Categories
Govinda Damodara Swamigal

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி போற்றி

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி போற்றி (7 min audio in Tamizh, same as the script above)

ஸ்வாமிகள் எனக்கு மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்தை நிறைய வாசிச்சு கொண்டு இருந்ததுனால, என்கிட்ட, நீ போய் காஞ்சிபுரத்தில, மஹா பெரியவாளை தரிசனம் பண்ணு, அவா தான் காமாக்ஷி.

குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி னு

சொல்லி, நாலு நமஸ்கராம் பண்ணுன்னு சொல்வார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் Town லேர்ந்து 76-B பிடிச்சு காஞ்சிபுரத்துக்கு போய் மஹாபெரியவாளை தரிசனம் பண்ணிட்டு வந்திருக்கேன். மஹாபெரியவா ஸித்தியாறதுக்கு, ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி சிவன் சாரை தெரிஞ்சுண்டோம். சிவன் சாரை ஸ்வாமிகள் அடிக்கடி தரிசனம் செய்து நமஸ்காரம் பண்ணுவார்.

न हि-अम्-मयानि तीर्थानि न देवा: मृच्छिला- मयाः ||

ते पुनन्ति उरु-कालेन यूयं दर्शन मात्रात: |

நஹ்யம்மயானி தீர்த்தானி நதேவா: ம்ரூத்சிலாமயாஹா |

தே புனந்தி உருகாலேன யூயும் தர்ஸனமாத்ரத: ||

அப்படின்னு ஒரு ஸ்லோகம். இந்த புண்யதீர்த்தங்களும் கோயில்ல இருக்குற சிலா தெய்வங்களும் ரொம்ப நாள் வழிபட்டா ஒரு நாள் அனுக்ரஹம் பண்றா, உங்களை மாதிரி ஸாதுக்கள், மஹான்கள், தர்ஸந மாத்ரத்தில, ஒரு வாட்டி பார்த்தாலே தூய்மைப் படுத்துகிறீர்கள், அப்படின்னு சொல்லி நமஸ்காரம் பண்ணுவார். “சிவன் சார், மஹாபெரியவா எனக்காக எடுத்துண்ட இன்னொரு உருவம்” அப்படின்னு ஸ்வாமிகள் சொல்லுவார்.

சிவன் சாரும், ஸ்வாமிகள் பேரைச் சொன்னாலே கையை தலை மேலே தூக்கி நமஸ்காரம் பண்ணுவார். ஸ்வாமிகள் என்னையும், “அடிக்கடி சிவன் சாரை போய் பார்த்துட்டு வா” ன்னு சொன்னார். அதனால நான் சிவன் சாரை போய் தர்சனம் பண்ணிண்டு இருந்தேன். பெரிய பாக்கியமா இருந்தது.

ஸ்வாமிகளுக்கு கொஞ்சம் உடம்பு ஸ்ரமம் இருந்தபோது நான் வேலைக்கு சேர்ந்துட்டேன், Foreign போற ஒரு Opportunity வந்தது, அப்போ ஸ்வாமிகள் கிட்ட சொல்றதுக்கு எனக்கு கூச்சம். ஏன்னா, அவர் ரசிக்க மாட்டார்னு தெரியும், ஸ்வாமிகள், “மஹாபெரியவா சொல்றதுதான் என்னோட கொள்கை,” அப்படின்னு சொல்லி, எனக்கு தெரிஞ்சே நிறைய பேரை Foreign போக வேண்டாம்னு சொல்லியிருக்கார். அப்ப, நான் சிவன் சார் கிட்ட தான் போயிண்டிருந்தேன், அவர் கிட்ட சொன்னேன் இந்த மாதிரி வாய்ப்பு வந்திருக்கு என்று. அவர், “போய்ட்டு வா” அப்டின்னு சொல்லி, “விசா வந்துடுத்தா, டிக்கெட்ஸ் வாங்கிட்டியா” ன்னு, எல்லாம் விசாரிச்சு என்னை அனுப்பி வைச்சார். Foreign போனேன். லீவ் கிடைக்கும்போதெல்லாம் 4 வாரம், 5 வாரம் லீவு போட்டுண்டு வந்து ஸ்வாமிகளோட இருப்பேன்.

அந்த அமெரிக்கா வாழ்க்கைங்கிறது அப்படியே ஒருத்தரை suck பண்ண கூடியது, (உள்ளே இழுத்து விடும்) போய்ச் சேர்ந்தால் முதலில், அங்கே செலவுகள் எல்லாம் நிறைய இருக்கும். வர வர, அந்த காரோட Insurance, ஒரு மாஸத்துக்கு 400 Dollar கட்டிண்டு இருந்தேன். ஒரு வருஷத்துக்கு 600 Dollar ஆ கம்மியாயிடுத்து, நன்னா கார் ஓட்ட தெரிஞ்சுடுத்துன்னா, Insurance கம்மி பண்ணுவான். கொஞ்ச நாள் இருந்தா, நிறைய கடன் கொடுப்பான், Credit History பில்ட் ஆயிடும், Green card process பண்ண ஆரம்பிச்சுட்டா. நான் வந்து Orlando ங்கிற ஊர்ல இருந்தேன், அங்க State Tax கிடையாது, அங்க எழுபதாயிரம் டாலர் சம்பாதிக்கிறதுங்கிறது, வெஸ்ட் கோஸ்ட் ல நூறாயிரம் (100 thousand dollars) சம்பாதிக்கிற மாதிரி. அப்படி, I was fish in water, தன்னலமா இருக்கிறது என்ன கஷ்டம்! சொகுசு வாழ்க்கையை ரொம்ப தொளைஞ்சு Enjoy பண்ணிண்டு இருந்தேன். ஒரு Nissan Altima, அப்படின்னு ஒரு Luxury Car, ஒரு 750 SQFT- ல தனியா வீடு எனக்கு, யாரோடும் பகிர்ந்துக்கல, அப்படி இருந்துண்டு இருந்தேன்.

ஸ்வாமிகளை தர்சனம் பண்ணுவேன், மூணு வருஷம் ஆச்சு, ஒரு வாட்டி வந்தேன், ஸ்வாமிகள் சொன்னார், “ஏதோ போனே, சம்பாதிச்சே, போதுமே!, இந்த மாதிரி நல்ல குடும்பத்தில் பொறந்துட்டு, இந்த மாதிரி மஹான்களை எல்லாம் தர்சனம் பண்ணிட்டு, அங்க போய் நீ உட்கார்ந்து இருக்கலாமா? நீ திரும்பி வந்துடு, முடிஞ்சப்ப வா, அங்கேயே இருக்காதே, நெய்யை ஊத்தி நெருப்பை அணைக்க முடியாது, அந்த மாதிரி ஆசைகளை அனுபவிச்சுட்டு வரேன், பணத்தை சேர்த்துண்டு வரேன், அப்டிங்கறது கிடையாது. இது வேண்டாம் நமக்கு, அப்படின்னு விட்டு விடு. பதினாறாவது அத்யாயம் பகவத்கீதைல, காமம், குரோதம், லோபம், இது மூணும் நரகத்துக்கு வாயில், அதிலே இருந்து நம்ம மனசை நாம திருப்பினாலொழிய மீள முடியாது அப்டின்னு ஒரு ஸ்லோகம் இருக்கு அதை காண்பிச்சார். மூகபஞ்சசதில

परस्मात्सर्वस्मादपि च परयोर्मुक्तिकरयोः

नखश्रीभिर्ज्योत्स्नाकलिततुलयोस्ताम्रतलयोः ।

निलीये कामाक्ष्या निगमनुतयोर्नाकिनतयोः

निरस्तप्रोन्मीलन्नलिनमदयोरेव पदयोः ॥         

பரஸ்மாத் ஸர்வஸ்மாதபி ச பரயோ: முக்திகரயோ:

அப்டின்னு சொல்லி, உயர்ந்த வஸ்துக்கள் எல்லாத்தை காட்டிலும் உயர்ந்தது காமாக்ஷி யோட பாதம். முக்தியை குடுக்கும், அப்டிங்கற ஸ்லோகத்தை சொன்னார். அதாவது, உனக்கு அமெரிக்கா காமதேனுவைப் போல எல்லாமே கொடுக்கறதா இருக்கட்டும், ஆனால் அது முக்தியை குடுக்க முடியாது. நீ திரும்ப வந்துவிடு” என்று சொன்னார்.

Infact, நான் அமெரிக்கா போகும்போது ஐம்பத்தஞ்சு கிலோ, வரும்போது எண்பத்தஞ்சு கிலோ. என் உடம்பே அங்கதான் வளர்ந்தது, அப்படி எனக்கு அந்த ஊர் செட் ஆச்சு. ஒரு சின்ன ஜுரம், ஜலதோஷம் கூட வந்தது கிடையாது, வேலையெல்லாம் சௌகரியமா அமைஞ்சது, நான் அங்கே அப்படி இருந்தேன். அது ஜாதகம், அந்த சூரியன் நன்னாயிருக்கார், அந்த சூரிய தசை அப்டி போச்சு, ஸ்வாமிகள் போதும், வா ன்னார். அந்த வார்த்தையை கேட்டுண்டு திரும்பி வந்தேன்.

இதுல கூட ஒண்ணு சொல்லணும், என் தம்பியும் கொஞ்ச நாள் அங்க வந்திருந்தான். அவன் சொன்னான் – “நான் இங்க இருக்க மாட்டேன் நான் கிளம்பப் போறேன்” அப்படின்னான். நான் இருந்த வேலைல AT&T ல வேலை பண்ணிண்டு இருந்தேன். நடுவுல ஒரு Contractor, அந்த Contractor கிட்ட பேரம் பேசிண்டு இருந்தேன். அவன் உனக்கு திரும்பி வந்ததும் Per hour 1 Dollar hike தர்ரேன்னான். நான் ஸ்ரீதர் கிட்ட (என் தம்பி கிட்ட), நான் Per hour 1௦ Dollar hike இருக்கிற வேலை வாங்கி காமிக்கறேன்னு சொன்னேன். என் தம்பி சொன்னான், “ஸ்வாமிகள் உன்னை திரும்பி வரச்சொன்னாரே, இந்த மாதிரி பேசினா, நீ எங்க வரப்போற” அப்டின்னான். அவன் திரும்பி வறதுக்கு Oct 2 ம் தேதி Ticket book பண்ணியிருந்தான். உன்னோட அதே Flight ல எனக்கு Ticket book பண்ணுன்னு சொன்னேன். அங்க எல்லாத்தையும் போட்டு, அவாவாளுக்கு, அந்த, காரை ஏதோ வித்தேன், ஏதோ பண்ணேன், அதே Flight ல திரும்பி வந்தேன், ஸ்வாமிகள் பாதத்தில வந்து உட்காந்தேன்.

ஸ்வாமிகளுக்கு அவ்ளோ சந்தோஷம். வர்றவாள்கிட்ட எல்லாம், இந்த குழந்தை அமெரிக்கால இருந்தான், நான் சொன்ன பேச்சை கேட்டு திரும்பி வந்துட்டான். 8th Wonder ஆக்கும் இது, அப்படின்னு சொல்லிண்டு இருந்தார். திரும்பி வந்த Few Months ஒரு Frustration இருக்கும். என்னடா இது, அப்படின்னு. நாம இங்கதான் பொறந்து வளர்ந்திருப்போம். ஆனா அந்த Foreign ல இருந்துட்டு வந்தா, இங்க இருக்கிறதெல்லாம் இவ்ளோ அழுக்கா இருக்கு, நாத்தமடிக்கறதுன்னு தோணும். அதை Complete ஆ போக்கறதுக்கு, அந்த நேரத்துல, ஸ்வாமிகள் தர்சனம், அவருடைய அன்பான வார்த்தைகள் அது மூலமாகத் தான் மனசில வெறுப்பெல்லாம் வராமல், Frustration வராமல், இந்தியாவை ரசிக்கிறதுக்கு, திரும்பவும் ரசிக்கிறதுக்கு, சொல்லிக் குடுத்தார். நல்ல வாழ்க்கையும் அமைச்சுக் கொடுத்தார். கல்யாணம், குழந்தைகள் எல்லாம் அதுக்கப்பறம் அவர் அனுக்ரஹத்தால தான் நடந்தது. அதை அடுத்தது சொல்கிறேன்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

Series Navigation<< கோவிந்த தாமோதர குணமந்திரமனீஷாம் மாஹேந்த்ரீம் >>

3 replies on “வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி போற்றி”

Only a satguru can give you such an advice. He has protected your janma and would continue to protect like how Mahaperiava protected Him during his life.

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க !!
எப்படிப்பட்ட தலைப்பு !
எப்படி ஒரு பொருத்தமான சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் தலைப்பு !!
காமகோடியான அன்னை தர்மம், அர்த்தம் காமம் மோக்ஷம் ன்கிற வரிசையில் காமத்தின் எல்லை
மோக்ஷம் ஆகையால் அன்னை காமகோடியாய் விளங்குகிறாள் ! அம்பாளின் பாதம் தாமரையினை வெல்லக் கூடியது ! காமகோடி !!
ஸ்வாமிகள் சொன்ன வார்த்தைகள் அப்படியே ஏற்கும் மனப்பான்மை எங்கிருந்து வந்தது ?
வேகத்தை அடக்கற வேந்தன் சொற்கள் அல்லவா? காமத்தின் எல்லை விவேகம் !!
அம்பா ஷரணம் ஸ்வாமிகள் பாதம் சரணம் !!

ஒரு குருவை பரிபூரணமாக சரணடையும் போது கிடைக்கிற பாக்யமே யதார்த்தத்தின் உச்சம்.
உச்சத்தின் மகுடமே குருவின் கடாக்ஷம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.