பாதாரவிந்த சதகம் 12வது ஸ்லோகம் பொருளுரை – சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே (15 min audio in Tamizh on the greatness of Sri Mettur Swamigal)
तुलाकोटिद्वन्द्वक्वणितभणिताभीतिवचसोः
विनम्रं कामाक्षी विसृमरमहःपाटलितयोः ।
क्षणं विन्यासेन क्षपिततमसोर्मे ललितयोः
पुनीयान्मूर्धानं पुरहरपुरन्ध्री चरणयोः ॥
துலாகோடித்³வந்த்³வக்வணிதப⁴ணிதாபீ⁴திவசஸோ:
வினம்ரம் காமாக்ஷீவிஸ்ருʼமரமஹ:பாடலிதயோ: ।
க்ஷணம் வின்யாஸேன க்ஷபிததமஸோர்மே லலிதயா:
புனீயான்மூர்தா⁴னம் புரஹரபுரந்த்⁴ரீ சரணரயா:
இது பாதாரவிந்த சதகத்தில் பன்னிரண்டாவது ஸ்லோகம். இதோட அர்த்தம் என்ன என்றால்,
‘ புற ஹர புரந்த்ரீ’, முப்புரங்களை எரித்த பரமேஸ்வரனுடைய மனைவியான ‘ஹே! காமாக்ஷி!’,
‘துலா கோடி த்வந்த்வம்’:- உன்னுடைய பாதங்களில் இருக்கின்ற இரண்டு சிலம்புகளின், க்வணித சப்தத்தினால்
பணித்த :- சொல்லப்பட்ட, உன்னுடைய கால்களில் இருக்கிற சலங்கைகள் சப்தம் பண்றது. அது ஏதோ சொல்ற மாதிரி இருக்கு அப்படின்னு சொல்றார்.
என்ன சொல்றதுன்னா,’ அபீதி வசசோஹோ’ :- அபய வார்த்தைகளை சொல்லிக் கொண்டு இருக்கிறது.
“விஸ்ருமரமஹ பாடலி தயோ:-‘ அதிகமாக சிவப்பு காந்தி எங்கும் பரவுகிறது.
க்ஷபிதா தமஸோஹோ:-‘ அக்ஞானத்தை போக்குகிறது.
‘லலித யோஹோ:-‘ ரொம்ப அழகா இருக்கு அந்த,
‘சரண யோஹோ :-‘ அந்தப் பாதங்களுடைய,
‘வினம் ரம் :-‘ வணங்கும்,
‘மே மூர்த்நாம் :-‘ என்னுடைய தலையில்,
‘க்ஷணம் விந்யாசேன:-‘ ஒரு க்ஷணம் உன் பாதங்களை என் தலையின் மேல் வைப்பதின்மூலம்,
‘புனீயாத்:-‘ என்னைப் புனிதப் படுத்த வேண்டும் அப்டின்னு சொல்றார்.
இதுல முதல் பாதத்தில உன்னுடைய பாதங்கள் அபயத்தைக் கொடுக்கிறது. அந்தப் பாதங்களை என் தலையின் மேல் வைத்து என்னை, தூய்மைப்படுத்த வேண்டும். அப்படின்னு ஒரு அழகான பிரார்த்தனை.
பெரியவா பாதங்கள் இருக்கு. பெரியவா பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணினா அந்த பயத்தில் இருந்து மீண்டு விடுவோம்.
ஆனால் மீண்டும் மீண்டும் வந்து பிறந்தால், மீண்டும் மீண்டும் காம, க்ரோதம் போன்ற பயமெல்லாம் இருந்துகொண்டேதான் இருக்கும். இதிலிருந்து மீள வேணும் அப்படின்னா, அதுக்கு அக்ஞானம் போகவேண்டும். தூய்மை அடைய வேண்டும். அப்படி என்கிற பிரார்த்தனை, இந்த ஸ்லோகத்தில் இருக்கு.
பெரியவாளுடைய பாதங்கள் கிடைச்சா, இந்த சாதாரண ஏதோ ஒரு வியாதி வரது, அவமானம் வரது. பணக்கஷ்டம் வரது, இந்த மாதிரி எல்லா எதுஎதற்கோ பயந்துண்டு, நம்ப பெரியவாள் கிட்ட போய் நிக்கும்போது, கிடைக்கிற அபய வார்த்தை, அந்த நிமிஷத்துக்கு ‘இந்த ஜென்மாவே இல்லாம பண்ணிக்கணும்’, அப்படின்னு அந்த பாதத்துகிட்ட வேண்டிண்டு, ‘அந்தப் பாதங்களை தலையில வச்சுக்கணும், என்னை தூய்மைப் படுத்த வேண்டும், என்னுடைய அக்ஞானம் போகவேண்டும்’ அப்படின்னு வேண்டிண்டவா சிலபேர்.
அதுல மேட்டூர் ஸ்வாமிகள், பெரிய பாக்கியவான். பெரியவா பாதுகையிலிருந்தே சன்னியாசம் வாங்கிண்டார். 2016இல் மேட்டூர் சுவாமிகளின் அனுபவங்களை சிவராமன் ரெக்கார்ட் பண்ணி போட்டிருந்தார். மேட்டூர் சுவாமிகள் நிறைய பேர் கிட்ட கேட்டு பெரியவா அனுபவங்களை எல்லாம் உலகத்தில பிரகாச படுத்தினவர். அவருடைய அனுபவங்களை அதிகமா சொல்லல. அவர் ரொம்ப எளிமையா ரொம்ப humble ஆ உலகத்தோட கண்ணுக்கே படாமல் வாழ்ந்தவர். நம்முடைய பாக்கியம் அவர் அந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அதை பகிர்ந்து கொண்ட போது, அதைக் கேட்டபோது எனக்கு ரொம்ப ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் அவர் பேசிய அரைமணியில் எதுஎதெல்லாம் எனக்கு புரிஞ்சதோ அதெல்லாம் எடுத்து திரும்பவும் சொல்லி இதுல இருக்கிற தர்ம சூக்ஷுமங்கள் எல்லாம் என்னென்ன அப்படின்னு பேசினேன். பேசினத அப்போ பகிரவே இல்ல இப்போ இன்னைக்கு, இந்த பாதாரவிந்த சதகம் ஸ்லோகத்தை படிக்கிறபோது பெரியவாளுடைய பாதத்தை, பாதம்னா என்ன, பாதுகைன்னா என்ன? அந்தப் பாதுகைகளை தலையில வச்சிண்டு, அது மூலமாவே தன்னை தூய்மைப்படுத்திண்டு உயர்வற உயர்நலமான, வைராக்கிய ஞானத்தையும், மோக்ஷத்தையும் அடைந்தவர். அப்படின்னு அவருடைய ஞாபகம் வந்தது.
இந்த இடத்துல நீங்க இந்த ரெக்கார்டிங்கை நிறுத்திட்டு, அவர் பேசற அந்த அரைமணி அந்த வீடியோவை பார்த்துட்டு வாங்கோ.
அதுலேர்ந்து எடுத்து சொல்லி எவ்வளவு தூரம் பெரியவாகிட்ட பக்தியா இருந்திருக்கிறார், ஏக பக்தியா இருந்திருக்கிறார். அப்படின்னு சொல்றத கேளுங்கோ. அப்போ இன்னும் ரசிக்கும்படியாக இருக்கும். இந்த மேட்டூர் சுவாமிகள் மஹா பெரியவாளை பத்தி பேசி இருக்கறது அவ்வளவு ஆனந்தமா இருக்கு. ஒவ்வொரு விஷயமும் அவர் சொல்றதுல எவ்வளவு தர்ம சூக்ஷுமங்கள், அவர் வந்து சந்நியாச ஆசிரமம் வாங்கிக்கறது, அதனால நமக்கு ஒரு பெருமை வரும்ங்கரத்துக்காக இல்ல. ஒரு ஆசிரமத்துல வெறும் பிரம்மச்சாரியாகவே இருந்துட்டு போகக்கூடாது, சன்னியாசம் வாங்கிண்டு போகணும்னு ஒரு தர்மசாஸ்திரம் இருக்கு போல இருக்கு. அதனால அவர் சந்நியாசம் வாங்கிக்கணும்னு ஒரு எண்ணம் வந்திருக்கு. யாரோ சொல்லி இருக்கா அதனால அவருக்கு அந்த எண்ணம் வந்திருக்கு.
அதான் வந்து பெரியவா கிட்ட இருந்து வாங்கிக்கணும்னு ஒரு பிரார்த்தனை. அதனால அவர் என்ன பண்ணியிருக்கார்.
‘ஒரு சக்கரவர்த்தி கிட்ட அவாளுடைய ஜென்ம நட்சத்திரத்தை அன்னிக்கி என்ன பிரார்த்தனை பண்ணினாலும் கொடுத்துவிடுவா’ அப்படிங்கறத வெச்சிண்டு, மகாபெரியவாளை ஒரு சக்கரவர்த்தியா, சந்தேகமே இல்லாமல் சக்கரவர்த்தி தானே அவர், தபஸ்ல சக்கரவர்த்தி, துறவுல சக்கரவர்த்தி. அவர்கிட்ட அவாளுடைய ஜென்ம நட்சத்திரதன்னிக்கு ஒரு லெட்டர் எழுதி பெரியவாகிட்ட குடுத்திருக்கார். ‘இந்த மாதிரி எனக்கு சன்னியாசம் வேணும்னு ஆசையா இருக்கு, நீங்களே கொடுக்கணும் நீங்க நேரா கொடுக்கறதுல ஒரு இடைஞ்சல் இருக்கு. அதாவது மடத்துல ஒரு மடாதிபதி தன்னுடைய அடுத்த சிஷ்யருக்கு மட்டும்தான் தானா சன்னியாசம் குடுக்கலாம். அந்த இக்கட்டு இருக்கறதுனால உங்களுடைய பாதுகையிலிருந்து வேணாலும் நான் காவி போட்டு சன்னியாசம் எடுத்துக்கிறேன்.’ அப்படின்னு ஒரு option னும் கொடுத்து பெரியவாள்ட்ட அத reach பண்ணி இருக்கார். அன்னி கார்த்தால எழுந்தவுடனே first அவர்கிட்ட அவர் கையில் அந்த லெட்டர் குடுத்துருக்கார்.
அவர் கொட்டகைக்கு போறதுன்னா பாத்ரூம் போறது. பாத்ரூம் போய்ட்டு வந்தவுடனே இதை first கொடுத்தவுடனே, அப்போதிலிருந்து அவர், ‘எங்க ராஜகோபால் எங்கே? எங்கே? எங்கே?’ ன்னு கேட்டு கேட்டு இவரை வரவழைச்சு பாதுகை கொடுத்திருக்கா. அந்தப் பாதுகையிலிருந்து இவர் சன்யாசம் வாங்கிண்டுருக்கார். அப்புறம் மந்திரங்கள், இந்த உபநிஷத்தில் நாலு மஹா மந்திரங்கள் இருக்கு. சன்னியாசத்தின் போது அந்த மகாவாக்கியங்கள் இருக்கு, அதை வந்து குருமுகமாக உபதேசம் பண்ணுவா. அந்த உபதேசமும் பெரியவாளே பண்ணி வச்சிருக்கா. அந்தப் பாதுகையிலிருந்து சந்நியாசம் வாங்கிண்டுருக்கார் இவர், அப்படி என்று கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஏன்னா சுவாமிகள் பாதுகைலிருந்து சன்யாசம் வாங்கிண்டார். அது கேள்விப்பட்டு தான் அவர் வாங்கி இருப்பார்.
சுவாமிகள் வந்து அந்த மேட்டூர் சுவாமிகள் பாதுகைகளிலிருந்து எடுத்துண்டார்ன்னு தெரிஞ்சிண்டு அதனால அந்த மாதிரி ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுண்டுசுவாமிகள் பண்ணி இருப்பார்ன்னு எனக்குத் இப்ப தோன்றது.
அப்புறம் சிவராமன் மாமா வந்து ரொம்ப innocent ஆ, ‘இந்த கங்கை கொண்டான் சோழபுரத்தில் அன்னாபிஷேகம் நீங்க கூட involvedன்னு சொன்னாளே?’ அப்படின்னு கேக்கறார். அவர் சிரிச்சுண்டு, அதாவது மேட்டூர் சுவாமிகள் தான் full and full. இன்னைக்கு இத்தனை ஆயிரம் ஜனங்கள் சாப்பிடுறா, இவ்வளவு விமரிசையாக பண்றானா அதற்கு முழுக்க hard work பண்ணினது, சங்கல்பம் பெரியவாளோடது. அது நிறைவேத்தினது முழுக்க முழுக்க மேட்டூர் சுவாமிகள் தான். ஆனா அவர் வந்து நீங்க ஏதோ somewhat involved போல இருக்குன்னா, ஆமா ஆமாங்கிற மாதிரி சிரிக்கிறார்.
ஆயிரம் குடம் கங்கா ஜலத்தை ஹரித்வார்லியே ஜனங்கள் எல்லாம் வரதுக்கு முன்னாடி ஒரு இடத்தில அதைப்பிடிச்சு சீல் பண்ணி ‘ஆயிரம் குடம்’ கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து அதை ஒரு வண்டியில வெச்சு பெரியவாகிட்ட கொண்டு வரார். பெரியவா அதை பிரதக்ஷணம் பண்ணிட்டு, அவாள பாருங்கோ, பெரியவாளோட பெருமைய பாருங்கோ, முன்னை இந்த மாதிரிதான் சோழன் பண்ணியிருக்கான், 1000 win பண்ண ராஜாக்கள் தலையில வச்சு ஆயிரம் குடத்துக்கொண்டு வந்து இங்க கங்கைகொண்ட சோழபுரத்தில் அபிஷேகம் பண்ணியிருக்கான். ‘அதனால சுவாமிக்கு அபிஷேகம் பண்ணு எனக்கு என்ன? ‘ ங்கறா பெரியவா. அவர் இவரும் உடனே, ‘ஆஹா! நான் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்தேன் நீங்க கொஞ்சம் யூஸ் பண்ண கூடாதா’ ன்னெல்லாம் பேசல. அப்படியே ஆஹான்னு சொல்லி அங்க போயி அந்த சுவாமிக்கு அந்த ஆயிரம் குடத்தையும் அபிஷேகம் பண்ணி அந்த ஆயிரம் குடத்துல அபிஷேகம் பண்ணி அந்தத் தீர்த்தத்தை கொண்டு வந்தோடனே பெரியவா வந்து எனக்கு அபிஷேகம் பண்ணுன்னா. இவரோட திருப்தி இவரோட சந்தோஷத்துக்காக, ‘இப்ப எனக்கு அபிஷேகம் பண்ணுன்னு’ அதையும் ஏத்துண்டு இவரை ரொம்ப சந்தோஷம் படுத்திடறார்.
அப்படி பண்ணும் போது இவருக்கு இந்த கங்கைகொண்ட சோழபுரத்தில் இவர் வந்து ‘நான் அவ்வளவு எமோஷனல் ஆற type கிடையாது’ . என்ன ஒரு clarity.
இப்ப எல்லாம் ஜனங்களெல்லாம் வந்து, எல்லாரும் பெரியவா சொப்பனத்தில் வந்து எனக்கு அது இது சொன்னா. நான் கண்ண மூடிண்ட உடனேயும் பெரியவா என்கிட்ட பேசினான்னெல்லாம் அடிச்சு தள்றா. மகான்கள் எல்லாம் அப்படி பண்ணவே மாட்டா. சுவாமிகள்ளாம் அப்படி உணர்ச்சிவசப்பட்டு, ‘எனக்கு பெரியவா உத்தரவு கொடுத்தான்னு, நான் அதை பண்றேன் இத பண்றேன் ல்லாம்’ அப்படின்னு எல்லாம் பேசவே மாட்டா. அந்த மாதிரி இந்த மேட்டூர் சுவாமிகள் வந்து, ‘நான் எமோஷனலா ஆக மாட்டேன்’ அன்னிக்கு அந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் அந்த சுவாமி தரிசனத்தும் போது என் மனசுல ஒரு உணர்ச்சி ஏற்பட்டது.
அப்படிங்கறார். இது பெரியவா அவருக்கு அந்த உணர்ச்சியை கொடுத்து அந்த சுவாமி மேல அதிக பக்தி வரவழைச்சு அவருக்கு நிறைய கைங்கரியங்கள் பண்ணனும்ன்னு பெரியவா பண்ணின ஏற்பாடு அது. அதுக்கப்புறம் பெரியவா அங்க அன்னாபிஷேகம் பண்ணச் சொல்லி மூட்டை மூட்டையாக அரிசி.
எவ்வளவு சிரமப்பட்டு இருப்பா முதல்ல. ஜனங்கள் எல்லாம் அவ்வளவு ஆதரவு இல்லாத போது, திருடிண்டு போயிருக்கா இவர் collect பண்ண மூட்டை அரிசியெல்லாம்.
அந்த மாதிரி சிரமப்பட்டு அவர் அன்னாபிஷேகம் பண்ணி அந்த அன்னாபிஷேகம் எவ்வளவு மூட்டை பண்ணி போட்டாலும் அந்த சுவாமியை வந்து நிறைக்க முடியலை. அப்புறம்தான், இவர் வந்து ஒரு இன்ஜினியர் இருக்கறதுனால
சுத்தி ஒரு அமைப்பு பண்ணி இரும்பால ஒரு வேலி மாதிரி பண்ணி அதுக்குள்ள அன்னத்தைப் போட்டு அதுக்கு மேல சாதத்தை போட்டவுடனே அது முழுக்க சுவாமியை நிறைச்சு இருக்கு. இப்படியே ஐடியா பண்ணி இன்னிக்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் சாப்பிடுறா. அந்த சுவாமி லிங்கத்துமேல அபிஷேகம் பண்ணினது வந்து, மேல வச்சத சுவாமிக்கு கொடுத்துட்டு, ஆவுடையாரில் வச்சதை அந்த நாலுகால் பிராணிகளுக்கு மிருகங்களுக்கு கொடுக்கிறா. அப்புறம் கீழ சிந்தனதெல்லாம் எறும்புக்கு எல்லாம் போடுறா, பறவைகளுக்கெல்லாம் போடுறா. இப்படி ஒரு பிளான் பண்ணி எல்லாம் மேட்டூர் சுவாமிகள் சொல்லிக் கொடுத்திருப்பார்.
இப்படி அழகா, இதுல ரொம்ப ரொம்ப அழகான விஷயம் என்னன்னா பெரியவாகிட்ட இந்த கமிட்டி காராள்ளாம், ‘ ரொம்ப சிரமமா இருக்கு அங்க போய் பண்றதுக்கு இங்கே எங்கேயாவது கபாலீஸ்வரர் கோயில்ல எங்கேயாவது பண்ணலாமா?’ பெரியவா சொன்னாராம் இருநூறு வருஷத்துக்கு முன்னாடி அந்த உடையார்பாளையம் ஜமீன்தார் நம்ப மடத்த ஆறுமாசம் மடாதிபதி, அந்த எல்லாரையும் ‘ரெண்டு நாள் வரணும் நீங்க, பாதம் படனும்’ ன்னு எல்லாரையும் கூட்டிண்டு போயி அந்த பங்காரு காமாக்ஷி, வரதராஜரை எல்லாம் அவர் காப்பாற்றி வைத்திருந்த போது அந்த ஜமீன்தார், சுவாமிகளையும் கூட்டிண்டு போயி, சுவாமிகளோட இருந்த அந்த பரிவாரங்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டாராம். அந்த அம்பது வேலி நிலத்துக்கு அவர் குத்தகை ஜமீன்தாரா இருந்தார். அதனால சாப்பாடு போட்டார் அத நம்ம தானே, நீங்க தானே என்னோட மடத்தோட சிஷ்யர்கள், நீங்க எல்லாம் அதை திருப்பித் தரணும். இன்னைக்கு நமக்கு வசதி இருக்குன்னு சொல்லிட்டு கணக்குப் போட்டு இன்ன ரூபா னு சொல்லிட்டு அவாள அவ்வளவு தூரம் பெரியவா பேசி inspire பண்ணி அங்க போய் பண்ணனும், அங்க இருக்கிற ஜனங்கள் எல்லாம் சாப்பிடுவா. அந்த விதமா நாம அவாளுக்கு திருப்பித் தரணும் இதை, அப்படின்னு பெரியவா சொல்லி அதை பண்ணியிருக்கா. அப்புறம் இப்ப வந்து, அந்த இடமெல்லாம் மழையே இல்லாத வறட்சியா இருந்த இடம் அந்த ஏரியா முழுக்க 50 வேலில்ல நன்னா வெளஞ்சு ஜனங்கள் எல்லாம் ரொம்ப சுபிக்ஷமா இருக்கா. இது பெரியவா தபஸ். அதாவது ஒருத்தர போயி நீ அங்க பண்ணு அன்னாபிஷேகம் பண்ணுன்னா, வறட்சி இருக்கிற இடத்துல மூட்டை அரிசியை வாங்கி சுவாமிக்கு சாத்தி அதை ஜனங்களுக்கு கொடுத்தா பஞ்சம் மாதிரி இருக்கும்போது அவாளுக்கு என்ன interest இருக்கும்? பெரியவா, ‘மழைபெய்யும் அன்னாபிஷேகம் பண்ணா மழைபெய்யும்’ அப்படின்னு சொன்னா அந்த மழை பெஞ்சு அந்த ஊரே இப்ப அவ்வளவு செழிப்பா இருக்கு. இது மகா பெரியவாளுடைய தபஸ். பெரியவாளைப் பற்றி சொல்லும்போது, மேட்டூர் சுவாமிகள் சொல்வார், இன்னொரு ஜீவன் கிட்ட துவேஷமே இல்லாத ஒருத்தர்ன்னா பெரியவா தான் அப்படிங்கிறார். இந்த ராக, த்வேஷமே இல்லாத பெரியவா இருந்திருக்காங்கறதை அவர் அனுபவிச்சு அனுபவிச்சு ரொம்ப சொல்றார் மேட்டூர் சுவாமிகள். அதாவது தன்னைப் பத்தி, யாராவது பர்சனலா குத்தம் சொன்னானா அப்பதான் பெரியவா வந்து காதை ரொம்ப கூர்மையா வெச்சிண்டு கேப்பாளாம். அதுல ஏதாவது ஒரு ஞாயம் இருந்தா நாம தெரிஞ்சுக்கலாம், திருத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில, அவா மேல கோபமே வராது அப்படின்னு சொல்றார். அதே நேரத்துல சந்திரமவுலீஸ்வரர்க்கு ஏதாவது துரோகம் பண்ணின்னா கழட்டிவிட்டுடுவார் பெரியவா, அப்படின்னு சொல்றார்.
இவர் ரொம்ப பாடுபட்டு இங்கிருந்து காசிக்கெல்லாம் போயிருக்கார், ரிஷிகேஷ், ஹரித்வார் அங்கெல்லாம் போயிருக்கார். இந்த இடங்களோட அழக பத்தி வர்ணிக்கிறார். இவருடைய ஒரு இடத்துல, உயிருக்கு ஆபத்தான ஒரு இடத்துல, புலிகள் எல்லாம் நடமாடற இடத்தில, suicide point அங்க யாரோ கீழே விழுந்து செத்துப் போய் இருக்கா அத வந்து ஏதோ மிருகங்கள்ளாம் சாப்பிடற இடத்து வழியெல்லாம் போயி மயக்கமாகி அடுத்தநாள் இந்த 1hourல வரேன்னு சொன்னவர் ஏதோ வழிதவறிப் போய் அடுத்தநாள் கார்த்தால போய் சேர்ந்திருக்கிறார். அப்போ அவருடைய தண்டம் இதுவாயிடறது. ஆனால் அத பத்தி
பொருட்படுத்தல்லை. அந்த மாதிரி மஹான்கள் ஒரு நிலைமைக்கு போன பின்னே அந்த தண்டத்தை வெச்சு பாதுகாப்பு பண்றது ரொம்ப பெரிய காரியம். தினம் ஒன் ஹவர் இதை பண்ணனும் சன்னியாசிகள். அதை வேண்டாம்னு அவர் எனக்கு அவ்வளவு ஆச்சாரம் இல்லை அப்படின்னு சொல்லிடறார், அவாள்ளா போல எனக்கு ஆச்சாரம் இல்லை அப்படின்னு சொல்லிடறார். அது அவ்வளவு இம்பார்டன்ட் இல்ல ஆனா அப்படின்னு சொல்ல கூடாதுன்னு சொல்லி எவ்வளவு கேர்ஃபுல்லா மேட்டூர் சுவாமிகள் சொல்கிறார்.
அப்புறம் மத்தவாள் கிட்டக்க கருணையாய் இருக்குறதுங்கறதல அந்த போகிகள் சுவாமிகளை, மகாபெரியவாளை தூக்கிண்டுவர போகிகள் வந்து ஒரு மாமிச கடையை பார்த்த உடனே ‘கண்டுண்டியா’ அப்படின்னு ஒருத்தன் சொல்றானாம். இத பெரியவா கேட்டுட்டு உடனே கேம்ப் போட்டு அவாளுக்கு எல்லாம் பணத்தை கொடுத்து அந்த ‘non-vegetarian சாப்பிட வாங்கிக்கொடுக்க சொல்லு,’ன்னு சொல்லி இருக்கா. அப்போ மேட்டூர் சுவாமிகள் அதை சொன்னவுடனே ஆமா கள்ளெள்ளாம் கூட கொஞ்ச, கொஞ்சம் வேணும்னா சாப்பிட்டுக்கட்டும் கொஞ்சம் அப்படின்னு சொல்லுவா. அப்படி என்கிறார் என்ன ஒரு பூத தயை என்ன ஒரு broad mindedness. ஒருத்தர பத்தி judge பண்ணாம, அவா அவா level ல்ல அவாள வெச்சு, அந்த போகிகள், அவா பிள்ளைகள் எல்லாம் வந்து தெய்வபக்தியா பெரியவாகிட்ட இருக்கான்னா அது அந்த கருணையினால் தான். அந்த மாதிரி பெரியவா வந்து அந்த மடத்தில பசுமாடுகளை பாத்துக்கற அந்தப் பால்காரனை வந்து ஒருவாய் பால் தான் குடிச்சுட்டு அவருக்கு குடிக்க சொல்லி பெரியவா வந்து, ‘இவன்தான் எனக்கு தினம் பால் கொடுக்கிறான்’ ன்னு சொல்லிபெரியவா வந்து ‘இவன்தான் எனக்கு தினம் பால் கொடுக்கிறான்’ ன்னு சொல்லி அப்படியே அவன் வந்து ‘அதனாலதான் நான் மடத்துல அடிமையா உழைக்கிறேன்’ அப்படின்னு சொல்றான்.
அதே மாதிரி கடைசியில சிவராமன் பேசும்போது கண்கலங்கறாரே, அது வந்து அவருக்கு தெரிஞ்சுடறது அந்த மேட்டூர் சுவாமிகளுக்கு தன்னுடைய கடைசி காலம் வந்துவிட்டது என்று தெரிஞ்சு அவருக்கு TB வந்துடுத்து, உடம்பையே அவர் அக்கறை எடுத்துக்கலை. அவர் வந்து அவ்வளவு பட்னி கிடந்திருக்கிறார். பெரியவாளுக்கு அப்புறம் துறவுன்னா அப்படி இவரை தான் சொல்லுவா. அந்த மாதிரி உடலை வருத்தி அவ்வளவு தவஸ் பண்ணவர் மேட்டூர் சுவாமிகள். அவர் காலம் ஆகறதுக்கு முன்னாடி, இந்த ஆர்த்தி, சூரி ன்னு ரெண்டு பேரு வரான்னு wait பண்ணி இந்த தீபாவளி அன்னைக்கு அவர் வந்து தேகத்தை துறந்தார்.
அந்த மாதிரி இருக்கும் போது அந்த நிலைமையில் வந்து “எதுக்கு இவ்ளோ பேரு இங்க வரா? எதுக்கு வந்து எனக்கு என்னத்துக்கு உபச்சாரம்” , ‘நாலு பேர் இருக்கலாமா உங்களோட சர்வீஸ் பண்றதுக்குன்னா’ ,”நாலு பேர் என்னத்துக்கு ஒருத்தர் போருமே. என்னத்துக்கு எனக்கு சர்வீஸ் பண்ற அளவுக்கு நான் என்ன எனக்கு யோக்கியதை இருக்கு” ன்னு கடைசி நாள்ல சொல்கிறார். அப்படி வந்து அவர் தன்னுடைய ego வை துறந்துட்டு இருக்கார். இங்கே இப்போ அதிஷ்டானம், பண்ணனும். தன்னுடைய அதிஷ்டானத்தில் ‘லிங்கம் வைக்கணும், எனக்கு பிருந்தாவனம் வேண்டாம் லிங்கம் வைக்கணும்’ அப்படின்னு அவ்வளவு தூரம் ‘எனக்காக இல்ல இது ஜனங்களுக்காக’ அப்படின்னு சொல்றார். அதுல எல்லாம் சூக்ஷூமங்கள் இருக்கு.
பெரிய மகான் அவரைப்பற்றி இன்னைக்கு கேட்டது பேரானந்தம். நான் சுவாமிகளைத் தவிர வேற யாரையும் நான் பாக்குறது இல்ல அப்டினு ஒரு பிடிவாதம் வெச்சிண்டு இருந்தேன். சுவாமிகள், விஷ்ணு கிட்ட எல்லாம், ‘மடத்துக்கு போனா நேற்று சாமிகளை பார்த்துட்டு வா’ ன்னெல்லாம் சொல்லிருக்கார்.
பெரிய மகான்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்! கோவிந்தா!! கோவிந்தா!!
2 replies on “சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே”
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திட எத்தனை ஜென்மம் எடுக்க வேண்டுமோ தெரியவில்லை, ஆனால் இதனைப் படிக்கும்போது நமக்கும் அந்த அருள் ஒர் நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றும் வண்ணம் ஏழுத்தும் வாக்கும் அமைந்துள்ளது,! அழகான பதிவு! ஓரிக்கை மணி மாமா அவர்களின் புதல்விக்கு இந்த பாக்யம் கிடைத்தது அவளின் சிறு வயதில்,! உடனே ஸ்ரீ வித்யா மந்திர உபதேசமும் அங்கு நிகழ்ந்தது பெரியவா சந்நிதியில்!
அநேக கோடி நமஸ்காரங்கள் மாமி 🙇🙇🙏🙇
ஸ்ரீமதி மோஹனா ரவி அருப்புக்கோட்டை