பாதாரவிந்த சதகம் 75வது ஸ்லோகம் பொருளுறை – எல்லோரும் இன்புற்று இருக்க நினைத்த மஹான்கள்
स्वभावादन्योन्यं किसलयमपीदं तव पदं
म्रदिम्ना शोणिम्ना भगवति दधाते सदृशताम् ।
वने पूर्वस्येच्छा सततमवने किं तु जगतां
परस्येत्थं भेदः स्फुरति हृदि कामाक्षि सुधियाम् ॥
2 replies on “எல்லோரும் இன்புற்று இருக்க நினைத்த மஹான்கள்”
அளவற்ற கருணைக் கடல் மகான்கள் அனைவரும் ! தமக்காக வாழாமல் உலக பாச பந்தம் அற்று உலக ஜனங்களுக்காவே தம் வாழ் நாளை அர்ப்பணித்தவர்கள் பெரியவா, சிவன் சார், ஸ்வாமிகள் அனைவரும் !
அவர்கள் கணித்த மண்ணில், சுவாசித்த காற்றை சுவாசித்து, அவர்தம் நடந்த பாதையில் நடக்கக் கொடுத்து வைத்திருக்கிறோம் !
இங்கு தேவி பகவதியானால் சிவன் பகவான் ஆவார்.
பக என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு.
நக சந்தத்தால் த்ரி கோண ரூபமான ஶ்ரீசக்கரம் தேவியின் ஸ்வரூபம்!
தேவி காமாக்ஷியின் பாதங்கள் மென்மையாகவும் சிவந்தும் ஒன்றுக்கு ஒன்று இணையாகவும், காணப் படுகிறது! வானத்தில் வசிப்பதால் தலிற்களுக்கு வனத்தில் ஆசை ! ஆனால் தேவிக்கோ ஆவணத்தில் அதாவது உலக சம்ரக்ஷனத்தில் தான் பிரியம்
இப்படித்தான் தேவியை மகான்கள் மனதில் நினைப்பர்.
உலக ரக்ஷNணத்துக்காகவே இப்படிப்பட்ட மிருதுவான, சிவப்பான பாதங்கள் ஏற்பட்டன என்று தோன்றுகிறது அல்லவா?
தேவி சரணம்..
நமஸ்காரம் அண்ணா 🙏
“எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே”
என்ற தாயுமான சுவாமிகள் வாக்கு,
அந்த பராபரமாகிய பரம்பொருளே மஹான்களாக திருஅவதாரம் புரிந்துள்ளனர் என்னும் உண்மை உணர்த்தும் விரிவுரை.
மேலே உள்ள வரைபடம் அதை தெளிவாக காட்டுகிறது. ஸ்ரீ காமாக்ஷி, மற்றும் பரமேஸ்வரனே ஏனைய மஹான்களாக வந்து லோக க்ஷேமத்திற்காகவே தங்கள் சரீர ஸௌக்யம் பார்க்காமல் வாழ்ந்தனர். ஸ்ரீ மஹா பெரியவா, ஸ்ரீ சார், ஸ்ரீ ஸ்வாமிகள் ஆகியோர் எந்த நேரத்திலும், எந்த
நிலையிலும் எல்லோரின் க்ஷேம லாபம் கருத்தில் கொண்டு இருந்தனர்.
நாம் நம்மால் இயன்ற அளவு அவர்கள் காட்டிய பாதையில் பயணம் செய்ய முயற்சிப்போம்.
ஸ்ரீ சார் கூறிய எளிய வாழ்க்கை முறை, உண்மையே பேசுதல், பிறர் மனம் நோகாமல் நடந்து கொள்ளுதல் போன்றவைகளை கடை பிடிக்க இம்மஹான்களின் அருளால் யத்தனிப்போம். 🙏 🙏
ஸ்ரீ காமாக்ஷி திருவடிகள் ஷரணம் 🙏 🙏