ஆர்யா சதகம் 47வது ஸ்லோகம் பொருளுரை – யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி
अभिदाकृतिर्भिदाकृतिरचिदाकृतिरपि चिदाकृतिर्मातः ।
अनहन्ता त्वमहन्ता भ्रमयसि कामाक्षि शाश्वती विश्वम् ॥
ஆர்யா சதகம் 47வது ஸ்லோகம் பொருளுரை – யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி
अभिदाकृतिर्भिदाकृतिरचिदाकृतिरपि चिदाकृतिर्मातः ।
अनहन्ता त्वमहन्ता भ्रमयसि कामाक्षि शाश्वती विश्वम् ॥
2 replies on “யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி”
அழகான தலைப்பு!!
தேவி காமாக்ஷி அபேதமற்ற , நிர்விகார ,நிர்பேத ஸ்வரூபிணீ!!
அவளே பஞ்சாஷட்பீட ரூபிணீ என்று அறியப்பட்டவள்.
அகண்ட ,நானா விதத் தோற்றங்களுடன் அஹமித்யேவ
விபாவயே பவானீம் என்று நாம் ஸ்தோத்தரிக்கும்படியாக,
அஹமில்லாதவள் சிச்சக்தியாக சேதனத்துடனும்,
ஜட சக்தியாக அசேதனத்துடனும் விளங்குகிறாள் !!
இதனை அருணகிரியார் உருவாய், அருவாய், உளதாய்
,இலதாய் ,மருவாய் மலராய் ,மணியாய் ஒளியாய்,
கருவாய் உயிராய் கதியாய் விதியாய் எனக்
அனுபூதியில்.குறிப்பிடுகிறார் !!
எவ்வளவு ஒரு பெரிய தத்வத்தை எளிய முறையில் ஞானிகள்
நமக்குச் சொல்கிறார்கள்!!!
அதனைத் திரும்ப நமக்கு சொல்லக்கூட அழகாகத்
தெரிவதில்லை!
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும்னீங்கி நிற்பாள் என் நெஞ்சினுள்ளே!!
இப்படியாக பட்டர் நமக்கு அறிவுறுத்துகிறார்!1
பதிகத்தில் சந்திர ஜடாதரி, என்று தொடங்கும்பதிகம் அவளை
பலவாறாகச் சித்தரிக்கிறது!
ஸம்ப்ரம பயோதரி, சுமங்கலி, சுலக்ஷணி,
சாற்றருங் கருணாகரி இப்படியாக பல ரூப வர்ணனைகள்!
ச்யாமளா தண்டகத்தில் காளிதாஸர் அவர்கள் ஸர்வ
ஸர்வ தீர்த்தாத்மிகே ஸர்வ மந்த்ராத்மிகே, ஸர்வ
யத்ராத்மிகே,ஸர்வ சக்த்யாத்மிகே ஸர்வ பீடாத்மிகே
ஸர்வ வேதாத்மிகே, ஸர்வ வித்யாத்மிகே இப்படியாக
அனைத்து சேதன அசேதனப் பொருள்களும் அம்பாளின்
ரூபங்களேஎன்று சொல்கிறார்!
ஆக அனைத்து இயற்கைப் பொருள்களிலும் அம்பாள்
வடிவத்தை நாம் மனதில் த்யானித்து, அவளால்
அருளப்பட்ட அத்தனை உலகப் படைப்புகளிலும்
அவள் ஸ்வரூபமாக வழிபடுவோம்!!
இந்த ஸ்லோகம் நம் அனைவரையும் இயற்கையை
அன்னை வடிவாமாயாராதிக்க ஓர் வழினடத்துதலாம்!!
கண்ணட்தாசன் ஓர் பாடலில் காலையும் நீயே
மாலையும் நீயே, காற்றும் நீயே கடலும் நீயே
என்று சொல்லி அருள் வடைவான தெய்வமும்
நீயே என்று சொல்வது இதைத்தான்!! எளிய
முறையில் உயர்ந்த தத்வத்தைச் சொல்லி
இருக்கிறார்!!
சம்ஸ்க்ருதம்தெரியாதவர்களுக்கும் புரியும்படி
கணபதி விளக்கம் அபாரம்!!
ஜய ஜய ஜகதம்ப சிவே
ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம்
மிக அழகான ஸ்லோகம், அதை அழகாக நயம்பட ஒலிவடிவில் சொல்லி இருக்கிறீர்கள்.
இந்த ஆர்யா சதகம் 47வது ஸ்லோகம்
படித்து பழகும் முன் ரொம்ப தயக்கம், இது நமது வாயிலே சுத்தமாக வருமா என்று.
இந்த வரிகளை தவறில்லாமல் உச்சரிக்க அந்த காமாக்ஷி அருளால், சற்று தைரியமாக இருக்கு. இது போல அம்பாளின் அளவு கடந்த அன்பு, கருணையினாலேயே அகிலலோகத்தில் ஒவ்வொரு இயக்கமும் நடக்கிறது.
பெரியோர்கள் சொல் போல அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
ஆயினும் நம்மை முழுமையாக அந்தப் பரம்பொருளான காமாக்ஷியிடம் ஒப்புவித்தால் இது நன்றாக உணர முடியும் . 🌹