மந்தஸ்மித சதகம் 24வது ஸ்லோகம் – காமாக்ஷியிடம் குறைகளை எப்படி முறையிட வேண்டும்?
कर्पूरैरमृतैर्जगज्जननि ते कामाक्षि चन्द्रातपैः
मुक्ताहारगुणैर्मृणालवलयैर्मुग्धस्मितश्रीरियम् ।
श्रीकाञ्चीपुरनायिके समतया संस्तूयते सज्जनैः
तत्तादृङ्मम तापशान्तिविधये किं देवि मन्दायते ॥
5 replies on “காமாக்ஷியிடம் குறைகளை எப்படி முறையிட வேண்டும்?”
விளக்கம் அருமையாக, ஆறுதலாக, இனிமையாக இருந்தது காலம் கை கூடும் அம்பாள் அருளால்.
ஸ்ரீ பெரியவா பாதம் ஷரணம் 🙏
நமஸ்காரம் அண்ணா 🙏
மூக கவி தாபத்துடன் வழங்கிய வரிகள் மூலம், பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும் என்று பொருள் விளக்கம் அற்புதம்.
காமாக்ஷி மந்தஸ்மிதத்தோட குளிர்ச்சி, வெண்மை, அழகு, மிக இனிமையானதொரு பொருள் விளக்கம்.
மேலும் இந்த மந்தஸ்மிதம் மனோ வியாதியான துக்கங்களை (மனதிற்கு தான் துக்கம்) போக்கும் ஓர் அருமருந்து
கஷ்ட நிவாரணமும், துக்க பரிஹாரமும்
அந்த காமாக்ஷி கடாக்ஷம் பட்ட மாத்திரத்தில், அவளின் மந்தஸ்மிதத்தோட பிரதிபலிப்பில் கரைந்து விடும்.
கந்தனின் அனுபூதியுடன் அந்த காஞ்சி கருணா கடாக்ஷத்துருவமும் கண் முன் காட்சி கொடுத்துள்ளார்.
குருவிடமும், கடவுளிடமும் தான் நம் குறைகளை இறக்கி வைக்க வேண்டும். மற்றவர்களால் மாற்ற முடியாதது மஹான் மஹா பெரியவாளாலும், நம்மைப் படைத்த இறைவனால் மட்டுமே இயலும்.
நன்றி 🙏 🌹
மனதுக்கு ரொம்ப இதமாக இருந்தது. காமாக்ஷியின் மந்தஸ்மிதம் நம்மை காக்கும் என்ற நம்பிக்கை தருகிறது.
கந்தர் அனுபூதி, ஆனந்த சாகரஸ்தவம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், மகா பெரியவா த்யானம், சுவாமிகள் உபதேசம் என்று நம்மை அருள் வெள்ளத்தில் திளைக்க வைத்தது இந்த உபன்யாசம்.
இனி அழ வேண்டாம் என்று ஹனுமன் ஸீதைக்கு சொன்ன வார்த்தை கேட்டு நமக்கு ஆறுதலாக இருக்கிறது.
ஆனந்த சாகரஸ்தவம் முழுதும் மூலமும் விளக்க உரையும் நீங்கள் சொல்லி கேட்க வேண்டும் என்று ஆவல்.
நன்றி. நமஸ்காரம்.
Periyavaa.. Charanam Sharanam
சலதியுலகத்தில் சராசரங்களை ஈன்ற தாயாகினால் எனக்குத் தாயல்லவோ? யான் உன் மைந்தனன்றோ? எனது சஞ்சலம் தீர்த்து நின்றன் முலை சுரந்தொழுகும் பாலூட்டி, என் முகத்தை உன் முந்தானையால் துடைத்து என்று அழகுபட பிரார்த்தனையை வைக்கிறார் பட்டர் !
இது போல் பெரிய மஹான்கள் தன் கஷ்டங்களை அன்னையிடம் ஒப்புவித்து, அவள் இருக்க நமக்கு என்ன கவலை என்று ஆசாபாசங்கள் அற்று வாழ நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள் !
அருணகிரி நாதர் ..குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் …… படுவேனைக்
குறித்தே முத்திக் குமறா வின்பத்
தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் …… கழல்தாராய்
இதுதான் மஹான்களின் வழி முறை ! நாமும் பின்பற்ற முயற்சிக்க வேண்டும் !
அம்பாள் சரணம்…