ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 79-82 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 79 to 82 meaning
ஸங்க்ஷேப ராமாயணத்துல பதச்சேதம் பண்ணி ஸ்லோக்கங்களுக்கு அர்த்தம் பாத்துண்டே வறோம். நேத்து 78வது ஸ்லோகம் அதுல சுந்தரகாண்டம் பூர்த்தியாரது அது வரைக்கும் பார்த்தோம். இந்த ராமாயணத்தை படிக்க படிக்க, சுருக்க படிச்சா போறவே மாட்டேங்கறது. சுந்தரகாண்டத்தை 8 ஸ்லோகத்துலயா, 3000 ஸ்லோகத்துக்கு கம்மியா எப்படி படிக்க முடியும் ஸ்வாரஸ்யமா இருக்காதே அப்டினு தோணறது. அந்த மாதிரி இங்க அடுத்த 2.5 ஸ்லோகத்துல யுத்தகாண்டம் ராவண வதம் வரைக்கும் சொல்லிடறார். சங்க்ஷேபம் அப்டிங்கறதால அவர் அப்டி சொல்லிற்கார். நம்ப கொஞ்சம் விஸ்தாரமா பாக்கலாம்.
79வது ஸ்லோகம்
ततः सुग्रीवसहितो गत्वा तीरं महोदधेः |
தத꞉ ஸுக்³ரீவஸஹிதோ க³த்வா தீரம்ʼ மஹோத³தே⁴꞉ |
ஹனுமார் திரும்ப வந்து சீதாதேவியுடைய நிலைமையை சொல்லும்போது, சீதாதேவி வார்த்தைகளையே சொல்றார்.
इमं च तीव्रं मम शोकवेगं रक्षोभिरेभिः परिभर्त्सनं च।
ब्रूयास्तु रामस्य गतः समीपं शिवश्च तेऽध्वास्तु हरिप्रवीर||
இமம்ʼ ச தீவ்ரம்ʼ மம ஶோகவேக³ம்ʼ ரக்ஷோபி⁴ரேபி⁴꞉ பரிப⁴ர்த்ஸனம்ʼ ச.
ப்³ரூயாஸ்து ராமஸ்ய க³த꞉ ஸமீபம்ʼ ஶிவஶ்ச தே(அ)த்⁴வாஸ்து ஹரிப்ரவீர||
ஹே ஹனுமான், என்னுடைய தீவிரமான சோகத்தையும், ராக்ஷசிகள், ராவணன் எனக்கு பண்ணும் கொடுமைகளையும் ராமரிடத்தில் சொல்லு. என்னை இந்த கஷ்டத்தில் இருந்து சீக்கிரமா வந்து மீட்க சொல்லு.உனக்கு மங்களம் உண்டாகட்டும், அப்டின்னு அந்த வார்தைகளையே சொல்லி
सर्वथा सागरजले संतार: प्रविधीयतां |
ஸர்வதா² ஸாக³ரஜலே ஸந்தார: ப்ரவிதீ⁴யதாம்ʼ |
அங்க அம்மா அவ்ளோ கஷ்டப்படறா அதனால எப்படி கடலை தாண்டறதுன்னு உடனடியா ஒரு வழி பார்க்கணும். உடனே போகணும்னு ஹனுமார், ராமரை அந்த கார்யத்துல தள்ளறார்.
ஆனா திடீர்னு ராமருக்கு எப்படி இந்த அபாரமான எதிரியை நான் எதிர்கொள்ள போறேன், எப்படி இந்த 100 யோஜனை கடலை தாண்டறது, ஹனுமார் சொல்ற அந்த பலத்த பாதுகாப்பெல்லாம் சொல்றபோது, எப்படி நான் அந்த கோட்டையை பிளப்பேன், எப்படி சீதையை மீட்பேன் அப்டின்னு சொல்லும்போது, சுக்ரீவன் சொல்றான்.ஹே ராமா, எவ்ளோ மஹாமதி நீ, எவ்ளோ பெரிய புத்திமான். இப்போ போய் நீங்க தளரலாமா?எங்க சீதை இருக்கான்னு தெரியாம இருந்தபோது தளர்ச்சியா இருந்தோம். இப்போ சீதை இருக்கற இடம் தெரிஞ்சாச்சு எப்படியாவது மீட்டுடலாம். நீங்க கிளம்பரத்துக்கு உத்தரவு கொடுங்கோ அப்டின்னு, raising to the occassion ங்கற மாதிரி சுக்ரீவன், என்னுடைய படையே இருக்கு. எப்படியாவது போய் ராக்ஷஸர்களை வதம் பண்ணி சீதையை மீட்கலாம் அப்டின்னு சொல்றான். ராமருக்கும் திரும்ப உத்ஸாஹம் வரது. இப்போ, ஒவ்வொருநாளும் 12 மணிங்கரது , அபிஜித் முஹூர்த்தம் , இப்போவே கிளம்பலாம்னு உத்தரவு தறார்.எந்த ஒரு க்ராமத்துக்குள்ளேயோ, நகரத்துக்குள்ளேயோ போக வேண்டாம். காட்டு வழியாவே போலாம். வழி இல்லன்னா, வழி செஞ்சிண்டு போலாம். ஜாக்கிரதையா இருங்கோ. எதிரிகள் விஷம் கலந்த அன்னத்தை வெச்சு கொல்ல பாப்பா, அப்டின்னு ராமர் strategise பண்ணி கடற்கரைக்கு வந்து சேர்ந்துடறா. அங்க இருந்து இந்த கடலை எப்படி தாண்டறது, சீதையை எப்படி மீட்கப்போறோம்னு ராமர் , லக்ஷ்மணன் கிட்ட பொலம்பிண்டு இருக்கார். இது இங்க காட்சி. அங்க ராவணன் கலங்கி போய்டறான். ஒரே ஒரு வானரம் வந்து ஊரையே எரிச்சிட்டு போயிடுத்து. பயமுறுத்திட்டு போயிருக்கு. ராம லக்ஷ்மணாளோட பெரும் படையோடு வருவோம், உங்களுக்கு முடிவு கட்டுவோம்னு கர்ஜனை பண்ணிட்டு போயிருக்கு. அவன் சபையை கூட்டி, என்ன பண்றது நீங்க எல்லாம் எனக்கு ஏதாவது வழி சொல்லுங்கோ அப்டினு சபைல சொல்றான். ஒவ்வொருத்தரும் எழுந்து கொக்கரிக்கறா, நான் இருக்கேன் என்ன மீறிண்டு யாரு என்ன பண்ண முடியும். நான் ஒருத்தனே ராமனை வதம் பண்ணுவேன், அப்டின்னு ஒவ்வொருத்தர் ஒண்ணொண்ணு சொல்றான். அப்போ விபீஷணன், ராவணா ஏன் நீ பிறர் மனைவி மேல ஆசை படற. சீதையை ஒப்படைச்சிட்டு நிம்மதியா இருக்கலாம். இந்த ராமன் சாதாரண எதிரி கிடையாது. அவன் தர்மமே வடிவானவன். அதனால நமக்கு கெடுதலே வரும்.
இந்த குலத்துக்கே கெடுதல் வரும் . சீதையை ஒப்படைச்சிடு அப்படின்னவுடனே, ராவணனுக்கு அது ரசிக்கல எழுந்து போய்டறான்.அப்புறம் விபீஷணன் தனியா அவன் வீட்ல போய் இந்த உபதேசம் பண்ணறான். நீ கிளம்பு, இந்த பேச்சு என்கிட்டே பேசிண்டு இருக்காத, ஒரு நாடோடிக்கு பயந்துண்டு, நான் ஏன் லக்ஷ்மி மாதிரி அந்த சீதையை எடுத்துண்டு வந்து வெச்சிண்டிருக்கேன். அவனுக்கு ஆனா அந்த நடுக்கம் போல, திரும்பவும் சபையை கூப்பிட்டு, என்ன பண்ணலாம் சொல்லுங்கோ. ராமரை எப்படியாவது வந்துருவார்னு நினைக்கறேன். எப்படி அவரை ஜெயிக்கலாம், வழி சொல்லுங்கோ அப்டின்னவுடனே, அப்போ திரும்பவும் விபீஷணன் சொல்றான். சாம, தான, பேத, தண்டம்னு இருக்கு. நீ சமாதானமா போ. யுத்தம் பண்ணாதே . ராம பாணம் படாததுனால இந்த ப்ரஹஸ்தன், கும்பகர்ணன் எல்லாம் பேசறா. ராம பாணம் மேல பட்டா இப்டி பேசமாட்டா. உனக்கு யாரும் மிஞ்ச மாட்டா, அப்டினு சொல்றான். அப்போ இந்திரஜித் எழுந்து இந்த சித்தப்பா எப்ப பாத்தாலும் பேடி, அப்டின்னவுடனே விபீஷணனுக்கு கோபம் வரது. இந்த இந்திரஜித் சின்ன பையன், இவனை யாரு உள்ள விட்டா, இவன் அப்பாவோட உயிரையே வாங்கிடுவான் போலருக்கே அப்டின்னவுடனே ராவணனுக்கு கோபம் வர்ரது. ராவணன் விபீஷணனை அவமான படுத்தி பேசறான். இன்னொருத்தரா இருந்தா கொன்னுருப்பேன், உன்ன “சீ”னு விடறேன் அப்படிங்கறான். உடனே விபீஷணன் ரோஷத்தோட ஆகாசத்துல கிளம்பி, நான் இல்லாம நீ க்ஷேமமா இருப்பேன்னா இருந்துக்கோ, நீ என் அண்ணா நான் உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டேன், அப்டின்னு அவனோட நாலு ராக்ஷஸா அவனுக்கு மந்திரி மாதிரி அவாளோட கடலை தாண்டி வந்து , ஆகாசத்துல இருந்து வானரா கிட்ட சொல்றான் சர்வ லோக ஷாரண்யனான ராமரை சரணாகதி பண்றதுக்கு விபீஷணன்னு ராவணனோட தம்பி வந்திருக்கேன்னு சொல்லுங்கோ அப்படிங்கறான். வானராளெல்லாம் போய் சொல்றா . சுக்ரீவன் சொல்றான், யாரைவேணா சேத்துக்கலாம், எதிரிகிட்டேர்ந்து வந்தவாள சேத்துக்க கூடாது, ராமா இந்த விபீஷணனை கொல்றதுக்கு உத்தரவு கொடு அப்டிங்கறான். ராமர் எல்லார்கிட்டயும் அபிப்ராயம் கேக்கறார். நிறைய பேர் வேண்டாம்னு தான் சொல்றா. ஹனுமான் மட்டும் இவன் சுத்தாத்மா, இவனை நம்பலாம், இவனை சேத்துக்கலாம் அப்டின்னு சொல்றார். ராமருக்கு ரொம்ப சந்தோஷமா ஆய்டறது. ராமர் முடிவா சொல்றார்,என்னை வந்து நமஸ்காரம் பண்ணி காப்பாத்து ராமானு சொன்னா, அவனை எல்லா காலத்திலும், எல்லா கோணத்திலும் காப்பாற்றுவேன் இதை நான் வ்ரதமா வெச்சிண்டுருக்கேன்.
सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते ।
अभयं सर्वभूतेभ्यो ददाम्येतद् व्रतं मम ॥
ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே .
அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||
அப்டின்னு ராமர் வாக்கு குடுக்கறார். அந்த வாக்கு அன்னிக்கு விபீஷணனுக்கு மட்டுமில்ல. இன்னிக்கும் , என்னிக்கும் நமக்கும் இருக்கு. ராமா காப்பாத்துனு சொன்னா போறும். நமஸ்காரம் பண்ணா போறும்.
आपदाम् अप हर्थारं दातारं सर्व संपदां |
लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् ||
ஆபதா³ம் அப ஹர்தா²ரம்ʼ தா³தாரம்ʼ ஸர்வ ஸம்பதா³ம்ʼ |
லோகாபி⁴ராமம்ʼ ஶ்ரீராமம்ʼ பூ⁴யோ பூ⁴யோ நமாம்யஹம் ||
அப்டின்னு ராமரை நமஸ்காரம் பண்ணா, எல்லா ஆபத்துகளையும் விலக்கி, எல்லா சம்பத்துக்களையும் கொடுப்பார். விபீஷணனுக்கு அங்கேயே சமுத்திர ஜலத்தை வெச்சு லங்கைக்கு ராஜாவா பட்டாபிஷேகம் பண்ணிடறார். அப்புறம் இந்த கடலை எப்படி தாண்டலாம்னு கேட்ட போது,விபீஷணன் சமுத்திர ராஜாகிட்ட வேண்டிக்கலாம்னவுடனே , 3 நாள் தர்பைல படுத்துண்டு, பட்டினி கிடந்து ராமர் வேண்டிக்கறார். சமுத்திர ராஜா வரல. ராமர் கோச்சுண்டு ஒரு அம்பை போடறார் அது இங்க அடுத்த ஸ்லோகம்
समुद्रं क्षोभयामास शरैरादित्यसन्निभैः ||
ஸமுத்³ரம்ʼ க்ஷோப⁴யாமாஸ ஶரைராதி³த்யஸன்னிபை⁴꞉ ||
சூர்யன் போல ஜ்வலிக்ககூடிய அம்புகளை சமுத்திர ராஜா மேல போடறார். ஏன்னா வழி விட சொன்னபோது அவன் பதில் சொல்லாம பேசாம கர்வமா இருக்கான். அந்த அம்பை விட்டவுடனே கடல்ல இருக்கற ஜீவராசிகள் எல்லாம் தவிக்கிறது
दर्शयामास चात्मानं समुद्रः सरितां पतिः |
த³ர்ஶயாமாஸ சாத்மானம்ʼ ஸமுத்³ர꞉ ஸரிதாம்ʼ பதி꞉ |
ப்ரம்மாஸ்திரத்தை எடுத்திடறார் ராமர், கடலையே வத்த அடிக்க போறேன்னு சொல்றார். அப்போ சமுத்திர ராஜா ” த³ர்ஶயாமாஸ சாத்மானம்ʼ” தன்னை காண்பித்து கொள்கிறான். சமுத்திர ராஜா ஒரு மனுஷ்ய ரூபத்துல வந்து மன்னிச்சுடு, பஞ்ச பூதங்கள்னா பகவான் இட்ட கட்டளை ஒண்ணு இருக்கு. நீ பகவான் தானே நான் உன்னை அவமான படுத்திருக்க கூடாது. உன்னுடைய படைல நலன்னு ஒருத்தன் இருக்கான். அவனை கொண்டு நீ பாலம் கட்டு நான் விழாம தாங்கறேன் அப்டினு சொல்றான்.
समुद्रवचनाच्चैव नलं सेतुमकारयत् ||
ஸமுத்³ரவசனாச்சைவ நலம்ʼ ஸேதுமகாரயத் ||
ராமர் நலனை கொண்டு சமுத்திரத்தின் மேல் பாலத்தை கட்டுவித்தார் அப்டினு வர்ரது. ஐந்து நாள்ல 100 யோஜனை நீளம் 10 யோஜனை அகலம் அப்படிங்கற ஆஸ்ச்சர்யமான, கடல் மேல பாலம்ங்கற, இனிக்கும் scienceல கூட பண்ணல, அந்த மாதிரி ஆஸ்ச்சர்யமான காரியத்தை ராமர் பண்ணறார். முதல் நாள் 14 யோஜனை, அப்புறம் 20, அப்புறம் 21, அப்புறம் 22, அப்புறம் 23 யோஜனை இப்டி அஞ்சு நாள்ல பாலத்தை கட்டி லங்கைக்கு போய் சேரறா. ” தேன க³த்வா புரீம்ʼ லங்காம்ʼ ” – அந்த 100 யோஜனை பாலத்துல ராமர் வானரப்படையோடு லங்கைக்கு போய் சேர்ந்தார். இந்த சங்க்ஷேப ராமாயணத்துல, ” ஹத்வா ராவணமாஹவே “, யுத்தத்தில் ராவணனை வதம் பண்ணார் அப்டின்னு 20 வது சர்கதுலேந்து 111வது சர்க்கம் யுத்த காண்டத்துக்கு ஒரு jump. அதுக்கு நடுல இருக்கற சில ஸ்வாரஸ்யமான விஷயங்கள் சிலது நான் சொல்றேன்.
லங்கைக்கு பெரிய படை வந்தவுடனே ராவணன் ஒற்றர்களை அனுப்பறான். அவாளை விபீஷணன் பிடிச்சிடறான். அவாளை ராமர் விடிவிச்சிடறார். போய் எல்லா தகவலையும் சொல்லு , நாளை கோட்டையை தகர்க்க போறேன்னு சொல்லு அப்டிங்கறார். அந்த ஒற்றர்கள் போனவுடனே ராவணன் கேக்கறான், யாரெல்லாம் இருக்கா. ஒற்றர்கள் ஒவ்வொவருத்தரையும் பத்தி சொல்றா. அப்புறம் ராவணன், ராமர் தலை மாதிரி ஒண்ணு பண்ணிண்டு போய் சீதையை பயமுறுத்தறான். அதுக்குள்ள யுத்த பேரிகை முழங்கறது, ராவணன் அந்தண்ட போனவுடனே அந்த தலை மறைஞ்சிடறது. சரமானு ஒரு ராக்ஷசி, அவ சீதையை சமாதான படுத்தறா. அதெல்லாம் ஒரு மாயை,நீ கவலை படாத அப்டின்னு. அப்புறம் சபையை கூட்டறான். அங்க மால்யவான்னு ஒருத்தர், அதர்மத்துக்கு காலமா இருந்த பொழுது நாம நல்லா வாழ்ந்தோம். இப்போ ரிஷிகள், முனிவர்கள் எல்லாம் யாக, யஞம் எல்லாம் பண்ணி இப்போ தர்மமத்துக்கு காலமா இருக்கு. அதனால நீ யுத்தம் பண்ண வேண்டாம், இது குல நாசமா வரும்னு . இந்த ராவணனை ரெண்டா வெட்டி போட்டாலும் இன்னொருத்தர் முன்னால் தலை வணங்க மாட்டான். நான் வணங்கா முடி ராவணன். நான் போய் குரங்கு கூட்டத்தோட ஒரு நாடோடி வந்தான்னு அவன் கால்ல போய் விழப் போறதில்ல. எழுந்து போங்கோ அந்தண்ட அப்டினு அந்த பெரியவரை சொல்லிடறான். ராமர் அங்கதனை அமிச்சு கடைசியா ஒரு முறை எச்சரிக்கை விடறார். சீதையை ஒப்படைச்சு ஓடிப்போ. ஆனா லங்கா ராஜ்யம் உனக்கு இல்ல விபீஷணனுக்கு தான் அப்டினு. இந்த விஷயத்தை அங்கதான் போய் சொன்னவுடனே, அவனை கொல்லு அப்டிங்கறான் ராவணன். அங்கதன், அவனை கொல்ல வந்த நாலு பேரை ஆகாசத்துல மேல தூக்கிண்டு போய் அவாளை கீழ போட்டு வதம் பண்ணி, ராவணனோட மாளிகை கோபுரத்தை காலால உதைச்சு பொடி ஆக்கிட்டு ராமர் கிட்ட வந்து சேர்ந்துடறான். யுத்தம் ஆரம்பிக்கிறது.
பிரமாதமான யுத்தம். அங்கதன் இந்திரஜித்தை தோக்கடிச்சிடறான். இந்திரஜித் கோபத்துல மறைஞ்சிருந்து ராம லக்ஷ்மணா மேல நாக பாசத்தை போடறான். எல்லா படையையும் மறைஞ்சிருந்து அடிக்கிறான். எல்லாரும் தவிக்கறா. நாக பாசத்துல ராம லக்ஷ்மணாள் விழுந்து இருக்கறத பாத்து எல்லாருமே ரொம்ப சோர்வடையறா. புஷ்பக விமானத்துல சீதையை கொண்டு வந்து காமிக்க சொல்றான் ராவணன். சீதையும் பாத்து புலம்பி அழறா. ராமர் ஒரு நிமிஷம் மூர்ச்சை தெளிஞ்சு எழுந்து, லக்ஷ்மணன் விழுந்து கிடக்கறத பாத்து அழறார். ரொம்ப வருத்தப்படும்போது கருட பகவான் வரார். கருட பகவான் வந்த ஒடனே அந்த நாகங்கள் எல்லாம் போய்டறது. அவர் வந்து அவாளை தடவி குடுத்தவுடனே, அவா மின்ன விட ரெண்டு மடங்கு சக்தியும் , தேஜஸும் , பலமும் ஆயிடறா. கருட பகவான் சொல்றார்.
शूराणाम् शुद्ध भावानाम् भवताम् आर्जवम् बलम् ||
ஶூராணாம் ஶுத்³த⁴ பா⁴வானாம் ப⁴வதாம் ஆர்ஜவம் ப³லம் ||
ராக்ஷஸர்கள் சூழ்ச்சி பண்ணுவார்கள், ஆனால் உங்களுடைய சத்தியமும், நேர்மையும் தான் உங்களுக்கு பலம்.
கவலைப்படாதே, நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள் . சீதையை மீண்டும் அடைவீர்கள். நான் யாருங்கறது உங்களுக்கு கடைசில தெரியும் அப்டினு சொல்லிட்டு போறார். அப்புறம் மேலும் மேலும் ராவணன் ராக்ஷரங்களை அனுப்பறான், அவாளை ஹனுமான், அங்கதன் , சுக்ரீவன் அப்டினு ஒவ்வொருத்தரை வதம் பண்ணிடறா. ப்ரஹஸ்தன்னு சேனாதிபதி பெரிய சேனையோட வரான். அவனை வானர சேனாதிபதி நீலன் யுத்தம் பண்ணி வதம் பண்ணிடறான். ராவணனுக்கு ஆஸ்ச்சர்யமா போய்டறது அவனே யுத்தத்துக்கு வரான். அவன் வந்து பராக்ரமமா யுத்தம் பண்றான், அந்த காட்சிகள் எல்லாம் அழகா இருக்கும். ராமரும் ராவணனுமா யுத்தம், பிரதம யுத்தம் பண்ணும்போது ராவணன் , ராமரை தூக்கிண்டிருக்கற ஹனுமாரை அடிக்கிறான். உடனே ராமருக்கு கோவம் வந்து, ராவணனை பொடி பொடியா ஆக்கிடறார். அவனோட க்ரீடம், ரதம், சாரதி, கவசம், வில்லு எல்லாம் போய் அடுத்த பாணம் போட்டா ராவணன் மாண்டு போயிடுவான். அந்த மாதிரி அடிக்கிறார். வாழ்க்கைல ராவணனுக்கு முதல் தடவை அவனுக்கு உயிர் பயம் ஏற்படறது. ராம பானத்தை கண்டு நடுங்கறான். ராமர் வந்து நீ இன்னிக்கி நன்னா யுத்தம் பண்ண, தளர்ச்சியா இருக்க, ஆயுதம் வேற இல்ல , உன்னை கொல்ல இஷ்டம் இல்லை . நீ நாளைக்கு வா அப்டினு திரும்பி அனுப்பறார். ரொம்ப அவமானப்பட்டு திரும்பறான். வந்துவுடனே கும்பகர்ணனை எழுப்பறான். கும்பகர்ணன் ஆறு மாசம் தூங்குவான் ஒரு நாள் எழுந்திருப்பான். இப்போ தான் பத்து நாள் மின்னாடி தூங்க போயிருக்கான். அவனை எழுப்புங்கோ அப்டிங்கறான். அவன் எழுந்தாதான் நான் ஜெயிக்க முடியும் அப்டினு, கும்பகர்ணனை எழுப்பறது ஒரு சிரிப்பான sceneஆ இருக்கும்.
அவனை உலக்கையால இடிக்கறா, அவன் காதை கடிக்கறா, அவன் முடிய பிடிச்சு இழுக்கறா, அவன் மேல யானையை ஓட்டறா, தண்ணிய கொட்டறா, பெரிய சத்தம் பண்ணறா. எல்லாத்தையும் பண்ணி ஒரு வழியா அவனை எழுப்பறா. எழுந்து என்ன வேணும் அப்டிங்கறான். ராம லக்ஷ்மணாள் யுத்தத்துக்கு வந்திருக்கா. நம்ம பக்கத்துலேந்து ஒருத்தொருத்தரா வதம் ஆயிண்டு இருக்கா அப்டிங்கறான். இதோ நான் இப்போவே யுத்தத்துக்கு போறேன்னு சொல்றான். நேரா போகாத, ராவணனை பாத்துட்டு போ அப்டிங்கறா. ராவணன் அவனுக்கு அலங்காரம் எல்லாம் பண்ணி நீ தான் எனக்கு ஜெயிச்சு தரணும் அப்டிங்கறான்.
கும்பகர்ணன் சொல்றான், விபீஷணன் பேச்சை கேளேன்னு. உடனே ராவணன், இதுக்காகவா உன்னை எழுப்பினேன், யுத்தம் பண்ணுவியா மாட்டியா ?. உடனே கும்பகர்ணன் உனக்காக உயிரையும் குடுப்பேன். நான் போய் யுத்தம் பண்ணறேன் அப்டின்னு யுத்தம் பண்ணறான். கும்பகர்ணன் யுத்தம் பன்றான், அவன் முன்னாடி யாராலயும் நிக்க முடில.ஒவ்வொருத்தரா வீழ்த்திண்டு வரான். கடைசில ராமர் அவனோட யுத்தம் பண்ணி அவன் மேல ப்ரஹ்மாஸ்திரத்தை போட்டு அவனை வீழ்த்திடறார். அப்புறம் அதிகாயன்னு ஒருத்தன் வரான், அவனை லக்ஷ்மணன் வதம் பன்றார். இந்திரஜித் சீதாதேவி மாதிரி மாயையால் ஒரு உருவம் பண்ணி, ஹனுமார் முன்னாடி அதை வெட்டி போட்டவுடனே, ஹனுமார் பதறி போய் ராமர் கிட்டவந்து சொல்றார். ராமர் மூர்ச்சையாகி விழுந்துடறார். அப்புறம் மயக்கம் தெளிஞ்ச உடனே லக்ஷ்மணன் சொல்றான், ஹே ராமா நீ எப்போவும் தர்மத்தை நம்பி இருக்க, ஆனா உனக்கு இந்த மாதிரி கஷ்டம் வரது. அதனால தான் அன்னிக்கி செல்வத்தை விடாத, ராஜ்யத்தை விடாத அப்டினு அன்னிக்கி நான் சொன்னேன் அப்டினு சொல்லிண்டிருக்கும் போது விபீஷணன் வந்து சீதையை எல்லாம் யாரும் வதம் பண்ண முடியாது. இது இந்திரஜித்தோட மாயை. அவன் நிகும்பிலை ஒரு எடத்துல யாகம் பன்றான். அந்த யாகத்தை நாம தடுக்கணும், லக்ஷ்மணனை அனுப்புங்கோ அப்டின்னாவுடனே, ராமர் லக்ஷ்மணா போயிட்டு வானு சொல்றார். லக்ஷ்மணன், ராமரை ப்ரதக்ஷிணம் பண்ணி, நமஸ்காரம் பண்ணிட்டு யுத்தத்துக்கு போறான்.மூணு நாள் யுத்தம் பன்றான். நிகும்பிலைல யாகம் பூர்த்தி ஆனா இந்திரஜித் மறைஞ்சிருந்து அடிப்பான். லக்ஷ்மணனுக்கும் இந்திரஜித்துக்கும் கடுமையான யுத்தம் நடக்கறது. மூணு நாள் யுத்தம் நடக்கறது, எந்த அஸ்திரத்தை யாரு போட்டாலும் மாத்து அஸ்திரம் அடுத்தவர் போட்டு யாருமே ஜெயிக்க முடியாத போயிண்டிருக்கும்போது , லஷ்மணன் ராமர்கிட்ட உன் தர்மம் உன்னை காப்பாத்தித்தானு கேட்டான்.இப்போ அந்த ராமருடைய தர்மம் தான் ஜெயிக்கும் அப்டினு புரிஞ்சுண்டான்.
धर्मात्मा सत्यसन्धश्च रामो दाशरथिर्यदि ||
पौरुषे चाप्रतिद्वन्द्वस्तदेनं जहि रावणिम् |
த⁴ர்மாத்மா ஸத்யஸந்த⁴ஶ்ச ராமோ தா³ஶரதி²ர்யதி³ ||
பௌருஷே சாப்ரதித்³வந்த்³வஸ்ததே³னம்ʼ ஜஹி ராவணிம் |
என்னுடைய அண்ணா தசரத குமாரர் ராமர், சத்தியசந்தர் தர்மாத்மா என்பது உண்மையானால், இந்த அம்பு ராவணனுடைய பிள்ளை இந்திரஜித்தை கொல்லட்டும்னு போடறான், இந்திரஜித் தலை கீழ விழறது. அப்படி அந்த ராம நாமத்துக்கு அவ்ளோ மஹிமை. சத்தியமும் , தர்மமும் ஜெயிக்கும் அப்படிங்கறது ராமாயாணத்துடய முக்கியமான message, முக்கியமான செய்தி. அப்டி இந்திரஜித் வதம் ஆனா பின்ன ராவணன் கோவத்துல சீதையை கொல்ல போறான்.
அப்போ சுபார்ச்வன்னு ஒருத்தன் நீ சீதையை கொல்லாத, ராமரோட யுத்தம் பண்ணுன்னு சொல்றான். மூல பல ஸைன்யமா ஒரு லக்ஷம் பேரு அனுப்பறான, ராமர் தனி ஒருவராவே கந்தர்வாஸ்திரம் கொண்டு அவாளை வதம் பண்ணறார். ராவணனே நேர்ல யுத்தத்துக்கு வரான். ராவணன் விபீஷணனை கொல்ல பாக்கறான். ரெண்டு முறை விபீஷணன் மேல வேலை விடறான், ரெண்டு வாட்டியும் லக்ஷ்மணன் அதை தடுத்துடறான். உடனே கடுங்கோபத்தோட ராவணன், லக்ஷ்மணன் மேல வேலை பாய்ச்சி லக்ஷ்மணன் கீழ விழுந்துடறான். அப்போ ராமர் தவிக்கிறார். ஒரு ப்ரதிஞை பன்றார். இன்னிக்கி பொழுது சாயரதுக்குள்ள உலகத்துல ஒண்ணு ராமன் இருக்கணும் இல்லன்னா ராவணன் இருக்கணும். இன்னிக்கி ராமருடைய ராமத்தன்மையை உலகம் பார்க்கபோகிறது, இன்னிக்கி இந்த துஷ்டனை நான் வதம் பண்றேன். எதுக்காக இவ்ளோ கோபத்தை வெச்சிண்டிருந்தேனோ அதை காமிக்கப்போறேன் அப்டின்னு சொல்லி ராம ராவண யுத்தம். இதுக்கு நடுவுல ஹனுமார் சஞ்சீவி மலையை திரும்பவும் கொண்டு வந்து, முதல் தடவை இந்திரஜித் ப்ரம்மாஸ்திரம் போட்டு எல்லாரையும் வதம் பண்ண போது சஞ்சீவி மலையை கொண்டு வந்து உயிர் குடுத்தார். இப்போ ஒரு வாட்டி ஸஞ்ஜீவி மலையை கொண்டு வந்து லக்ஷ்மணனை உயிர்ப்பிக்கறார். ராம ராவண யுத்தம் ஆரம்பிக்கறது. ராவணன் தேர்ல இருக்கான், ராமர் தரைல இருக்கார்னவுடனே இந்திரன் மாதலியோட தன்னுடைய தேரை அனுப்பறான்.அது மேல ஏறிண்டு ராமர் யுத்தம் பன்றார். அகஸ்தியர் வந்து ராமருக்கு ஆதித்யஹ்ருதயம்னு ஒரு ஸ்தோத்திரத்தை உபதேசம் பண்ணறார். ராமர் அதை மூணு வாட்டி ஜெபிச்சு ப்ரஹ்மாஸ்திரம் போட்டு ராவணனை வதம் பன்றார் அப்படிங்கறது இங்க வரது. இன்னிக்கி ராவண வதம் வரைக்கும் ஆயிருக்கு, அதுக்கப்புறம் யுத்த காண்டத்துல ராமர் பட்டாபிஷேகம் வரைக்கும் இருக்கறத நாளைக்கு பார்ப்போம்.
ஜானகி காந்தஸ்மரணம்.. ஜய் ஜய் ராம ராம !!!