Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 81வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 81வது ஸ்லோகம் பொருளுரை(10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 81)

Series Navigation<< சிவானந்தலஹரி 79வது 80வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 82வது ஸ்லோகம் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 81வது ஸ்லோகம் பொருளுரை”

எதிறிலாத பக்தி தனை மேவி இனியதாள் நினைப்பை இருபோதும்
இதய வாரித்திக்குள் உறவாகி எனதுளே சிறக்க அருள்வாய் என அருணகிரியார் பாடுவது போல் அவனருளாலே அவன் தாள் வணங்கி, ஸதா அந்த நினைவில் இருந்து கொண்டு, பஜனம் , நாமா சங்கீர்த்தனம் பூஜை, ஸத் சங்கம் இவற்றில் வாழப் பழகிக் அங்கு தெய்வ சான்னிதயம் கூடும் என்பதில் ஐயமேதும் இல்லை!
நல்ல ஸத் சங்கத்தில் இருக்கணும் அப்போதான் மோகம் அகன்று நிஸ்சலமான தெளிவான புத்தி அடைந்து ஜீவன் முக்தனாக முடியும் என்பதனை பஜகோவிந்தத்தில்
ஆசார்யாள் சொல்லுவது இங்கு குறிப்பிடத்தக்கது !!
அம்பாள் என்பவள் சக்தி அளிப்பவள் !! அம்பாள் த்யானம் சகல பிரார்த்தனைகளும், இக, பர சுகங்களையும் ஈய வல்லது !!
உமாமஹேசா என்பதனை நம் முன்னோர் குழந்தைகளுக்கு உம்மாச்சி என்று சுருக்கமாக சொல்லிக் குடுத்தா! ஏன் சிவனும் அம்பாளும் சேர்ந்தால்தான் அங்கு இயக்கமே அல்லவா? சக்தியன்றி சிவனில்லை அல்லவா?
அருமையான சொற்பொழிவு! எவ்வளவு கேட்டாலும் அலுக்காது!
ஜய ஜய சங்கரா…

நமசிவாய!
பெரியவாள் பாதம் ஷரணம்!
இப்போது இருக்கும் இந்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியாத நிலையில் பகவத் தரிசனம் வெகு சுலபமாக கிட்டியது. ஒரே சமயத்தில்
பகவத்:-பஜனம், தியானம், தரிசனம், ஸ்தோத்திரம் சொல்லுதல், சிரவணம் செய்தல் ஆகிய அனைத்தும் கிருஹத்திலேயே கிடைத்தது. உங்கள் உபன்யாசம் நன்றாக இருக்கு. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் வரிகளாய் விரிந்து விழிகள் முன் அமர்ந்தது.
ஸ்ரீ மஹா பெரியவா குரல் மூலமாக பக்தி அருளுரை கிடைத்தது, அதன் மூலம் அந்தப் பரமேஸ்வரன் அனுக்கிரஹமும் கிடைத்தது.
ஸ்ரீ சுவாமிகளின் தியானத்தில் உள்ள தாங்கள் கொடுக்கும் பக்தி உபன்யாசம், எங்களுக்கு நல்வழி, சத்சங்கம் கிடைக்கிறது. இது எங்கள் முன்னோர் செய்த புண்ணியமா என்ன என்று தெரியாது. இது தொடர்ந்து கிடைக்க மஹா பெரியவாளும், ஸ்ரீ காமாட்சியும், ஸ்ரீ ஸ்வாமிகளும் அனுக்கிரஹம் செய்ய வேண்டும். 🙏 🙏 🙇 🙇 🌹 🌹

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.