Categories
mooka pancha shathi one slokam

தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்

பாதாரவிந்த சதகம் 37வது ஸ்லோகம் பொருளுரை – தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் (8 min audio in tamil describing how Mahaperiyava endeared certain devotees and absorbed them within Himself)

उदीते बोधेन्दौ तमसि नितरां जग्मुषि दशां
दरिद्रां कामाक्षि प्रकटमनुरागं विदधती ।
सितेनाच्छाद्याङ्गं नखरुचिपटेनाङ्घ्रियुगली-
पुरन्ध्री ते मातः स्वयमभिसरत्येव हृदयम् ॥

உதீ³தே போ³தே⁴ந்பதௌ³ தமஸி நிதராம் ஜக்³முஷி த³ஶாம்

த³ரித்³ராம் காமாக்ஷி ப்ரகடமனுராக³ம் வித³த⁴தீ ।

ஸிதேனாச்சா²த்³யாங்க³ம் நக²ருசிபடேனாங்க்⁴ரியுக³லீ-

புரந்த்⁴ரீ தே மாத: ஸ்வயமபி⁴ஸரத்யேவ ஹ்ருʼத³யம் ॥ 37 ॥

இது பாதாரவிந்த சதகத்துல 37வது ஸ்லோகம்.  இதுக்கு என்ன அர்த்தம்னா ஹே ! காமாக்ஷி,  மாத: – அம்மா காமாக்ஷி.

“உதீ³தே போ³தே⁴ந்து” – ‘போதம்’ னா ஞானம்.  ஞானம் என்ற சந்திரன் உதித்ததும்,  நாளைக்கு பௌர்ணமி…, சந்திரன் வந்தவுடனே ..

“தமஸி நிதராம் த³ரித்³ராம் த³ஶாம் ஜக்³முஷி” – இருட்டு முழுமையாக காணாமல் போய்,  நல்ல சந்திரன் வந்துடுத்துன்னா இருட்டு போய்டும் இல்லையா ? இங்க ‘தமஸி’ ங்கறதுக்கு ஞானமாகிய சந்திரன் வந்தால் அஞ்ஞானம்ங்ர இருட்டு போய்டும்.  அப்படி ஞானமும் உண்டாகி அஞ்ஞானமும் விலகிய அந்த பொழுதில்,

காமாக்ஷியினுடைய சரணம் என்ற  புரந்த்ரீ  “அங்க்⁴ரியுக³லீபுரந்த்⁴ரீ” – இருபாதங்கள் என்ற அந்த பெண்ணானவள்,

“ப்ரகடமனுராக³ம் வித³த⁴தீ” – ராகம் னா சிவப்பு. காமாக்ஷியினுடைய சரணங்கள் செக்கச்செவேல்னு இருக்கு.  அனுராகம்னா அன்புனு அர்த்தம்.  காமாக்ஷியினுடைய சரணம் செவப்பா இருக்கு, அந்த செம்மை வெளிப்படறது. இங்க ஒரு பெண்ணா சொல்றதனால, அந்த பெண் தன்னுடைய அன்பை வெளிப்படுத்திக்கொண்டு,

“நக²ருசிபடேன” – நக கிரணங்களால் ஏற்பட்ட அந்த வெண்மையான ஒளி என்ற ,

“ஸிதேனாச்சா²த்³யாங்க³ம்” – தன்னுடைய அங்கத்தை வெள்ளையா ஒரு துணில மூடிண்டு,  எதோ ரகஸ்யமா பண்ண போறா இந்த பெண்ணுன்னு தெரியறது.

கொஞ்சம் ராத்திரியானவுடனே, சந்திரன் வந்துடுத்து… இருட்டு போய்டுத்து .. அதனால வழி தெரியறது.  அப்ப ஆனா தன்னை வந்து போத்திண்டு எங்கயோ போறா..  எங்க போறான்னா ….

“மாத: ஸ்வயம் ஏவ மம ஹ்ருதயம் அபி 4 ஸரது”- அப்படின்னு ஒரு வேண்டிப்பார். அதாவது “அபிஶாரிகா” அப்டின்னு சொல்வா,   கள்ளக்காதலி அப்படினு அர்த்தம்.   அதாவது ஒரு பெண் இருட்டுல தன்னை மூடிண்டு ரஹஸ்யமா காதலனை தேடிப்போவது போல,  உன்னுடைய பாதம் என்ற பெண்,  ஞானம் என்ற சந்திரிகை உதித்தவுடன்,  தன்னுடைய அன்பை வெளிப்படுத்திக்கொண்டு,  என் மனத்துக்குள் வந்துவிட வேண்டும்.   அப்படின்னு ஒரு அழகான ஒரு ப்ரார்த்தனை.  பொதுவா அம்பாளோட சரணத்யானம் பண்ணினா ஞானம் வரும் அப்டின்னு சொல்லுவா.  இங்க ஞானம் ஏற்பட்டு எனக்கு உன்னோட சரணம் கிடைக்கணும் அப்டின்னு சொல்றார்.

இது எப்படியிருக்குன்னா, சில பக்தர்களை மஹா பெரியவா வலிய ஆட்கொள்றா இல்லையா .. அந்த மாதிரி இந்த சரணம் என் மனசுல வந்து ஞானத்தை கொடுக்கணும்.  அல்லது உன் பாதங்களைத்தான் பற்றிக்கொள்ள வேண்டும் அப்டிங்கற  ஞானம் வந்தவுடனே அந்த சரணம் தானா கிடைச்சுடறது அப்டிங்கற மாதிரி ஒரு அழகான ஸ்லோகம்.

அப்பர் பெருமானுடைய ஒரு தேவாரத்துல,

“முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்” – முதல்ல சிவபெருமானுடைய பெயரை கேட்டாள்.

“மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்” – அவனுடைய பொன் வண்ணத்தையும், அவனுடைய பெருமைகளை எல்லாம்…, நடராஜாவா நாட்டியம் பண்ணினார், ஊழிக்கூத்தும் ஆடுவார்,  ஹாலஹால விஷத்தை சாப்டார் இப்டின்னு அவருடைய  பெருமைகளையெல்லாம் கேட்கறாள்.

“பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்” –  அந்த பரமேஸ்வரன் இருக்கும் இடம் என்ன திருவாரூர் அப்டிங்கறதை கேட்டாள்.

“பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்” – அவனிடத்தில் தன்னை மீறிண்டு காதல் கொண்டாள்.

“அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்” – தன்னை பெற்று வளர்த்த தாய் தந்தையரை அப்பவே தன்னோட மனசால துறந்துவிட்டாள்.

“அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை” – ஒரு பெண் வயசுக்கு வந்துட்டானா வெளில போக கூடாது , தனியா  வெளிய போய் யாரையும் பாக்க கூடாது அப்டின்னு ஆச்சாரமெல்லாம் சொல்லிக்கொடுப்போமில்லயா அது அத்தனையும் விட்டாள்.

“தன்னை மறந்தால் தன் நாமங்கெட்டாள்” – தன்னை மறந்துட்டா.. அவ அப்பா அம்மா வச்ச பேர் இருந்தது அதை விட்டுட்டா.. தான் சிவபெருமானுடைய அடிமை அப்டிங்கற பேர் தான் மிஞ்சித்து.

“தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” – பரமேஸ்வரனுடைய தாளில் அணைந்து தனக்கென்று ஒன்றுமே இல்லாமல் அந்த ஸ்வாமியை சேந்தவளா ஆய்ட்டாள்..

நாமத்தை முதல்ல கேட்டாள், தன்னுடைய நாமத்தை இழந்தாள்.  எனக்கு தோண்றது … மஹாபெரியவா கிட்ட ப்ரதோஷம் மாமா ஒவ்வொரு ப்ரதோஷத்துக்கும் போக ஆரம்பிச்சார்.  ஒரு வாட்டி இவர் வெங்கட்ராமைய்யர் வந்திருக்கார்ன வுடனே.. பெரியவா, “தெரியுமே !!  ஒவ்வொரு ப்ரதோஷத்துக்கும் வந்துண்டிருக்காரே”, அப்டின்னு சொன்னவுடனே, அதுக்கு முன்னாடி அவர் காஞ்சி பெரியவா,  பெரியவாளோட திவ்ய தரிசனம் பாத்துகிட்டே இருக்க தோணுது அப்டின்னு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா அவருடைய பக்தியை வளர்த்துண்டு வந்தார். பெரியவா அந்த வார்த்தையை சொன்ன பின்ன, அவருடைய வெங்கட்ராமையர் என்ற பெயரே போய்டுத்து.  ப்ரதோஷம் மாமா ஆய்ட்டார் அவர்..  அப்படி தன்னை பெரியவாகிட்ட ஒப்படைச்சுண்டார். ஸ்வாமிகளும் அப்படித்தான்.  கோபிகைகள் போலத்தான் பெரியவாகிட்ட ஏகபக்தியாக இருந்தார்.   ஸ்வாமிகள் இன்னம் கூட தன்னுடைய பக்தியை ரகசியமாக வச்சுண்டு … அப்படி தனக்குன்னு ஒண்ணும் இல்லாம மஹா பெரியவா கூடயே … அந்த அவதாரத்தோட கூட வந்தாப்போல பெரியவா கூட வந்து, பெரியவாளுக்கு எப்படி ப்ரியமோ, அப்படி அந்த பாகவதத்தையும், ராமாயணத்தையும் தான் இடைவிடாமல் அத்யயனம் பண்ணி, அதை எடுத்து சொல்லி, அதை வாழ்ந்து காமிச்சார்.  இன்னும் நிறைய பேரோட அனுபவம் கேட்க்கும் போது அந்த மாதிரி தான் நமக்கு தெரியறது.

சம்பத் ஐயங்கார் னு ஒருத்தர், பெரியவா அந்த ஊருக்கு வந்த போது கூட்டிண்டு வர சொல்றார்.  அவர்,  இல்லை இல்லை அது வேற சம்பத்தா இருக்கும் எனக்கும் மடத்துக்கும் ஒண்ணும் சம்பந்தம் கிடையாதுங்கறார்.  ஆனா பெரியவா அவரை வரவச்சு, அப்படி அவருக்கு அனுக்ரஹம் பண்ணி ஆட்கொண்டார்.

அதே மாதிரி பொள்ளாச்சி பாட்டிக்கு என்ன ஒரு அனுக்ரஹம்,  அந்த மாதிரி பகவான் ஆட்கொண்டுட்டா, எல்லாமே அதுக்கு அந்த பக்தி வளர்றதுக்கு,  அனுகூலமாயிடறது.  இந்த பொள்ளாச்சி பாட்டியோட…., அவா ஆத்துக்காரர்,  சமயல்ல உப்பு இல்லைன்னா .. நம்ப என்ன பண்ணுவோம்? சமைக்க தெரியாதானு சத்தம் போடுவோம்.. அந்த மாமா, நீ ரெண்டு மூணு நாளா சமயல்ல உப்பே போட மாட்டேங்கற… உனக்கு பெரியவா ஞாபகம் வந்துடுத்து.. நீ கிளம்பி போன்னு டிக்கெட் வாங்கி கொடுத்து அனுப்பிடுவாராம்,  என்னால தான் பாக்க முடியல நீயாவது பெரியவாகிட்ட போன்னு…பெரியவா கிட்ட போய் சுத்திண்டே இருந்தா அங்க எதோ மேனேஜர் சண்டை புடிச்சிருக்கார்… என்ன இது ஆத்துல உங்களுக்கு குழந்தைகள் கிடையாதா,  ஆத்துக்காரர் இல்லையா, இங்கயே சுத்திண்டிருக்கேளேன்னு கேட்டா அந்த மாமி சொல்வாளாம், காமாக்ஷியே இங்க பெரியவாளா அவதாரம் பண்ணியிருக்கா. அப்படி தான் சுத்திண்டிருப்போம்.. ஆத்துக்காரர் சிகரெட் புடிச்சா அதுக்கு குச்சி பத்த வைக்கறதுக்கு பேரு தான் பதி பக்தியோ ,  போய்ட்டு வா அப்டின்னு சத்தம் போடுவாளாம்.  பெரியவாளே  அந்த பொள்ளாச்சி பாட்டிக்கிட்ட எதுவும் வம்பு வச்சுக்காதே னு கண்டிச்சுடுவாளாம் .. பெரியவா கிட்ட போய் எனக்கு எதுவும் அனுக்ரஹம் பண்ணலியே னு பாட்டி கேட்டா…, அனுக்ரஹம்னா, கத்திரிக்காய் மலிவா கிடைச்சா அதான் அனுக்ரஹமா? இங்க நிக்கறியே இப்படி மணிக்கணக்கா… நான் ஏழு சல்லடை போட்டு தான் பக்கத்துல விடுவேன் .. அப்டின்னு பெரியவா சொல்வாளாம்.  அப்படி ஒவ்வொருத்தரையும் பெரியவா ஆட்கொண்டிருக்கா.

நம்ப அந்த மஹாபெரியவா அப்டிங்கற அந்த நாமத்தை கேட்டு அவருடைய மஹிமைகளை கேட்டு அந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி அப்டின்னு அந்த காஞ்சிபுரத்துடைய காமாக்ஷியினுடைய த்யானத்தோட பெரியவாளை நமஸ்காரம் பண்ணிண்டே வந்தால் நமக்கும் ஒரு நாளைக்கு ஞானம் ஏற்பட்டு அப்பறம் பெரியவா சரணம் கிடைக்குமா அல்லது சரணம் கிடைச்சு அதுலேர்ந்து ஞானம் ஏற்படுமா தெரியல.  இந்த மாதிரி ஸ்லோகங்களை சொல்லிண்டிருந்தா பெரியவா பக்தி வரும்னு ஸ்வாமிகள் சொல்லியிருக்கார்.  அதை நம்பி சொல்லுவோம்.

உதீ³தே போ³தே⁴ந்பதௌ³ தமஸி நிதராம் ஜக்³முஷி த³ஶாம்

த³ரித்³ராம் காமாக்ஷி ப்ரகடமனுராக³ம் வித³த⁴தீ ।

ஸிதேனாச்சா²த்³யாங்க³ம் நக²ருசிபடேனாங்க்⁴ரியுக³லீ-

புரந்த்⁴ரீ தே மாத: ஸ்வயமபி⁴ஸரத்யேவ ஹ்ருʼத³யம் ||

நம:  பார்வதி பதயே!!!  ஹர ! ஹர ! மஹாதேவா !!!

4 replies on “தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்”

Such a beautiful quote to end with an incident of pollachi patti. Wish men be like pollachi Patti’s husband. True, periyava conquered the hearts of many and some were pulled by him by his choice. 🙏 🙏 🙏

பால் போலும் பக்தி செய்ய நான் கோபியரில்லை
கால் ஊன்றி தவம் செய்ய நான் முனிவனுமில்லை
கல் கொண்டு உன்னை அடிக்க சாக்கியனில்லை
கள் மட்டுமே அடிக்க நான் வங்காள கிரியுமில்லை
தேள் போலும் வார்த்தை கொட்ட சிசுபாலனில்லை
நாள் தவறாது உன்னை வெறுக்க இரணியனுமில்லை
வில் கொண்டு உன்னை அடிக்க விஜயனுமில்லை
சொல் புனைந்து உனை புகழ புலவனுமில்லை
புல் போலும்நாயேன் போவதெங்கே ஐயா
அல்லும் பகலும் அடியேனை ஆட்கொண்டு அருள்வாய்

என்ன தவம் செய்தார்கள் இப்படிப்பட்ட பக்தர்கள்! நாமும் அவர்கள் போன்ற பக்தி செய்ய இயலுமா ? சந்தேகமே ! பெரியவாளை நினைத்தாலே கண்களில் நீர் சுரக்கும் கைகள் தானாகவே வணக்கம் செய்யும், எப்போதும் அந்த தியானத்தில் இருக்கும் பாக்யம் எல்லாருக்கும் கிடைத்துவிடாது . பூர்வ ஜன்ம சுகிர்தம், ஜன்ம வாசனை என்றெல்லாம் இருந்தால்தான் அது லபிக்கும். அது போல் இப்படிப்பட்ட பிரவசனத்தை செய்ய கணபதி சுப்ரமணியன் மட்டுமே முடியும்! அப்பர் தேவாரம், பிரதோஷம் மாமா, ஜயம் மாமி, பெரியவா அனைவரையும் சம்பந்தப் படுத்தி அழகான விளக்கம்! We are all blessed to listen, read his vyaakyaanam.

அருமையான விளக்கம்.🙏
உங்களுடைய ஸ்தோத்ர விளக்கங்களை கேட்டுண்டு இருந்தாலே, பக்தி தானாகவே வந்துடும்னு தோன்றது. We are very blessed that in every vyakyaanam you bring in Maha Periaya and that way we are able to do our namaskaram to him.
பெரியவா ஆட்கொண்டவா listல் நாம இல்லையேன்னு நினைக்காமல், பெரியவா நாமத்தை சொல்லக்கூடிய பாக்கியம், அவரோட மகிமைகளை கேட்கக்கூடிய பாக்கியம் நமக்கு கிடைச்சுருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கணும்.
அதுக்கு முக்கியமான காரண கர்த்தாவா இருக்கற உங்களுக்கு மனமார்ந்த நன்றி.🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.