One reply on “ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி நான்கு”
மிகவும் அருமையான வர்ணனை. வால்மீகி, ஆஞ்சநேயர் மலையிலிருந்து தாவும்போது மரங்களும் குன்றுகளும் கூடவே சென்று, ஒரு உறவினர் வழி அனுப்புவதைப் போல அனுப்பிவிட்டு கீழே விழுந்ததாக உவமிக்கிறார்.
கம்பர் ‘இராமபிரானுக்குச் செய்யும் தொண்டு இது என்று கருதி, மரங்களும் குன்றுகளும், தாங்களும் பாய்ந்து செல்வோமென கூறும்படி வானத்தில் பரவிச் சென்றன’ என்று உவமிக்கிறார்.
ஆயவன் எழுதலோடும், அரும் பணை மரங்கள் யாவும்,
வேய் உயர் குன்றும், வென்றி வேழமும், பிறவும், எல்லாம்,
‘நாயகன் பணி இது’ என்னா, நளிர் கடல் இலங்கை, தாமும்
பாய்வன என்ன, வானம் படர்ந்தன, பழுவம் மான.
அடுத்த செய்யுளில் “குன்றுகளும் மரங்களும் அனுமன் சென்ற வழியிலேயே விரைவாக போய் இலங்கையை அடையும் ஆற்றல் அற்றவையாக கடலிலே விழுந்தன” என்கிறார்.
இசையுடை அண்ணல் சென்ற வேகத்தால், எழுந்த குன்றும்,
பசையுடை மரனும், மாவும், பல் உயிர்க் குலமும், வல்லே
திசை உறச் சென்று சென்று, செறி கடல் இலங்கை சேரும்
விசை இலவாக, தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த.
“மேலும், அனுமன் பின்சென்ற மரம் முதலான பொருள்கள் வீழ்ந்து கடல் மேடாயிற்று. அது அணைபோல் இருந்தது. வேதம் போன்ற ராமன் கடலைச் சீறுவதற்கு முன்பு சேதுவும் அமைந்தது.” என்கிறார். ‘அது இராமபிரான் இனிக் கட்டப் போகின்ற சேதுவுக்காக நூல் பிடிப்பதற்கு நாட்டிய முளைகள் போலும்!’ என சம்பூ ராமாயணத்தில் வருவதாக கருத்துக்கள் கூறுவர்.
மாவொடு மரனும், மண்ணும், வல்லியும், மற்றும் எல்லாம்,
போவது புரியும் வீரன் விசையினால், புணரி போர்க்கத்
தூவின; கீழும் மேலும் தூர்த்தன; சுருதி அன்ன
சேவகன் சீறாமுன்னம் சேதுவும் இயன்ற மாதோ!

அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜிதா 🙏🌸