Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – ஆரண்ய காண்டம்

ஆரண்ய காண்டம்

  1. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

ஸீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் அடர்ந்த காட்டுக்குள் நுழைகிறார். அங்கு முனிவர்களை வணங்குகிறார். விராதன் என்ற அரக்கனை வதம் செய்கிறார். சரபங்கர் என்ற முனிவரை தேடிப் போய் வணங்குகிறார். சரபங்கர் தன் தவத்தை ராமருக்கு அர்ப்பணித்து, அவர்கள் கண் முன்பே தீயில் உடலை உகுத்து விட்டு, திவ்ய தேஹத்தோடு ப்ரஹ்மலோகம் செல்கிறார்.

ரிஷிகள் ஞான த்ருஷ்டியால் ராமரை பகவான் என்று அறிந்து, தங்கள் தவத்திற்கு இடையூறு விளைவிக்கும் ராக்ஷஸர்களிடம் இருந்து காப்பாற்றும்படி கேட்கிறார்கள். ராமரும் அவர்களுக்கு அபயம் அளிக்கிறார். பின்னர் மூவரும் ஸுதீக்ஷ்ணர் என்ற ரிஷயை கண்டு வணங்குகிறார்கள். ஸுதீக்ஷ்ணர் அவர்களுக்கு உணவளிக்கிறார்.

ஸீதை “உங்களிடம் ஏதும் விரோதம் இல்லாத போது ராக்ஷஸர்களை நீங்கள் ஏன் வதம் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறாள். “ப்ராம்மணர்களை காப்பது என் கடமை. அவர்களுக்கு குடுத்த வாக்கின்படி நடப்பேன்” என்று ராமர் பதில் சொல்கிறார்.

பத்து வருடங்கள் பல முனிவர்களின் ஆஸ்ரமங்களில் ஆனந்தமாய் கழித்துவிட்டு, ராமர் அகஸ்த்திய முனிவரை சென்று தரிசிக்கிறார். அகஸ்த்யர் ராமருக்கு விஷ்ணு தனுசை குடுத்து ஆசீர்வதிக்கிறார். “நீ என்னுடன் இருக்க விரும்புவது தெரியும். ஆனால் நான் சொல்வதைச் செய். கோதாவரிக் கரையில் பஞ்சவடி என்ற இடத்தில் போய் தங்கு” என்று சொல்கிறார். அதை ஏற்றுக் கொண்டு ராமர் பஞ்சவடி சென்று, ஜடாயுவை கண்டு அவரோடு பேசி நட்பு பண்ணிக்கறார். அவர்கள் தங்குவதற்கு லக்ஷ்மணன் கட்டின பர்ணசாலையை பார்த்து சந்தோஷப் பட்டு ராமர் அவனை கட்டிண்டு கொண்டாடுகிறார்.

———————————————-

ஸ்வாமிகள் பற்றைக் கடந்த ரிஷிகள், கருணையொடு prescribe பண்ணின தர்ம சாஸ்த்ரங்களை ரொம்ப நம்பிக்கையோடு கடைபிடித்தார். பாடசாலையில் ஆரம்பித்த யஜுர் வேதம், அப்பறம் முழுக்க அத்யயனம் பண்ணினார். தன் 2 பிள்ளைகளுக்கு வேதம் சொல்லிக் குடுத்தார். ப்ரஹ்ம முஹுர்த்தத்தில் எழுந்து ஸ்னானம், ஸந்த்யாவந்தனம், அப்பறம் மாத்யான்னிகம், ப்ரம்மயக்ஞம் தவறினதே கிடையாது. பர்யேணி தர்ப்பணம், ச்ராத்தம் எல்லாம் ரொம்ப மடியாகப் பண்ணுவார். ஸப்தாஹத்துக்கு நடுவில் தீட்டு ஏதாவது வந்தால், அதைக் காத்து விட்டு அந்த portions சேர்த்து வைத்துப் படிப்பார். நாள் கிழமை பார்த்து நல்ல கார்யங்களை ஆரம்பிப்பார்.

மஹாபெரியவா கிட்ட கோகுலாஷ்டமி ஒட்டி ஸப்தாஹம் பண்ற அந்த வாரத்தில் அம்மாக்கு ச்ராத்தம் பண்ணிட்டு, மூல பாராயணம் முடிச்சுட்டு, சாயங்காலம் ப்ரவசனம் பண்ணினார். தான் follow பண்ற அனுஷ்டானத்துக்காக யாரையும் ச்ரமப் படுத்த மாட்டார். So it created respect for those practices in the mind of even an agnostic like me.

நேராகப் பார்த்த தன் அப்பா, மஹாபெரியவா, போலகம் ராமா சாஸ்த்ரிகள், தன் பள்ளிக்கூட வாத்யார்கள், மற்றும் ராமக்ருஷ்ண பரமஹம்சர், வள்ளிமலை ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள் இவா சரித்ரம், உபதேசங்களை நிறைய வாட்டி படிச்சு அவாளை எல்லாம் mentors ஆ வெச்சுண்டு தன் வாழ்க்கையை நடத்தினார். அவர் follow பண்ணும் போது those practices took a special meaning – It was obvious that the godliness and purity that he gained through bhakthi, was being retained by those ஆசார அனுஷ்டானம். They were more for cleanliness and simplicity and not to show off. Modern technology, ameneties totalஆ avoid பண்ணிட்டார். The focus was on developing bhakthi, kindness, honesty, getting rid of ego and attachment etc. than ஆசார அனுஷ்டானம்.

இப்படி ரிஷிகள், மஹான்கள் வார்த்தைகளை பிடிச்சுண்டு, பற்றுகளை படிப்படியாக விடுவது போல விட்டார். என்னிக்குமே அவர் பற்றற்ற ஞானி தான். கருணையினால், நாம் ஒரு உண்மையான பாகவதர் (பகவானைச் சேர்ந்தவர்) எப்படி இருப்பார் என்று தெரிஞ்சுக்க வேண்டி, அப்படி உறவு பிரிவெல்லாம் வந்துட்டு போனாப் போல காண்பிச்சார். பாகவதம் படிச்சா தாபத்ரயமும் அடியோடு போய்விடும் என்ற வரிக்கு இப்படி ஒரு living example இல்லைனா நமக்கு அதில் எப்படி நம்பிக்கை வரும்? ‘எதை விட முடியறது’, என்று சொல்லிக் கொண்டு மேலும் மேலும் உலக விஷயங்களில் முழுகி விடுவோம்.

ஸ்வாமிகள் மஹாபெரியவாளுடய உறவுக்காரா எல்லார் கிட்டயும் எப்பவுமே பக்தியா இருப்பார். ‘சிவன் ஸார் எனக்காக மஹாபெரியவா எடுத்துண்ட இன்னொரு உருவம்’ என்று சொல்வார். சிவன் ஸார் உத்தரவின் பேரில் ஒரு தடவை 15 நாளில் பாகவதம் உபன்யாசம் பண்ணினார். அவருக்காக த்ருவ சரித்ரம், ஜடபரத சரித்ரம் எல்லாம் சொல்லி இருக்கார். சிவன் ஸார் அனுப்பின பேர்களுக்கு பகவத் கீதை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், சங்கரபகவத்பாதர் அருளிய ஷண்மத தெய்வங்களுடைய ஸ்தோத்ரங்கள் எல்லாம் சொல்லிக் குடுத்தார்.

சிவன் ஸாருடய ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ புஸ்தகத்தைப் படித்து கண் ஜலம் விடுவார். “நான் இந்த உலகத்தில் materialists  நடுவுல தனியாக ஏதோ சில ideals, follow பண்ணின்டு இருந்தேன். எதோ ஆறுதலுக்கு சொல்றார் என்று நினைப்பா. சிவன் ஸார் புஸ்தகம் படிச்சப்பறம் தான் அவர் இதையெல்லாம் ஒத்துண்டு இருக்கார் னு நிம்மதியாச்சு” என்று சொல்வார்.

One word of warning he gave me  – “பற்றுகளை விட்டு, உண்மையை தேடிக் கண்டு கொண்ட மஹான்களை அண்டி, அவர்கள் சொல்வதை பின்பற்றினால், நாமும் ஆசாபாசங்களில் இருந்து விடுபடலாம். நம் உலகக் கடமைகளையும் கோபதாபம் இல்லாமல் அன்போடு செய்யலாம். அப்படிப்பட்ட மஹான்கள் அரிதாகி விட்ட இந்தக் காலத்தில், மஹான்களுடய வாக்கு (ராமாயணம் பாகவதம், ஏணிப் படிகளில் மாந்தர்கள், திருப்புகழ் மூக பஞ்ச சதி etc.) அந்த புஸ்தகங்கள், அது தான் இந்த காலத்தில் நிஸ்ஸங்கத்தை குடுக்கக் கூடிய ஸத்சங்கம். தெய்வத்தை விற்று புகழ் பணம் கூட்டம் சேர்க்கும் போலி சாமியார்களிடம் சேர்ந்து பற்றுகள் அதிகமாகி அல்லல் படாதே.”

Conclusion: With him as our ideal state,, நாம் முடிஞ்ச வரைக்கும் ரிஷிகள் சொன்னதைக் கேட்டுண்டு, மூணு வேளை ஸந்த்யாவந்தனம் பண்ணின்டு, humble ஆ books மூலம் தனிமையில் ஸத்சங்கம் பண்றது best option – இது ரொம்ப கஷ்டம் தான். எல்லாரும் சன்யாசி கிடையாதே. As social animals we are desperate for approval from others around us  என்பது இருந்தாலும், இந்த ideal ஞாபகமாவது இருந்தால் தான், ஸத்ஸங்கம் என்று பேரில், சமூகத்தில் அதர்மம் மலிவதற்கு நாம் காரணமாகாமல் இருப்போம்.

  1. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்

சூர்பணகை வந்து ராமரிடமும் லக்ஷ்மணரிடமும் தன் ஆசைக்கு இணங்குமாறு கேட்கிறாள். அவர்கள் அவளிடம் வேடிக்கையா பேசவே, அவள் சீதையை கொல்ல வருகிறாள். ராமர் சொல்படி லக்ஷ்மணன் அவளை மூக்கறுத்து தண்டிக்கிறான். அவள் சென்று ஜனஸ்தானத்தில் கரன் என்ற ராக்ஷஸனிடம் முறையிடுகிறாள். கரன் அனுப்பிய 14 ராக்ஷஸர்களை ராமர் வதம் செய்கிறார்.

சூர்பணகை போய் கரனை மீண்டும் தூண்டி விடுகிறாள். கரன் 14000 ராக்ஷஸர்களோடு ராமருடன் யுத்தம் பண்ண வருகிறான். ராமர் லக்ஷ்மணனிடம் சீதையை பார்த்துக்க சொல்லிட்டு, அகஸ்த்யர் குடுத்த வில்லையும், விச்வாமித்ரர் சொல்லிக் குடுத்த அஸ்த்ரங்களையும் கொண்டு, அனைவரையும், தனி ஒருத்தராக, வதம் பண்ணுகிறார்.

அகம்பனன் என்ற ஒரு ராக்ஷஸன் தப்பிச்சு போய் ராவணனிடம் ஜனஸ்தான வதம் பற்றிச் சொல்லி, “நீ மஹாபராக்ரமசாலியான அந்த ராமரோடு யுத்தம் பண்ண முடியாது. அவன் மனைவியை அபகரித்து வந்து விடு. ராமர் சீதையை பிரிந்து துக்கம் தாங்காமல் உயிர் விட்டு விடுவார்” என்று துர்போதனை பண்றான். ராவணன் வந்து மாரீசனிடம் உதவி கேக்கறான். அந்த வாட்டி மாரீசன் சொன்ன புத்திமதியை எற்று லங்கைக்குத் திரும்பி போய்விடுகிறான்.

சூர்பணகை ராவணனிடம் வந்து “உனக்காக ஸீதை என்ற ஒரு அழகான பெண்ணைத் தூக்கிண்டு வர பார்த்தேன். என்னையும் மூக்கறுத்து, கர தூஷணர்களையும் ராமர் வதம் பண்ணிட்டார். நீ போய் அதுக்கு பழிக்கு பழி வாங்கிட்டு சீதையை எடுத்துக்கோ” என்று காமத்தை தூண்டி விடுகிறாள்.

ராவணன் வந்து மாரீசனை மாய மானாகப் போகச் சொல்கிறான். மாரீசன் ராமருடைய குணங்களையும் வீரத்தையும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேக்காமல், “இப்ப நீ போகலைன்னா ஒன்னை கொன்னுடுவேன்” என்று மிரட்டி அவனை மானாகப் போக வைக்கிறான். லக்ஷ்மணன் ‘இது மாரீசன் மாயை, மானல்ல’ என்று சொல்லித் தடுத்தும், ராமர், ஸீதை ஆசையாக கேட்டதால் அந்த மானை பிடிக்கப் போகிறார். லக்ஷ்மணனும் போனவுடன், ராவணன் கபட சன்யாசியாக வந்து சீதையை அபகரிக்கிறான்.

ராம லக்ஷ்மணா சூர்பணகை கிட்ட பரிஹாஸமா பேசினதே வினை ஆனது. சூர்பணகையால் கர தூஷணர்களுக்கும், பின்னர் ராவணனுக்கும் பெரும் கேடு விளைந்தது. ராவணால் மாரீசனுக்கு உயிர் போச்சு. லக்ஷ்மணன் warn பண்ணியும் கேட்காமல் மாய மானை விரும்பிய சீதைக்கு ராமரைப் பிரியும் துன்பம் நேர்ந்தது. So துஷ்டர்களிடம் இருந்து தூர விலகி இருப்பதே மேல்.

———————————————-

ஸ்வாமிகள் வாழ்ந்த காலகட்டத்தில் வேண்டாத politics, cinema, club எல்லாம் ஜாஸ்தியாச்சு. அவர் அவற்றை discuss பண்ணவே மாட்டார். ராமாயணத்திலியே ஸ்வாமிகள் எல்லாம் சொல்ல மாட்டார். அஹல்யா சாப விமோசனம் “கௌதமர் குளித்து தேஜோமயமாக கமண்டலம் எடுத்துண்டு வந்தார்” என்ற இடத்தில் தான் ஆரம்பிப்பார். ராவணன் சீதையை வர்ணிப்பது, வாலி ராமரை question பண்றது எல்லாம் சொல்ல மாட்டார். “ஸீதை ராவணனுக்கு answer பண்ணினது, ராமர் வாலிக்கு answer பண்ணினது, அதைச் சொன்னா question தானா புரிஞ்சுடுமே” என்று சொல்வார்.

“மேலே போனா மேன்மை கிட்டும். மத்தவா comments எல்லாம் விட்டு தள்ளு” என்பார். “यॊषितां संगि संगम् கூட கூடாது’ என்று materialistic ஆ lewdஆ பேசிண்டு இருந்தா அவாளை கழட்டி விட்டுடுவார். இல்லை பகவானிடம் அவர்களை விலக்கும் படி வேண்டிப்பார். ஆரோக்யம் கொறஞ்ச போது “ப்ரவசனம் பண்றதை காட்டிலும் மூல பாராயணமே பண்றேன். அது தான் பெரிய புண்யம்” என்று முடிவெடுத்ததுக்கு அது ஒரு reason. சுகர் வால்மீகி போன்ற மஹரிஷிகள் கூட இருப்பது தான் அவருக்கு ஆனந்தமாய் இருந்தது.

க்ருஹஸ்தனா இருந்தால் தீட்டு போன்ற வேளைகளில் 3 நாட்கள் 10 நாட்கள் பாராயணம் பண்ண முடியாமல் போனது, அவருக்கு இருந்த தெய்வ பாசத்தினால், தாங்க முடியாத கஷ்டமாய் இருந்தது. அவர் பாகவத ஸந்நியாஸம் வாங்கி கொண்டதுக்கு அது ஒரு காரணம். இது என்னோட observation. ஸ்வாமிகள் தானே கூட இப்படி சொல்ல மாட்டார். ஏன்னா இந்த காலத்தில் போலி பாகவத பண்டிதர்கள் ‘பக்தி பண்ணினா போதும். தீட்டெல்லாம் பார்க்க வேண்டாம்’ என்று சொல்வது போல ஆகிவிடும். எனக்கு புரிஞ்சது – ஸ்வாமிகள் சாஸ்த்ரங்களை கைவிடவில்லை. கடந்து சென்றார்.

  1. எதுவும் எதிர்பார்க்காத பகவத் பக்தியே (அஹைதுகீ பக்தி) ஜீவன் முக்தி

ஸீதையை ராவணன் தூக்கி செல்லும் போது, ஜடாயு தடுத்து, அவனோடு யுத்தம் பண்றார். ஜடாயு ஜெயித்துக் கொண்டே வரும்போது, அவர் மூக்கால் கொய்த ராவணன் கைகள் மீண்டும் முளைக்கின்றன. வாளால் வயதான அந்த பக்ஷியை வெட்டி விழ்த்தி விட்டு, ஸீதையை தூக்கி கொண்டு போய்விடுகிறான். ஸீதை மலை மேல் நிற்கும் ஐந்து வானரர்களை பார்த்து, தன் நகைகள் சிலதை கழட்டி துணியில் முடிஞ்சு தூக்கி போடறா.

ராவணன் லங்கையில் தன் செல்வத்தை எல்லாம் காண்பித்து சீதையிடம் ஆசை வார்த்தைகள் பேசுகிறான். ராக்ஷஸிகளை விட்டு பயமுறுத்துகிறான். ஸீதை எதையும் பார்க்காமல் தன் கணவனும் தெய்வமுமான ராமரையே நினைத்து தவமாய் அமர்கிறாள்.

லக்ஷ்மணனை கண்ட ராமர் அவனிடம் “என் ஆணையை மீறி ஏன் ஸீதையை விட்டு விட்டு வந்தாய்?” என்று திட்டுகிறார். இருவரும் வந்து பார்த்து ஸீதையை காணாமல் எங்கும் தேடுகிறார்கள். ராமர் அழுது புலம்பும் போதும், உலகையே அழிப்பேன் என்று கோபப் படும்போதும் லக்ஷ்மணன் அவர் கால்களை பிடித்துக் கொண்டு ‘ராமா, நீ ஸாதுக்களின் புகலிடம் அல்லவா? ஒருத்தன் பண்ணின தப்புக்காக உலகை அழிக்கலாமா? மேலும் தேடுவோம்’என்று சமாதானம் செய்கிறான். அடிபட்டு கிடக்கும் ஜடாயுவைக் கண்டு ராமர் மேலும் துக்கப்படுகிறார். ஜடாயு “சீதையை ராவணன் தூக்கிண்டு போயிருக்கான். உனக்கு மீண்டும் கிடைப்பாள்” என்று சொல்லி அவர் மடியில் உயிரை விடுகிறது. அப்பாவைப் போல அன்பு காட்டிய அந்த பக்ஷிக்கு ராமர், மந்த்ர பூர்வமாக சம்ஸ்காரம் செய்து வைகுண்டம் அனுப்புகிறார்.

ஒரு கபந்தமான (தலை இல்லாத) அரக்கனை கைகளை வெட்டி எரித்த பின் அவன் “தனு” என்ற கந்தர்வனாக மாறி “ராமா! ரிஷயமூக மலையில் உள்ள சுக்ரீவன் என்ற வானரத்தோடு ஸ்னேஹம் செய்துக் கொள். அவன் உனக்கு ஸீதையை தேடித் தருவான்” என்று சொல்லி விமானத்தில் மேலுலகம் செல்கிறான். ராம லக்ஷ்மணர்கள் சபரி என்ற வேடுவ ஸ்த்ரீ, மதங்க முனிவருக்கும் அவர் சிஷயர்களுக்கும் செய்த கைங்கர்யத்தால் ராம மந்த்ரம் கிடைக்கப் பெற்று, அதனால் ஸித்தி அடைந்து விளங்குவதை பார்த்து, அவள் பூஜையை எற்கிறார். சரபங்கரைப் போல சபரியும் தன் உடலை தீயில் உகுத்து விட்டு, திவ்ய தேஹத்தோடு மதங்க முனிவர் சென்ற அதே உலகத்துக்கு, வைகுண்டத்திற்குச் செல்கிறாள்.

———————————————-

ஸ்வாமிகள் சொல்வார் – “பக்தி என்றால் ஏதோ கோவிலுக்கு போறது, எதோ சில ஆவர்த்தி பாராயணம் பண்ணுவது தானா? த்யாகராஜ ஸ்வாமிகளோ அருணகிரிநாதரோ இத்தனை ஆவர்த்தி ஜபித்தேன் என்று பாடி இருக்காளா? “முருகன் குமரன் குஹன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்” என்று தானே பாடுகிறார்? அப்படி மனஸு உருகி அவனிடம் தஞ்சம் புகுந்தால் அருள் கிடைக்குமே!

பக்தி மார்கத்தில்  hypocrisy ஜாஸ்தி ஆயிடுத்து. கர்ம மார்கத்தில் எல்லார் கண் பார்க்க ஸந்த்யாவந்தனம் பண்ணித் தான் ஆகணும். பண்ணிட்டா மாதிரி நினைச்சுக்க முடியாது. ஞான மார்கத்தில் உலகத்தை துறந்து ஸந்யாசியாய் போகணம். பக்தி மார்கத்தில் ’நான் ஸ்வாமியை நினைத்துக் கொண்டே இருக்கேன்’ என்று சொல்லிவிடலாம். அதுனால இது bed of roses என்று நினைத்து கொள்கிறார்கள். பக்தர்கள் சரித்ரத்தைப் படித்தால் அப்படியா வருகிறது? எவ்வளவு சோதனை! முன்ன புரந்தரதாஸர் 9 கோடி வராகனை விட்டுட்டுப் போனார் என்றால் மஹான் என்றார்கள். இந்த காலத்து மட்டி ஜனங்கள் ‘field க்கு வந்து 2 வருஷத்துல 10 கோடி சேர்ந்துட்டார். புது கோவில் கட்டிட்டார். என்ன கூட்டம். என்ன மஹிமை’ என்று சொல்கிறார்கள்.

பக்தி மார்கம் செக்கனி ராஜ மார்க்கம் தான். ‘नॆदिष्‌ठामॆव कामपीठ गताम्’ என்று ரொம்ப பக்கத்துல உள்ளுக்குள்ள பகவானை பார்க்கலாம்! யந்த்ர தந்த்ர மந்த்ரமெல்லம் வேண்டாம்! ஆனா உள்ள பகவான் வந்துட்டா சுக துக்கம், லாப நஷ்டம் எல்லாம் ஒண்ணும் பண்ணாத நிலைமைக்குத் தான் பக்தினு பேர். அது வரைக்கும் சோம்பலை ஒழித்து இடையறாது பஜனம் பண்ண வேண்டும். “ஸ்தித ப்ரக்ஞனும், உத்தம பக்தனும், ஞானியும் ஒண்ணு தான்.” என்று மஹாபெரியவா கிட்டயே சொல்லி certificate வாங்கி வெச்சுருக்கேன்” என்பார்.

ஸீதாதேவியும், லக்ஷ்மணரும், ஜடாயுவும், சபரியும் அஹைதுகீ ராம பக்தியால் அடைந்த அந்த நிலையை ஸ்வாமிகள் அடைந்து, ஜீவன் முக்தராய் ப்ரகாசித்தார். மனுஷாளுக்கு வர கஷ்டதுல்ல பெரிய்ய கஷடம் புத்ர சோகம் – அதுவே அவரை ஒண்ணும் பண்ணலியே. ஸந்நியாசிக் கோலத்தில் தன் பாகவத பாராயணத்தை அன்னிக்கும் பண்ணின்டு இருந்தார். ‘ப்ரம்ம ஸத்யம் ஜகன்மித்யா’ என்ற ஞானம் இல்லைன்னா, துக்கம் தொண்டையை அடைக்காமல் இருக்குமா? கண் ஜலம் வராம இருக்குமா? பாகவத புஸ்தகத்தைப், பிரிச்சு வெச்சுண்டு படிக்க முடியுமா?

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு கதை சொல்வார் – ஒரு குடியானவன் ஞானியாக இருந்தானம். அவன் குழந்தை தவறிப் போய்விட்டது. அவன் மனைவி அழறா. இவன் கிட்ட ‘நீ அழமாட்டியா, உன் மனம் கல்லா?’ என்று கேட்கிறாள். இவன் சொல்றான், ‘நேத்தி ராத்திரி ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு மஹாராஜாவா இருந்தேன். எனக்கு பத்து குழந்தைகள் இருந்தா. எழுந்து பார்த்தா ஒருத்தரும் இல்லை. அவாளுக்காக அழறதா இந்த குழந்தைக்காக அழறதா?’ என்று கேட்டானாம். ஸ்வாமிகள் அந்த நிலையில் இருந்தார்.

ஒரு பைரவி ப்ராஹ்மணி ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் இருந்த உத்தம பக்தி லக்ஷணங்களைப் பார்த்து, அவரை ஒரு அவதார மஹானாக அடையாளம் கண்டு கொண்டு, அதை ஒரு பண்டிதர்கள் சபையில் நிலைநாட்டினார். இன்று உலகமே அதை ஒத்துக் கொள்கிறது. ஆனால் அவர் காலத்தில் அதை எத்தனை பேர் ஒத்துண்டு இருப்பா? அது போல நம் ஸ்வாமிகளைப் பற்றி மஹாபெரியவா போன்ற ஞானிகளே எடுத்து சொல்லியும் கூட, அவரிடம் explanation கேக்கறவா தான் ஜாஸ்தி இருந்தா.

அவரே வேடிக்கையாக சொல்வார். ‘வேதபாடசாலையிலிருந்து school லில் சேர்த்தா அப்பா. அதுனால் பெரிய பையனா இருந்துண்டு சின்ன class ல ஏன் படிக்கிறேனு கேட்கும் போது explanation குடுப்பேன். அப்போ ஆரம்பிச்சது. வாழ்க்கை முழுக்க ஏன் எல்லாம் வித்யாசமா பண்றேன் என்பதற்கு explanation குடுத்துண்டே இருக்கேன்.’ என்பார். நான் சொன்னேன் – ‘நீங்க different இல்லை பெரியவா. unique. ஒரு unique phenomenon. நீங்களே புரிய வெச்சா தான் புரிஞ்சுக்க முடியும்’ என்று சொன்னேன். சந்தோஷப் பட்டார்.

सद्गुरो! ज्ञानं मे देहि विशदं मॊक्षदं बंधनाशनम्

Series Navigation<< ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – அயோத்யா காண்டம்ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – கிஷ்கிந்தா காண்டம் >>

2 replies on “ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – ஆரண்ய காண்டம்”

Whole of our time is grabbed by your e mails….. Happily. The way things are going we will be forced to eugalize YOU as our contemporary Swami, sir.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.