ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர் அருளிய சிக்ஷாஷ்டகம் ஒலிப்பதிவு; sikshashtakam audio recording
சிக்ஷாஷ்டகம் ரொம்ப லலிதமா இருக்கும். பகவன் நாம பக்தியுடைய சாராம்சம்,நாம பக்தி எப்படி பண்ணனும் என்கிறதை சொல்லியிருக்கார். அதன் பொருள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர் அருளிய சிக்ஷாஷ்டகம்
चेतो-दर्पण-मार्जनं भव-महा-दावाग्नि-निर्वापणं
श्रेयः-कैरव-चन्द्रिका-वितरणं विद्या-वधू-जीवनम् ।
आनन्दाम्बुधि-वर्धनं प्रति-पदं पूर्णामृतास्वादनं
सर्वात्म-स्नपनं परं विजयते श्री-कृष्ण-सण्कीर्तनम् ॥ १ ॥
1. ஸ்ரீக்ருஷ்ண ஸங்கீர்த்தனம் சிறந்து விளங்கட்டும். அது மனமென்னும் கண்ணாடியில் உள்ள அழுக்கைத் துடைக்கும். வாழ்க்கைத் தவிப்பென்னும் பெருநெருப்பை அணைக்கும். ஞானமென்னும் அல்லியை மலரச் செய்யும் சந்திரனாகும். ப்ரம்ம வித்யையெனும் மணப்பெண்ணுக்கு வாழ்வளிக்கும். ஒவ்வொரு முறையும் நாமாம்ருதம் தன்னைப் பருகுவோருக்கு ஆனந்த அலைகளை பெருக்கெடுத்து ஓடச்செய்யும். தன்னிடம் கொஞ்சமேனும் தொடர்பு கொண்டோரையும் (நாமங்களை சிறிதளவேனும் மொழிவோரை) முழுமையாக தூய்மைப் படுத்தும். அப்பேற்பட்ட ஸ்ரீக்ருஷ்ண ஸங்கீர்த்தனம் சிறந்து விளங்கட்டும்.
नाम्नामकारि बहुधा निज सर्व शक्ति: तत्रार्पिता नियमितः स्मरणे न कालः ।
एतादृशी तव कृपा भगवन्ममापि दुर्दैवमीदृश-मिहाजनि नानुरागः ॥ २ ॥
2. சரவணபவ, சிவ, ராம, கோவிந்த, நாராயண, மஹாதேவ என்ற பல்வேறு நாமங்களும் பகவானுடையவை. மிகுந்த கருணையோடு இக்கலியில் பகவான், பக்தி விரக்தி ஞானத்வாரா முக்தி அளிக்கும், தன் அநுக்ரஹ சக்தியை இந்த நாமங்களில் வைத்திருக்கிறார். இவற்றை ஜபிக்க கால நேர விதிகளேதும் இல்லை. இப்பேற்பட்டதாக பகவானின் கருணை இருந்து கூட என் போறாத வேளையினால் இந்த நாமங்களை இடையறாது ஜபிப்பதில் எனக்கு ருசி ஏற்படவில்லையே.
तृणादपि सुनीचेन तरोरपि सहिष्णुना ।
अमानिना मानदेन कीर्तनीयः सदा हरिः ॥ ३ ॥
3. புல்லினும் பணிவோடும், மரத்தினும் பொறுமையோடும், தன்னை பெரியவனாக நினைக்காமலும், பிறர் செய்யும் புண்ணியங்களைப் போற்றிக் கொண்டும், இடைவிடாத ஹுரி பஜனத்தில் என் காலம் கழியட்டும்.
नयनं गलदश्रुधारया वदनं गदगदरुद्धया गिरा।
पुलकैर्निचितं वपुः कदा तव नाम-ग्रहणे भविष्यति ॥ ४ ॥
4. கிருஷ்ணா! உன் நாமங்களைச் சொல்லும் வேளையிலேயே கண்கள் நீரைப் பெருக்கவும், தொண்டை கத்கதக்கவும், உடம்பு புல்லரிக்கவும் அநுக்ரஹம் செய்யமாட்டாயா?
युगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितम् ।
शून्यायितं जगत् सर्वं गोविन्द विरहेण मे ॥ ५ ॥
5. கோவிந்தனைப் பிரிந்த எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாய் நீண்டிருக்கிறது. கண்கள் அருவிபோல் நீரைப் பெருக்குகின்றன. உலகமே சூன்யமாகி விட்டது. எப்போது என் கண்ணனுடம் மீண்டும் கூடுவேன்?
न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये ।
मम जन्मनि जन्मनि ईश्वरे भवतात् भक्तिरहैतुकी त्वयि ॥ ६ ॥
6. ஜகதீசனே! ஜனங்களையோ, பணத்தையோ, பெண்களையோ, கவிதையையோ கூட நான் விரும்பவில்லை. எத்தனைப் பிறவி எடுத்தாலும் என் தலைவனான உன்னிடத்தில் காரணமில்லாத தூய பக்தி ஒன்றே நான் வேண்டுவது.
अयि नन्दतनुज किंकरं पतितं मां विषमे भवाम्बुधौ ।
कृपया तव पादपंकज-स्थितधूलिसदृशं विचिन्तय ॥ ७ ॥
7. ஹே நந்தகோப குமாரா! விஷமயமான பவக்கடலில் விழுந்துவிட்ட நான் என்ன செய்யக் கூடும்? கருணையினால் உன் பாதத் தாமரையின் துகளாக என்னை எண்ணிக் கொள்.
आश्लिष्य वा पादरतां पिनष्टु मां अदर्शनान्-मर्महतां करोतु वा ।
यथा तथा वा विदधातु लम्पटो मत्प्राणनाथस्तु स एव नापरः ॥ ८ ॥
8. தன் அணைப்பில் என்னை வருத்தினாலும் சரி, தன் பிரிவில் என்னை வாட்டினாலும் சரி, எப்படி நடத்தினாலும் என்னுயிர்க் காதலன் மோஹனக் கண்ணனையே நான் நம்பி இருக்கிறேன். வேறு எவரையும் இல்லை.
2 replies on “ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர் அருளிய சிக்ஷாஷ்டகம் ஒலிப்பதிவு, பொருளுரை”
என்ன ஒர் தபஸ் போன்ற இடையறாத பக்தி ! எதுவும் தேவையறற நாம ஸ்மரணை ! அழகிய பொருள் பொதிந்த வேண்டுதல் ஏதுமற்ற பக்தி !! அவனருளால் அவன் தாள் வணங்கி என்ற சொற்றொடர் ரின் இலக்கணம்! நாமும் முயற்சி செய்யலாமே ஒரு10% ஆவது கைக்கூட!
ஹரே கிருஷ்ணா ….
மிகவும் நன்றி சார்
ஒரு நல்ல பக்திக்கான வழிமுறை
இவற்றை பின்பற்றும் சக்தியை க்ருஷ்ணர் அருளவேண்டும்
பொருளை படித்து அறிந்து கொள்வதை விட பதம் பிரித்து நீங்கள் பொருள் கூறுவதை கேட்டால் இன்னும் அதிக உற்சாகம் பக்தி மார்க்கத்தில் செல்ல உண்டாகும்