51. தசரதர் மனம் வெறுத்து, ‘கைகேயி, தர்மத்தை கைவிட்ட உன்னை நான் கைவிடுகிறேன். நீ இனி என் மனைவி இல்லை. பரதன் உன் ஏற்பாட்டை ஒத்துக் கொண்டால் அவன் எனக்கு மகன் இல்லை. எனக்கு இப்போது தர்மாத்மவான என் மகன் ராமனைப் பார்க்க வேண்டும்’ என்கிறார். பொழுது விடிந்தவுடன் வசிஷ்டர் முதலான அனைவரும் பட்டாபிஷேக பொருட்களுடன் அரண்மனை வாசலை அடைகிறார்கள். சுமந்திரர் மங்கள வசனங்களைச் சொல்லி தசரதரை எழுப்புகிறார். கைகேயி சுமந்திரரிடம் ‘தசரதர் தூங்குகிறார். கவலை வேண்டாம். ராமனை அழைத்து வாருங்கள்’ என்று உத்தரவிடுகிறாள்.
[சுமந்திரர் தசரதரை எழுப்புகிறார்]
Categories