சுஸ்ருவே மதுர த்வனி: (9 min audio in Tamizh, same as the script above)
ஸ்வாமிகள் “மஹான்கள் பவ சாகரத்தை கடந்த பின், அவாளுடைய வாக்கு என்கிற படகை நமக்கு விட்டு போயிருக்கா, அதுல ஏறி நாமளும் கடந்துடலாம்” அப்படின்னு சொல்வார். அந்த மஹான்களுடைய வாக்கு. அதை சேவிக்கறது, ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தோத்திரங்கள், இந்த வால்மீகீ ராமாயணம், அந்த பாகவதம் அப்படின்னு, இதுல பக்தி இருந்தா, இது மூலமாவே, பக்த்யா கேவலயா (பக்தி ஒன்றினால் மட்டுமே) அஞ்ஞானம் போகும், அதனாலேயே வைராக்கியம் வரும், ஞானம் வரும்,அப்படின்னு, அந்த ஒரு நம்பிக்கையை, அவர் தன் வாழ்க்கையாக வாழ்ந்து காண்பிச்சார். யோகம், யாகம், த்யானம், வேதாந்த விசாரம் எதுவும் பண்ணாம பக்தி ஒன்றினாலேயே வைராக்கியத்தோட, ஞானத்தோட இருந்தார்.
அதே நேரத்துல கவிதாம்பா ஜகதீச ந காமயே, அப்படின்னு கவிதை மூலமா பணம், புகழ் கௌரவம், இதெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது, அப்படின்னு அதுலயும் ஜாக்கிரதையா இருந்தார். அந்த படகுல ஏறி அந்த பக்கம் போகணும், படகுலattachment வர கூடாது, அப்டின்னு சொல்லி கவிதை என்ற விஷயத்தில் ஆசை வராமல் இருந்தார்.
அதே மாதிரி அவருக்கு சந்கீதத்துலேயும் பிரியம் உண்டு. இந்த சங்கீதம்கிறது ஒரு சாஸ்த்ரம், அது கலை கிடையாது. அதை யோகமா அப்பியாஸம் பண்ணனும். யாக்ஞவல்கிய ஸ்மிருதி ன்னு ஒன்னு இருக்கு. ஒரு தர்ம சாஸ்திர புஸ்தகம். அதுல
“वीणा वादन तत्वज्ञ: श्रुति जाति विशारद: । तालज्ञश्चाप्रयत्नेनन मोक्ष मार्गम् प्रयच्छति।।”
வீணா வாதன தத்வக்ஞ: ஸ்ருதி ஜாதி விசாரத: |தாளக்ஞஸ்ச அப்ரயத்னேன மோக்ஷ மார்க்கம் ப்ரயச்சதி ||
அப்படின்னு ரிஷி வாக்கியமே இருக்கு, இந்த யோகம் யாகம் எல்லாம் பண்ணி, ப்ராணாயாமம் பண்ணி, கஷ்டப் பட்டு த்யானங்கள் எல்லாம் பண்ணி எதை அடைகிறார்களோ, அதை, இந்த சங்கீதத்து மூலமாவே அடையலாம். அம்பாள்ட்ட போய் சேர்ந்துடலாம் அப்படின்னு, அதுல ஸ்வாமிகளுக்கு ரொம்ப நம்பிக்கை இருந்தது, சங்கீதத்தை ரொம்ப விரும்பி கேட்பார்.
சின்ன வயசுல ரங்கராஜையர்ன்னு ஒரு Neighbourஇருந்துருக்கார், அவாத்துக்கு போய் ராத்திரி, ஒரு மணி, ரெண்டு மணி வரைக்கும் அவர்கிட்ட பேசிண்டு இருப்பார் அவர் மெதுவா, இவரை, ரோட்ல ஏதாவது, நாய் பூனை எல்லாம் இருக்க போறதேன்னு, ஆத்துல கொண்டுவிடுவார். அவ்ளோ ப்ரியமா இருந்திருக்கார். அவர் ஸுஜன ஜீவனான்னு பாடுவாராம். ஸ்வாமிகள் அதை திருப்பி திருப்பி சொல்லி சந்தோஷப்படுவார். அந்த ஸுஜன ஜீவனாஅப்படின்னா, நல்லவாளுக்கு சாதுக்களுக்கு உயிரா இருக்கான் ராமன், ஆஸ்ரித சந்தன அப்படின்னு, நம்பினவாளுக்கு கல்யாண சந்தன மரம் ராமன். இந்த பாரிஜாதம்கிற மாதிரி, கல்யாண சந்தனம் அப்படின்னு ஒரு மரம், ஒரு அஞ்சு மரங்கள், கேட்டதை குடுக்கிற மரங்கள். ஸ்வாமிகளுக்கு, அந்த கவீனாம் கல்பவள்ளி அப்படின்னு காமாக்ஷி தேவியை சொல்றது, இந்த ராமரை வந்து ஸுஜன ஜீவனா, ஆஸ்ரித சந்தன அப்படின்னு சொல்றது வந்து ரொம்ப பிடிக்கும்,ஏன்னா, ஸ்வாமிகள் தனக்கு எது வேணும்னாலும்,பகவானையே கேட்டுருக்கார். அவர் Rate Fix பண்ணலை, எனக்கு இந்த பணம் குடு, அப்படின்னு அவருடைய Lifeமுழுக்க அந்த Rate-ஏ Fix பண்ணாம, நாம பகவானை பஜிக்கிறோம், பகவான் ஏதோ சேர்ப்பிக்கிறார் அப்படின்னு श्री राम: प्रतिगृह्णाति श्री रामो वै ददाती च | श्री राम: तारको द्वाभ्यां श्री रामाय नमो नम: ||
ஸ்ரீ ராம: ப்ரதிக்ருண்ணாதி ஸ்ரீ ராமோவை ததாதி ச
ஸ்ரீ ராம: தாரகோ த்வாப்யாம் ஸ்ரீ ராமாய நமோநம:
அப்படின்னு சொல்லிதான், யார் எது ஸம்பாவனை குடுத்தாலும் வாங்கிப்பார்.
அப்படி, ரெண்டு ரூபாய் இன்னிக்கு குடுத்தா சுந்தர காண்டம் படிச்சுட்டு வருவார், அடுத்து நாள் ரெண்டாயிரம் ரூபாய் குடுத்தாலும் படிச்சுட்டு வருவார், இதே ஸ்லோகத்தைத் தான் சொல்வார், வேற அவருடைய படிக்கிற விதத்திலேயோ, க்ருஹஸ்தர்களை Treat பண்ற விதத்திலையோ, ஒரு வித மாறுதல் இருக்காது. அப்படி மந்த்ரத்தில மாங்கா விழுமான்னா, அவருக்கு விழுந்தது, அப்படி அவருடைய குடும்பத்தை பகவான் காப்பாத்தினார். அவரும் அந்த வைராகியத்தை மாத்திக்க வேண்டி வரலை.
நாராயணர் ஆத்து குழந்தைகள் வந்தான்னா “ஸ்ரீ வேணுகோபலா” ன்னு ஒரு பாட்டு பாட சொல்லுவார், “ஸ்ரீ கமலாம்பிகே”, “பண்டுரீதி கொலு“ இதெல்லாம் பாடச் சொல்லுவார். ஸ்வாமிகள் ஒவ்வருத்தரையும் சில குறிப்பிட்ட பாடலையே திரும்பி திரும்பி பாட சொல்வார். அந்த மாதிரி திரும்பி திரும்பி பாடினா, அதுவே ஒரு அனுக்ரஹம் பண்ணும். அது மூலமா, இந்த சங்கீதத்து மூலமா பகவான் கிட்ட லயிக்கிறத்துக்கு அது அவாளுக்கும் ஹேதுவா இருக்கும் என்று அப்படி சொல்லுவார்.
ஸீதாராமையர் ஆத்து கமலா மாமி கிட்ட பஞ்சரத்ன கீர்த்தனை நிறைய பாட சொல்லி கேட்டுருக்கார். அவா அதை ஆயிரகணக்கான தடவை தானே பாடிருக்கா, அந்த மாதிரி தானே பாடி அனுபவிக்கும் அந்த பழக்கத்துல கொண்டு விட்டுடுவார்.
அனந்தக்ருஷ்ணன்னு ஒரு பக்தர் வந்து அழகா திருப்புகழ் பாடுவார், அவர்கிட்ட இந்த உடுக்க துகில் வேணும்கிற பாட்டை ஒவ்வொரு தடவையும் பாடச் சொல்லுவார், இந்தஉடுக்க துகில் வேணும்கிற பாட்டுல முதல் part-ல அந்த பாகவத சாரம் இருக்கு. உலகத்துல இது வேணும் அது வேணும்னு நினைக்கிறோம், பகவான்கிட்ட கேட்கிறோம்க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும்அப்படின்னு கேட்கணும். இல்லன்னா, அதுமாதிரி கேட்க தெரியலேன்னா உயிர் அவமே போம். இந்த ஜன்மா வீணாக போயிடும். அதனால, ஞானத்துனால பகவானை அடையணும்கிறது First Part. Second Part ல சுந்தர காண்டத்தோட Summary இருக்கு. அதனால இந்த பாட்டு அவருக்கு ரொம்ப பிடிக்கும். இதை ஒவ்வொரு தடவையும் பாட சொல்வார்.
இதுல என்ன ஆச்சர்யம்னா ‘உடுக்க துகில் வேணும்’ கதிர்காமம் பாட்டு, யாரோ ஒருத்தர் அனந்தக்ருஷ்ணனுக்கு விசா வாங்கி, டிக்கெட் வாங்கி, இலங்கைல இருக்கிற கதிர்காமத்துக்கு இவரை கூட்டிண்டுபோய் தர்ஸனம் பண்ணி வெச்சார், அந்த மாதிரி ஸ்வாமிகள்ட்ட படிச்சா, பாடினா அனுக்ரஹமாக ஆகிவிடும். அது மாதிரி, கமலாம்பா க்ருதி ஒண்ணு அவர் கிட்ட பாடினவா, கமலாம்பா நவாவர்ணம் முழுக்க கத்துண்டு பாடி சந்தோஷப்படுவா, அந்த மாதிரி, அதுலேர்ந்து ஒரு அனுக்ரஹம் இருக்கும். அனந்தக்ருஷ்ணன் கிட்ட “முருக சரவண மகளிர் அறுவர் முலை நுகரும் அறுமுக குமர சரணமென அருள் பாடி ஆடி மிக மொழி குழற அழுது தொழுது உருகும் அவர் விழி அருவி முழுகுவதும்” அப்படின்னு, நாம ஆடி பாடி, நம்ம கண்ணுல ஜலம் வரணும், அதுல பகவானோட பாதங்கள் வந்து முழுகும், நமக்கு அந்த பாத தர்ஸனம் கிடைக்கும், அது தானே Purpose. யார் கேட்டால் என்ன கேட்கலைன்னா என்ன? அப்படின்னு சொல்வார்.
சாதுராம் ஸ்வாமிகள், SV சுப்பிரமணியம் எல்லாம் திருப்புகழ் பாடினா ஆனந்தமா கேட்டுண்டு இருப்பார், பிரதோஷம் மாமா தேவாரம் பாடறது,
மீளா அடிமை உனக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளா தீ போல் உள்ளே கணன்று முகத்தால் மிக வாடி
ஆளாய் இருக்கும் அடியார்தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரிர் வாழ்ந்து போதீரே
அப்படின்னு மீளா அடிமை, உனக்கே ஆளாய் பிறரை வேண்டாதே, மத்தவாள்ட்ட போய் ஒண்ணு நான் கேக்கமாட்டேன், அப்படிங்கறது ஸ்வாமிகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
KV நாரயணஸ்வாமின்னு ஒரு சங்கீத வித்வான் இருந்தார், அவர் பழுத்த பழமா இருக்கும் போது, சிவன் சார் அவரை “ஸ்வாமிகள்ட்ட போய் நீங்க உபதேசங்கள் எல்லாம் கேட்டுக்கோங்கோ” ன்னு அனுப்பிச்சார், அவர் வந்து நன்னா பாடிண்டு இருப்பார். ஸ்வாமிகளுக்கு சங்கீதத்துல ஆசை இருந்ததுக்கு, எல்லா பெரியவாளும் வந்து அங்க பாடி, அந்த ஆசைய பூர்த்தி பண்ணிணா, ஸ்வாமிகள் சொல்வார், எனக்கே கூட சங்கீதம் கத்துக்கணும்னு ஒரு ஆசை இருந்தது, ஆனா இந்த மூகபஞ்சசதி படிச்சு அதுலயே அந்த ஆசை பூர்த்தியாயிடுத்து அப்படிம்பார்.
पुरमथनपुण्यकोटी पुञ्जितकविलोकसूक्तिरसधाटी ।
मनसि मम कामकोटी विहरतु करुणाविपाकपरिपाटी ॥
புரமதன புண்யகோடி புஞ்சித கவிலோக சூக்திரஸதாடி |
மனஸிமம காமகோடி விஹரது கருணா விபாகபரிபாடி ||
அப்படின்னு, அவர் ரொம்ப இனிமையா பாடுவார், அவர் பாடும்போது, இந்த ராகம், தோடி மாதிரி இருக்கு பார், இது சங்கராபரணம், அப்படினெல்லாம் இந்த கமலா மாமி சொல்லுவா. அவர் பாடும்போது அந்த ராகச்சாயல் எல்லாம் நன்னா தெரியும், அப்படின்னு சொல்லுவா. அந்த மூகபஞ்சசதி படிக்கறதுலையே அவருக்கு வந்து சங்கீதம் கத்துண்ட திருப்தி வந்துடுத்து, அதேமாதிரி “சம்ஸ்க்ருதம் MA படிக்கணும்னு ஒரு ஆசை இருந்தது எனக்கு, இந்த வால்மீகீ ராமாயணத்தை படிச்ச உடனே, அந்த ஆசை பூர்த்தியாயிடுத்து. வால்மீகி ராமாயணம் படிக்கும்போதே சம்ஸ்க்ருதம் நிறைய படிச்சுருக்கோம்னு திருப்தி வந்தது” அப்படின்னு சொல்வார். நான், எனக்கு சங்கீதம் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு அப்டின்னேன். ஸ்வாமிகளுக்கு, என்னை ராமயாணத்துல கொண்டு வரணும்னு சங்கல்பம். அதனால ஸாஹித்யத்தில இருக்கணும் என்பதால் அவர் “அதென்னத்துக்கு?” அப்படின்னுட்டார். இந்த ராமாயணத்துல ராம பட்டாபிஷேக ஸர்க்கத்துல – ராமர் வந்து இறங்கறார், பரதன் போய் நமஸ்கராம் பண்ணி, அவா அணைச்சுக்குறா, அப்புறம் ராம லக்ஷ்மணா, நாலு பேருமே ஜடையெல்லாம் எடுத்துட்டு அலங்காரம் பண்ணிண்டு, ராமரை அந்த சூரியன் போன்ற தேர்ல அமர்த்தி, எல்லாரும் புடை சூழ, பரதனே தேரை ஒட்டிண்டு நந்திக்ராமத்துலேர்ந்து அயோத்திக்கு திரும்பி கூட்டிட்டு வரா. அப்ப
ऋषिसङ्घैर्तदाकाशे देवैश्च समरुद्गणैः | स्तूयमानस्य रामस्य शुश्रुवे मधुरध्वनिः ||
ரிஷி ஸங்கைர் ததாகாஷே தேவைஸ்ச்ச ஸமருத்கணைஹி |
ஸ்தூயமானைஸ்ய ராமாஸ்ய ஷுஷ்ருவே மதுரத்வனிஹி ||
என்று ஒரு ஸ்லோகம் வரும். ரிஷிகளும், தேவர்களும், மருத்கணங்களும், ஆகாசத்துல ராமனை ஸ்தோத்ரம் பண்ணும் அந்த மதுர த்வனி ஆனது எல்லார் காதுல விழுந்தது அப்படின்னு அர்த்தம்..
ஸ்வாமிகள் “பாத்தியா இந்த ராமனுடைய ஸ்தோத்ரம், ராமாயணம் தான் எல்லாத்தை காட்டிலும் மதுரமான த்வனி. அதாவது சங்கீதத்தை காட்டிலும் ராமாயணம் படிக்கும்போது கேட்கும் அந்த த்வனி இருக்கே, அதுதான் ரொம்ப ஆனந்தம்,” அப்படின்னு சொன்னார். அது உண்மை தான். இந்த சங்கீதத்தை காட்டிலும் சாஹித்யத்தில ஒரு extra advantageஇருக்கு. சந்கீதம்னா யாராவது பாடணும், இல்ல நாமேவாவது பாடணும், பாடும்போது கேட்கும்போது காதுல ஆனந்தமா இருக்கும், அப்புறம் வத்தி போயிடும். இந்த சாஹித்யம்னா, அந்த ஒரு வரியை நம்ப எப்ப வேணா திரும்பி திரும்பி மனசுல ஓட்டி சந்தோஷபடலாம் இல்லையா, அதனால எனக்கு அது மாதிரி அனுக்ரஹம் பண்ணிணார்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!