Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷீ நாம கிமபி மம பாக்யம்


ஆர்யா சதகம் 70வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷீ நாம கிமபி மம பாக்யம்

मञ्चे सदाशिवमये परिशिवमयललितपौष्पपर्यङ्के ।
अधिचक्रमध्यमास्ते कामाक्षी नाम किमपि मम भाग्यम् ॥

மஞ்சே ஸதா³ஶிவமயே பரிஶிவமயலலிதபௌஷ்பபர்யங்கே.
அதி⁴சக்ரமத்⁴யமாஸ்தே காமாக்ஷீ நாம கிமபி மம பா⁴க்³யம்

இது ஆர்யா சதகத்துல 70வது ஸ்லோகம்.

“ஸதா³ஶிவமயே மஞ்சே” – ஸதா³ஶிவமயமான கட்டிலில்,

“பரிஶிவமய” – பரிஶிவமயமான,

” லலிதபௌஷ்பபர்யங்கே” – ம்ருதுவான அழகான புஷ்ப பர்யங்கத்தில் அமர்ந்து இருக்கும் காமாக்ஷி என்ற பெயர் கொண்ட,

“அதி⁴சக்ரமத்⁴யமாஸ்தே” – ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் விளங்கும் அந்த தெய்வமே…

“மம பா⁴க்³யம்” – என்னுடைய பாக்கியம் அப்படினு சொல்றார்.

இந்த ஸதா³ஶிவமயமான கட்டில், “பஞ்சப்ரேதாசனாஸீனா” – அதுல பரசிவமயமான காமேஸ்வரரோட மடி தளத்தில், அதில் காமாட்சிதேவி வீற்றிருக்கிறாள், அப்படிங்கிறதெல்லாம் தத்துவம். எனக்கு இந்த ஸ்லோகத்துல என்ன ரொம்ப பிடிச்சுருக்குனா… “ஸ்ரீசக்ரம்”, அதெல்லாம் ஸ்வாமிகள் எனக்கு சொல்லி தரலை, அதனால அதைப்பத்திலாம் எனக்கு தெரியாது. எனக்கு ஸ்வாமிகளையும் தெரிஞ்சுண்டு, இந்த ஸ்லோகத்தையும் படிக்கும் போது என்ன தோன்றதுனா..,

“காமாக்ஷீ நாம கிமபி மம பா⁴க்³யம்”

“காமாக்ஷி என்ற பெயரில் என்னுடைய பாக்கியம் விளங்குகிறது”, அப்படினு மூககவி சொன்னா மாதிரி, ஸ்வாமிகள், குருவாயூரப்பனே என் பாக்கியம் அப்படினு வாழ்ந்தார்.

நம்ப ரொம்ப honestஆ மனசு தொட்டு பார்த்தோன்னா, நம்மெல்லாம் bank accountல இருக்கறது,lockerல இருக்கறது தான் நம்ப பாக்கியம்னு நினைக்கறோம்… அந்த பணத்தை கொண்டு சுகம் அனுபவிக்கறோமா,இல்லையாங்கறது அடுத்த கேள்வி…ஆனா, பணத்து மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு… பற்று இருக்கு.. தப்பில்லை..

“பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று சொல்லிட்டார் வள்ளுவர். அதனால, பொருளுலகத்திய இன்பங்களையும், இந்த உலகத்துல இருக்கற மனுஷா மேலயும் நமக்கு ரொம்ப deepஆ ஆசா, பாசங்கள் இருக்கு. அதனால, நமக்கு அந்த பணம் இருந்தா, சில சௌர்யங்கள் இருக்கு, அப்படிங்கறதுல ஆழமான நம்பிக்கை இருக்கு. ஸ்வாமிகளுக்கு அந்த நம்பிக்கை இருக்கவில்லை.

அவர் இந்த ஸ்லோகத்துல மூக கவி எப்படி காமாக்ஷி தான் என்னுடைய பாக்கியம்னு சொல்றாரோ, அந்த மாதிரி, குருவாயையூரப்பன் தான் என்னுடைய பாக்கியம். அப்படி அந்த தெய்வத்தை வழிபடறது ஒன்ணுதான், தன்னுடைய லக்ஷ்யமா வச்சுருந்தார். அதுக்காகதான் அவர் எழுந்துப்பார், அதுக்காகதான் சாப்பிடுவார், அதுக்காகதான் துணி உடுத்திப்பார். பரதன் எப்படி ராமரை தேடிப்போகும் போது, இதோ.. மந்தாகினி நதி, இதோ… சித்ரகூட மலைன்னு, அப்படினு மடை திறந்த வெள்ளம் போல ஒன்றான் அப்படினு வரும், அந்த மாதிரி ஸ்வாமிகள் குருவாயூரப்பன், குருவாயூர் அப்படிங்கிற ஸ்டேஷனோட பெயரை பார்த்தவுடனே ரொம்ப சந்தோஷப்படுவார். அந்த கோவிலுடைய திருகுளத்தை பார்த்தவுடனே, இங்க தான் ஸ்வாமி ஸ்நானம் பண்றார், அப்படினு சந்தோஷம் படுவார்.

எங்கிட்ட ஒரு ஸ்வாமிகளோட பக்தர் சொன்னார்… ஸ்வாமிகள், அவரை நீ குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு குருவாயூரப்பனை தர்ஷனம் பண்ணிட்டு வான்னு சொன்னாராம். அவர் ஸ்வாமிகள் கிட்ட வந்து அந்த குளம் ரொம்ப அழுக்கா இருந்தது. நான் அதனால ஸ்நானம் பண்ணலனு சொன்னவுடனே, கடுங்கோபமா ஸ்வாமிகள், இப்போ நீ திரும்ப போய் அந்த குளத்துல ஸ்நானம் பண்ணி, அந்த ஸ்வாமியை தரிசனம் பண்ணிட்டு வரணும், அப்படினு சொல்லிருக்கார். அவரும் அந்த மாதிரி பண்ணார். அந்த பக்தரும். அந்த மாதிரி குருவாயூரப்பன் விக்ரஹத்தை, அவ்ளோ ஆசையா பூஜை பண்ணி, குழந்தையாட்டம் அந்த விகிரஹத்துக்கு அலங்காரம் பண்ணி, நேரா அந்த தெய்வத்து கிட்ட அவர் பேசினார்.

நமக்கெல்லாம் பணக்காராளா இருந்தாலும் சரி, ஏழையா இருந்தாலும் சரி, youngஆ இருந்தாலும் சரி, oldஆ இருந்தாலும் சரி, நிறைய குழந்தேள் இருந்தாலும் சரி, குழந்தேள இல்லனாலும் சரி, கணவன் இருந்தாலும் சரி, மனைவி இருந்தாலும் சரி, இல்லனாலும் சரி, எப்படி situation இருந்தாலும், பணம் இருந்தா, நமக்கு மதிப்பு இருக்கு. பணம் இருந்தா, ஏதோ உலகத்துல சுகம் அனுபவிக்கலாம், அப்படினு நமக்கு தெரிஞ்சுற்கு. அது நமக்கு வேண்டயும் இருக்கு. நமக்கு தலைல, அது எழுதாம இருக்கலாம். நமக்கு நல்ல சாப்பாடோ, இல்லை மனைவியோ,இல்லை குழந்தேலோ, அதுலேந்து சுகம்னு எழுதலைனா அது வராது. பணத்துனால அதனால ஆசை போறதில்லை, பணத்தை சம்பாதிக்கறதுலையும்,கணக்கு பார்க்கறதுலையும், சேர்த்து வைக்கறதுலயும், அத இழந்தா அழறதுலயும் நம்ப பாமரத்தனமா தான் இருக்கோம்.

தெய்வானுக்ரஹம் இருந்தால் தான் பணத்துல ஆசை போகும். ஒரு 2000 ரூபா நோட் கீழ கிடந்தா, நம்ப அத, வெறும் paperனு நெனைக்க மாட்டோம், ஸ்வாமிகள் நினைச்சார். எப்படி ராமகிருஷ்ணா பரமஹம்சர்லாம், மண்ணாங்கட்டியும், பொண்ணுகட்டியும், ஒன்ணுன்னு நினைச்சாரோ, அந்த மாதிரி ஸ்வாமிகள் வாழ்ந்தார்.

1970லேர்ந்து, அவர் பணத்த கையால தொடரது இல்லனு வெச்சிருந்தார். 2004 வரைக்கும் அந்தமாதிரி இருந்தார். ஒருநாள் கூட பணத்த கையால தொடல. இந்த கலியிலயும் அந்த மாதிரி வாழ்ந்த ஒரு மஹான்.

அவர், அந்த குருவாயூரப்பன் மீது வெச்சிருந்த ஆசைய பத்தி நான் நெறைய நெறைய பேசறேன். ஆனா, அத பார்க்காத வரைக்கும் அதை பத்தி பேசினால் அது புரியுமானு தெரியல. பைத்தியக்காரதனமா தோணும்னு, சில சமயம் எனக்கு தோன்றது.

எனா, அவர் அப்படி அந்த தெய்வத்தின் மேல ஒரு ப்ரியத்த வெச்சிருந்தார். ரொம்ப கொஞ்சம் பேருக்குதான் அத புரிஞ்சிண்டா. எப்படி குசேலரை பத்தி க்ருஷ்ணன் சொல்லும் போது, “அவருக்கு பணத்துல பற்று கிடையாது” அப்படினு சொன்னாரோ… அந்த மாதிரி, மஹாபெரியவா, ஷிவன் ஸார் ரெண்டு பேரும், “அவர் ஒரு உத்தமஜீவன்,அவருக்கு பணத்தின் மீது பற்றே கிடையாது ”, அப்படினு சொன்னா. மஹா பெரியவா க்ருஷ்ணன் தானே ? க்ருஷ்ணனே சொன்னா மாதிரி, ஸ்வாமிகள பத்தி, பெரியவா சொல்லிருக்கா. அவருக்கு பணத்துல பற்று கிடையாது.

நாம எல்லாருமே, “ஸ்வாமிய தான் நம்பிருக்கோம்… பகவான் தான் காப்பாத்தறார்” அப்படினு சொல்றோம். ஆனா, ஸ்வாமிகள் literal ஆ அப்படி வாழ்ந்தார்.

ஒரு வாட்டி, ஊருக்கு போயிருந்த போது அவா அக்கா, விளையாட்டா சொன்னாளாம்… “இப்ப மூணு மணி ஆகறது.. உனக்கு காபி குடுக்கணும். நீ காபி குடிக்கலைனா, உனக்கு தலைவலி வரும்.. க்ருஷ்ணனா கொண்டுவந்து கொடுக்க போறான் ?” அப்படினு சொன்னபோது…

ரெண்டு ஆகம் தள்ளி, ஸ்வாமிகளுடைய அம்மங்கா இருந்தாளாம். அவா வந்து, “அத்தான்! உனக்கு காபி ரொம்ப புடிக்குமே!, நீ வந்திருக்கனு பட்டேன்… போட்டுண்டு வந்தேன்.. இந்தா”, அப்படின்னு குடுத்தாளாம். இப்படி ஸ்வாமிகளோடைய life.

அதனால, அந்த ஒரு நம்பிக்கை, ஸ்வாமிகளுக்கு வந்ததுனால, அவர் பணத்தையே தொடாம இருந்தார். அதாவது அவருக்கு, பாராயணத்தை தவிர வேறு எந்த ஒரு காரியம் பண்றதுக்கு, எந்த ப்ரமேயமே கிடையாது. யாரவது அவர எங்கயாவது கூட்டிண்டு போகணும்னா, அவாளே வந்து, அவர ஆட்டோல கூட்டிண்டு போய், ஆட்டோவுக்கு அவாளே பணம் கொடுத்து, அவா ஆத்துல படிக்க வெச்சிட்டு, அப்பறம் கூட வந்து விடுவா.

ஊருக்கு போனாலும் அப்படித்தான். Train ல ஹைதராபாத்துக்கு வருஷாவருஷம் போவார். கைல பணம் எடுத்துண்டு போக மாட்டார். யாராவது கூட வந்து பண்ணுவா. ஆனா, ஸ்வாமிகள் அவாளுக்கு thanks சொல்ல மாட்டார். க்ருஷ்ணன தான் நம்பி இருந்தார், அவர். க்ருஷ்ணன். அன்னிக்கி அவாளை அனுப்பிச்சிருக்கான். அந்த சேவை பண்றதுக்கு, க்ருஷ்ணன், அவாளுக்கு என்ன வேணுமோ அதை பண்ணுவான்.. அப்படினு இருந்தார்.

அப்படி இருக்கும்போது அதுக்கு ரொம்ப வைராக்கியம் வேணும். எதுவுமே தனக்கு, ஸங்கல்பமே… இருக்கக்கூடாது. அப்படி தான், ஸ்வாமிகள் இருந்தார். எல்லாருக்கும் அது நடக்குமா ?… அப்படினா… நாம அதை விரும்பணும்.

அப்படி தெய்வத்தை நம்பி, பண்ற பஜனத்துக்கு பலனே வேற….

“நன்றே வருகினும், தீதே விளைகினும்,
நான் அறிவது ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்” (அபிராமி அந்தாதி)

அப்படினு பொறுப்பை பகவான் கிட்ட விட்டா… அந்த ஜீவன தன் குழந்தையாட்டம், எப்படி அம்பாள் காப்பாத்தறாங்கிறது, அவா அவாளோட அனுபவம்.

ஸ்வாமிகளுக்கு அது தெரிஞ்சுது. அதனால, அவர், இன்னொருத்தருக்கு அபயம் கொடுத்தா… அந்த வார்த்தையை, அம்பாள் நிறைவேத்தித்தான் ஆகணும். அப்படி ப்ரத்யக்ஷமா இருந்தா ஸ்வாமி, அவருக்கு.

ஆனா, ஒரு க்ஷணம் கூட, “ நான் பண்றேன்!… என்னுடைய…” அப்படிங்கிற thought ஏ வரக்கூடாது. வந்துடுத்துனா.. அந்த வ்ரதத்துக்கு பங்கம். ஸ்வாமிகள், life முழுக்க, அந்த வ்ரதத்துக்கு பங்கம் வராம, பக்தியோட இருந்தார்.

அப்படி பக்தி பண்ணும் போது, அது ஞானம் ஆயிடறது. வாழ்க்கை, ஒரு சினிமா காட்சி மாதிரி நடந்துண்டே இருக்கு. சுக துக்கங்களாம் அதுல வர்றது. ஆனா, சினிமா ஹால்லேர்ந்து, வெளில வந்த பின்ன, நம்ப.. அத பத்தி எவ்வளவு கவலை பட போறோம் ? அந்த மாதிரி, தன்னுடைய வாழ்கையை வாழ்ந்தார்.

ஸ்வாமிகளோடயே life ஒரு tragic cinema. அதுவும், அவரை பாதிக்கலைங்கிறது தான், ரொம்ப ஆஸ்ச்சர்யம். இந்த ஆஸ்ச்சர்யத்த, பார்க்கறதுக்கு, பேசறதுக்கு, நாம குடுத்து வெச்சிருக்கோம்.

அவர், ராமாயணத்தில வாழ்ந்தார், பாகவதத்தில வாழ்ந்தார், மூக மூகபஞ்சஶதீல வாழ்ந்தார். அம்பாளோடயே இருந்தார். குழந்தையா இருந்தார். நம்ப எதுக்கு அவரை நினைக்கனும்னா, நம்ப level ல நாம இருக்கோம். ஆனா, இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கு.

நாரத பக்தி சூத்ரத்ல சொல்லிருக்கிறது, விளையாட்டு பேச்சு கிடையாது. ஸ்வாமிகள் சொல்லுவார்.. “ஒவ்வொருத்தர்.. communism னு, ஒவ்வொரு ism துக்காக த்யாகம் பண்றா. நான், இந்த நாரத பக்தி சூத்ரத்துக்காக என்னுடைய வாழ்க்கைய அர்பணிச்சேன்னு வெச்சிக்கோயேன்”, அப்படினு சொல்லுவார்.

இந்த நாரத பக்தி சூத்ரத்தையும் படிச்சு, ஸ்வாமிகளோடயே வார்த்தையையும் பார்த்தா.. நமக்கு, அதோட அர்த்தம் புரியும். அப்படி பக்தி, வைராக்கிய, ஞானத்தோடு ஸ்வாமிகளை நெனச்சிண்டா… அவர நாம, நம்பளோடயே பாக்யம்… அப்படினு நெனச்சா… நம்ப, என்னிக்காவது ஒரு நாள்… சாகறதுக்குக்குள்ள… இந்த பணத்துல இருக்கற பற்று போய்… இந்த பாகவனிடத்தில, நமக்கும் பற்று வரும். அப்போ, நமக்கு அமிர்தம்… சாகா வரம் கிடைக்கும்.

மஞ்சே ஸதா³ஶிவமயே பரிஶிவமயலலிதபௌஷ்பபர்யங்கே |
அதி⁴சக்ரமத்⁴யமாஸ்தே காமாக்ஷீ நாம கிமபி மம பா⁴க்³யம் ||

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹாதேவ !!

6 replies on “காமாக்ஷீ நாம கிமபி மம பாக்யம்”

நிஷ்காம்ய பக்தியை பற்றி ஒரு மிக அற்புதமான அனுபவம் கிடைத்தது.நன்றி

Namaskaram Sir
My name is Deekshita Ramesh Iyer. I am interested in learning Mookha Panchashati. Request to revert on the same. Thank you. 🙏🏻

பிரம்மா விஷ்ணு , ருத்ர ஈஸ்வரர்களே நான்கு கால்களாகவும், ஈசானனைதலையனையாகவும் அமைந்த சிந்தாமணி gruham, பத்ம காடாக கதம்ப வணங்களால் சூழப்பட்டுள்ளது! இதுதான் நம் சஹஸ்ராரத்தில் தேவி தர்பார் நடத்துகிற தேவி பரப்ரம்ம தத்வத்தை ச்ருங்கார மூர்த்தியாக பூரா தர்சனம் தருபவளாகவும் காட்சி கொடுக்கிறாள்!
நம் சரீரமே ஒர் ஸ்ரீ சக்ர ரூபா அமைப்பில்தான் இருக்கிறது !
பிந்து என்ற மத்திய பாகமாக ஸஹஸ்ராரத்தில் சதாசிவனுடன் தர்பார் நடத்தும் இடந்தான் சஹஸ்ராரம் !
இது பற்றிய வர்ணனை எல்லா தேவி ஸ்தோத்திரங்கள் அனைத்திலும் வரும் !
சௌந்தர்ய லஹரியில் ‘கதாஸ்தே மஞ்சத்வம்’ என்ற ஸ்லோகத்தில் அம்பாள் எப்படி தர்பார் நடத்துகிறாள் என்ற வர்ணனை ! இதனை ஜபித்தால் ராஜ்ய பரிபாலன சக்தி, அதாவது ஆளும் திறமை உண்டாகும் எனச் சொல்வார்கள் !
ஸ்வாமிகளின் பக்தி, ச்ரத்தை பணத்தைத் பொருட்படுத்தாத குணம் இவை தீவிர தேவி பக்தர்களுக்கு இருக்கும் என்பது என் வாழ்வில் கண்கூடு !
என்.பாட்டி தேவி பக்தர்! அம்பாள் வாராஹி ரூபமாக எதிரில் வந்து கோதி மயமாகக் காட்சி கொடுத்து ஷோடசி மந்திரம் உபதேசம் செய்ததாகச் சொல்லிக்.கேட்டிருக்கிறேன்!!, ஒரு பொருள் மீது ஆசை, பற்றற்று அம்பாள் தியானத்தில் வாழ்ந்தாள்!
கடைசி வரை எல்லா மனிதரிடம். அன்பு செலுத்தி, சேவை செய்து வந்தததை பார்த்திருக்கிறேன் நான்!!
பெரியவா என் பாட்டி பூஜைக்கு தண்ட நமஸ்காரம் செய்திருக்கிறார்!!
நிலையாதா சமுத்திரமான சம்சார துறைகளில் மூழ்கி என்ற வாக்குக்கு மாறாக தாமரை இலைத் தண்ணீர் மாதிரி வாழ சுவாமிகள் மாதிரி சிலரால்தான் முடியும்.
பூர்வ ஜன்ம சுகிர்தம் அது!!
மூக பஞ்ச சதி உவமையுடன் அழகாக எடுத்துச் சொன்ன கணபதிக்கு நன்றிகள் பல!!
ஜய ஜய ஜகத்தம்ப சிவே……

காமாக்ஷி பாதம் சரணம்.
ஸ்ரீ சுவாமிகள் பாதம் சரணம். சுவாமிகள் போல ஒரு பற்றில்லாத, எளிமையான, வாழ்க்கை வாழ்வதற்கு இறைவன் அருள் வேண்டும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

குறளுக்கு ஏற்றார்போல் அவர் பற்று இல்லாதவரின் பாதங்களை பற்றிக் கொண்டிருந்ததன் விளைவே அவருக்கு ஸ்ரீ குருவாயூரப்பன் பொருள் மீது ஆசை ஏற்படாதவாறு நிறைய ஆசிர்வாதம் செய்து உள்ளார்.
அவர் போன்றவர்கள் முன் ஜென்மத்தில் ஏதோ விட்டதை நிறைவேற்றுவதற்காக பூமியில் அவதரித்து உள்ளனர்.
என் போன்றவர்கள். சென்னையிலேயே வளர்ந்து இருந்தாலும் அவரை அறிந்து கொள்ளும் பாக்கியத்தைப் பெறவில்லை. நம் வினைப்பயன் தீரும்போது மகான்களின் பெயரும், தரிசனமும் ஒருவருக்கு கிடைக்கும். இப்பொழுது அவர் அனுகிரஹம் தங்கள் மூலமாக கிடைக்கின்றது.

மேலும் சுவாமிகளின் பக்தி ரசனையில் திளைக்க காத்திருக்கிறோம்

பக்தி என்பதன் definition ஸ்வாமிகள் வாழ்க்கை முறை பற்றி அறியும்போது புரிகிறது ! ஆனால் அது எத்தனை பேருக்கு லபிக்கும் ? பூர்வ புண்ணிய சுகிர்தம் இருந்தால் மட்டுமே சாத்யம்!
அதிலும் பணத்தாசை அற்று இகலோக சவுக்யங்கள் துறந்து ஸதா குருவாயூரப்பன் பக்தியிலும், இராமாயண படனத்திலும், காமாட்சி பக்தியிலும் தன்னை ஈடுபடுத்தி, பொருளாசை அற்று வாழ்வது மஹான்களுக்கே உரித்தானது !
எவ்வளவு பிரம்ம பிரயத்தினாலும் நம் போன்ற ஜனங்களுக்கு கிட்டாத ஒன்று !
அத்தகைய நிலை இல்லாவிடினும், ஸதா தெய்வ தியானத்தில், ஸ்மரணையில் வாழ முயற்சியாகவவது செய்யலாம்.
அழகான விளக்கம் ! ஸ்வாமிகள் பற்றி அறியாதவற்களை அறிய வைக்கும் முயற்சி !
என்னைப் போன்ற எளியவரையும் ஈடு படுத்தும் ஒர் அரிய பதிவு !
குரு சரணம் ஷரணம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.