद्ममध्ये सततं व्यवस्थितम् ।

समाहितानां सतताभयप्रदं ते यान्ति सिद्धिं परमां च वैष्णवीम् ॥ ४१॥

த்⁴யாயந்தி யே விஷ்ணுமனந்தமவ்யயம்

ஹ்ருʼத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் ।

ஸமாஹிதாநாம் ஸததாப⁴யப்ரத³ம்

தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாம் ச வைஷ்ணவீம் ॥ 41 ॥

விஷ்ணும்னா எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்னு அர்த்தம். அனந்தம்னா எல்லையில்லாத பரம்பொருள் னு அர்த்தம். அவ்யயம்னா மாறாத பரம்பொருள்னு அர்த்தம். எந்த ஒரு மாற்றமும் கிடையாது. எல்லையும் கிடையாது. எங்கும் நிரம்பி இருக்கக் கூடிய அதே பகவான் நம்முடைய ‘ஹ்ருʼத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம்’ மனசுக்குள்ளயும் ஹ்ருஷிகேச: ன்னு ஹ்ருதய புண்டரீகத்துலயும் எப்பவும் நித்யமா வசிக்கறான். அந்த பகவானை யாரு ‘த்⁴யாயந்தி யே ஸததம்’ எவர்கள் அந்த பகவனை இடையறாது தியானம் பண்றாளோ ‘ஸமாஹிதாநாம் ஸததாப⁴யப்ரத³ம்’ விஷ்ணும், அனந்தம், அவ்யயம் னு பகவானுக்கு அடைமொழிகள் சொன்ன மாதிரி இன்னும் ஒண்ணு சொல்றார். நெருங்கி வந்து தன்னுடைய மனதை பகவான்கிட்ட செலுத்தறவாளுக்கு எப்பொழுதும் அபயம் கொடுப்பவர், தவறாது அபயம் கொடுப்பவர். ராமர் சொல்ற மாதிரி
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீ திச யாசதே |
அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம ||
ன்னு ராமர் சொன்னார். அப்படி தன்னை அண்டினனவர்களுக்கு அபயம் கொடுப்பவனும், ஹ்ருதய தாமரையில் எப்பொழுதும் வசிப்பவனுமான அந்த புண்டரீகாஷனை எவர்கள் தியானம் செய்கிறார்களோ ‘தே த்யாயந்தி’ அவர்கள் ‘தே பரமாம் வைஷ்ணவீம் ஸித்³தி⁴ம் யாந்தி’ அவர்கள் ஒப்புயர்வற்ற வைஷ்ணவ ஸித்தியை, அதாவது வைகுண்டத்தை மோக்ஷத்தை அடைகிறார்கள்னு பிரதிக்ஞை பண்ணி சொல்றார். ‘கௌந்தேய பிரதிஜாநீஹி ன மெ பக்த: ப்ரனஷ்யதி’ ன்னு ஒன்பதாவது அத்யாயம் கீதையில கிருஷ்ணர் அர்ஜுனன் கிட்ட சொல்றார். ‘என் பக்தன் ஒரு நாளும் வீண்போக மாட்டான். நீ இதை பிரதிக்ஞை பண்ணி சொல்லு’ என்கிறார். அதாவது ‘இதை நீ உண்மையாக உணர்ந்து கொள்னு ஒரு அர்த்தம் சொல்லலாம். ஆனா பிரதிஜாநீஹி ங்கிற வார்த்தையை சொல்றதுனால ‘நீயும் இதை பிரதிக்ஞை பண்ணி சொல்லலாம். சந்தேகமே கிடையாது’ ன்னு சொல்றார். அது மாதிரி பக்தன் வார்த்தையை பகவான் காப்பாத்துவார் எங்கிறதை ஒட்டி குலசேகரக் கவி இங்க சொல்றார். யார் பகவானை தியானம் பண்றாளோ அவா கட்டாயம் மோக்ஷம் அடைவார்கள். கட்டாயம் பகவானிடத்தில் சேருவார்கள். எப்படி இவ்வளவு சுலபமான உபாயமா பகவன் நாமா கிடைச்சுக் கூட அதை பண்ணாதவர்கள் தீமையை அடைகிறார்கள்னு வருத்தப்பட்டு சொல்றாரோ, அதே நேரத்துல எவர்கள் இடையறாது பகவந் நாமத்தை ஜபம் பண்றாளோ அவா கட்டாயம் ‘தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாம் ச வைஷ்ணவீம்’ அவர்கள் விஷ்ணு பதத்தை அடைவார்கள்னு பிரதிக்ஞை பண்ணி சொல்றார்.

இந்த இடத்துல எனக்கு ஸ்வாமிகள் ஞாபகம் வரது. அவருடைய உலக வாழ்க்கை பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்த போது, மஹாபெரியவா கிட்ட யாரோ முறையிட்டாளாம். அப்போ மஹாபெரியவா ‘அவர் பாகவதம் படிச்சுண்டு இருக்கார். அவருக்கு ஞானம் வந்துடும். அவர் ஜன்மா ஸார்த்தகமாகும். அவர் வைகுண்டத்துக்கு போவார். அவரை பத்தி நானும் நீயும் கவலைப்பட வேண்டாம்’ ன்னு சொல்லியிருக்கா. அதே மாதிரி பின்னால ஒரு தடவை வேற ஒரு பக்தர் சிவன் சார் கிட்ட இவருடைய குடும்ப நிலைமையை சொன்ன போது சிவன் சார் ‘அவருக்கு வைகுண்டத்துலேருந்து விமானம் வரும். அவர் genuine ஸந்யாசி. அந்த மாதிரி உத்தம ஜீவனை இந்த காலத்துல பார்க்கவே முடியாது. முடிஞ்ச போதெல்லாம் நீ போய் தர்சனம் பண்ணு. அவரை போய் நமஸ்காரம் பண்ணு’ ன்னு சொல்லி, சிவன் சார் தலை மேல இரண்டு கைகளையும் வெச்சு கூப்பி அவரை தியானம் பண்ணுவார். அப்பேற்பட்ட அந்த பக்தர்களோட பேறு, ஞானிகள் கூட வணங்கும் பேறாக இருக்கு.

அதெப்படி அவா சொன்னா? சிவன் சாரோ மஹா பெரியவாளோ அது மாதிரி பிரதிக்ஞை எப்படி பண்ணினான்னா, இந்த வார்த்தை தான். பஜனம் பண்ணினால், கட்டாயம் பகவானை அடைவாங்கிற வார்த்தை. ஸ்வாமிகள் இடையறாது அப்படி பக்தி பண்றாங்கிறது அவாளுக்குத் தெரியும். அப்படி கார்த்தாலேருந்து ராத்திரி இடையறாது பகவானுடைய பஜனத்தை பண்ணிண்டிருந்தார் ஸ்வாமிகள்ங்கிறது அவாளுக்கு ஞான திருஷ்டியினால தெரிஞ்சதுனால ‘அவர் கட்டாயம் பகவான் கிட்ட போய் சேருவார். கோடி ஜன்மாவுல கிடைக்கக் கூடிய பாக்கியம் அவருக்கு கிடைக்கப் போறது. பழைய எதோ ஜன்மாவோட வினையோ, அல்லது நமஸ்காரம் பண்ற பக்தர்களோட வினையோ அவர் வாங்கி அனுபவிகிறார்ங்கிறதை பார்த்து நீ மனம் சலிக்காதே. அவா கிட்ட பக்தியாயிரு’ ன்னு வந்தவாளுக்கு சொல்லிக் கொடுத்தா. அப்படி அந்த

த்⁴யாயந்தி யே விஷ்ணுமனந்தமவ்யயம்

ஹ்ருʼத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் ।

ஸமாஹிதாநாம் ஸததாப⁴யப்ரத³ம்

தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாம் ச வைஷ்ணவீம் ॥

ன்னு சொல்றார். ஞானிகளுக்கும், பக்தர்களுக்கும் கொஞ்சம்தான் வித்யாசம். அந்த ஞானிகள் ‘ஹ்ருʼத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம்’ – ஹ்ருதயத்தின் மத்யத்திலிருக்கிற அந்த பகவானை அவா கண்ணை மூடிண்டு தியானம் பண்ணிண்டு அமர்ந்திருக்கா. பக்தர்கள் உலகத்துல கிடைக்கற எல்லா நல்ல வஸ்துவையும் கண் முன்னாடி அந்த பகவானை குருவாயூரப்பனா வரிச்சு, விக்ரஹத்துல ஸ்வாமியை பிரதிஷ்டை பண்ணி, அந்த பகவானுக்கு பூஜை பண்ணி அந்த பகவானோட ஒன்றி அப்புறம் அந்த பகவானை எல்லாத்துலயும் பார்க்கறா. இது பக்தி. அவ்ளோதான். வித்யாசம். அந்த ஞானிகளுடைய போக்கை பார்த்தாலும், ஆதிசங்கரர் மஹா ஞானி. அவர் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் எழுதினார்

மாயாக்தி விலாஸ கல்பித மஹா வ்யாமோஹ ஸம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம ம் ஸ்ரீக்ஷிணாமூர்த்தயே ||

ன்னு சொல்லி ‘இந்த மாயா சக்தி விலாசத்துனால ஏற்பட்ட இந்த மஹா வியாமோகம், இந்த பெரிய கலக்கத்தை யாரால போக்க முடியும்?’ னா, ‘அந்த தக்ஷிணாமூர்த்தியை நமஸ்காரம் பண்ணா அது போயிடும்’னு சொல்றா. அப்படி ஞானத்தை வேதாந்த விசாரத்துனால தெரிஞ்சுண்டாலும் அதை சுலபமா குருபக்தி, பகவத் பக்தி பண்ணி அடையலாம்னு வழியை நமக்கு காண்பிச்சு கொடுத்திருக்கா. அப்படி ‘ஹ்ருʼத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம்’ ங்கிறதை படிச்சா உடனே ஞானிகள் பார்த்ததைதான் பக்தர்களும் பார்த்து அதே வார்த்தைகளை சொல்றன்னு தோணித்து.

அடுத்த ஸ்லோகம்

क्षीरसागरतरङ्गशीकरा-सारतारकितचारुमूर्तये ।

भोगिभोगशयनीयशायिने माधवाय मधुविद्विषे नमः ॥ ४२॥

க்ஷீரஸாக³ரதரங்க³சீகரா ஸாரதாரகிதசாருமூர்தயே ।

போ⁴கி³போ⁴க³சயனீயசாயினே மாத⁴வாய மது⁴வித்³விஷே நம: ॥ 42 ॥

க்ஷீரஸாக³ரதரங்க³சீகரா – க்ஷீர ஸாகரத்தில், பாற்கடலில் தரங்கங்கள்னா அலைகள். அந்த அலைகள் சீகரான்னா துளிகள் அந்த அலைகள் அந்த பாற்கடல்ல பகவான் படுத்திண்டு இருக்கிறதை தியானம் பண்ணி பார்த்துக்கணும். அதுல பாற்கடல்னா வெள்ளை வெளேர்னு இருக்கும். அதுக்கு நடுவுல பகவான் நீலமேக சியாமளனா படுத்திண்டிருக்கார். அந்த பாற்கடலோட அலைகள் எழும்பி அதோட துளிகள் அவர சுத்தி நக்ஷத்திரங்களை போல இருக்காம். தாராகணம் மாதிரி இருக்கு…அந்த மாதிரி அவருடைய திருமேனியை இந்த பார்கடலுடைய அலைத் துளிகள் நக்ஷத்திரங்களைப் போல அழகு படுத்தறதுன்னு சொல்றார்

போ⁴கி³போ⁴க³சயனீயசாயினே – போகின்னா பாம்புன்னு அர்த்தம். அந்த ஆதிசேஷனையே போகசயனமா – ரொம்ப சுகமா படுத்து தூங்கறதுக்கு ஒரு படுக்கையாகக் கொண்டு அதுல சாயினே – படுத்துண்டு இருக்கார். ‘மாத⁴வாய மது⁴வித்³விஷே நம:’ மது என்ற அரக்கனைக் கொன்ற மாதவனுக்கு என்னுடைய நமஸ்காரம்னு சொல்றார். அந்த பகவானுடைய யோக நித்ரையில அவர் இருக்கிற அந்த ரூபத்தை த்யானம் பண்ணி அவருக்கு நமஸ்காரம்னு தன்னை பகவான்கிட்ட ஒப்படைக்கிறார்.

சாந்தாகாரம் புஜகசயணம் பத்மநாபம் ஸூரேசம்
விஸ்வாதாரம் கனகசத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மிகாந்தம் கமலநயணம் யோகிஹிருத்யானகம்யம்
வந்தேவிஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்

ன்னு புஜக சயனம் – புஜகத்துல படுத்துண்டு யோக நித்ரையில இருக்கறதுனால அவர் சாந்தாகாரமா இருக்கார். ஆனா உலகத்தையே அவர்தான் இயக்கிண்டிருக்கார். ஆனா கண்ணை மூடிண்டு சாந்தமா முகத்துல அந்த புன்னகையோட சிரிச்சிண்டு தூங்கிண்டிருக்கார். அவருக்கு ஸர்வ லோகைக நாதம் – எல்லா உலகத்துக்கும் நாதன். வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் – அந்த பகவானை நான் நமஸ்காரம் பண்றேன்னு சொல்ற அந்த ஸ்லோகம் மாதிரி இந்த இடத்துல

க்ஷீரஸாக³ரதரங்க³சீகரா ஸாரதாரகிதசாருமூர்தயே ।

போ⁴கி³போ⁴க³சயனீயசாயினே மாத⁴வாய மது⁴வித்³விஷே நம: ॥

ன்னு சொல்லி பகவானுக்கு தன்னை அர்ப்பணம் பண்ணிக்கறார். ‘இனிமே நான் என்னைச் சேர்ந்தவன் கிடையாது. நான் பகவானைச் சேர்ந்தவன்’ ன்னு சொல்லி நமஸ்காரம் பண்ணி ‘அந்த பகவானோட ஸ்ருஷ்டியில சிறுதுளி நான்’ ன்னு நினைச்சு தன்னை கரைச்சுக்கறார். அப்படி அழகான இரண்டு ஸ்லோகங்கள். ஸ்ரீரங்கத்துலேயும், திருவனந்தபுரத்துலேயும், அந்த மாதிரி திவ்ய க்ஷேத்ரங்களிலேயும் பாற்கடல்லயும், பகவானுடைய அந்த ஆனந்த திருக்கோலத்தை தியானம் பண்ணிண்டு பூர்த்தி பண்ணிப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< முகுந்தமாலா 39, 40 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரை >>

One reply on “முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை”

ஸ்வாமிகள் சம்சார சாகரத்தில் உழலாமல், ஸதா பகவத் தியானத்தில் வாழ்நாட்களை பாகவதம் சப்தாகம், நாராயணீயம் நித்ய பாராயணம் செய்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உனக்கே பரம் எல்லாவற்றையும் உனக்கே அளித்து விட்டேன் என்னுமாபோல் பகவானுக்காகவே வாழ்ந்த மகான்கள்
ஸ்லோக விளக்க முத்தாய்ப்பாக போக சயனம் பண்ணின்று இருக்கற விஷ்ணுவைச்சேர்ந்தவன் நான் என்னைச் சேர்ந்தவன் கிடையாது, அவருக்கே ஸகலமும் அர்ப்பணம் என்ற சரணாகதி தத்வம் மனதில் உறைகிறது !
ஶ்ரீ ரங்கம், திருவனந்தபுரம், சிதம்பரம் போன்ற கோவில்களில் பெருமாள் ஆனந்த சயனத்தில்
காட்சி கொடுக்கிறார் ! அப்படிப்பட்ட பெருமாளின் தியானத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு அவர் பக்தி பண்ணினதை
மனதில் தியானித்து நாமும் பக்தி செய்து உய்வோமாக !
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.