ஆர்யா சதகம் 41வது ஸ்லோகம் பொருளுரை – மஹாபெரியவாளைப் பற்றி ஆராய்ந்து அறிவோம்
बाधाकरीं भवाब्धेराधाराद्यम्बुजेषु विचरन्तीम् ।
आधारीकृतकाञ्चीं बोधामृतवीचिमेव विमृशामः ॥
ஆர்யா சதகம் 41வது ஸ்லோகம் பொருளுரை – மஹாபெரியவாளைப் பற்றி ஆராய்ந்து அறிவோம்
बाधाकरीं भवाब्धेराधाराद्यम्बुजेषु विचरन्तीम् ।
आधारीकृतकाञ्चीं बोधामृतवीचिमेव विमृशामः ॥
One reply on “மஹாபெரியவாளைப் பற்றி ஆராய்ந்து அறிவோம்”
பவக்கடலிலிருந்து அம்பாள் நம்மை விடுவிப்பதை சொல்லும் அழகான ஸ்லோகம். மஹாபெரியவாளின் ஏற்புரையை மேற்கோள் காட்டி, மற்றும் ஸ்வாமிகள் பெரியவாளிடம் காட்டிய பக்தியை விளக்கிக் கூறியது மிகச்சிறப்பு. நாமும் மஹாபெரியவா உபதேசத்தை ப்ரதிபலிக்க அவருடைய அநுக்ரஹத்தை வேண்டி பெறுவோம்.
👌🙏🌸
அம்பாள் குண்டலினி ரூபமாக மூலாதார கமலத்திலிருந்து ஸஹஸ்ரதள கமலம் வரை ஸஞ்சரித்து ஞானாம்ருத அநுபவத்தை அளிப்பவளாக வர்ணிக்கிறார் மூககவி.
ஆசார்யாளும் ஸௌந்தர்யலஹரியில், ‘பதியான சிவனோடு ஐக்கியமாகிறாளென்றும் — அதாவது அத்வைதானந்தம் ஸித்திக்கச் செய்கிறாளென்று ஒரு ஸ்லோகத்திலும், அந்த அத்வைத ரஸாநுபவம் அம்ருத ரஸாநுபவமாகக் கிடைக்கிற ஸமாசாரத்தை இன்னொரு ஸ்லோகத்திலும் சொல்கிறார். ஸஹஸ்ராரத்திலே ப்ராண சக்தி சேருகிறபோது அங்கே பூர்ண சந்திர ப்ரகாசம் வீசுகிறது; அம்ருத தாரை கொட்டுகிறது!’ என்கிறார். ‘அது குண்டலினி யோகத்தின் மூலமாக தான் கிடைக்கும் என்றில்லாமல் பக்தியோடு அம்பாளுடைய பூர்ண சந்த்ர முகத்தை ஸுலபமாக அப்படியே நினைத்தபடி இருந்தாலே போதும்; அதிலிருந்து பெருகுகிற கடாக்ஷாம்ருதம், மந்தஸ்மிதாம்ருதம் ஆகியவற்றை நினைத்துக் கொண்டிருந்தாலே போதும். நினைத்ததை நிஜமாகக் கொடுத்து, உள்-சந்த்ரன், உள்-தாரை எல்லாமும் ஸித்திக்கப் பண்ணிவிடுவாள்’ என்று மஹாபெரியவா அதற்கு விளக்கம் சொல்கிறார்.🙏🌸
ஒரு பிரவாஹத்திலே ஒன்றைப் போட்டால் அலையடித்து, அலையடித்து அதை வெளியிலேதான் ஓரத்திற்குத் தள்ளுமானாலும், அந்தப் பிரவாஹத்திலேயே ஒரு சுழல் சுழித்துக் கொள்கிறபோது போடும் வஸ்துவை அது உள்ளுக்கு வாங்கிக் கொள்கிற மாதிரி, ஜீவனை ஸம்ஸாரக் கடலிலிருந்து விடுவித்து சிவனோடு ஐக்கியமாகச் செய்கிறாள் காமாக்ஷி. அப்படிப்பட்ட காமாக்ஷியை தியானிப்போம் 🙏🌸