Categories
mooka pancha shathi one slokam

தன்னம்பிக்கையை தரக் கூடிய மூகபஞ்ச சதீ ஸ்லோகம்


ஸ்துதி சதகம் 72வது ஸ்லோகம் – தன்னம்பிக்கையை தரக் கூடிய மூகபஞ்ச சதீ ஸ்லோகம்

आधून्वन्त्यै तरलनयनैराङ्गजीं वैजयन्तीं
आनन्दिन्यै निजपदजुषामात्तकाञ्चीपुरायै ।
आस्माकीनं हृदयमखिलैरागमानां प्रपञ्चैः
आराध्यायै स्पृहयतितरामादिमायै जनन्यै ॥

ஆதூ⁴ன்வந்த்யை தரலநயனைராங்க³ஜீம்ʼ வைஜயந்தீம்ʼ
ஆனந்தி³ன்யை நிஜபத³ஜுஷாமாத்தகாஞ்சீபுராயை ।
ஆஸ்மாகீனம்ʼ ஹ்ருʼத³யமகி²லைராக³மானாம்ʼ ப்ரபஞ்சை𑌃
ஆராத்⁴யாயை ஸ்ப்ருʼஹயதிதராமாதி³மாயை ஜனன்யை ॥

இது ஸ்துதி ஶதகத்தில் 72வது ஸ்லோகம்

தரலநயனை: – அசைகின்ற கண்களால்.அதாவது தன்னுடைய கடாக்ஷ மஹிமையினால்

ஆங்க³ஜீம்ʼ வைஜயந்தீம் – மன்மதனுடைய வெற்றி கொடியை ஆதூ⁴ன்வந்த்யை – பறக்க செய்பவளும்

ஆனந்தி³ன்யை நிஜபத³ஜுஷாம் – தன்னுடைய திருவடியின் அருகில் வந்தவர்களுக்கு, அதாவது தன்னை பணிபவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவளும்

ஆத்தகாஞ்சீபுராயை – காஞ்சிபுரத்தை அடைந்தவளும் என்று அர்த்தம், காஞ்சிபுரத்தில் நித்ய வாசம் பண்ணுபவளும்.

ஆஸ்மாகீனம்ʼ ஹ்ருʼத³யம் – எங்களுடைய ஹ்ருதயம் அந்த காமாக்ஷினிடத்தில்

ஸ்ப்ருʼஹயதிதராம் – ரொம்ப ஆசைப்படறது அப்படினு சொல்றார். அந்த காமாக்ஷி

ஆக³மானாம்ʼ ப்ரபஞ்சை꞉ஆராத்⁴யாயை – பிரபஞ்சத்தில், வெறும் பாரத தேசத்தில் தமிழ்நாட்டில் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் யாரு எப்படி எல்லாம் தெய்வத்தை வழிப்படலாம் அப்படினு ஒரு ஆகமம். வேத நெறியில், எந்த எந்த தெய்வங்களை, எப்படி எப்படியெல்லாம் வழிப்படனும்னு சொல்லியிருக்கோ, அந்த எல்லா ஆகமங்களாலும்

ஆராத்⁴யாயை – வழிப்பட பெறுபவள் எங்க காமாக்ஷி தான்

ஜனன்யை – எங்க அம்மா அப்படிங்கிறார்.

அந்த காமாக்ஷி,

ஆதிமாயை – அவள் தான் ஞான வடிவம், அவள் தான் மாயை வடிவம், அந்த காமாக்ஷியை எங்களையுடைய மனம் மிகவும் விரும்புகிறது, அதிகமா நாடுகிறது, அப்படினு ஒரு ஸ்லோகம்.

இந்த முதல் வரியில், மன்மதனை ஸ்வாமி எரிச்சுட்டார், பஸ்மமா போயிட்டான், ஒண்ணுமில்லாம போயிட்டான். அப்படி இருந்த மன்மதனை உயிர் பிச்சு, அவனுக்கு மூவுலகத்தில் எல்லாரையும் ஆட்டிப் படைக்கற சக்தியை கொடுத்து, அவனுடைய கொடியை பறக்க விட்டா காமாக்ஷி. அந்த மாதிரி ஒண்ணுமே இல்லாமல் போனவாளையும், காமாக்ஷி கடாக்ஷம் கிடைச்சதுனா, அவா கொடி கட்டி பறப்பா, அப்படிங்கறது  இந்த ஸ்லோகத்தில் இருக்கு.

ராமர் சீதையை பிரிந்த போது ரொம்ப துக்கப்படறார், “என்னால இனிமே உயிர் வாழ முடியாது லக்ஷ்மணா, நீ போய் பரதன் கிட்ட சொல்லிடு, நான் இனிமே திரும்பி அயோத்திக்கு வர மாட்டேன்”, அப்படிங்கிறார். அவருடைய படிப்பு என்ன, வீரம் என்ன, புத்தி சக்தி என்ன, ஞானம் என்ன, எல்லாமே இழந்து ஒண்ணுமே இல்லாத மாதிரி ஆகிவிட்டார் அவர். அப்போ லக்ஷ்மணன் சமாதானம் படுத்தறான்.அப்போ வசந்த ரு’துல, வசந்த நவராத்ரி போது 9 நாள், அம்பாளை வழிப்பட்டு, அதோடு முடிவில், ஹநுமாரை தர்ஸனம் பண்றார், அப்படினு ஒரு புராணத்தில் இருக்கு.ஹனுமார் மாதிரி ஒருத்தர் கிடைக்கறார் ராமருக்கு. அந்த மாதிரி, இந்த ஸ்லோகத்தை சொல்லி, காமாக்ஷியை நம்ப வேண்டிண்டா, நம்ப எல்லாத்தையும் இழந்துட்டோம், அப்படினு உலகத்தில் யாரையுமே எதையுமே முழுக்க இழந்து விடுவது இல்லை.எல்லாருக்கும் சில வரங்களும், சில சாபங்களும் இருக்கு. நம்ம அந்த வரங்களை நினைத்து ஒரு தெளிவு அடைந்து ஒரு உறுதியை ஒரு தன்னம்பிக்கையை பெறுவதற்கு அந்த காமாக்ஷினுடைய கடாக்ஷம் வேண்டிற்கு.அப்போ தெய்வம் மானுஷ ரூபேண அப்படினு ஏதாவது ஒரு ரூபத்தில் ராமருக்கு ஹனுமார் வந்தா மாதிரி, ஒருத்தர் வந்து நம்மளுடைய புத்தியில் ஒரு தெளிவை கொடுத்து, நம்மளுடைய strengths எல்லாம் திருப்பி நமக்கு ஞாபகம் படுத்தும் போது, நம்ப தைரியமாய் உலக காரியங்களை ஈடுப்பட்டு ஜெயிக்கறோம்.அப்படி நம்பிக்கை கொடுக்க கூடிய ஒரு ஸ்லோகம் இது. நமக்கு ஏன் குழப்பம் ஏற்படறதுனா

ஸங்காத்ஸம்ஜாயதே காம:காமாத்க்ரோதோ‌உபிஜாயதே

க்ரோதாத்பவதி ஸம்மோஹ:ஸம்மோஹாத்ஸ்ம்றுதிவிப்ரம: |

ஸ்ம்றுதிப்ரம்ஶாத்புத்தினாஶோ புத்தினாஶாத்ப்ரணஶ்யதி

அப்படினு கீதையில் 2வது அத்யாயத்தில் பகவான் சொல்றார். நமக்கு அதிகமா ஒரு சங்கம் ஒரு பாசம் இருக்கறதுனால, அதில் விஷயத்தில் காமம் ஏற்படறது.அதில் ஏதாவது ஒரு ஏமாற்றமோ, ஒரு தோல்வியோ வந்தா, அது கோபாமாவோ, வருத்தமாவோ மாறி, அதனால் நம்மளுடைய மனசில் குழப்பம் ஏற்பட்டு, நம்மளுடைய புத்தி,  நம்மளுடைய ஞாபகசக்தி எல்லா இழந்து, நம்ப வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். இதுக்கு என்ன மருந்துங்கிறதையும் ஸ்வாமியே சொல்றார், அடுத்த ரெண்டு ஸ்லோகத்தில்.

ராகத்வேஷவிமுக்தைஸ்து விஷயானின்த்ரியைஶ்சரன் |

ஆத்மவஶ்யை:விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி

ப்ரஸாதே ஸர்வதுக்கானாம் ஹானிரஸ்யோபஜாயதே |

அப்படினு சொல்றார்.’பிரஸாதம்னா’ தெளிவு.இந்திரியங்களை புத்தியினால் அடக்கி ஆளுபவன் பகவானுடைய அனுகிரஹம் பெற்று தெளிவை அடைகிறான்.அந்த தெளிவு கிடைத்து விட்டதுனா,

ஸர்வதுக்கானாம் ஹானிரஸ்யோபஜாயதே – எல்லா துக்கங்களுக்கும் முடிவு ஏற்படுகிறது, அப்படினு சொல்றார். ஒரு depressionல இருக்கும் போது, நம்மால அதை பார்க்க முடியவில்லை. அந்த நம்மளுடைய பாசம், நம்மளை பிடிச்சு அழுத்தறதுனால, நம்ம எல்லாத்தையும் இழந்து விட்டதாகவும் நமக்கு வழியே இல்லைங்கறா மாதிரி தோன்றது. அப்போ ஒரு ஸத்குரு கிடைத்தார்னா, இந்த ஸ்லோகத்தில் காமாக்ஷி எப்படி மன்மதனை உயிர்ப்பிச்சு, அவனை கொடி கட்டி பறக்கும்படியா சக்தி கொடுத்தானு சொல்றார்.

ஒரு குரு இந்த ஸ்லோகத்தில் இருக்கற எல்லாமே பண்ணுவார்.

ஆனந்தி³ன்யை நிஜபத³ஜுஷாம் ஆத்தகாஞ்சீபுராயை – குருங்கிறவர் எப்படி காமாக்ஷி காஞ்சிபுரத்தில் நித்ய வாசம் பண்றாளோ அப்படி ஒரு குரு தன்னுடைய ஆத்மாவில் எப்பொழுதும் லயிச்சு இருப்பார்.அவர் தன்னை வந்து நமஸ்காரம் பண்றவாளுக்கு, ஆனந்தத்தை கொடுப்பார். முதலில் அவாளுடைய அந்த துக்கம் போய்விடும்.ஏன் என்றால் அவா அந்த ஞானத்தில் நிலைத்து இருப்பதனால், அதோட ஒரு திவிலை நம்ப மேல் பட்டு, நமக்கும் துக்கத்தோட பாரம் போய் விடுகிறது.

ஆக³மானாம்ʼ ப்ரபஞ்சை꞉ஆராத்⁴யாயை – அப்படின்னு எல்லா வேதத்தின் முடிவான உயர்ந்த ஞானத்தை உயர்ந்த பக்தியை உத்தம பக்தியை அவா பெற்று

ஆதி³மாயை ஜனன்யை – அப்படினு அந்த மாயையை கடந்து, ஆனால் அதே நேரத்தில் ஒரு அம்மா போல கருணையாக நம்ப கிட்ட அன்பு பாராட்டறதுனால

ஆஸ்மாகீனம்ʼ ஹ்ருʼத³யம் ஸ்ப்ருʼஹயதிதராம் – நம்முடைய மனசும் நம்ப தெரியாம அப்படி ஒரு மஹான் கிட்ட ஈடுபட்டு, உலகத்தில் மற்ற பாசங்கள் விட அதிகமா அவாள் கிட்ட நமக்கு ஒரு அன்பு ஏற்படறது.அப்போ நமக்கு அந்த தெளிவு ஏற்படறது. நம்ம அப்புறம் உலகத்தில் ஓரளவுக்கு தைரியமாய் திரும்பவும் பழக முடிகிறது. இந்த உலகத்தில் நம்ம போனால், நம்ம அவமானம் படுவோம், நம்ப கஷ்டப்படுவோம் அப்படிங்கிற எண்ணம் போய், நம்மால இந்த உலகத்தில் ஜெயிக்க முடியும் அப்படிங்கிற தெம்பு வருது.அவா என்ன சொல்றா,ஸ்லோகம்” பகவான் சொன்னா மாதிரி, நீ இந்த மூக்குணங்களால் ஆன , உன்னுடைய புலன்கள், உன்னுடைய மனசு, வெளியில் இருக்கற விஷயங்கள், இதனால் உனக்கு ஏற்படக்கூடிய கஷ்டம், அதையே நீ நினைக்கற. நான் உனக்கு ஒரு மந்த்ரம் தரேன்

“குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி”

இது தான் மந்த்ரம். நீ இதை சொல்லிண்டு போனால், இது மூக்குணங்களுக்கும் மேற்ப்பட்டது. மஹாபெரியவா மூக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவர். நீ அவரை நினைத்து கொண்டு போனால், உலகத்தில் எதுவும் உன்னை எதுவும் பண்ணாது.தாமரை இலை மேல ஒரு பச இருக்கறதுநால, தண்ணீர் ஒட்டாதமாதிரி, நீ எங்க வேணும்னா போ, என்ன வேணும்னா பண்ணு, நீ அனுபவிக்கனும்னா அனுபவி, ஆனா உன் மனசு, இந்த ஸ்லோகத்தை சொல்லிண்டு இந்த பெரியவாள் கிட்டயே இருந்தா உன்னை ஒண்ணும் பண்ணாது போ” அப்படி அவா தைரியமா சொல்றதுனால நமக்கு ஒரு தெளிவு கிடைக்கறது அதுக்கு அப்புறம் நம்பளுடைய strengths எல்லாம் நமக்கு help பண்றது.ஆனா நம்ம உலகத்தில் achieve பண்றோமோ, தோற்று போறோமோ, ஜெயிக்கறோமோ அது அவ்ளோ நம்மளை bother பண்றது இல்லை. ஜெயித்தாலும் சரி பெரியவா கொடுத்தா, தோற்றாலும் சரி, சரி இன்னிக்கு இப்படி உங்க சங்கல்பம்.அப்படினு நம்ம நினைத்ததை விட அதிகமா காரியங்கள் பண்ணி முடித்து விடுகிறோம். அந்த மாதிரி நம்பிக்கையை கொடுக்க கூடிய ஒரு ஸ்லோகமா எனக்கு இது தோன்றது. இன்னிக்கும் பெரியவாளை நினைத்து இந்த ஸ்லோகத்தை சொன்னா நமக்கு தன்னம்பிக்கையை கொடுப்பார்.

ஆதூ⁴ன்வந்த்யை தரலநயனைராங்க³ஜீம்ʼ வைஜயந்தீம்

ஆனந்தி³ன்யை நிஜபத³ஜுஷாமாத்தகாஞ்சீபுராயை .

ஆஸ்மாகீனம்ʼ ஹ்ருʼத³யமகி²லைராக³மானாம்ʼ ப்ரபஞ்சை꞉

ஆராத்⁴யாயை ஸ்ப்ருʼஹயதிதராமதி³மாயை ஜனன்யை.

நம:பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவா.

One reply on “தன்னம்பிக்கையை தரக் கூடிய மூகபஞ்ச சதீ ஸ்லோகம்”

என்ன ஒரு மனசுக்கு இதமாகவும், கவலைகளினின்றும் வெளிக்கொணர கூடியதும் ஸ்லோகம்! நம் பலருக்கும் ஏதாவது ஒர் சந்தர்ப்பத்தில் இது போன்ற அனுபவம் யார் மூலமாகவோ ஏற்படலாம் ! மனத் தெம்பைப் பெற காமாக்ஷி சரணங்களைத் தவிர புகலிடம் ஏது ?
உழன்று திரியும் நம்மை உத்தமனாக்குவது அம்பாளின் சரண ஸ்மரணை அல்லவா?
அழகான விளக்கம்! தொடர்க உங்கள் பணி !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.