Categories
mooka pancha shathi one slokam

மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம்


ஸ்துதி சதகம் 55வது ஸ்லோகம் – மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் (12 minutes audio giving the meaning of this slokam)

नतानां मन्दानां भवनिगलबन्धाकुलधियां
महान्ध्यं रुन्धानामभिलषितसन्तानलतिकाम् ।
चरन्तीं कम्पायास्तटभुवि सवित्रीं त्रिजगतां
स्मरामस्तां नित्यं स्मरमथनजीवातुकलिकाम् ॥

நதாநாம் மந்தா³நாம் ப⁴வநிக³லப³ந்தா⁴குலதி⁴யாம்
மஹாந்த்⁴யம் ருந்தா⁴நாமபி⁴லஷிதஸந்தாநலதிகாம் ।
சரந்தீம் கம்பாயாஸ்தடபு⁴வி ஸவித்ரீம் த்ரிஜக³தாம்
ஸ்மராம: தாம் நித்யம் ஸ்மரமத²நஜீவாதுகலிகாம் ॥

6 replies on “மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம்”

Namaskaram Anna,

Most appropriate sloka under present epidemic conditions where people are fearful even to breathe. I feel only by surrendering to GODDESS KAMAKSHI, we can peacefully cross over this precarious situation.

Regards.

ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம்.
எத்தனை பொருத்தமான ஸ்லோகம். மனக்குழப்பம் தாங்கள் கூறுவது போல அவ்வப்போது வந்து போகின்ற ஒன்று.
ஒரு ஞானியின் நிலை எய்துவது மிக கடினம். முருகனின் நாமம் சொல்லிக்கொண்டிருந்தவரிடம் ப்ரஸாதம் கொடுக்க யோசித்த மந்திரி போல தான் பெரும்பாலும் பக்தி செய்யும் அடியார்களை நினைக்கிறார்கள். பக்தி என்பது தொடர்ந்து செய்வது அவ்வளவு எளியது அல்ல.
“அவன் அருளால் அவன் தாள் வணங்கி ” வாதவூரார் வாக்கிற்கு இணங்க பக்தி செலுத்த அந்த காமாக்ஷியை யாசிக்க வேண்டும். தாங்கள் சொன்னது போல பகவன் நாமம் தொடர்ந்து சொல்லும் போது எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு விலகும். மனதில் சாந்தி நிலவும், (permanent solution for depression) இது மட்டும் தான் இந்த ஸம்ஸார ஸாகரத்தை கடக்க செய்யும்.
இந்த இனிய காமாக்ஷி மலர் பாதங்களை பற்றிக் கொண்டு பக்தியை அருள யாசித்து பணிகின்றேன்🙏🙇🌹

பெரியவா, ஸ்வாமிகள் போன்ற த்யானம், பக்தி நமக்கு வருமா?

அவன் அருளாலே அவன் தாள் போற்றி என்பதன்படி, அம்பாள் த்யானம் ஒன்றைத்தவிர வேறொரு நினைவும் அற்று பாத கமலங்கலை இறுக்கப் பிடித்தால் வேறென்ன ஆசை வரும் இந்த லோகத்தில்?
ஆசைகளை வளர்த்துக் கொண்டால் துன்பமே மிஞ்சும்!
அதற்கு நிறைய பயிற்சி வேண்டும்!
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல! என்ற குரல் வழி நடக்க முயற்சி செய்யணும்.

எப்படிப்பட்ட மந்த புத்தி உடையவர்கசனாலும், சம்சாரம் என்னும் கைவிலங்கின் பிணைப்பால் மனம் வாடி உன் சரணத்தில் புகலடைந்தால் , அவர்கள் அஞ்ஞானம் என்ற இருளை நீக்குபவள் சந்தான லதை என்ற கற்பகக் கொடியானவல் , காம்பா நதி தீரத்தில் நடை பழகுவள் மன்மதனை அடக்கிய சிவனின் உயிருக்கு உயிரான காமாட்சி தேவியை தியானித்தால் நம் மனமாகிய குதிரை நம் வசப்பட்டு அவள் தியானத்தில் ஈடுபடலாம்!.!!
அருணகிரியார் மனக்கவலை ஏதுமின்றி உனக்கடிமையே புரிந்து என்று பகவத் பக்தியை சொல் கிறார்!
அப்படிப்பட்ட ஒருநிலை மனதை அருள அவள் தாலை இறுக்கப் பிடித்துக் கொள்ள வேண்டும் ! ஆசை அதற்கு முதல் தடை !
என்ன அழகாகக் கோர்வையாக இதனை எடுத்து இயம்பியுள்ளார் கணபதி அவர்கள் !!
அவர் சொன்னதை திரும்பச் சொல்லும் அளவுக்குக்கூட எனக்குத் தெரியவில்லை!
அம்பாளை தியானித்து அவள் அருள்.பெறுவோமாக!!

ஜய ஜய ஜகதம்ப சிவே…
,

காமாக்ஷி சரணங்களை பிடிச்சுண்டா எல்லா குழப்பமும் போயிடும்னு புரியரது ஆனா மனசு அப்படி நிலைக்க மாட்டேங்கரதே. அந்த சரண த்யானம் பண்ணர ருசியையும் அவள் தான் கொடுக்கணும். அவளுடைய கடாக்ஷம் கிடைக்க அவளே தான் வழி பண்ணணும். “நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறக்காதே அம்மா.”

Na Dharma Nishthosmi Na Cha Atmavedi
Na Bhaktimanstvat Charanaravinde |
Akinchanonanyagati Sharanyam
Tvat Padamoolam Sharanam Prapadye ||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.