Categories
mooka pancha shathi one slokam

கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி


ஸ்துதி சதகம் 12வது ஸ்லோகம் – கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி

जाता शीतलशैलतः सुकृतिनां दृश्या परं देहिनां
लोकानां क्षणमात्रसंस्मरणतः सन्तापविच्छेदिनी ।
आश्चर्यं बहु खेलनं वितनुते नैश्चल्यमाबिभ्रती
कम्पायास्तटसीम्नि कापि तटिनी कारुण्यपाथोमयी ॥

Sri Govinda Damodara Swamigal – Upadesham – Bhagavan Nama Mahimai (Govinda Damodara Stotram)
https://www.youtube.com/watch?v=TKkQs_AuzAs

सुखावसाने तु इदमेव सारम्,

दुःखावसाने तु इदमेव गेयम् ।

देहावसाने तु इदमेव जाप्यं,

गोविन्द दामोदर माधवेति ॥

ஸுகாவஸானே து இதமேவ ஸாரம் துக்காவஸானே து இதமேவ கேயம் |

தேஹாவஸானே து இதமேவ ஜாப்யம் கோவிந்த தாமோதர மாதவேதி ||

ஸ்ரீ குருவாயூரப்பனோடு மிக நெருக்கத்தோடு இருந்த ஸ்ரீ பில்வ மங்களாச்சார்யார் என்பவர் ‘கோவிந்த தாமோதர மாதவ ஸ்தோத்திரம்’னு ஒரு ஸ்தோத்திரத்தை அநுக்ரஹித்துள்ளார். 71 ஸ்லோகம் கொண்டது அந்த ஸ்தோத்திரம். ஒவ்வொரு ஸ்லோகத்தினுடைய நாலாவது அடி – ‘கோவிந்த தாமோதர மாதவேதி’.

அந்த கோவிந்த தாமோதர மாதவ என்ற நாமத்தின் மகிமையை இப்ப சொன்ன ஸ்லோகத்தில் தெளிவா சொல்லியிருக்கார்.

‘லோகத்துல அக்கம்பக்கத்துல இருக்கிறவாளைப் பார்த்து அதுபோல தானும் ஆகணும்! அந்த வீடு மாதிரி தன் வீடு இருக்கணும். அவர் எப்படி தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணினாரோ அப்படி தான் பண்ணனும்.’ இப்படி எல்லாம் ஒரு ஆசையினாலே ஜனங்கள் அதுக்கு வேண்டிய காரியங்கள் செய்து, கடைசியில கஷ்டத்தில் தான் போய் முடியறது! அந்த மாதிரி சிரமப்படாதே பா! ஒருத்தன் சுகமாக இருப்பதாக உனக்கு தோன்றினால், சுகத்தினுடைய எல்லை நிலையில் நீ இருக்கக்கூடிய அளவில ஒரு உபாயம் சொல்றேன் உனக்கு. என்ன?

‘ஸுகாவஸானே து இதமேவ ஸாரம்’ –

‘சுகத்தினுடைய எல்லை நிலையில் நீ இருப்பாய்’ எதை சொன்னா? – ‘கோவிந்த தாமோதர மாதவேதி’! ‘கோவிந்த தாமோதர மாதவான்னு சொல்லிண்டு இருந்தேன்னா, நீ அனுபவிக்கிற ஆனந்தம் பிரம்மாதி தேவதைகளுக்கு கூட கிடையாது! அப்பேர்ப்பட்ட ஆனந்தம் நீ அனுபவிப்பாய்!

கடுமையான துக்கம். அதை மறக்கவே முடியல! நினைக்க நினைக்க தேம்பித் தேம்பி அழணும்னு தோன்றது. புலம்பணும்னு தோன்றது. உடம்பும் வீணா போயிண்டிருக்கு. யாராலயும் அதுக்கு மருந்து கொடுக்க முடியலை. அப்பேர்ப்பட்ட துக்கம் ஒருத்தர் அனுபவிக்கிறார்னா, அவர் போய் நாடி, ‘இத மாதிரி புலம்புறதாலேயும் அழறதாலேயும் இந்த துக்க நிவர்த்தி ஏற்படாதப்பா! மஹான் பில்வமங்கள ஆச்சார்யார் சொல்லியிருக்கார் ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ னு.விடாம தொடர்ந்து சொல்லிண்டு வா. இந்த துக்கம் பறந்து போயிடும். துக்கத்தினுடைய பரம எல்லையில் இருந்துண்டு ஒருத்தர் கஷ்டப்படற போது அவாளுக்கு ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு அந்த திருநாமங்களைச் சொன்னா பரம சாந்தி ஏற்படும்!

எந்த ஜீவனும் சரீரம் எடுத்தா அதற்கு ஒரு முடிவு உண்டு.

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च। ‘ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச’ இதை பெரியவா ஸம்ஸ்கிருத உபன்யாசத்தில சொல்லப்பட்ட விஷயத்தை நேத்துக்கு இங்க எல்லோரும் கேட்டோம்.

அதுல பகவான் மனுஷ ஜென்மா கொடுத்தது மறுபடியும் ஜென்மா இல்லாமல் பண்ணிக் கொள்ள அப்படி என்ன சொல்லியிருக்கார். அப்போ ஜென்மா வராம இருக்கிறதுக்கு எது உபாயம்? ஞானம் உபாயம்! அந்த ஞானத்துக்கான யத்தனங்கள் எல்லாம் பண்ணனும். அதுக்கான  சௌகர்யங்கள் இல்லாதவா,

திருநாமத்தை ஜபிச்சு ஜபிச்சு ஜபிச்சு பழகிண்டா,

अनन्यचेता: सततं यो मां स्मरति नित्यश: |
तस्याहं सुलभ: पार्थ नित्ययुक्तस्य योगिन: ||

அனன்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஶ: |
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகின: ||

வேற எதை பற்றியும் யோசிக்காம, நினைக்காம பரமாத்மாவையே எப்பவும் நினைச்சிண்டிருந்தா, கடைசில நமக்கு க்ருஷ்ண ஸ்மரணம் சுலபமா ஏற்படும்னு சொல்றார் ஸ்வாமி.

ஸ்ரீமத் பாகவதத்திலேயும் ஸ்ரீமத் நாராயணீயத்திலேயும், “மனசை கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம், அதுக்கு சிறந்த உபாயம் என்ன? இந்த மனசு அடங்க? மனசு எங்க வேணும்னாலும் போகட்டும். வாயில திருநாமத்தை pathological conditionல நம்மை அறியாமல் வரக்கூடிய அளவுல பழகிக்கோ!” என்பதுதான் பாகவத உபதேசம், நாராயணீய உபதேசம்.

அப்படி சொல்லிண்டே இருந்தா, ‘தேஹாவஸானோ இதமேவ ஜாப்யம்’ – சரீரம் கீழே விழும் போதும்,  நம்மை அறியாம pathological conditionல ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ அப்படி ங்கற திருநாமம் வந்துடும். அந்த திருநாமம் வாக்குல வந்தவுடனே, பகவான் கோலோகத்துக்கு அவனை அழைத்துக்கொண்டு போவார்.

அதனால, ஒருத்தர் சுகத்தினுடைய எல்லை நிலையில் நீ இருக்கணும்னு ஆசைப்பட்டா சொல்ல வேண்டியது ‘கோவிந்த தாமோதர மாதவேதி’! ஒருவர் துக்கத்தினுடைய எல்லை நிலையில் இருக்கிறார் என்றால் அவருக்கு ஆறுதலுக்காக நீ போய்,  துக்கத்தை பத்தி திரும்பத் திரும்ப சொல்லிண்டிருக்கிறதில் லாபம் இல்லை.  ‘கோவிந்த தாமோதர மாதவேதி’!னு சொன்னா, அவருக்கு உடனே துக்கம் கொறஞ்சு, இன்னும் கொஞ்ச நேரம் சொல்லேன்ப்பா என்று சொல்வார். அப்புறம் அவரே சொல்ல ஆரம்பிச்சுடுவார்.

சரீரம் விழற சமயத்தில், பகவான் கீதையில
ஒமித்யேகாக்ஷரம் ப்ரஹம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |

ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் ||

பிரணவத்தை உச்சரிச்சுண்டு, பார்த்தசாரதியை ஹ்ருதயத்துல நினைச்சுண்ட்டு சரீரத்தை விட்டால் மோக்ஷம் கிடைக்கும் சொல்றது. ஆனா நமக்கு எப்போது சரீரம் விழப்போறதுன்னு தெரியுமா? தெரியாது. தெரியாததனால எல்லா காரியமும் பண்ணிண்டிருக்கோம். எந்த சமயத்தில் நமக்கு எப்போ முடிவுனு தெரியாது. அதனால அதுக்கு சரியான உபாயம் என்னன்னா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’! னு  நாக்கு எப்போதும் சொல்லும்படியா pathological conditionல கூட, தூக்கத்தில் கூட பேசணும் அந்த நாமம் ‘கோவிந்த தாமோதர மாதவேதி’! வாயில அப்படியே வந்துண்டு இருக்கும்படியா ஒரு பழக்கத்தை பண்ணிக் கொண்டு விட்டேனா, அது என்ன பண்ணும், சரீரம் விழும் போது கூட தானா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு சொல்லும். கண்டிப்பா மோக்ஷம் கிடைக்கும் அப்படின்னு இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.

எனக்கு பந்துக்கள் எல்லாம் இருக்கா. எல்லாருக்கும் என் மேல ரொம்ப பிரியம். இது கடைசி நேரம்னு சொன்னா எல்லாரும் பக்கத்துல வந்து உட்கார்ந்து திருநாமம் சொல்வா. இந்த மாதிரி pathological conditionல கூட பகவான் நாமம் வரக்கூடிய அளவுக்கு இதை பழகிக்கணும்கிற அவசியமா? அப்படிங்கற ஒரு கேள்வி வரும். பகல் வேலையா இருந்தா எல்லாரும் வருவா. ராத்திரி 12 மணிக்கு உன்னுடைய சரீரத்துக்கு முடிவு இருக்குன்னா? அப்ப யார் கூட வருவா? அதை ஒரு ஸ்லோகத்தில் சொல்றார்.

ஏ நாவே! நீ கேட்ட போது எத்தனையோ கோதுமை அல்வா, திரட்டுப்பால், எத்தனையோ விஷயம், தயிர் வடை எல்லாம் உனக்கு கொடுத்து இருக்கேன்! சில பேருக்கு தித்திப்பு பிடிக்காது. இந்த மாதிரி காரம் பிடிக்கும் அதனால. நீ சொன்னபடி நடந்து இருக்கேன் ஜென்ம ஜென்மவா ! உன்கிட்ட ஒரு சின்ன obligation. என்ன? எமன் கையில கால தண்டத்தோடு வந்தபோது, அந்த சமயத்தில் பக்கத்துல யாரும் இருக்க மாட்டா. நாக்கு தானே பக்கத்துல இருக்கு. நாக்கைப் பார்த்து “ஏ நாவே! இப்படியே மதுரமா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு சொல்லணும்னு உன்கிட்ட கேட்டுக்கறேன்! உன்னையே கேட்டுக்கறேன்! மத்தவா கிட்ட கேட்டா அந்த சமயத்துல ஆபீஸ்ல இருந்து யாராவது அழைச்சிண்டு போனான்னா, இல்லாம போயிடும். அதனால எப்பவுமே நம்ம தொண்டைல இருந்துண்டிருக்கு இந்த நாக்கு. அதனால நாக்கையே கேட்டுப்போம்னு ஒரு ஸ்லோகத்தில் சொல்றார்.

த்வாமேவ யாசே மம தே³ஹி ஜிஹ்வே ஸமாக³தே த³ண்ட³த⁴ரே க்ருʼதாந்தே ।

வக்தவ்யமேவம் மது⁴ரம் ஸுப⁴க்த்யா கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ॥

இந்த ஸ்லோகத்தில் இந்த மாதிரி அர்த்தம் சொன்ன போது ஒருத்தர் … ஒரு கிழவர் தேம்பித் தேம்பி அழுதார். அவர் ஒருத்தருக்கு மட்டும் பாகவதம் சொல்ல போயிருகேன் அவாத்துக்கு. ஆத்துல மத்தவா எல்லாரும் இருந்தா. என்கிட்ட இருக்கிறவாளுக்கெல்லாம் ஈடுபாடு கிடையாது. எனக்கு மட்டும் பாகவதம் கேட்கணும்னு மஹாபெரியவா கேட்டிருக்கா அவர்கிட்டன்னு கேள்விப்பட்டதுனால, ‘அவர்கிட்ட கேட்கணும்னு ஆசைபடுறேன்! ஒருத்தருக்கு சொல்லுவாரானு கேட்டிருந்தார். ஒருத்தருக்கு சொல்வாருன்னு ஏற்பாடு பண்ணியிருந்தா. கதை சொல்லும் போது கஜேந்திர மோஷத்தில, கஜேந்திரனை சேர்ந்தவாளெல்லாம் அந்தண்டை போயிட்டா! கஜேந்திரன் தன்னைத் தானே காப்பாத்திக்கறதுக்காக, மன்னாடறது என்கிற போது பகலா எல்லாரும் கூட இருப்பா. ராத்திரி காலத்தில் யாரு பக்கத்துல இருப்பான்னு தன்னுடைய நாக்கைப் பார்த்து மஹான் கேட்டுப்பார்ன்னு சொன்ன உடனே தேம்பி தேம்பி அழறார். ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணானு கதறரார். மேல என்னால கதை சொல்ல முடியல! என்ன சொல்ல வரேள்னு கேட்கும் போது, “எனக்கு சிறந்த உபாயத்தை சொல்லிட்டேளே!”. என்ன? “சாயங்காலம் ஆபீஸ்ல இருந்து பையன் வரான். வயசானதுனால கவலை பாஞ்சுடறது. ‘சத்ய தர்ம பராக்கிரம:’ பதிலா ‘சத்ய தர்மா த்ரிவிக்ரம:’ னு சொல்றேன் சீக்கிரம் முடிஞ்சு போய்டுறது ஸஹஸ்ரநாமம். என்னடா இது பத்துநிமிஷமாவது ஆகுமே னு பக்கத்துல உட்காரு. ஸஹஸ்ரநாமம் சொல்ற பர்யந்தம். கூட கூட சொல்ல வேண்டாம். பக்கத்திலேயே இருன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறான். உள்ளே போய்டறான். அப்படி இருக்கும் போது, என்னோட கடைசி நேரத்துல அதுவும் ராத்திரி 12 மணிக்குனு சொல்றேளே! அவனா இருந்து சொல்ல போறான்! ஒரு அழகான உபாயம் சொல்லிட்டேளே! இந்த க்ஷணத்தில இருந்து ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு நான் சொல்றேன். அதனால தான் மஹான்கள் பண்ணியிருக்கிற ஸ்லோகங்கள் எல்லாம் லோகாநுபவத்தினால அதனுடைய பெருமையை உணர முடியறது. அந்த மகான் சொல்லும்போது, ‘ஆஹா இந்த ஸ்லோகத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கு! உன்னையே கேட்டுக்கிறேன் என் நாவே! அந்த தர்மராஜன் வருகிற காலத்தில் மதுரமா, ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ னா அவர் போய்விடுவார். பகவான் பொறுப்பு எடுத்துண்டு நம்முடைய டேஸ்டுக்கு தகுந்தபடி வைகுண்டத்துக்கோ, கைலாசத்துக்கோ, மணித்வீபத்துக்கோ, கோலோகத்துக்க்கோ, சாந்தாநிக லோகம் னு ராமர் இருக்கிற லோகம் அதுக்கு அழைச்சிண்டு போவார்னு தெரிஞ்சுகிறதுக்காக இந்த கோவிந்த தாமோதர மாதவ ஸ்தோத்திரத்தை மகாத்மா பில்வ மங்கள ஆச்சார்யார் அருளியிருக்கார்.

கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம் ஸ்வாமிகள் குரலில், பாடல் வரிகளோடு இந்த இணைப்பில்; Govinda Damodara Stothram in Swamigal’s voice with split lyrics in Samskrutham and Tamizh ->

கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம் ஸ்வாமிகள் குரலில்; Govinda Damodara Stothram in Swamigal’s voice

3 replies on “கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி”

மிகவும் அழகான ஸ்லோகம். ஹிமவானின் புத்திரி பார்வதி தேவியாக அம்பாள் பர்வத மலையில் அவதரித்து கருணை என்னும் ஜலத்தால் நிரம்பி கம்பாநதிக் கரையில் இன்னொரு நதியாக அசையாமல் அருள்வதாக வர்ணிக்கிறார். நினைத்த மாத்திரத்தில் சந்தாபத்தை போக்குவதாக ஸ்லாகிக்கிறார். அதற்கு மிகப்பொருத்தமாக ஆசார்யாளை வர்ணிக்கும் ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியது மிக அருமை. அப்படியே மஹாபெரியவாளுக்கும் மிக அழகாகப் பொருந்துகிறது. 👌🙏🌸

ஸ்வாமிகள் ப்ரவசனம் செய்யும் அழகையும், பாராயணத்திற்கு நடுவில் ஜனங்களின் தாபத்தை போக்குவதற்கு ஆறுதல் அளிக்கும் விதத்தையும், அதற்கு அவர் பாகவத ஸ்லோகம் மேற்கோள் காட்டியதும் மிக அற்புதம். அவருடைய தயையைப் பற்றி கேட்க கேட்க ஆனந்தமாக இருந்தது.👌🙏🌸

ஸ்வாமிகளுடைய கோவிந்த தாமோதர மாதவ ஸ்தோத்திரத்தின் சாரத்தை கேட்டேன். அம்ருதமாக இருந்தது. “ஏ நாவே! நீ கேட்ட போது எத்தனையோ கோதுமை அல்வா, திரட்டுப்பால், தயிர் வடை எல்லாம் உனக்கு கொடுத்து இருக்கேன்! இப்படியே மதுரமா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு சொல்லணும்னு உன்கிட்ட கேட்டுக்கறேன்!”னு சொல்றதெல்லாம் கேட்டுண்டே இருக்கலாம்.🙏🙏🙏🙏

Listening to Sri Swamigal’s upadesam via you tube video, eyes are drenched with tears, don’t really know the reason. Blessed to listen to his voice. Lot of Mahaperiyava’s voice semblance is noticed. Very soft and sweet voice to hear, a sense of being with God. Thanks to Bhagwan and you. Mahans way of looking at and interpretation of stothrams, through which one can see God. 🙏

இமயமலையில் உற்பத்தியாகி பெருகும் கங்கை நதி அதில் ஸ்நானம் செய்வோருக்கு மட்டும் தாபத்ராயங்களைப் போக்கும் ஆனால் காமாக்ஷி என்னும் கருணாநிதி நினைத்த மாத்திரத்திலேயே தாபங்களைப் போக்குகிறது!!
பொருள் செறிந்த ஸ்லோகம்!
லலிதா சஹஸ்ர நாமம் கம்பீரா காகனந்தஸ்தா ஆழம் காண இயலாத அந்தம் இல்லாத ஆனந்தம், மஹாஹ்ரதம் என்று வர்ணிக்கிறது !
சம்சார தாப்னக்களைப் போக்கி தாபங்களை நிலவு போல் குளிரச் செய்பவள் அன்னை காமாட்சி!

சம்சார சாகரத்தில் உழன்று திரியும் நமக்கு கோவிந்த தாமோதர் மாதவ எனும்.நாமங்களை ஜபித்து வந்தால் அது இரத்தத்தில் கலக்குமாறு பழக்கப்படுத்தினநால்
இழக்கும்.வழியே அடுங்காலன் எனை அழைக்கும்போது அஞ்சல் என வர வேண்டும் என்று பட்டர் சொன்னது போல் நம் முன்னே வந்து அழைத்துச் செல்வார் என்பது திண்ணம்!
அதற்கு நாப் பழக்கம், மனம் ஊன்றி இரை வழி படுத்தல் மானசீகமாக இதுதான் தேவை! ஸதா பகவத் த்யானம் அது ஒன்றே நாம் உய்ய ஒரே வழி !
அதனை வலியுறுத்தி, ஸ்வாமிகள்
வாழ்ந்து காட்டியது போல் வாழப் பழக வேண்டும்! என்பதனை அழகாக எடுத்துரைத்த கணபதிக்கு நன்றி மிகப்.பல!
கிருஷ்னார்ப்பணம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.