खण्डीकृत्य प्रकृतिकुटिलं कल्मषं प्रातिभश्री-
शुण्डीरत्वं निजपदजुषां शून्यतन्द्रं दिशन्ती ।
तुण्डीराख्ये महति विषये स्वर्णवृष्टिप्रदात्री
चण्डी देवी कलयति रतिं चन्द्रचूडालचूडे ॥
Categories
खण्डीकृत्य प्रकृतिकुटिलं कल्मषं प्रातिभश्री-
शुण्डीरत्वं निजपदजुषां शून्यतन्द्रं दिशन्ती ।
तुण्डीराख्ये महति विषये स्वर्णवृष्टिप्रदात्री
चण्डी देवी कलयति रतिं चन्द्रचूडालचूडे ॥
3 replies on “காஞ்சியில் பெய்த தங்கமழை”
அழகான ஸ்லோகம். மிக அருமையான விளக்கம் 👌🙏🌸
சிவன் சாரின் விவேகி பற்றிய தகவல், ராம-ராவண மாறுபாடுகள், பஜகோவிந்தம் மேற்கோள், சிவாஜி-ஸமர்த்த ராமதாஸர் மேற்கோள் அருமை👌🙏🌸 பரதன் ராம பாதுகை கிட்ட எல்லாவற்றையும் ஒப்பித்து ஆட்சி நடத்தியது ஞாபகம் வர்றது.
இந்த ஸ்லோகத்தில் காமாக்ஷியை நம்முடைய கெட்ட புத்தியை அழிக்கிற சண்டிதேவியா பாவிக்கிறார் மூககவி. அவளே ஞானத்தோடு கூடிய விவேகத்தை கொடுப்பதாக சொல்கிறார். மஹாபெரியவா, “சண்டிகையாக உக்கிர ரூபத்தில் எந்தப் பராசக்தியை சரத்கால நவராத்திரியில் பூஜித்தோமோ, அவளையே வசந்த நவராத்திரியின் போது, ஸெளம்ய ரூபத்தில் ஞானாம்பாளாக பூஜிக்க வேண்டும். சண்டிகையாகிக் கெட்டதை சிக்ஷித்தவளே ஞானாம்பிகையாகி நல்லதை உபதேசித்து ரக்ஷிக்கிறாள்.” என்கிறார்.🙏🌸
விவேக புத்தியை கொடுத்து, பிறகு பொன் மழை பொழிகிறாள் (அதாவது தனத்தை கொடுக்கிறாள்) என்கிறார். தைத்திரீயோபநிஷத்தில் இப்படியேதான், முதலில், “மேதை (நல்ல புத்தி) யைக் கொடு” என்று சொல்லி, அப்புறம் “ஸ்ரீயைக் கொடு” என்று சொல்லியிருக்கிறது. இதற்கு ஸ்ரீ ஆசார்யாள் பாஷ்யம் செய்யும்போது, “மேதையில்லாதவனுக்கு ஸ்ரீயைத் தந்தால் அனர்த்தம்தான் உண்டாகும்” என்கிறார். 🙏🌸
தன் அடியார்களின் தேவைகளை அலுப்பில்லாமல் நிறைவேற்றுகிற காமாக்ஷி அன்னை! பக்தர்களின் வக்ர புத்தியை சரி செய்து நல்ல புத்தியை அளிக்கிறாள் !ஊடலால் கோபமுற்ற சண்டியான காமாக்ஷி சந்திர பிறை சூடிய சிவனிடம் காதலை உண்டு பண்ணுகிறான்!
தொண்டை மண்டல மன்னன் ஆகாச பூபதி அன்னையிடம் பிள்ளை வரம் கேட்க தன் மகன் கணபதியை புத்திரனாக அளிக்கிறாள் அம்பாள் !
மகனுக்குப் பேரிடும் வைபவத்தில் போஜன சமயம்.ஒர் முகூர்த்த காலம் சோ வென பொன் மழை பொழிகிறது! கனகதாரா ஸ்லோகம் பகவத் பாதாள் பாடி பொன் மழை பெய்தார்போல்! தேசம் முழுதும் சொர்ண வ்ருஷ்டி!! அதையே சொர்ண வ்ருஷ்டி பிரதாத்ரி என்று சொல்லப்பட்டது.
லோக மாதா காமாக்ஷி வரம் அளிப்பதில் பேரின்பம் அடைபவள் ! அம்பாளே பந்தியில் அமர்ந்து சாப்பிட்டதாக சொல்வதுண்டு! அன்று பலரும் அம்பாளை தரிசித்ததாக வரலாறு உள்ளது!
தேவியின் பாத கமாலங்களை சரணாகதி அடைந்தால் இன்னல்கள் அனைத்தும் ஓடி விடும்!
பட்டர் இதனை பதிகத்தில் சொல்கிறார்..எனது இன்னல் இன்னபடியேன்று வேறொருவருக்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவின்னல் தீர்த்து உள்ளத்திரங்கி நன்மைகள் செய்யவும் எள்ளவும், முடியாது நின் கடை கண்ணருள் சிறிது செய்யும் உதவாத நுண் மணல்களும் ஓங்கு மாற்றுயர் சொர்ண மலையாகும் , அதுவன்றி உயர் அகில புவணங்களைக் கனமுடன் அளித்து முப்பத்திரண்டு அறங்களும் கவின் பெறசெயும் நின்னைக் கருத்து நல் அடியவர்க்கு எளிதில் வந்து சடுதியில் காத்து ரக்ஷித்து ஒர்ந்து வனச நிகர் நின் பாதம் நம்பினேன் என்று அழகுபட வர்ணிக்கிறார் !!
மனிதனுக்குப்பணம் வந்து விட்டால்.மற்றவை எல்லாம் துச்சமாகும்! அப்படியே பதவியும் ! அம்மையின் பாதம் பற்றினோர்க்கு இவை எல்லாம் துச்சம் ! அந்த மனோ நிலையடைய அவள் பாதம் பற்றுவோம்!
இராவணன், வாலி இவர்களின் உவமானக் கதை இதற்கு சிறப்பை கொடுக்கிறது !!
அழகான கோர்வையாக எளிதில் புரிகிறார் போல் விளக்கம்! அருமை!!
ஜய ஜய ஜகதம்ப சிவே….
சின்ன வயசுல என்னோட பாட்டி ஸ்வாமி கிட்டே, ‘எப்போதும் நல்ல புத்தி கொடு’ன்னுட்டு கேளுடான்னு எனக்கு சொல்லுவா…. அப்ப எனக்கு புரியல…. ஆன அதையேதான் இன்னிக்கு வரை ஸ்வாமிகிட்டே கேட்டுன்டு வரேன்….. இப்போ இந்த ஸ்லோகத்த கேட்டப்பறம், என் பாட்டியோட ஞாபகம் வந்துடுட்டு. இப்ப எல்லாம் இந்த மாதிரி யாரு கொழந்தகளுக்கு சொல்லக் கொடுக்குறா?