Categories
mooka pancha shathi one slokam

கவித்வஸ்ரீ மிச்ரீகரண நிபுணௌ


பாதாரவிந்த சதகம் 73வது ஸ்லோகம் பொருளுரை – கவித்வஸ்ரீ மிச்ரீகரண நிபுணௌ

कवित्वश्रीमिश्रीकरणनिपुणौ रक्षणचणौ
विपन्नानां श्रीमन्नलिनमसृणौ शोणकिरणौ ।
मुनीन्द्राणामन्तःकरणशरणौ मन्दसरणौ
मनोज्ञौ कामाक्ष्या दुरितहरणौ नौमि चरणौ ॥                

3 replies on “கவித்வஸ்ரீ மிச்ரீகரண நிபுணௌ”

கவித்துவமும் செல்வமும் கொடுத்து, ஆபத்துகளை நீக்கி, பாவங்களையும் போக்கும் அந்தப் பாதங்களை துதிக்கிறேன்னு சொல்ற அழகான ஸ்லோகம். கூடவே அம்பாளுடைய பாத வர்ணனை. 🙏🌸ஸ்வாமிகளுக்கு இது பொருந்தின விதமாக சொன்னது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு தடவையும் மஹாபெரியவாளை சம்பந்தப்படுத்தியோ, ஸ்வாமிகளை சம்பந்தப்படுத்தியோ, சிவன் சாரின் கருத்துகளைச் சொல்லும் போதோ ‘ஆஹா!’ன்னு கேட்டுண்டே இருக்கலாம். 👌🙏🌸

‘கவித்வஸ்ரீ’னு முக கவி சொல்ற மாதிரி, பெரியவா ஆச்சார்யாள் சொல்வதை மேற்கொள் காட்டுகிறார். ‘ஸரஸ்வதியா லக்ஷ்ம்யா’னு ஆரம்பிக்கிற ஸௌந்தர்யலஹரி ஸ்தோத்திரத்தில், அம்பாளை உபாஸிப்பதன் பலன் என்று முதலில் படிப்பு, அப்புறம் செல்வம், அப்புறம் அழகு கிடைக்கும் என்கிறார். நாம பணத்தை விரும்பி உபாஸித்தாலும், அம்பாள், ‘முதலில் அர்த்தத்தை கொடுத்தால் அனர்த்தமாகும்; அதனால் தர்ம மார்க்கத்தில் பிரயோஜனப்படுத்தும் விவேகத்தை முதலில் தந்து, பிறகு தனத்தை தரலாம்’ என்று எண்ணுகிறாளாம்.🙏🌸

காமாக்ஷியை உபாஸிப்பவர்கள் தனியாக லட்சுமி ஸரஸ்வதி இருவரையும் உபாஸிக்க வேண்டும் என்பதில்லை. ‘கா’ என்கிற ஸரஸ்வதியையும், ‘மா’ என்கிற மகாலக்ஷ்மியையும் தன் அக்ஷங்களாக (கண்களாக)க் கொண்டவள் “காமாக்ஷி”.🙏🌸

கோவிந்த கோவிந்த ஹரே முராரே
கோவிந்த கோவிந்த முகுந்த கிருஷ்ணா |
கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே
கோவிந்த தாமோதர மாதவேதி ||
🙏🙏🙏🙏

கவிதை செய்ய பெரும் பாக்யம் வேணும் ! அப்படிப்பட்ட கவிதையை அருள தேவியின் பாத அனுகிரகம் மிக அவசியம் !
அழகான தாமரை போன்ற எழில்,சிவந்த நிறம், மிக்க சோபையும் கொண்டது !
முனி மானஸ ஹம்ஸிகா, ஸ முன்மீலத் ஸம்வித , கமல – மகரன் தைக- ரஸிகம், மஹதாம் மான ஸரோவரம், என்கிறபடி முனிவர்களின் அந்தக்கரணங்களயே தன் வாசஸ்தலமாய்க் கொண்டவை! ஹம்ஸத்தைப் பழிக்கும் ம்ருதுவான எழில் நடையுடன் பக்தர்களின் மனதுக்கு ஆனந்தம் அளிப்பவை ! அப்படிப்பட்ட காமாட்சியின் சரணங்ளை வணங்குகிறேன் என்ற பொருள்படி இந்த ஸ்லோகம் -அமைந்துள்ளது.
இங்கு ஸ்வாமிகலின் வாக் நயமும், நளினமும் அதிர்ந்து பேசாத தன்மையும் அனுபவித்த நீங்கள் பாக்யவான் !
நிறை குடம் ததும்பாதல்லவா?
கோவிந்த கோவிந்த ஹரே முராரே கோவிந்த கோவிந்தமுகுந்த கிருஷ்ணா கோவிந்த கோவிந்த தாமோதர மாதவேதி!
சரணம் ஸ்வாமிகள் சரணங்களுக்கு!!

ஸ்வாமிகள் நாமா கற்பக விருட்சம்
Daily a capsule form of swamigal guidance is required in day to day life
Many thanks to Ganapathy sir

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.