ஆர்யா சதகம் 51வது ஸ்லோகம் பொருளுரை – அதிஷீதம் மம மானஸம்
अधिकाञ्चि केलिलोलैरखिलागमयन्त्रतन्त्रमन्त्रमयैः ।
अतिशीतं मम मानसमसमशरद्रोहिजीवनोपायैः ॥
ஆர்யா சதகம் 51வது ஸ்லோகம் பொருளுரை – அதிஷீதம் மம மானஸம்
अधिकाञ्चि केलिलोलैरखिलागमयन्त्रतन्त्रमन्त्रमयैः ।
अतिशीतं मम मानसमसमशरद्रोहिजीवनोपायैः ॥
One reply on “அதிஷீதம் மம மானஸம்”
அம்பாளை வேதங்களாக, யந்திர, தந்திர, மந்திர ஸ்வரூபிணியாக வர்ணித்திருக்கும் அழகான ஸ்லோகம். மிகவும் அற்புதமான விளக்கம் 👌🙏🌸
லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ‘மஹாதந்த்ரா’, ‘மஹாமந்த்ரா’, ‘மஹாயந்த்ரா’ என்ற நாமாக்கள் வருகின்றன. காளிதாஸர் அவளை ‘ஸர்வ வர்ணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே’ என்று ‘சியாமளா தண்டகத்தில்’ ஸ்துதி செய்கிறார். ‘வர்ணம்’ என்றால் ‘அக்ஷரம்’. ஒலி வடிவான அக்ஷரங்கள் அம்பாளின் ஸ்வரூபம். சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். 🙏🌸
மூககவி இந்த ஸ்லோகத்தில் அம்பாளை பரமசிவனுடைய உயிர்நாடி என்று சொல்கிறார். ஆசார்யாளும் ஸௌந்தர்யலஹரி முதல் ஸ்லோகத்தில் இந்த உட்கருத்தைத்தான் சொல்லியிருப்பார். “நிர்குணமாக இருக்கிற பிரம்மம் தன்னைத்தானே அறிந்துகொள்ளாமல் இருக்கிறது. அந்தப் பூர்ண நிலை ஒருநாளும் சைதன்ய விலாஸமில்லாத உயிரற்ற நிலையாகாது. ஆனால் பூர்ணநிலையில் இருப்பதாக அதற்கே தெரியாவிட்டால் அது இருந்தும் இல்லாத மாதிரிதான். ப்ரம்மம் தன்னைத்தானே அறிந்திருக்கிற நிலையில் இருப்பதற்குக் காரணமான ஞான சக்தியை அம்பாள் என்றார். நிர்குணப் பிரம்மத்துக்குத் தன்னையே அறிவதுதான் உயிர் மாதிரி, அதாவது சிவனுக்கு அம்பாள் உயிராக இருக்கறதாக சொல்கிறார்.” 🙏🌸
ஸ்வாமிகள், “உன்னுடைய க்ருபை ஏற்படுகிற வரைக்கும் நான் விடாமல் பஜனம் பண்ணுவேன்” என்ற நாராயணீய ஸ்லோக மேற்கோள் காட்டுவதை கேட்கும்போது மூககவி கடாக்ஷம் சதகத்தில் “எதுவரைக்கும் காமாக்ஷி என்கிற சந்த்ர தரிசனம் கிடைக்கிறதோ அதுவரைக்கும் நமஸ்காரம் பண்ணிக்கொண்டே இருப்பேன்” என்ற அர்த்தத்தை ஞாபகபப்படுத்துகிறது🙏🌸