ஆர்யா சதகம் 7வது ஸ்லோகம் – ஐஸ்வர்யம் இந்து மௌலே:
ऐश्वर्यमिन्दुमौलेरैकात्म्यप्रकृति काञ्चिमध्यगतम् ।
ऐन्दवकिशोरशेखरमैदम्पर्यं चकास्ति निगमानाम् ॥
ஆர்யா சதகம் 7வது ஸ்லோகம் – ஐஸ்வர்யம் இந்து மௌலே:
ऐश्वर्यमिन्दुमौलेरैकात्म्यप्रकृति काञ्चिमध्यगतम् ।
ऐन्दवकिशोरशेखरमैदम्पर्यं चकास्ति निगमानाम् ॥
5 replies on “ஐஸ்வர்யம் இந்து மௌலே:”
https://www.youtube.com/watch?v=5O3VyyhgEOw – Maha Periyava voice on this sloka
Wonderful explanations of each shloka, with Periyava’ s quotes. Thanks much ..
ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம்.
என்ன ஒரு அருமையான விளக்கம்.
இளம் சந்திரனை தலையில் சூடிக்கொண்ட காமாக்ஷியை வணங்குவதையே ஐஷ்வர்யம் என்றும்,
எளிமையான முறையில் காமாக்ஷியின் பாதத்தை பற்றிக் கொண்டால் வேதத்தினால், ஞானத்தினால் அடைய கூடியதை சுலபமாக அடையமுடியும் என்றும் சௌந்தர்ய லஹரி முதல் ஸ்லோகம் மேற்கோள் காட்டி, அந்தப் பரமேஸ்வரனையும் ப்ரபஞ்சத்தை இயக்கக்கூடிய ஷக்தியாகவும், இருப்பதாக ஆசார்யாள் கூறியதைக் குறிப்பிட்டது அருமையாக இருக்கு.
மஹா பெரியவாளின் ஒலி விரிவுரை உள்ளே காமாக்ஷியையே நிலைநிறுத்தி விட்டது. சங்கு, சக்ரம் பொறந்தாத்து சீர், இளங்கலை புக்காத்து சீர் என்று பெரியவாளின் ஒலியில் மிக யதார்த்தமாக உணர்த்தியுள்ளார்.
மொத்தத்தில் மிக அருமை. 👌
ஐஸ்வர்யம் இந்து மௌளே: அழகான ஸ்லோகம்! அற்புத விளக்கம்!! பிறந்தாத்து அடையாளம் சங்கு சக்ரம், புகுந்தாத்து அடையாளம்சந்த்ர பிறை!
என்ன அழகான வ்யாக்யானம் !!
பெரியவா விளக்கும்போது அம்பாள் எதிரில் தோன்றுகிறாற்போல் இருக்கும்! ஸௌந்தர்யலஹரியில் அம்பாளையும் சிவனையும் சேர்த்து ஆரம்பிக்கிறாற் போல் சிவானந்தலஹரியிலும் கலாப்யாம் சூடாலங்க்ருத சசி கலாப்யாம் என்று முதலில் ஸகல வித்யா ஸ்வரூபமான பார்வதி பரமவ்ஸ்வரா நமஸ்காரத்துடன் ஆரம்பிக்கிறார் ஆசார்யாள்!
எப்படி? பார்வதி பரமேஸ்வராள் இருவரும் சிரஸில் சந்த்ர கலையைத் தரித்திருக்கிறார்கள் சந்த்ர கலையால் சிரஸிற்கு சோபை என்று மற்றவர் விஷ்யத்தில் சொல்லலாம், ஆனால் இவர்களிடத்தில் மட்டும் இவர்கள் கேசத்தால் சந்த்ரனுக்கு சோபை என்று ஆரம்பமாகிறது!!
ஸிவனன்றி சக்தியில்லை சக்தியன்றி சிவனில்லை எனலாம், ஆனால் இயக்குவது யார்? அம்மையல்லவா?
சிவனே இரு என்று சொல்கிறோம் அப்படியென்றால்? சக்தியன்றி சிவமில்லை! ஏனென்றால் சக்தி என்ற சொல்லே power என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்!
அவள் kinetic energy! அவர் potential energy! இருவரும் ஒன்று சேர்ந்தால்தான் பஞ்சக்ருத்யங்களும் செவ்வனே நடக்கிறது!
ப்ரம்மத்தோடு அபேதமான ப்ரக்ருதி க்ஷேத்ரமான காஞ்சியில் அம்பாள் சிரசில் மூன்றாம் பிறை சூடியுள்ளாள். சிவனுடைய தாத்பர்யமாகவே விளங்குகிறாள்! ரிக், யஜுர் சாம அதர்வண் வேதங்கள் முறையே கிழக்கு, தெற்கு,மேற்கு , வடக்கு திசைகளில் சூழ நடு நாயகமாக இருந்து அருள் பாலிக்கிறாள் காமாக்ஷி!!
பெரியவா விளக்கமும் அதன் பின் கணபதியின் குரல் விளக்கமும் எளிமையாக பசு மரத்தானி போல் பதிகிறாற் போல் சுவையான விருந்து!!
ஜய ஜய ஜகதம்ப சிவே ……
கோவிந்த தாமோதர சுவாமிகளின் பதிவை பார்க்கும் போது, இவ்வளவு அற்புதமான தெய்வ விஷயங்களை தெரிந்து கொள்ள ரொம்ப புண்யம் பண்ணிருக்கோம்னு சொல்வது கூட கர்வமாயிடுமோன்னு தோன்றது.கணபதி சாரோட விளக்கம் அப்படியே காணொலி காட்சியாக காட்டறது.அற்புதம்.